Revision 1203849 of "ஓசோன் படை தேய்வின் விளைவுகள்" on tawiki[[படிமம்:Uars ozone waves.jpg|350px|thumb|ஓசோன் படலத் தேய்வு]]
'''ஓசோன் படை தேய்வின் விளைவுகள்''' என்பது [[புவி]]யின் வளி மண்டலத்தில் அதிகளவை உள்ளடக்கிய [[ஓசோன் படலம்|ஓசோன் படையின்]] [[ஓசோன் படலத்தின் தேய்வு|தேய்வினால்]] புவியின் சூழலில் ஏற்படும் மாற்றங்களையும் பிரச்சினைகளையும் குறிக்கும்.
== ஓசோன் படை ==
{{main|ஓசோன் படலம்}}
ஓசோன் படையானது படைமண்டலத்தில் உள்ள பகுதியாகும். இப்பகுதி புவியின் வளிமண்டலத்தின் அதிகளவான பகுதியை (90%) உள்ளடக்கி உள்ளது. இப்பகுதி புவியின் மேற்பரப்பில் இருந்து 10-25 [[மைல்]] (15-40 [[கிமீ]]) உயரத்தில் அமைந்துள்ளது. இப்படையானது [[சூரியன்|சூரியனில்]] இருந்து வீசப்படும் [[புற ஊதாக்கதிர்]]களிடமிருந்து (UV) பாதுகாப்பு கவசமாக செயற்படுகின்றது.
[[ஓசோன்]] [[ஒட்சிசன்|ஒட்சிசனின்]] விசேடமான ஒரு வடிவமாக உள்ளது. மூன்று ஒட்சிசன் [[அணு]]க்களினால் உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண இரு அணுக்களினை கொண்ட ஒட்சிசனை விட விசேட அமைப்பினை கொண்டது. ஓசோன் ஆனது படை மண்டலத்தின் தாழ்பகுதியில் ஒட்சிசன், மற்றும் உயர் [[ஆற்றல்]] வாய்ந்த சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் [[கதிர்வீச்சு|கதிர்வீசலின்]] மூலமும் உற்பத்தியாகின்றது. படை மண்டல ஓசோன் படையானது புவியிற்கு நன்மை பயப்பிக்கும் விதத்தில் செயற்படுகின்றது. புறஊதாக்கதிர் வீசலினை புவியின் மேற்பரப்பை அடையாவண்ணம் தடுக்கின்றது. அறிவியலாளர்கள் [[1920]] இல் ஓசோன் படையினை கண்டுபிடித்த காலத்தில் இருந்து அதன் இயற்கை அமைப்பு மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனா. [[1974]] இல் [[வேதியியல்|வேதியியலாளர்கள்]] சேர்வூட் ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செயற்பாடுகளின் மூலம் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் பொருட்களினால் ஓசோன் படையிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் பல்வேறுபட்ட எதிர்விளைவுகள் ஏற்படுவதுடன் அதனை தடுப்பதற்கான சட்டதிட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை ஓசோன் படை தேய்விற்கு காரணமான பொருட்களை வெளியிடாமல் இருப்பதற்கான பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய கடமை உலகிலுள்ள அனைத்து மக்களையும் சார்ந்துள்ளது.
