Difference between revisions 13975 and 13990 on tawikiquote==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும் * அகப்பட்டதை சுருட்டிக்கடா ஆத்மநாபா. * அகம்மது நினைத்ததை, முகம்மது சொல்வான். * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு. * அகல் வட்டம் பகல் மழை. * அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. * அக்கம்பக்கம் பார்த்துப் பேசு. * அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன். * அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தால் என்றால் எனக்கொரு வேட்டி, உனக்கொரு வேட்டி என்றார்களாம். * அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான். * அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு. * அக்காளைப் பழித்து தங்கச்சி மோசம் போனாள். * அக்காளோடு போயிற்று அத்தான் உறவு. * அகவிலை அறியாதவன் துக்கம் அறியான். * அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு. * அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். * அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. * அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? * அடக்கமே பெண்ணுக்கு அழகு. * [[அடக்கம்]] உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார். * அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. * அடாது செய்தவன் படாது படுவான். * அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் * அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார் * அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும். * அடியாத மாடு படியாது. * அடிக்கிற கைதான் அணைக்கும்! (contracted; show full)* அறிவுடையாரை அரசனும் விரும்புவான். * அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம். * அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும். * அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி. * அறுக்கமாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்துஎட்டு அரிவாளாம்! * அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்? * அற்ப அறிவு அல்லலுக்கு இடம். * அற்ப [[ஆசை]] கோடி தவத்தைக் கெடுக்கும். * அற்ப சகவாசம் பிராண சங்கடம். * அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான். * அற்றது பற்றெனில் உற்றது வீடு. * அனுபோகந்தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும் :*<small>ஒருவன் செய்த தீவினைகளின் (பாவங்களின்) விளைவுகளை அனுபவித்து அவை நீங்கப்பெற்றால்தான்/ஒருவன் தன் வக்கிரமமான, இயற்கைக்குப் புறம்பான, காமவெறிச்செயல்களை விட்டொழித்தால்தான், எந்நோய்க்கும் உட்கொள்ளும் மருந்துகள் வேலைசெய்து நற்பலனளிக்கும் என்பது அர்த்தமாகும்</small> * அன்பான நண்பனை ஆபத்தில் அறி. * அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? * அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும். * அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா? * அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம். * அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான். * அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான். * அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் * அன்னையைப் போலொரு தெய்வமும் உண்டோ அவர் அடி தொழமறுப்போர் மனிதரில்லை * அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா? * அல்லற்ற வீட்டில் பல்லியும் சேராது. * அடுக்களை குற்றம் சோறு குழைந்தது * அளந்த வ்ல்லம் அட்டாலியிலே * அகமுடையான் குற்றம் பெண்ணாய் பிறந்தது. ==ஆ== * ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும். * பொறுமை மிக அவசியம் * ஆக்கியவனுக்கு சட்டியும் பானையும்தான் மீதம். * ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும். * [[ஆசை]] அறுபது நாள், மோகம் முப்பது நாள். * [[ஆசை]] இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க! * [[ஆசை]] உள்ளளவும் அலைச்சலும் உண்டு! * [[ஆசை]] வெட்கம் அறியாது. * ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.