Difference between revisions 1406097 and 1406104 on tawiki

==திமிலர்களின் சில பழக்க வழக்கங்கள்==
* திமிலில் சென்று சுறா மீன்களை வாளால் வெட்டுவர். <ref>திமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி, வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி, (நற்றிணை 111)</ref> தூண்டிலிலும் மீன் பிடிப்பர். <ref>கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர், வாங்கு விசைத் தூண்டில் (நற்றிணை 199)</ref> மீன் பிடிக்க வில்லையும் பயன்படுத்துவர். <ref>நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக், கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய, நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து, வெண் தோடு இரியும் (குறுந்தோகை 304)</ref> கயிற்றில் கட்டிய உளியை வீசி மீன் பிடித்து வந்து மரநிழலில் உறவினர்களுக்குப் பகிர்ந்தளிப்பர். <ref>கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித், திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ, நடு நாள் வேட்டம் போகி, வைகறைக், கடல் மீன் தந்து, கானற் குவைஇ, ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து, தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி (நற்றிணை 388)</ref> வேலால் கிழித்துப் பங்கிடுவர். <ref>கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென, இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக், குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி, கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன் (அகம் 70)</ref>
* நெல்லரிசி புளிக் கட்டுச்சோறு கொண்டு செல்வர். <ref>நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு, உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு, அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து, கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் (அகம் 60)</ref>
* திமிலில் விளக்கு எரியும். மாடத்திலிருந்து அதனை எண்ணி விளையாடுவர். <ref>நெடுங் கால் மாடத்து, ஒள் எரி நோக்கி, கொடுந் திமில் பரதவர் குரூஉச் சுடர் எண்ணவும், (பட்டினப்பாலை 112)</ref> <ref>திண் திமில் விளக்கம் எண்ணும் (நற்றிணை 372)</ref> <ref>மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர்
வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு, (அகம் 65)</ref>
* திமிலில் சென்று வேட்டையாடிக்கொண்டு அணி அணியாக்க் கரையேறும்போது பெருத்த ஆரவாரம் இருக்கும். <ref>நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை, மதுரைக்காஞ்சி 116)</ref>
* திமிலில் கொண்டுவந்த மீனை மணல் பரப்பில் மீன் எண்ணெய் ஊற்றி எரியும் கிளிஞ்சல் விளக்கொளியில் இரவில் விற்பர். <ref>நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர், கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ, மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய, சிறு தீ விளக்கில் துஞ்சும், (நற்றிணை 175)</ref>
* வலிமையுடைய திண்திமில் என் தந்தையினுடையது, உன்னுடைய தந்தையினுடையது என உரையாடி மகிழ்வர். <ref>''எந்தை திமில், இது, நுந்தை திமில்'' என, வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர், திண் திமில் எண்ணும் (நற்றிணை 331)</ref> <ref>பல் மீன் வேட்டத்து என்னையர் திமிலே, (குறுந்தொகை 123)</ref>
* யானைமீது செல்வது போல் திமிலில் செல்வர். <ref>நிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக, கரை சேர் புள்ளினத்து அம் சிறை படையாக, அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப (கலித்தொகை 149)</ref> <ref>இவர், திமில், எறிதிரை (கலித்தொகை 136)</ref>
* பழைய திமில்களை அழித்துவிடுவர். பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர் (அகம் 10)
* திமிலை ஆற்று வெள்ளத்திலும் பயன்படுத்துவர். <ref>புனல் பொருது மெலிந்தார் திமில் விட, (பரிபாடல் 10) \வெய்ய திமிலின் விரை புனலோடு ஒய்வாரும், (பரிபாடல் 10)</ref>

==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
<references />