Difference between revisions 29729 and 29730 on tawikinews{{அறிவியல்}} {{date|april 18, 2013}} நீரழுத்த முறிவு (hydraulic fracturing) - 1900 களிலேயே தொடங்கிவிட்டது. பிறகு பல இன்னல்களை சந்தித்து, இன்று சில பீதிகளை ஏற்படுத்தியுள்ளது. வீடுகள் வெடிக்கக்கூடும், மாசுப்படுத்தும், நிலநடுக்கங்கள் ஏற்படுத்தும் என்று அதிரடியாக ஆபத்துக்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள் எதிர்ப்பாளர்கள். அமெரிக்காவில் உள்ள சில ஆதரவாளர்கள் இது ஒரு பொய்யுரை, இதனால் நாட்டிற்கு நன்மை ஏற்படும் என்கிறார்கள். வேலை வாய்ப்புகளும் கிட்டுமாம்; கச்சா எண்ணைக்காக பிற நாட்டை அமெரிக்கா நம்ப வேண்டியதில்லையாம். (contracted; show full) எண்ணி ஆய்வு நடத்தினர் சிலர். மீத்தேன் கலந்துள்ள நீரினில் உள்ள கார்பனை ஆய்வாளர்கள் கண்டரிந்த பொழுது அது நிலத்தடி நீரில் இருந்து கலக்கப்பட வில்லை என்றும், அது இன்னும் ஆழமான பகுதியில் கலக்கப்பட்டிருக்கிறது என்றும் உணர்ந்தனர். களிப்பாறைக்கும், நிலத்தடி நீர்பகுதிக்கும் இடையில் நீர்விடாப்படுகையுள்ளது (aquiclude). அதாவது, நீர் ஊடுருவ முடியாமல் தடுக்கும் அடுக்கு. ஆகையால் நிலத்தடி நீரும், இயற்கை வாயுவும் இயற்கையாக கலப்பதற்கு வாய்ப்பில்லை. இது மனிதர்களின் லீலை தான். ஆனால் எங்கு தவறு நிகழ்ந்தது என்பது புலப்படவில்லை. ⏎ ⏎ ==மூலங்கள்== * [https://sites.google.com/a/newscience.in/tamil-home/recent-news/news-2 நீரழுத்த முறிவு : தொடரும் பேராபத்து பீதி], புதிய அறிவியல், செப்டம்பர் 02, 2012 All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikinews.org/w/index.php?diff=prev&oldid=29730.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|