Difference between revisions 1342607 and 1784178 on tawiki

{{அய்யாவழி புராணம்}} அய்யாவழி [[அய்யாவழி புராணம்|புராண வரலற்றின்படி]] உலகில் உயிரியல் தோற்றத்துக்கான மூலமாகவும் தீமையின் மொத்த உருவமாகவும் தோன்றிய முதல் [[அசுரன்|அசுரனே]] குறோணியாவான். இவன் அகிலத்தில் கூறப்பட்டுள்ள எட்டு யுகங்களில் முதல் யுகமான நீடிய யுகத்தில் தோன்றியவனாவான். 

==உருவ அமைப்பு==

[[நீடிய யுகம்]] தோன்றிய உடன் இவ்வுகத்துக்கு யாரை உலகில் இருத்துவோம் என [[மும்மூர்த்தி|மும்மூர்த்திகளும்]] அலோசித்தனர். ஆலோசித்து தில்லையில் [[ஈசன்]] ஒரு [[வேள்வி]] வளத்தினார். இவ்வேள்வியில் மலையைப் போன்ற பெரிய உருவம் உடையவனாய் குறோணி பிறந்தான். அவன் அறத்தை அறியாதவனாகவும், உடம்பில் சதை நிறைந்து [[அண்டம்|அண்டத்தைப்]] போன்று பெரியவனாகவும் இருந்தான். அவன் [[முகம்]], [[கண்]]கள் எல்லாம் [[முதுகு]] புறத்தின் மேல் ஆடிக் கொண்டிருந்தன. ஒரு கோடி [[கை]]கள், மற்றும் ஒருகோடி [[கால்]]களை உடைய அவனின் உயரம் நான்கு கோடி [[முழம்|முழங்களாகளாகும்]]. அவன் நடக்கும் போது கால் மாறி வைக்க, [[கயிலை]] கிடுகிடென ஆடும்.   

==குறோணி பாடு==

இவ்வகையினாலான உடலமைப்பை உடைய அவன் சிறிது காலம் தூங்கி விழித்த போது அவனுக்கு மிகுந்த பசியாக இருந்தது. அவனது கடும் பசியால் கண்டவை எல்லாவற்றையும் எடுத்து விழுங்க துடித்தான். எதை உண்டாலும் பசி தீராது என உணர்ந்த அவன், [[கடல்|கடலின்]] நீர் அனைத்தையும் வாரிக் குடித்தான். கடலின் அனைத்து நிரும் குடித்த பிறகும் அவனின் கடைவாய் கூட நனையவில்லை. அவனது குடல் எல்லாம் கொதித்ததால், உலகத்தை எடுத்து விழுங்க ஆர்ப்பரித்து நின்றபோது, [[கயிலை]]யை கண்ட அவனுக்கு அதன் மேல் ஆவல் பிறக்க, கயிலையை எடுத்து விழுங்கும் போது, [[மாயன்]] அதிலிருந்து தாவி குதித்து தப்பினார். 

===குறோணி வதம்===

பின்னர் [[பூலோகம்]] வந்து [[சிவபெருமான்|சிவபெருமானை]] நினைத்து தவம் இருந்தார். இத்தவத்தைக் காண சன்னியாசி வேஷம் பூண்டு வந்த சிவன், மாயனைப் பார்த்து "நீ யார்?, இவ்வனத்தில் வந்து என்னை நினைத்து தவம் செய்யக் காரணமென்ன?" என்று கேட்டார். அதற்கு திருமால் நடந்தவைகளைக் கூறி இக்கொடிய குறோணி தனை [[ஆறு துண்டுகள்|ஆறு துண்டுகளாக]] வெட்டி அழித்து தொல் [[புவி]]யில் இட்டிட வரம் தர வேண்டும் என கூறினார். இதைக் கேட்ட [[சிவன்|சிவனார்]] [[விஷ்ணு]]வைப் பார்த்து, நீர் கூறியதுபோல் இவனை அழித்தால் அந்த ஆறு துண்டுகளும் பின் தொடர்ந்து வரும் ஆறு யுகங்களிலும், யுகத்துக்கு ஒரு துண்டு வீதம், உமக்கு மாற்றானாய் பிறக்கும். அதனால் யுகத்துக்குகம் உத்தமனாய் நீர் பிறந்து அவ்வொவ்வொரு துண்டுகளையும் அழித்து, பின் இவன் உயிரை [[குறோணி நடுத் தீர்ப்பு|நடுக் கேட்டு]], நரகக் குழியில் அடைக்க வேண்டும் என கூறி, திருமாலுக்கு அதற்கான விடையைக் கொடுத்தார். 

