Difference between revisions 11155 and 11156 on tawikiquote==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும் * அகப்பட்டதை சுருட்டிக்கடா ஆத்மநாபா. * அகம்மது நினைத்ததை, முகம்மது சொல்வான். * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு. (contracted; show full)* கீர்த்தியால் பசி தீருமா? * கீறி ஆற்றினால் புண் ஆறும். * கிரீடம் அரசனுக்கு மட்டுமே சொந்தம். ==கு== * குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா? * குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை. *குஞ்சுக் கோழி ஆனாலும் குனிந்து அறுக்க வேண்டும்⏎ * குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும். * குடி குடியக் கெடுக்கும். * குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும். * குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா? * குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு. * குட்டக்குட்ட குனியாதே.. * குட்டி யானையும் குட்டயக் கலக்கும். * குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்னும். (contracted; show full)==வை== * வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. * வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது. * வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா? * வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை. [[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]] [[பகுப்பு:பழமொழிகள்]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=11156.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|