Difference between revisions 10413 and 10414 on tawikiquote==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும் * அகம்மது நினைத்ததை,முகம்மது சொல்வான். * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு. * அகல் வட்டம் பகல் மழை. * அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. (contracted; show full) * அற்ப சகவாசம் பிராண சங்கடம். * அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான். * அற்றது பற்றெனில் உற்றது வீடு. * அனுபோகந்தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும் :*<small>ஒருவன் செய்த தீவினைகளின் (பாவங்களின்) விளைவுகளை அனுபவித்து அவை நீங்கப்பெற்றால்தான்/ஒருவன் தன் வக்கிரமமான, இயற்கைக்குப் புறம்பான, காமவெறிச்செயல்களை விட்டொழித்தால்தான், எந்நோய்க்கும் உட்கொள்ளும் மருந்துகள் வேலைசெய்து நற்பலனளிக்கும் என்பது அர்த்தமாகும்</small> * அன்பான நண்பனை ஆபத்தில் அறி. * அன்புக்கும் உண்டோ அடைக்கும் தா ளழ்? * அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும். * அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா? * அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம். * அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான். * அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான். * அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் * அன்னையைப் போலொரு தெய்வமும் உண்டோ அவர் அடி தொழமறுப்போர் மனிதரில்லை (contracted; show full)==வை== * வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. * வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது. * வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா? * வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை. [[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]] [[பகுப்பு:பழமொழிகள்]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=10414.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|