விடை வேண்டியத் திருமால் கோபத்தால் வெகுண்டெழுந்து குறோணி தனை ஆறு பெரிய துண்டுகளாய் வெட்டிப் பிளந்தார். அவர் வெட்டிப் போட்ட துண்டுகளை [[தேவர்கள்]], எடுத்துச் சென்று உலகத்தில் போட்டனர். அவனது [[உதிரம்|உதிரங்களை]], குளம் போன்ற பெரிய குழிகளை வெட்டி அதன்மேல் உயர்ந்த பீடமும் போட்டனர்.

==குறோணி - தத்துவப் பார்வை==

தத்துவ முறையாக, [[தேவர்கள்]] மனதில் உருவான [[ஆணவம்|ஆணவ]] அழுக்கே குறோணி என உருவகிக்கப் பட்டிருப்பதாகவும் கருத்து உள்ளது. 

இக்கூற்றின் படி [[கயிலை]] என்பது [[இதயம்]] எனவும், குறோணி என்பது பருப்பொருள் அல்ல என்றும், மனதில் எழும் [[அஞ்ஞானம்|அஞ்ஞானத்தின்]] [[சூக்குமம்|சூக்கும]] வெளிப்பாடே அது எனவும், பசியால் அவன் அருந்தும் கடல் நீர் என்பது [[சம்சார சாகரம்]] எனவும், வெட்டப்படும் ஆறு துண்டுகளும் [[காமம்]], [[குரோதம்]], [[உலோபம்]], [[மோகம்]], [[மதம்]], [[மாச்சரியம்]] என்னும் [[அகப் பகைகள்]] எனவும் பொருள் கொள்ளப்படுகின்றன. இப்பார்வைக்கு பரவலாக அய்யாவழி சமூகத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றபோதும், அய்யாவழி ஆய்வலர்கள் சமய ஆய்வின் போது பரவலாக இதில் பெரும்பான்மைப் பகுதிகளை கருத்தில் கொள்கின்றனர்.

===பரிணாம கொள்கையும் குறோணியும்===

அய்யாவழியில் [[உயிர்]]களின் [[பரிணாமக் கொள்கை]], யுகங்கள் என்னும் கதையோட்டத்தின் மூலமாக உணர்த்தப்படுவதாக சில ஆய்வாளர்கள் துணிகின்றனர். இக்கூற்று வழி, குறோணி வெட்டப்படும் முதல் யுகமான [[நீடிய யுகம்|நீடிய யுகத்தை]] அனாதி நிலை எனக்கூறி வரம்புக்குட்படாதது (பிறப்பு இறப்புக்கு உட்படாதது) எனவும், பின்னர் வரும் ஒவ்வொரு யுகங்களிலும் [[தீய சக்தி]]யின் ஆதிக்கத்திலிருக்கும் உயிர்கள் ([[ஆன்மா]])படிப்படியாக பரிணாமம் எனப்படும் அதன் ஆதி இறைநிலையை அடைந்து வரும். அவைகள் இறைநிலை அடைய அடைய அகப்பகையாக இருக்கும் அந்தந்த யுகத்தின் அசுர சக்தி (குறோணியின் கூறுகள்) அழிந்து கொண்டே வரும். இறுதியில் அவைகள் முழுமையாக அழிந்து ஆன்மாக்கள் வைகுண்டத்துடன் இணைவதுடன் அவை முழு பரிணாமத்தை (இறை நிலை) அடைகின்றன என்பதாகும். 