(A bad workman blames his tools. * ஆட்டசெல்லம், பூட்டசெல்லம், அடிக்க செல்லம் அயலாரகத்திலே! * ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா? * ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும். * ஆடிப் பட்டம் தேடி விதை. * ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும். * ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும். (contracted; show full)* ஆனை படுத்தால் ஆள் மட்டம். * ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே. * ஆனைக்கு விளாம்பழம் ஓட்டோடு. * ஆனைப் பசிக்கு சோளப் பொரி * ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு, மனுசன் கொழுத்தால் கீரைத்தண்டு. * ஆனைய புடின்னா பூனைய புடிச்சானாம். * ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம். * [[ஆசை]] இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க. * [[ஆசை]]க்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!! * ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். * ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது. * ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா? ==இ== * இக்கரைக்கு அக்கரை பச்சை. (contracted; show full)* உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம்/விஷம். * உதிரம் பெருத்தால் உத்திரத்திற்கு ஆகாது. * உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை * உப்பிட்டவரை உள்ளளவும் நினை. * உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் * உப்பில்லாப் பண்டம் குப்பையிலே * உப்பில்லாப் பண்டம் பாழ், குடியில்லா வீடும் பாழ். * உப்பில்லா பத்தியக்காரன் ஊறுகாய்க்கு [[ஆசை]]ப்பட்டானாம்! * உப்புல தெரியுமாம் துப்பு, நீருல தெரியுமாம் சீரு. * உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? * உரம் ஏற்றி உழவு செய் * உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா? * உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை. * உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது! * உலோபிக்கு இரட்டை செலவு. (contracted; show full)* ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு. * ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா? * ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும். * ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது * ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா? * ஐப்பசி அடை மழை. * ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம். * ஐம்பதிலும் [[ஆசை]] வரும் ==ஒ== * ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள். * ஒத்தை பிராமணனுக்கு முன்னும், இரட்டை வைசியனுக்கு முன்னும் போகாதே! :*<small>ஒரு வேலை செய்ய வெளியே போக முயலும்போது எதிரே ஒற்றை அந்தணரோ அல்லது இரண்டு வைசியர்களோ வந்தால் அது சகுனத்தடை...அந்தக் காரியம் நிறைவேறாது என்றுப் பொருள்.</small> * ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ? * ஒரு காசு பேணின் இரு காசு தேறும் (contracted; show full)* ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை. ==க== * கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா? * கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை. * கடலுக்குக் கரை போடுவார் உண்டா? * கடலைத் தாண்ட [[ஆசை]]யுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை. * கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது? * கடல் திடலாகும், திடல் கடலாகும். * கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா? * கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு! * கடலாழம் கண்ட பெரியோர்க்கும் பெண்கள் மன ஆழம் காணலரிது! * கடவுளை நம்பினோர் கைவிடப் படார். * கடன் இல்லா கஞ்சி கால் வயிறு. (contracted; show full)* களவும் கற்று மர ( இது 'களவும் கத்தும் மற' என்பதன் திரிந்த பழமொழி) * களவும் கத்தும் மற :*களவையும் சூதாட்டத்தையும் மறந்துவிடு என்பது பொருள். * களை பிடுங்காப் பயிர் காற்பயிர். * கள் குடித்த குரங்கு போல ... * கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல். * கள்ள [[மனம்]] துள்ளும். * கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம். * கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ! * கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்! * கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான். * கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே. * கள்ளுக்கும் காமத்துக்கும் கண்ணில்லை! * கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது. * கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு. * கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு. * கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்? * கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா? * கனிந்த பழம் தானே விழும். * கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு. * கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ. * கடமை கண் போன்றது * கல்யாணம் பண்ணி பார் வீட்டை கட்டி பார் ==கா== * காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் அது காற்றைப் போல பறக்கவும் வேண்டும். * காஞ்சிபுரம் போனா காலாட்டி