Difference between revisions 1406126 and 1406142 on tawiki==திமிலர்களின் சில பழக்க வழக்கங்கள்== * திமிலைக் கடலில் விரைந்து செலுத்துவர். <ref>கரை பொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து (புறம் 303)</ref> <ref>கடுஞ் செலல் கொடுந் திமில் (அகம் 330)</ref> * திமிலில் சென்று சுறா மீன்களை வாளால் வெட்டுவர். <ref>திமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி, வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி, (நற்றிணை 111)</ref> தூண்டிலிலும் மீன் பிடிப்பர். <ref>கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர், வாங்கு விசைத் தூண்டில் (நற்றிணை 199)</ref> மீன் பிடிக்க வில்லையும் பயன்படுத்துவர். <ref>நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக், கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய, நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து, வெண் தோடு இரியும் (குறுந்தோகை 304)</ref> கயிற்(contracted; show full) * நெல்லரிசி புளிக் கட்டுச்சோறு கொண்டு செல்வர். <ref>நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு, உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு, அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து, கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் (அகம் 60)</ref> * இரவில் செல்வர். <ref>திண் திமில் விளக்கில், பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய, எந்தையும் செல்லுமார் இரவே (அகம் 240)</ref> திமிலில் விளக்கு எரியும். <ref>முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல, செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் (புறம் 60)</ref> மாடத்திலிருந்து அதனை எண்ணி விளையாடுவர். <ref>நெடுங் கால் மாடத்து, ஒள் எரி நோக்கி, கொடுந் திமில் பரதவர் குரூஉச் சுடர் எண்ணவும், (பட்டினப்பாலை 112)</ref> <ref>திண் திமில் விளக்கம் எண்ணும் (நற்றிணை 372)</ref> <ref>மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர் வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு, (அகம் 65)</ref> உப்புக் குவியலின்மீது ஏறியும் எண்ணுவர். <ref>உப்பின் குப்பை ஏறி, எல் பட, வரு திமில் எண்ணும் (அகம் 190)</ref> சில நாள் செல்வதில்லை <ref>திரை பாடு அவிய, திமில(contracted; show full) * யானைமீது செல்வது போல் திமிலில் செல்வர். <ref>நிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக, கரை சேர் புள்ளினத்து அம் சிறை படையாக, அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப (கலித்தொகை 149)</ref> <ref>இவர், திமில், எறிதிரை (கலித்தொகை 136)</ref> * பழைய திமில்களை அழித்துவிடுவர். பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர் (அகம் 10) * கொற்கைத் துறைமுகத்தில் திமிலில் சென்றவர் மீன் கொண்டுவராமல் முத்துக் கிளஞ்சல்களைக் கொண்டுவருவர். அவர்களைக் கரையில் உள்ளவர்கள் சங்கு ஊதி வரவேற்பர். <ref>இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி, வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர், ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென, கலி கெழு கொற்கை எதிர்கொள, (அகம் 350)</ref> * சில இரவு வேளைகளில் சூடான மட்டு <ref>பாயசம்</ref> பருகிக் குரவை ஆடுவதும் உண்டு. <ref>திண் திமில் வன் பரதவர், வெப்பு உடைய மட்டு உண்டு, தண் குரவைச் சீர் தூங்குந்து (புறம் 24)</ref>⏎ * திமிலை ஆற்று வெள்ளத்திலும் பயன்படுத்துவர். <ref>புனல் பொருது மெலிந்தார் திமில் விட, (பரிபாடல் 10) \வெய்ய திமிலின் விரை புனலோடு ஒய்வாரும், (பரிபாடல் 10)</ref> ==மேற்கோள்களும் குறிப்புகளும் == <references /> All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikipedia.org/w/index.php?diff=prev&oldid=1406142.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|