<br>
<table border=1.5 align=center>
<tr><td><center>'''அறிவு'''</center></td><td><center>'''உட்பகை'''</center></td><td><center>'''அழுக்கு அசுரர்'''</center></td><td><center>'''யுகம்'''</center></td><td><center>'''அவதாரம்'''</center></td></tr>
<tr><td> <center>[[ஓரறிவு]] </center> </td><td><center>[[மோகம்]]</center></td><td><center>[[குண்டோமசாலி]]</center></td> <td><center>[[சதிர் யுகம்]]</center></td><td><center>[[மாயன்]]</center></td></tr>
<tr><td> <center>[[ஈரறிவு]] <center/> </td><td><center>[[மாச்சரியம்]]</center> </td><td><center>[[தில்லைமல்லாலன்]], [[மல்லோசிவாகனன்]]</center></td> <td><center>[[நெடு யுகம்]]</center></td><td><center>[[திருமால்]]</center></td></tr>
<tr><td> <center>[[மூவறிவு]]  <center/></td><td><center>[[கோபம்]] </center></td><td><center>[[சூரபத்மன்]], [[இரணியன்]]</center></td> <td><center>[[கிரேதா யுகம்]]</center></td><td><center>[[முருகன்]], [[நரசிம்மன்]]</center></td></tr>
<tr><td> <center>[[நான்கறிவு]] </center> </td><td><center>[[காமம்]] </center></td><td><center>[[இராவணன்]]</center></td> <td><center>[[திரேதா யுகம்]]</center></td><td><center>[[இராமர்|இராமன்]]</center></td></tr>
<tr><td> <center>[[ஐந்தறிவு]]</center></td><td><center>[[உலோபம்]] </center></td><td><center>[[துரியோதனன்]]</center></td> <td><center>[[துவாபர யுகம்]]</center></td><td><center>[[கண்ணன்]]</center></td></tr>
<tr><td> <center>[[ஆறறிவு]]</center> </td><td><center>[[கலி]]</center></td><td><center>[[கலியன்]]</center></td> <td><center>[[கலி யுகம்]]</center></td><td><center>[[வைகுண்டர்]]</center></td></tr>
</table>
<center><small>அட்டவணை ஆதாரம்:இராஜகோபாலின், '''சான்றவர் அவதாரம்''', 2004,பக்கம் 12.</small></center>

==ஆதாரம்==

* நா.விவேகானந்தனின், '''அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும்''', பாகம் - 1, பக்கம் 29-31.
* அரி சுந்தர மணியின், '''அகிலத்திரட்டு அம்மானை பாராயண உரை''', பக்கம் 36-37. 
* தெச்சணத்து துவாரகா பதி வெளியீடான, '''அகிலத்திரட்டு அகக் கோர்வை''', பக்கம் 3.



{{அய்யாவழி-குறுங்கட்டுரை}}
[[category:அய்யாவழி]]கயிலையின் வளம்

ஆறு செஞ்சடை சூடிய அய்யனாராகிய சிவபெருமான்  அமர்ந்திருக்கும் கயிலையுடைனுய வளங்கள் பற்றியும், வைகுண்ட வாசனாகிய நாராயணர் பள்ளிகொண்டுள்ள வைகுண்டலோகத்தினுடைய சிறப்புகள் பற்றியும், சொல்ல சொல்ல சொல்லி நிறைவு செய்யக்கூடியது அல்ல, எனவே உலகத்திலே வந்து அந்த இறை அருளால் இறைவன் நடத்திய திருவிளையாடல்களை பற்றி இனி காண்டமாக எம்பெருமான் தொகுத்து உரைக்கிறார்.

இங்கு சொல்லபடுகின்ற திருவிளையாடல்கள் எல்லாம் மகாலட்சுமி ஆகிய அன்னை , எப்போதும் நாராயணருடைய திருவடிகளுக்கு பணிசெய்து கொண்டு இருக்க கூடிய அந்த மகாலட்சுமிக்கு எடுத்துறைப்பதாக எம்பெருமான் இந்த திருகாண்டத்தை சொல்கிறார், இந்த கதை பிறந்த வரலாறு என்ன ? வைகுண்டத்திலே நாராயணருக்கு அன்னை மகாலட்சுமி பணிசெய்துகொண்டு இருக்கிறாள் , இந்த ஆறு யுகங்கள் நீடியயுகம் , சதுரயுகம் , நெடியயுகம் , கிரேதாயுகம் , திரேதாயுகம் , துவாபரயுகம் கழிந்த ஆறு யுகங்களும் நிறைவு செய்து ஏழாவது இந்த கலியை, கலியிலே பிறந்த கலியனை அழிப்பதற்காக வேண்டி வைகுண்ட அவதாரம் எடுத்து , திருவிளையாடல்களை செய்து நிறைவு செய்து அம்மையோடு வைகுண்டத்திலே இருக்கிறார் . அப்பொழுது அந்த அன்னையானவள் எம்பெருமானுடைய திருவடிகளை வணங்கிநின்று கேட்கின்றாள் , 