== ஓசோன் தேய்விற்கான காரணங்கள் ==
ஓசோன் தேய்விற்கு ஓசோனை தேய்வடைய செய்யக்கூடிய பொருட்களை வெளியிடுதலே (''Ozone Depleting Substances'') காரணங்களாக உள்ளன. இப்பொருட்கள் பிரதானமாக மனித உருவாக்கங்களாகவே உள்ளதுடன் இதற்கு காரணமாக குறிப்பிட்டு காட்டக்கூடிய இயற்கை மூலகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறான ஊறுவிளைவிக்கும் பொருட்கள் கைத்தொழில் விவசாய நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றது அல்லது பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக குளோரோ புளோரோ காபன் (CFC, ''Chloro floro Carban''), கார்பன் தெட்ராகுளோரைட் (''Carban Thetrachlorite''), ஐதரோ குளோரோ புளோரோ கார்பன் (HCFC) மற்றும் மெதில் புரோமைட் (''Methil Bromite'') போன்றவை பிரதானமாக ஓசோன் தேய்விற்குக் காரணமாக உள்ளன. இவ்வூறு விளைவிக்கும் காரணிகள் மேல் வளிமண்டலத்தினை அண்மித்தவுடன் சக்தி வாய்ந்த அவற்றின் அணுக்களினை பகுதி பகுதியாக பிரித்துவிடுகின்றது. அப்பொருட்களை உருவாக்கியுள்ள அணுக்கள் அனைத்தும் விடுவிக்கப்படுகின்றன. உதாரணமாக [[குளோரீன்]] மற்றும் [[புரோமின்]] அணுக்களை குறிப்பிடலாம். இவ்வாறு விடுவிக்கப்பட்ட அணுக்கள் தமக்கு சேதம் விளைவிக்காது பிற பொருட்களை சேதமடைய செய்யும் செயற்பாட்டினூடாக ஓசோன் படை தேய்வினை துரிதப்படுத்துகின்றது. ஒவ்வொரு அணுவும் வளிமண்டலத்தில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்பதாக ஆயிரக்கணக்கான ஓசோன் மூலகங்களை அழிக்கக்கூடிய திறன்வாய்ந்தனவாக காணப்படுகின்றன. குளோரின் மற்றும் புரோமின் அணுக்களின் ஒன்றுகூடலானது மேல்வளிமண்டலத்தில் ஓசோன் அழிவு செயற்பாட்டினை துரிதப்படுத்தியதன் விளைவாக சிறப்பாக முனைவுப்பகுதிகளில் ஓசோனின் அளவினை தாழ்நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. [[1980]] இல் பாரதூரமாக ஓசோனின் அழிவிற்கு ஹலோகனின் அழிக்கக்கூடிய நடவடிக்கைகள் காரணமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதனையே ஓசோன் துவாரம் (Ozone hole) எனவும் அடையாளப்படுத்தியுள்ளனர்.
== ஓசோன் படைத் தேய்வினால் மனித சுகாதாரம் மற்றும் சூழல் மீது ஏற்படுகின்ற விளைவுகள் ==
ஓசோன் படையானது புவியிற்கும் அதன் உயிரியல் முறைமைக்கும் பாதுகாப்பு கவசமாக செயற்படுகின்றது. இப்படையானது சூரியனில் இருந்து வருகின்ற புற ஊதாக்கதிர்வீசலினை உறிந்துக்கொள்வதுடன் புவியின் மேற்பரப்பினை அடையும் அளவினையும் குறைக்கின்றது. ஓசோன் படையின் மட்டம் குறைவடைவதனால் UV அளவு அதிகரிப்பதுடன் மனித சுகாதாரம் மற்றும் சூழலுக்கு தீங்கு தரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றது. ஆராய்வுகளின் படி UV-B கதிர்வீசலுக்கும் தோல் [[புற்றுநோய்]]க்கும் இடையில் திடமானதொரு உறவு நிகழ்வதாக கூறப்படுகின்றது. UV-B கதிர்வீசலினால் கண் நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறானது உயர்ந்த அளவில் காணப்படுகின்றது. UV-B தரை மேற்பரப்பை அடைவதுடன் அதனை உட்சுவாசிக்கும் போது நச்சுவாக மாறி சுவாசத்தொகுதி பிரச்சினைகளையும் உருவாக்குகின்றது. உயர் புறஊதாக்கதிர் மட்டமானது சில உயிர் வாழ் நுண்ணியிர்களின் வாழ்வை பாதிக்கின்றது. உதாரணமாக Cyanobacteria) நுண்ணுயிர்களானது பல தாவரங்களின் [[நைதரசன்]] நிலைநாட்டுகை செயற்பாட்டில் பிரதானதொரு பங்கினை வகிக்கின்றன. தாவரங்கள் UV கதிர்வீசலுக்கு இலகுவில் பாதிப்படைகின்றன. UV கதிர்வீசல் தாவர வளர்ச்சியினை பாதிக்கின்ற படியினால் தாழ்மட்ட விவசாய உற்பத்திக்கு ஏதுவாகின்றது. இதன் காரணமாக பிளான்தன்களும் பாதிப்படைகின்றன. அதேவேளை பிளான்தன்கள் உணவு வலையின் முதல்நிலை உற்பத்தியாக்கிகளின் ஜீவாதாரமானவையாகும். சமுத்திரத்தின் பிளான்தன்களின் அளவ குறைவடைதலானது மீன்களின் அளவு குறைவடைவதற்கு வழிவகுக்கின்றது.(சமுத்திர உயிர் சூழலியல் செயற்பாட்டின் உணவூ சங்கிலி முறைமையினுடாக).