சாப்டலாம். * காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான். * காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும். * காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும். * காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா? * காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா? * காணி [[ஆசை]] கோடி கேடு. * காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம் * காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே. * காதோரம் நரைத்த முடி கதை முடிவை காட்டும். * காகம் திட்டி மாடு சாகாது. * காகம் வழி காட்டினால் செத்த நாயிடம் சேர்க்கும். * காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. * காக்காய் உட்கார பனம் பழம் விழுந்தாற் போல. * காகிதப்பூ மணக்காது. * காப்பு சொல்லும் கை மெலிவை. * காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம். * காய்த்த மரம் கல் அடிபடும். * காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது. * காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் விழுந்த மாதிரி.. * காரண குருவே காரிய குரு! * காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி. * காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ? * கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை * காலம் பிழைத்தால் கறுத்தார் என்ன செய்ய முடியும் ? * காலமும் கடல் அலையும் எவருக்கும் காத்திரா. * காலம் செய்கிறது ஞாலம் செய்யாது. * காலம் பொன் போன்றது * காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும் * காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்! * காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை. * காலணாக் கொடுத்து அழச் சொன்னாளாம், நாலணாக் கொடுத்து ஓயச் சொன்னாளாம். * காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும். * காலைக் கல்; மாலைப் புல். :*(<small>"காலை நேரத்தில் கல்லின் மேல் உட்காரலாம்; குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் கல்லின் மேல் உட்கார்ந்தால் சுடும். காலை நேரத்தில் புல்லின் மேல் உட்கார்ந்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் புல்லின் மேல் அமர்ந்தால் இதமாக இருக்கும்" என்று சிலர் பொருள் கூறுவார்கள்; மாறாக, வேறு ஒரு பொருளும் கூறுவர். காலையில் கற்க வேண்டும். அப்போது [[மனம்]] அமைதியாக இருந்து கல்வியை ஏற்கத் தயாராக இருக்கும். காலை என்பது அதிகாலை 4 மணிக்கும் மேல்; அப்போது கற்கும் கல்வி கல்வெட்டு போல் மூளையில் பதியும். "இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து' என்பது கல்வி பற்றிய ஒரு பழமொழி. "மாலைப் புல்" என்பதற்கு, மாலை நேரம் இன்பத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற நேரம் என்று கூறுவர். (புல்-புல்லுதல்-இன்பம் அனுபவித்தல்). இது பவணந்தியார் என்ற இலக்கண ஆசிரியர் கருத்து. (<small>'''[http://dinamani.com காலைக் கல்; மாலைப் புல்!, தமிழ்மணி, 12 பிப் 2012]''(contracted; show full)==கூ== * கூடி வாழ்ந்தால் கோடி நன்மை * கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான். * கூத்தாடி பெண்ணுக்கு சூதாடி கணவன் * கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம். * கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே? * கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம். * கூழுக்கும் [[ஆசை]], மீசைக்கும் [[ஆசை]]. * கூழும் சிந்தல, கோப்பையும் உடையல * கூழானாலும் குளித்துக் குடி. * கூலி கால் பணம், சுமை கூலி முக்கால் பணம். * கூடாநட்பு கேட்டில் முடியும். * கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா ? (மயில் பிடிப்பானா?) ==கெ== (contracted; show full)* கோயிலில்லா ஊரிலே குடியிருக்கலாகாது * கோவிலை கட்டிப்பார், குளத்தை வெட்டிப்பார். ==ச== * சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால், பொன்பாளம் வந்தாலும் வரும்; மண்பாளம் வந்தாலும் வரும்! * சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி * சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? :<small> சட்டியில் உணவோ அல்லது சாறோ இருந்தால்தானே அகப்பையில் வரும் என்று பொருளில் சொல்லப்பட்டாலும், [[உண்மை]]யில் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் கந்தர் சஷ்டி விரதம் இருந்தால் அகப்பையான கர்ப்பப்பையில் குழந்தை வரும் என்று குறிப்பிட வழங்கப்பட்ட பழமொழி</small> * சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும். * சனியைப்போல கொடுப்பவனுமில்லை, சனியைப்போல கெடுப்பவனுமில்லை! * சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா? * சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன். * சமத்தி சந்தைக்குப்போனாலாம் வட்டி கிண்ணியாச்சாம். * சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா. * சர்க்கரை