தேவரே ! யுகாயுகங்கள் தோறும் யுகதர்மத்தை நிலைநாட்ட இந்த உலகத்திலே போகிறோம் அந்த அந்த யுகங்களை நிறைவுசெய்து யுகதர்மத்தை நிலைநாட்டி மீண்டும் இந்த வைகுண்டலோகத்தில் வந்து சேர்கிறோம் , அப்படி சேர்ந்தபோது நிம்மதியாக இங்கே இருக்கலாம் என்று இருக்கின்ற அந்த வேளையிலே தாங்கள் திடீரென்று எழுந்திருந்து புறபடுகின்றீர்கள் . ஆதியால் கூட அளவறிய கூடாத நாதியாய் நின்று நடத்துகின்ற நாராயண பொருள் தாங்கள் எதற்காக இவ்வளவு அவசரப்பட்டு செல்கிறீர்கள் என்று கேட்டால் பூலோகத்திலே எனக்கு எதிரி தோன்றிவிட்டான் அந்த அசுரர்களை , அந்த எதிரிகளை அழிப்பதற்காக நான் போகிறேன் என்று சொல்கிறீர்கள் , தங்களுக்கு எப்படி அய்யா எதிரி தோன்றினான் ? என்று அந்த அம்மை சுவாமியை வணங்கி கேட்கிறாள் , அதற்க்கு எம்பெருமான் சொல்லுகின்றார் , 

தேவி ஏகம் ஒருபரமானதும் இம்மென்ற வாயுவில் சக்தி விளைந்ததும், சக்தியிலே சிவம் தோன்றியதும், சிவத்திற்கு சக்தி தோன்றியது , சிவசக்தியிலே நாதம் தோன்றியது , நாதத்திலே விந்து வித்து தோன்றியது , அந்த வித்திலே விஷ்ணு தோன்றுகிறார் , அவருடைய உந்திகமலதிலே பிரம்மன் தோன்றுகிறார் , பிரம்மனால் பெரும் புவியெல்லாம் , புவிநிறைந்த வஸ்துகள் எல்லாம் படைக்கபடுகிறது , அவ்வாறு படைக்கப்பட்ட அந்த உலகத்தை சிவபெருமான் ஆட்பறிக்கின்றார் , இதற்க்கு என்ன பெயரிடலாம் என்று ஆலோசித்து மூவரும் கூடியிருந்து நீடியயுகம் என்று பெயரிட்டார்கள் , அப்போது கயிலையிலே வேள்வி வளர்கின்றார்கள் , அந்த வேள்வியிலே குறோணி என்ற அசுரன் தோன்றுகிறான் , குறோணியானவன்  இத்தனை  கால்கரங்கலோடும் , அல்லது இத்தனை இத்தனை அமைப்புகளோடு இருந்தான் என்று யாராலும் சொல்லமுடியாத கொடூரதன்மையாக இருக்கிறான் , அவனுடைய முகம் முதுகைபார்த்து இருக்கும் , அவன் எழுந்து நடந்தால் தண்ணீரிலே கிடக்கின்ற வெற்று படகு அதில் ஒருவர் நடந்தால் எப்படி அங்கும் இங்கும் அசையுமோ அதுபோல இந்த உலகமானது அசைகின்றது , அவன் தன்னுடைய பசியை போக்குவதற்காக உலகத்து பண்டங்களை எடுத்து சாப்பிட்டான் பசி அடங்கவில்லை , கொஞ்ச கொஞ்சமாக சாப்பிட்டு பசி அடங்கவில்லை உடனே கயிலையை கண்டான் கயிலையை எடுத்து விழுங்க வருகிறான் , 