== ஓசோன் படை தேய்வினை தடுப்பதற்காக பூகோள ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ==
ஓசோன் படை தேய்வினை தடுப்பதும் ஓசோன் படையை பாதுகாப்பதும் பூமியின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை நிலைநாட்டுவதற்கு எடுக்கவேண்டிய முக்கிய விடயமாகும். குளிர்சாதன பெட்டிகள், குளிரூட்டிகள் போன்றவற்றின் பாவனையானது ஓசோன் தேய்வு பொருட்களான குளோரோ புளோரோ காபன், ஐதரோ குளோரோ புளோரோ காபன் போன்றவற்றினை வெளியிடுவதுடன் புவியின் நிலையான வாழ்க்கைக்கு பொறுப்பான சூழலுக்கு அபாயத்தினையூம் விளைவிக்கின்றது. உலக மக்கள் ஓசோன் படை தேய்வினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிடில் எமது எதிர்கால சந்ததிகள் அதன் எதிர் விளைவினை சந்திக்க வேண்டி ஏற்படும். இவ் ஓசோன் தேய்வானது அதற்கு சேதம் விளைவிக்கும் பொருற்கள் வெளியேற்றப்படும் (ODS) பிரதேசத்திற்கோ அல்லது குறிப்பிட்ட தேசத்திற்கோ மட்டும் தாக்கத்தினை ஏற்படுத்துவதில்லை. உலகின் முழு சனத்தொகையுமே அதன் தாக்கத்திற்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
== ஓசோன் படை தேய்வினை நோக்கிய பன்னாட்டு பிரயத்தனம் ==
விஞ்ஞானிகளின் அறிவுறுத்தலின் பின்பு உலகின் அனைத்து சமூகங்களும் இணைந்து [[1985]] இல் ஓசோன் படையினை பாதுகாப்பதற்காக [[வியன்னா]] மகாநாட்டினை உருவாக்கின. இச்சான்றுகள் உறுதிப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் அதாவது [[1987]] இல் [[மொன்றியல்]] சாசனம் ஓசோன் தேய்வுப்பொருட்களை வெளியிடுவதனை தடுப்பது தொடர்பாக உருவாக்கப்பட்டது. CFC, HCFC மற்றும் ஏனைய தேய்விற்கு பொருப்பான பொருட்களை வெளியிடாது சூழல்-நட்பான ஓசோனுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாத மாற்றுப்பொருற்களை பயன்படுத்துமாறு வலியூறுத்தப்பட்டது.
பிரதான கடமைகள்
* ODS பொருற்களை உற்பத்தி செய்வது நுகர்வது ஆகியவற்றினை கட்டுப்படுத்துதல்.
* ODS இன் சர்வதேச வர்த்தகத்தினை கட்டுப்படுத்தல்.
* ODS இன் வருடாந்த உற்பத்தி தரவுகளைப் பேணல். அபிவிருத்தியடைந்த நாடுகள் பல்பக்க நிதியூதவியினை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கி மாற்று தொழினுட்பங்களை ODSவெளியேற்றத்திற்கு பயன்படுத்த கோரியதில் சிறந்த பலன்கள் ஏற்பட்டுள்ளன. 192 நாடுகள் இதில் கையெழுத்திட்டு கொள்கை உருவாக்கியுள்ளதுடன் அதற்கான நிதிசம்பந்தமான விடயங்களுக்கு வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 7 அங்கத்தவர்கள் (அபிவிருத்தியடைந்த அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இருந்து) பொறுப்பு வகிப்பர்.
