Difference between revisions 10641 and 10742 on tawikibooks

==விவசாயிகள் மற்றும் வேளாண் துறையினருக்கு==
விவசாயம் மற்றும் உணவுப் பொருள்கள் உற்பத்தி குறித்த கருத்துக்களை இங்கு பதியலாம். உதாரணமாக [[செம்மை நெல் சாகுபடி]]. ஒரு சிறு நூலை இங்கு உருவாக்குவதன் மூலம் விவசாயத்திற்கு உதவ முடியும் என நம்புகிறோம். மேலும் [[w:தமிழக சமுதாய வானொலி]]களையும் இங்கு அழைக்கிறோம். விவசாயம் சார்ந்த நுணுக்கங்களை முதன்மை வானொலி நிலையங்கள் கொடுத்து வருகின்றன, அவற்றை தொகுத்தால் விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.
<noinclude>[[பகுப்பு:வேளாண்மை]]</noinclude>துறை சார்ந்த நூல்கள் பட்டியல் இங்கு உள்ளது.

==ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு==
உங்களால் முடியும் எனில் [[பாடம்:பாடநூல்கள்|பாடநூல்களை]] இங்கு வெளியிட உதவுங்கள். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் உள்ள பாடங்களைத் தொகுத்து வெளியிட கேட்டுக் கொள்கிறேன். மேலும் நமது தமிழ் சமுதாயம் உலகம் முழுமையும் தாங்கள் தமிழில் பயிலும் பாடநூல்களை இங்கு வெளியிட உதவலாமே.

==பல்கலைக் கழகங்களுக்கு==
ஒரு வேளை தாங்கள் பல்கலை ஆசிரியராக இருக்கலாம், நீங்கள் ஏதாவது ஒரு நூலை தமிழில் இயற்றுவதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என நம்புகிறோம். அப்படி முழு நூலை உருவாக்க முடியவில்லை என்றால் அந்த நூலின் ஆரம்ப பொருளடக்கப் பகுதியை ஆரம்பித்து வைப்பதன் மூலம் ஒரு புதிய நூல உருவாக தாங்கள் காரணமாக அமைய முடியும் என நம்புகிறோம்.

[[ஆய்வேடுகள்]] தொகுப்பில் இதுவரை தமிழில் உருவாக்கப்பட்டு உள்ள மாணவர்கள், பேராசியர்களின் தொழில்நுட்பபுல (phd) சுருக்கம் உருவாக்கும் நோக்கம் உள்ளது. இதில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.

==பொறியாளர்களுக்கு==
தமிழ் மொழியை சங்ககாலம் முதலே ஒரு இலக்கியத் தமிழாகவும், இயற் தமிழாகவும், இசைத் தமிழாகவும் பல அறிஞர், அரசர்களால், துறவியர்களால் உருவாக்கப்பட்டுவிட்டுள்ளது. ஆனால் தமிழை அறிவியல்த் தமிழாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் பொறியாளர்களுக்கு உண்டு என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. எனவே அறிவியல் தமிழை உருவாக்க பொறியாளர்களை அழைக்கிறோம். [[பாடம்:பொறியியல்|பொறியியல்]] சார் நூல்களைத் தொகுக்க அழைக்கிறோம். மேலும் சில தருணங்களில் [[அறிவியல் சொற்கள் உருவாக்க செயல்முறை|அறிவியல் சொற்களை உருவாக்கும்]] பொழுது பின்பற்றப் பட வேண்டிய முறைகளைப் பற்றியப் பக்கத்தைக் காணவும்.{{delete}}