Revision 29737 of "சூரியனைப் போலுள்ள தூரத்து விண்மீனைச் சுற்றி சிறு கோள்கள் ஒளிந்திருக்கின்றனவா ?" on tawikinews{{under review}}
{{அறிவியல்}}
{{date|april 18, 2013}}
சூரியனைச் சுற்றியுள்ள கோள்களுக்கும், சூரியனின் வேதியியல் அமைப்பிற்கும் தொடர்பு உள்ள ஒன்றை தற்போது கண்டறிந்துள்ளனர். இதனை பிரேசிலில் உள்ள சாவ் பாலோ (Sao Paolo) பல்கலைக்கழகத்தின் சார்ஜ் மெலெண்டஸ் (Jorge Melendez) கூறினார்.
கடந்த ஆகத்து 27 ஆம் நாள் அன்று, அனைத்துலக வானவியல் ஒன்றியத்தில் (International Astronomical Union) பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சார்ஜ் மெலெண்டஸ் (Jorge Melendez), சூரியனில் கோள்-கட்டமைக்கும் கூறுகளான அலுமினியம், கால்சியம், சிலிக்கான் ஆகியவை குறைவான அளவே உள்ளது என்று தனது ஆய்வினை விவரித்தார்.
(என்ன வாசகர்களே! புரியவில்லையா? தலைப்பிற்கும் நான் இதுவரை கூறிய செய்தியும் குழப்புகிறதா? சூரியனில் அவ்வேதியியல் கூறுகள் குறைவாக இருக்கிறது. ஏன் குறைவாக இருக்கிறது. இவை கனத்த வேதியியல் கூறுகள். கனத்தப் வேதியியல் கூறுகளென்றால் சூரியனில் இருக்கக் கூடாதா? அப்படி இருக்கக் கூடாதென்று ஒன்றும் இல்லை. இருந்தால் கனத்த பொருளைக் கொண்டிருக்கும் சுரியனைச் சுற்றியக் கோள்கள் இருக்கக் கூடாதே!. அப்படியென்றால், சூரியனைச் சுற்றியுள்ள கோள்கள் கனத்தப் பொருளைக் கொண்டிருப்பதினால் சூரியனுக்குள் கனத்தப் பொருட்கள் இல்லை. இது இருந்தால் அது இருக்காது. அது இருந்தால் இது இருக்காது. அப்படித்தானே! அப்படித்தான் என்று மெலண்டஸ் கருதுகிறார்.
சரி, சூரியனுக்கும், அதன் கோள்களுக்கும் இவ்வகையான தொடர்பு இருக்கிறது. இதைத் தான் அந்த சார்ஜ் மெலெண்டஸ் (Jorge Melendez) ஆய்வு செய்து கண்டரிந்துள்ளார். இதற்கும், நான் தலைப்பில் குறிப்பிட்டிருக்கும் செய்திக்கும் என்ன தொடர்பு. சூரியனைப் போலுள்ள விண்மீன்! (star). அப்படி ஒன்று இருக்கிறதா? என்றால். இருக்கிறது. நிறைய இருக்கிறது. ஆனால் அதில் ஒன்றே ஒன்றுக்கு மட்டும் சூரியனுக்கு மிக பொருத்தமான தொடர்பு இருக்கிறது என்று அதே மெலண்டஸ் கூறியுள்ளார்.)
அந்த ஒரு விண்மீனுக்கு (star) ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். HIP 56948 என்பது அதன் பெயர். இதை 2007 ஆம் ஆண்டே கண்டுபிடித்துவிட்டார்கள் வானியல் ஆய்வாளர்கள். இது சுமார் 217 ஒளி ஆண்டுகள் (light years) தொலைவில் இருக்கிறது. மெலண்டஸ் என்ன செய்தார் என்றால் இந்த விண்மீனுடன் சேர்த்து 11 விண்மீன்களை வேவு பார்த்தார். சிலி நகரத்தில் மாஜெல்லன் (Magellan) தொலைநோக்கியைக் கொண்டு இந்த 11 விண்மீனின் வேதிக்கூறு அமைப்பையும் ஆராய்ந்தார். அவ்வாய்வில் சூரியனின் கதிர்களில் தென்பட்ட வேதிக்கூறுகளுடன், மிக நெருக்கமான பொருத்தம் கொண்டதாக இந்த ஒரு விண்மீன் (HIP 56948) மட்டுமே உள்ளதாக அவரது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார்.
சூரியனின் வேதிக்கூறுகளும், அந்த தூரத்து விண்மீனின் (HIP 56948) வேதிக்கூறுகளும் ஒன்றாக இருக்கிறது. அப்படியென்றால், சூரியனைச் சுற்றி கோள்கள் இருப்பதைப் போல் அந்த விண்மீனைச் சுற்றியும் கோள்கள் இருக்க வேண்டும் அல்லவா? அதைத்தான் தற்போது தேடிவருகிறார் மெலண்டஸ். மெலண்டஸ் கருத்தின் படி அந்த விண்மீனைச் சுற்றி பல கோள்கள் ஒளிந்திருக்கின்றன. HARPS என்னும் கருவியைக் கொண்டு அந்த ஒளிந்திருக்கும் கோள்களைத் தேடிவருகின்றனர் மெலண்டஸும் அவரது உடன் பணியாளர்களும். எனவே, கோள்கள் ஒளிந்திருக்கின்றனவா ? இல்லையா ? என்பது இப்போதைக்கு தெரியப் போவதில்லை.
ஹவாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நாதர் ஹாஹிஹிபோர் ( Nader Haghighipour) என்பவர் ”ஒன்று அல்லது இரண்டு கோள்களை கண்டரிந்தால் தான் சூரியனின் வேதிக்கூறுகளுக்கும், அதன் கோள்களின் வேதிக்கூறுகளுக்கும் தொடர்புள்ளது என்பதையே உறுதி செய்ய முடியும்” என்றார்.
==மூலங்கள்==
* J. Melendez et al. The remarkable solar twin HIP 56948: A prime target in the quest for other Earths. Astronomy & Astrophysics, Vol. 543, July 2012. doi:10.1051/0004-6361/201117222.
* J. Melendez et al. The peculiar solar composition and its possible relation to planet formation. The Astrophysical Journal, Vol. 704, October 10, 2009, L66. doi:10.1088/0004-637X/704/L66.All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikinews.org/w/index.php?oldid=29737.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|