* அடிப்படையில் இச்சட்டம் ODSபொருற்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.
* [[1992]] இல் [[லண்டன்]] சட்டம் அதிகப்படியாக ஓசோனை சேதப்படுத்தும் பொருட்களை வெளியிடும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் தொடர்பானதாக இருந்தது.
* [[1996]] இல் இச்சட்டம் விரைவுப்படுத்தப்பட்டது.
• 1995ல் [[வியன்னா]], 1997ல் [[மொன்றியல்]] 1999ல் [[பீஜிங்]] ஆகிய நாடுகளில் கொண்டுவரப்பட்டது.
== ஓசோன் படை தேய்வினை குறைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் ==
மானிடகாரணிகள் (Anthropogenic) மூலம் வெளிவிடப்படும் பொருட்கள் ஓசோனின் உற்பத்தியை விட அழிவை துரிதப்படுத்துவதனால் இயற்கை சமநிலை குலைகின்றது. மொன்றியல் சாசனத்தன் மூலம் ஓசோனின் மீள் உற்பத்தி நடவடிக்கையினை ஊக்குவிக்கும் தொழிற்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன. கைத்தொழில் குழுக்கள் (CFC மற்றும் ODS பாவனையாளர்கள்) சூழல்-நட்பு முறையிலான பாதுகாக்கப்பட்ட மாற்று முறைமைகளை கையாள முனைந்து வருகின்றன. தொழில்நுட்பத்தினூடாக மாற்று திட்டங்களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் அமுல்படுத்துவதனை ஊக்குவித்து வருகின்றன .மொன்றியல் சாசனமானது வழக்கத்தை மாற்றி புதுமையை புகுத்தும் விடயங்களையும் தொழில்நுட்பத்தினூடாக அவற்றின் வியாபித்தலினையும் சட்ட ரீதியான மற்றும் நிறுவனரீதியான தடைகளை அகற்றுதலையும் செய்து வருகின்றது.
உலகரீதியாக நகரும் குளிரூட்டிகள் (''Mobile Airconditioner'') சூழல்-நட்பு தொடர்பான நுட்பங்களுக்கு மாற்றப்பட்டு ஓசோன் படையினை பாதுகாப்பதுடன் அதேவேளை ODS பொருற்களினால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களும் குறைக்கப்படுகின்றது. (ODS, ''Ozone Depliting Substances'') [[1970]] காலகட்டங்களில் காணப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஓசோன் முறைமையினை மொன்றியல் சாசனம் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக இன்னும் 5-6 தசாப்தங்களில் எதிர்ப்பார்க்கலாம் என வளிமண்டல கணினி மாதிரிகள் காட்டிநிற்கின்றன.
== மாற்றுத் தொழில்நுட்பங்கள் ==
வெற்றிகரமானதொரு மாற்று தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தி ழுனுளு இனை வெளியேற்றி ஏனைய உலக சூழலியல் சவால்களை எதிர்நோக்க வேண்டி இருக்கின்றது. ODS ஆனது பாரிய அளவில் கைத்தொழில் நடவடிக்கைகளினால் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக குளிரூட்டிகள் குளிர்சாதன பொருற்கள் போர் நடவடிக்கைகள் கரைசல்கள் விவசாயம் விண்துகல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பல்வேறுபட்ட கைத்தொழில் நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. எனவே பாரிய கைத்தொழில் நிறுவனங்கள் புதிய ஓசோன் - நட்பான தொழில்நுட்பங்களை புகுத்துவதற்கு தேவையான வளங்களை பெற்றுள்ளன பெற்றவருகின்றன. ஆனால் சிறிய கைத்தொழில் நிறுவனங்கள் தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான அறிவினை வேண்டி நிற்கின்றன. ஆனது ODS வாயுவின் குறிப்பிடத்தக்க உற்பத்தி மற்றும் நுகர்வினை குறைப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. தேசிய ரீதியாக மீள் சுழற்சி மற்றும் மீள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்துவதன் மூலம் ODS இன் உற்பத்தியினை குறைக்க கூடியதாக உள்ளது.
