Difference between revisions 10416 and 10417 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகம்மது நினைத்ததை,முகம்மது சொல்வான்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
(contracted; show full)*  உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்காதே.
*  உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்
*  உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
*  உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
*  உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
*  உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
*  உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம்/விஷம். 

*  உதிரம் பெருத்தால் உத்திரத்திற்கு ஆகாது.
*  உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை
*  உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
*  உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்
*  உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
*  உப்பில்லாப் பண்டம் பாழ், குடியில்லா வீடும் பாழ்.
*  உப்பில்லா பத்தியக்காரன் ஊறுகாய்க்கு ஆசைப்பட்டானாம்!
*  உப்புல தெரியுமாம் துப்பு, நீருல தெரியுமாம் சீரு.
*  உரம் ஏற்றி உழவு செய்
(contracted; show full)==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]