Revision 29753 of "நீரழுத்த முறிவு : தொடரும் பேராபத்து பீதி" on tawikinews{{under review}}
{{அறிவியல்}}
{{date|april 18, 2013}}
நீரழுத்த முறிவு (hydraulic fracturing) - 1900 களிலேயே தொடங்கிவிட்டது. பிறகு பல இன்னல்களை சந்தித்து, இன்று சில பீதிகளை ஏற்படுத்தியுள்ளது. வீடுகள் வெடிக்கக்கூடும், மாசுப்படுத்தும், நிலநடுக்கங்கள் ஏற்படுத்தும் என்று அதிரடியாக ஆபத்துக்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள் எதிர்ப்பாளர்கள். அமெரிக்காவில் உள்ள சில ஆதரவாளர்கள் இது ஒரு பொய்யுரை, இதனால் நாட்டிற்கு நன்மை ஏற்படும் என்கிறார்கள்.
ஆழ்துளை கிணறு கேள்விப்பட்டிருப்போம். பூமியில் செங்குத்தாக 1000 மீட்டர்களுக்கு மேல் துளை போட்டு பூமிக்கடியில் உள்ள களிப்பாறையை (shale) அடைய வேண்டும். அக்களிப்பாறையில் இருந்து தான் இயற்கை வாயு பெறப்படுகிறது. ஆனால் செங்குத்தாக குழாய் மூலம் பெறப்படும் வாயு குறைவானது. நிறைய ஆழ்துளை கிணறுகளை போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனை சமாளிப்பதற்காக 1949க்கு பிறகு நீரழுத்த முறிவு முறையை பயன்படுத்தினர்.
நீரழுத்த முறிவு என்பது சில மில்லியன் காலான்கள் (gallons) வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்ட நீரினை செலுத்தி பூமிக்கடியில் உள்ள களிப்பாறையில் முறிவை ஏற்படுத்துவதாகும். இந்த வேதிநீரானது களிப்பாறையில் உள்ள குழாய் நுணியில் இருந்து கிடைமட்டமாக முறிவு ஏற்படித்தும். களிப்பாறையின் முறிவினால் மீத்தேன் வாயு இவ்வேதிநீரில் கலந்து திரும்ப மேலெலுப்பப்படும். மேலெலுப்பப்பட்ட வேதிநீரிலிருந்து மீத்தேன் வாயுவை தனியாக பிரித்து எடுப்பர். மீத்தேன் எடுத்தப்பின் மீண்டும் வேதிநீரை குழாய் மூலம் உள்செலுத்தி ஏற்கனவே கிடைமட்டமாக முறிவு ஏற்படுத்தப்பட்டதை மீண்டும் அகலப்படுத்தி அதன் மூலம் மீத்தனை நீரினில் கலக்கச் செய்து, பிரித்து எடுப்பர்.
இந்த இயற்கை மீத்தேன் வாயுவானது ஒரு ஆற்றல்மிக்க பைங்குடில் (greenhouse) வாயுவாகும். எளிதில் தீப்பற்றக்கூடிய இந்த மீத்தேன் வாயுவை, அமெரிக்கவில் உள்ள பெனினிசுலோவியாவின் வடகிழக்கு பகுதியிலும், நியூயார்க் மாநிலத்திலும் இருக்கும் 60 தனியார் நிலத்தடி நீர் கிணற்றில் அளந்தார்கள். மீத்தேன் இயற்கையாகவே நிலத்தடி நீரில் இருக்கும் என்றாலும், 60 இல் 51 கிணற்றில் மீத்தேன் வாயு 17 விழுக்காடாக உயர்ந்துள்ளதை கண்டரிந்தனர். அதில் பெரும்பாலும் நீரழுத்த முறிவினால் வாயு பொழிக்கப்பட்ட பகுதியில் தான் அதிகமாக மீத்தேன் நீரில் கலந்துள்ளதைக் கண்டு அதிர்ந்து போயிருக்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.
மீத்தேன் நீரில் கலந்தால் என்ன ஆகும் என்றால்? வீட்டில் மீத்தேன் நீரில் சமைக்கும் பொழுது, பற்றி எரியும். மீத்தேன் நீரினை மனிதர்கள் அருந்தினால் சுகாதாரக்கேடு விளையும். சுத்தமான நீருக்கு பஞ்சமாகிவிடும்.
ஆனால் இந்த மீத்தேன் கசிவு எங்கிருந்து ஏற்படுகிறது என்று அறிந்தால் இதிலிருந்து தப்பித்து கொள்ளலாம் என்று எண்ணி ஆய்வு நடத்தினர் சிலர். மீத்தேன் கலந்துள்ள நீரினில் உள்ள கார்பனை ஆய்வாளர்கள் கண்டரிந்த பொழுது அது நிலத்தடி நீரில் இருந்து கலக்கப்பட வில்லை என்றும், அது இன்னும் ஆழமான பகுதியில் கலக்கப்பட்டிருக்கிறது என்றும் உணர்ந்தனர். களிப்பாறைக்கும், நிலத்தடி நீர்பகுதிக்கும் இடையில் நீர்விடாப்படுகையுள்ளது (aquiclude). அதாவது, நீர் ஊடுருவ முடியாமல் தடுக்கும் அடுக்கு. ஆகையால் நிலத்தடி நீரும், இயற்கை வாயுவும் இயற்கையாக கலப்பதற்கு வாய்ப்பில்லை. இது மனிதர்களின் லீலை தான். ஆனால் எங்கு தவறு நிகழ்ந்தது என்பது புலப்படவில்லை.
{{haveyoursay}}
==மூலங்கள்==
* [https://sites.google.com/a/newscience.in/tamil-home/recent-news/news-2 நீரழுத்த முறிவு : தொடரும் பேராபத்து பீதி], புதிய அறிவியல், செப்டம்பர் 02, 2012
* [http://www.sciencenews.org/view/feature/id/343202/description/The_Facts_Behind_the_Frack The Facts Behind the Frack], சயன்சு நியூஸ், ஆகத்து 24, 2012
* [http://www2.seismosoc.org/FMPro?-db=Abstract_Submission_12&-sortfield=PresDay&-sortorder=ascending&-sortfield=Special+Session+Name+Calc&-sortorder=ascending&-sortfield=PresTimeSort&-sortorder=ascending&-op=gt&PresStatus=0&-lop=and&-token.1=ShowSession&-token.2=ShowHeading&-recid=224&-format=/meetings/2012/abstracts/sessionabstractdetail.html&-lay=MtgList&-find ARE SEISMICITY RATE CHANGES IN THE MIDCONTINENT NATURAL OR MANMADE?], எஸ்.எஸ்.ஏ, ஏப்ரல் 18, 2012
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்கா]]All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikinews.org/w/index.php?oldid=29753.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|