== இரட்டை அனுகூலங்கள் ==
மொனறியல் சாசனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட கொள்கைகளின் அமுலாக்கங்களானது ODS வளிமண்டலத்திற்கு ஏற்படுத்தும் கேடுகளை குறைப்பதுடன் குறிப்பிடத்தக்களவில் காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. மொன்றியல் சாசனம் காலநிலை மீதான தாக்கங்களை குறைப்பதற்கு புதிய உபாய முறைகளை அபிவிருத்தி செய்ய ஊக்குவிக்கின்றது. மற்றும் [[பைங்குடில் வாயு]]க்களின் (GHG, ''Green House Gases'') உற்பத்தியை குறைக்கவும் உதவுகின்றது. பல ஓசோன் தேய்வுப் பொருட்களை GH வாயுக்கள் கொண்டுள்ளன. மொன்றியல் பிரகடனமானது அபிவிருத்தியடைந்த அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு ODS பொருட்களின் பாவனையை குறைக்கவும் மற்றும் ஓசோன் தேய்வினை தாழ்நிலையில் வைத்திருக்கவும் பூகோள வெப்பமடைதலினை (''Global Warming'') தாழ்நிலையில் வைத்திருக்கவும் ஊக்குவிக்கின்றது.
== பூகோள ரீதியான சவால்களை சந்திப்பதற்காக இலங்கை கொண்டுள்ள பிரயத்தனங்கள ==
[[இலங்கை]] CFC அல்லது ODS இனை அடிப்படையாக வைத்த உபகரணங்களையோ உற்பத்தி செய்யவில்லை. எவ்வாறிருப்பினும் அபிவிருத்தியடைந்து வரும் மற்றும் மொன்றியல் பிரகடனத்தில் கைச்சாத்திட்ட நாடு என்ற ரீதியில் சாசனத்தில் உள்ள இலக்குகளுக்கு கட்டுப்பட்டிருத்தல் வேண்டி உள்ளது. குளிர்சாதன தொழிற்சாலைகள் ODS இனை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டவை) ODS தொழில்நுட்பத்திற்கு மாற்றுவதனை பல்பக்க நிதிவசதிகளின் உதவியுடன் செய்துவருகின்றது. சூழல்-நட்பான தொழில்நுட்பங்கள் நாட்டிற்கு பல்வேறு வழிகளில் நன்மை பயப்பித்துள்ளன. தேசிய ரீதியாக இது தொடர்பான சட்ட அமுலாக்கங்கள் தேசிய ஓசோன் அமைப்பினால் (National Ozone Unit) செயற்படுத்தப்படுகின்றது. NOU ஆனது [[ஜனவரி 2008]] இல் ODS இன் இறக்குமதியை தடை செய்தது மிகப்பெரிய சாதனையாக உள்ளது. இலங்கை அனைத்துலகரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறியீட்டு முறைமை(Coding) Harmonized System (H.S Code) ஒன்றினை ODS பொருட்களின் இறக்குமதியினை கண்காணிப்பதற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. NOU ஓசோன் தேய்வுப் பொருட்கள் தொடர்பான தரவுகளையும் கையாண்டு வருகின்றது.
