Revision 1169422 of "ஒத்துணர்வு மந்திரம்" on tawiki'''ஒத்துணர்வு மந்திரம்''' (Sympathetic magic) அல்லது '''போலச்செய்தல் மந்திரம்''' என்பது போலச்செய்தல், தொடர்பு என்பவற்றின் அடிப்படையில் உருவான ஒத்திருத்தல் விதி, தொடர்பு விதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒருவகை [[மந்திரம்]] (magic) ஆகும். ஒத்திருத்தல் விதியில், மனிதரின் சூழலையோ அல்லது சிலசமயங்களில் மனிதரையோ பாதிப்பதற்கு போலியுருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்பு விதி ஒன்றை அதனோடு தொடர்புடைய இன்னொன்றை அடிப்படையாகக் கொண்டு செல்வாக்குக்கு உட்படுத்தலாம் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. கண், காது போன்ற உறுப்புக்களில் ஏற்படும் [[நோய்]] குணமாவதற்காக அவ்வுறுப்புக்களின் உருவத்தை பொன், வெள்ளி போன்ற உலோகங்களில் செய்து கோயில்களுக்குக் கொடுப்பதாக நேர்த்தி வைப்பதுண்டு. இது போலச் செய்தல் விதிக்கு உட்பட்டது. இதுபோன்றே கன்று ஈன்ற [[கால்நடை]]களிள் இளங்கொடிகளை பால்மரங்களில் கட்டிவிடும் வழக்கம் உண்டு. இது பால் மரங்களில் கட்டுவதால் கால்நடைகள் நிறைந்த [[பால்]] கொடுக்கும் என்னும் எண்ணத்தின் பாற்பட்டது. எனவே இது தொடர்பு விதியோடு சம்பந்தப்பட்டது ஆகும். மேலே கண்ட இரண்டு எடுத்துக் காட்டுகளும் ஒத்துணர்வு மந்திர வகையைச் சார்ந்தவை. [[பகுப்பு:மானிடவியல்]] [[ca:Màgia simpàtica]] [[cs:Sympatetická magie]] [[cy:Dewiniaeth sympathetig]] [[en:Sympathetic magic]] [[es:Magia simpática]] [[ja:類感呪術]] [[ms:Sihir simpati]] [[no:Sympatisk magi]] [[pl:Magia sympatyczna]] [[ru:Симпатическая магия]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikipedia.org/w/index.php?oldid=1169422.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|