அப்போது அந்த மகாவிஷ்ணு அங்கிருந்து தப்பி பூலோகத்திலே வந்து சிவபெருமானை நினைத்து தவமிருக்கிறார் , அப்படி தவமிருகின்ற அந்த மகவிஷ்ணுவினுடைய கோரிக்கையை நிறைவு செய்வதற்காக வேண்டி சிவபெருமான் ஒரு சந்நியாசி போல அங்கே வருகிறார் , சிவபெருமான் கேட்கிறார் , ஏனப்பா ! ஆலமரம்தனிலே அருந்தவசு புரிகிராயே என்ன காரணம் ? அப்பொழுது நாராயணர் சொல்கிறார் தேவதேவா ! குறோணி என்ற அசுரன் கயிலையை எடுத்து விழுங்க இருகின்றான் நான் அவனிடத்திலே அகபடாமல் தாவிகுதித்து இந்த மண்ணிலே வந்து தங்களை நினைத்து தவமிருக்கிறேன் , எனக்கு ஒரு வரம் வேண்டும் . என்று கேட்கிறார் , என்னவரம் வேணும் ? கயிலை எப்போதும் விளங்கி இருக்கவேண்டும் , அதிலே சிவபெருமானும் , பார்வதியும் வீற்றிருக்க்வேண்டும் , தவ முனிவர்களுக்கு எந்த அழிவும் ஏற்பட கூடாது , இப்போது இந்த குரோணியை விட்டு வைத்தால் கயிலையை அப்படியே எடுத்து விழுங்கிவிடுவான் , எனவே அந்த குறோணி என்ற அசுரனை கொல்ல வேண்டும் அப்போது சிவபெருமான் சொல்லுகின்றார் ! இப்போது இந்த குரோணியை ஆறுதுண்டுகளாக வெட்டிக்கொல்லவேண்டும் என்று இருக்கிறீர் , அப்படி அவனை வெட்டிவிட்டாலும் அந்த குறோணி என்ற அசுரன் அதோடு அழிந்து போவது இல்லை , அவனுடைய துண்டங்கள் ஒவ்வொன்றும் மேலும் யுகாயுகங்கள் தோறும் இந்த உலகத்திலே பிறவி எடுக்கும் அப்போது இவனுடைய குணநல பிரகாரம் இவனை விட அதிக படுபாவியாக கொடியவனாக இருப்பான் இதைவிடவும் இந்த உலகத்திற்கும் , தேவர்களுக்கும் , மனிதர்களுக்கும் மற்றும் உயிரினங்களுக்கும் சங்கடங்கள் ஏற்படும் , அப்போது அவர்கள் எல்லாம் துயரப்படும்போது அவர்களுடைய துயரத்தை தீர்ப்பது யார்? உம்மால் முடியுமா ? என்று சிவபெருமான் கேட்கிறார் அதற்க்கு நாராயண மூர்த்தி சொல்லுவார் , 

ஈஸ்வரரே! இந்த அசுரனை இப்போது நான் ஆறுதுண்டுகளாக வெட்டி கொன்றுவிடுகிறோம் , அந்த துண்டங்கள் ஒவ்வொன்றும் அசுரர்களாக பிறவி எடுத்தால் அவர்களுடைய துஷ்டகுணங்களுக்கு தகுந்தவாறு நான் உலகத்திலே தர்ம திரவனாக அவதாரம் எடுத்து அந்த அசுரர்களை அழித்து அவர்களால் ஏற்படக்கூடிய அவலங்களையும் போக்கி அந்த அந்த யுகங்களுடைய தர்மத்தை நான் நிலைநாட்டுவேன் , இது சத்தியம் !!! என்று சிவபெருமானிடம் நாராயணமூர்த்தி சத்தியம் செய்து கொடுக்கிறார் , உடனே சிவபெருமானும் குரோணியை வெல்லுவாய் என்று குரோணியை அழிப்பதற்கு ஆயுதம் கொடுக்கின்றார் , அந்த ஆயுதத்தை கொண்டுபோய் கயிலையை எடுத்து விழுங்க இருந்த அந்த குரோணியை ஆறுதுண்டுகளாக வெட்டி இந்த மண்ணில் சாய்க்கிறார் ,
நாகத்து மேல் கிடந்த நாராயண மூர்த்தி வேகத்தால் குரோணியை வெட்டினார் அம்மானை , ஆறுதுண்டுகளையும் இந்த உலகத்திலே புதைகுழிகள் தோண்டி அதிலே இட்டுநிறுத்தினார்கள் , அவனிலுருந்து பாய்ந்த ரத்தத்தை குழிவெட்டி குளம்போல தேக்கினார்கள் , இவ்வாறு ஒன்றவாது யுகம் நீடியயுகம் அதிலே பிறந்த அசுரன் குறோணியை ஆதிதிருநெடுமால் ஆறுதுண்டுகளாக வெட்டி அழித்து அந்தயுக தர்மத்தை நிலைநாட்டினார்.
இரண்டாவது யுகம் நீடியுகம் குரோணியினுடைய ஒரு துண்டத்தை குண்டோமசாலி என்ற அசுரனாக பிறவி செய்கின்றனர் , அவன் எப்படி வாழ்ந்தான் , என்ன விதத்தால் அழிந்தான் என்ற வரலாற்றை அடுத்த இதழில் பார்க்கலாம் …

நன்றி : கு.சங்கரபாண்டியன் (அகிலத்திரட்டு உரை இசை புலவர்)