ஏதாவது ஒரு நாட்டின் அபிவிருத்தியினை துரிதப்படுத்துவதற்கு தொழில்நுட்பமானது அத்தியாவசியமான கருவியாக செயற்பட்டுவருகின்றது. அபிவிருத்தியடைந்துவரும் நாடாக இலங்கை இருப்பதனால் அதன் நிலையான அபிவிருத்தியினை சூழல் பாதுகாப்புடன் கூடிய பொருளாதார அபிவிருத்தியினூடாக பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. கைத்தொழில் அபிவிருத்தியினை மொன்றியல் சாசனத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றியமைப்பு செய்கைக்குட்பட்ட தொழில் நுட்பங்களினூடாக சாதிக்ககூடியதாக உள்ளது. பல அரசாங்கங்கள் ODS இனை அடிப்படையாக கொண்ட பொருட்களை தடைசெய்ததுடன் பாரியளவில் சூழல்-நட்பு தொழில்நுட்பங்களை புகுத்தியுள்ளன. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு மொன்றியல் சாசனத்தினூடாக நிதி உதவியை அளிப்பதானது உற்பத்தியை அதிகரிப்பதுடன் வேலைவாய்ப்புக்களையும் அதிகரித்துள்ளது. இவை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளினை கட்டியெழுப்புவதற்கு தேவையான சக்தியினை வழங்கிவருகின்றது.
== உசாத்துணைகள் ==
* Dr.Sumathipala W.L (Director) & Safinas I.P, (June/July 2008).,Economic Review: Global Warming And Environmental Threats., APeople’s Bank publication.
* Aluvihare .D.W,(2003), Srilanka Country hand book on import/export licensing system on Ozone Depleting Substances(ODS),(47-49),SriLanka.
* Montreal Protocol on Substances that deplete the Ozone Layer,Environmental effects of and Interaction with Climate change 2006 assessment,United Nations Environmental Programme,Kenya.
* Scientific assessment of Ozone Depletion 2002,World Meteorological Organization. Global Ozone research and monitering project,Report no.47,Geneva.
* [http://esl.jrc.it/envind/pf_intro/pf_int06.htm Ozone Layer Depletion ]
* [http://www.google.lk/search?hl=en&q=Ozone+Layer+deplition&btnG=Google+Search&meta= Introduction :Ozone Layer Deplition]
[[பகுப்பு:சூழல் மாசடைதல்]]
[[பகுப்பு:சுற்றுச்சூழலியல்]]
[[பகுப்பு:அறிவியல்]]
[[பகுப்பு:புவியியல்]]
[[பகுப்பு:AFTv5Test]]
[[ar:نضوب الأوزون]]
[[bs:Ozonska rupa]]
[[ca:Forat de la capa d'ozó]]
[[cs:Ozonová díra]]
[[de:Ozonloch]]
[[el:Τρύπα του όζοντος]]
[[en:Ozone depletion]]
[[es:Agujero de la capa de ozono]]
[[et:Osooniauk]]
[[fa:سوراخ لایه اوزون]]
[[fi:Otsonikato]]
[[fr:Destruction de la couche d'ozone]]
[[gu:ઓઝોન અવક્ષય]]
[[he:הידלדלות שכבת האוזון]]
[[hr:Ozonske rupe]]
[[hu:Az ózonréteg pusztulása]]
[[it:Buco nell'ozono]]
[[ja:オゾンホール]]
[[ka:ოზონის ხვრელი]]
[[kk:Озон тесігі]]
[[kn:ಓಝೋನ್ ಪದರು ಸವಕಳಿ(ಸಾಮರ್ಥ್ಯ ಕುಂದು)]]
[[ko:오존홀]]
[[mk:Осиромашување на озонскиот слоj]]
[[nl:Ozongat]]
[[pl:Dziura ozonowa]]
[[pt:Depleção do ozônio]]
[[ru:Озоновая дыра]]
[[si:ඕසෝන් ක්ෂයවීම]]
[[simple:Ozone depletion]]
[[sk:Ozónová diera]]
[[sl:Ozonska luknja]]
[[sr:Oštećenja ozonskog omotača]]
[[sv:Ozonhål]]
[[te:ఓజోన్ క్షీణత]]
[[th:การลดลงของโอโซน]]
[[tr:Ozon deliği]]
[[uk:Озонова діра]]
[[vi:Sự suy giảm ôzôn]]
[[zh:臭氧层空洞]]All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikipedia.org/w/index.php?oldid=1203849.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|