Difference between revisions 10998 and 10999 on tawikiquote==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும் * அகப்பட்டதை சுருட்டிக்கடா ஆத்மநாபா. * அகம்மது நினைத்ததை, முகம்மது சொல்வான். * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு. (contracted; show full)* மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா? * மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா? * மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது. * மாடு வாங்கறதுக்கு முன்னால நெய் கலயம் தேடுனது மாதிரி * மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும். * மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம். * மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான். * மாமியார்க்குச் சாமியார் இவள்.⏎ * மாமியார் செத்ததற்கு மருமகள் அழுதது போல். * மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம். * மாமியார் உடைத்தால் மண்கலம், மாட்டுப்பெண் உடைத்தால் பொன்கலம்! * மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை. * மாரடித்த கூலி மடி மேலே. * மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி. * மாரி யல்லது காரியம் இல்லை. * மாவுக்குத் தக்க பணியாரம்.(மாவுக்கேத்தப் பணியாரம்) (contracted; show full)==வை== * வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. * வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது. * வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா? * வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை. [[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]] [[பகுப்பு:பழமொழிகள்]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=10999.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|