என்றால் தித்திக்குமா? (contracted; show full)* செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா? * செருப்புக்கேற்றபடி காலை வெட்டுவரா? * செல்லமுத்துன வாழக்காய் புளியில்லாம அவிஞ்சுச்சாம். * செல்லுமிடம் சினம் காக்க. * செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும். * சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி. * செவிடன் காதில் சங்கு ஊதினால் போல! * செய்தவன் [[மனம்]] குன்றினால் ஐவினைப் பயனும் கெடும். * செய்யும் தொழிலே தெய்வம். * சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும். ==சே== * சேலையில் முள் விழுந்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான். * சேலை கட்டிய மாதரை நம்பாதே ! * சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும். (contracted; show full) * தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும். * தாய்க்குப்பின் தாரம். * தாய்வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஓடிய கூத்தும் ஒன்று. * தாயில்லா தகப்பன் தாயாதி. :*<small> தாயை இழந்த பிள்ளைகளுக்கு தகப்பன் இருந்தும் பயனில்லை...அவன் பட்டும் படாமலிருக்கும் தாயாதிகளைப் போன்றவனே!...ஒரு தாயைப்போல ஊணூட்டி, தேவைகளைக் கவனித்து நிறைவேற்றி, அவர்கள்பால் அம்மாவைப்போல அக்கறையும், அன்பும், ஆதரவும், கவனமும் கொண்டவனாக இருக்கமாட்டான் என்பதே இப்பழமொழி சொல்லும் [[உண்மை]]யாகும் </small> * தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை) * தாயைப் பார்த்து பெண்ணை கொள். * தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை. * தாயோடு அறுசுவை உணவு போம். * தார் புறப்பட்டு தாய் வாழைய கெடுத்தாப்ல. * தாராளம் தண்ணி பட்டபாடு நீராரம் நெய் பட்டபாடு. * தாழ்ந்து நின்றார் வாழ்ந்து நிற்பார். (contracted; show full)* பெண்ணுக்கு இடம் கொடேல். * பெண் சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சு!! * பெண்டாட்டி இல்லை, கருவும் இல்லை மகனின் பெயர் கரிகாலனாம்.... * பெத்த அம்மா செத்தா பெத்த அப்பன் சித்தப்பன் * பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும். * பெருமை ஒருமுறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை! * பெருமையும் சிறுமையும் வாயால் வரும். * பெற்ற [[மனம்]] பித்து பிள்ளை [[மனம்]] கல்லு. * பெற்றால் தான் பிள்ளையா? * பெண்பிள்ளை சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சு. * பெண்ணும் போதை தரும், கள்ளும் போதை தரும் இதற்கு தான் நாம் பெண்கள் என்று கூறுகிறோம் :*<small>புகையிலை சுருள்நிலையிலிருந்து அகன்று விரிந்தால் பயன்படுத்தப் பக்குவமாகிவிட்டதென்று செடியிலிருந்து பறித்துவிடுவார்கள் அதுபோலவே ஒரு கன்னிப்பெண் ஒருவனைப் பார்த்து நட்பாகச் சிரித்தாலும், அவள் தன்னை விரும்புகிறாள் என்று தவறாக நினைத்து அவளை தன் காமவாஞ்சைக்கு பயன்படுத்திக்கொள்ள முற்படுவன் என்றுப்பொருள்...</small> (contracted; show full)* மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும். * மல்லாந்து படுத்துக்கொண்டு காறி துப்பினாற் போல. * மவுனம் கலக நாசம் * மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும். * மழை விட்டாலும் தூவானம் விடவில்லை. * மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே. * மனமுரண்டிற்கு மருந்தில்லை. * [[மனம்]] உண்டானால் இடம் உண்டு. * [[மனம்]] இருந்தால் மார்க்கமும் உண்டு. * [[மனம்]] தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை. * [[மனம்]] போல வாழ்வு. * மனையுமில்லை, கருவுமில்லை மகனின் பெயர் சங்கிலிக்கருப்பனாம்! :*<small>அடிப்படையான விடயங்கள் கைவசம் எதுவுமில்லாமல் பெரிய திட்டங்களும், எதிர்ப்பார்ப்புகளும் கொண்டவர்களைப் பரிகாசம் செய்யும் பழமொழி...எப்படி ஒருவன் தனக்கு பெண்டாட்டியில்லாமல், இருந்தாலும் அவள் கர்ப்பமாக முடியாவிட்டாலும், தன்மகன் இருப்பதாக நினைத்துக்கொண்டு, அவனுக்கொரு பெயரிட்டு மகிழ்வதைப்போல என்னும் பொருளில் பயன்படுகிறது...</small> * மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி. * மண்ணுயிரை தன்னுயிர்போல் நினை. (contracted; show full)* முண்டச்சிக்கு வருவதெல்லாம் முறட்டு இழவாம்! * முழுக்க நனஞ்ச பின் முக்காடு எதுக்கு? * முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? * முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தாற் போல. * முகத்துக்கு முகம் கண்ணாடி * முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா? * முடங்க பாய் இல்லையினு சடங்க நிறுத்த முடியுமா? * முடவன் கொம்புத் தேனுக்கு [[ஆசை]]ப் பட்டாற்போல!.. * முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன். * முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும். * முட்டிக்கு (பிச்சைக்கு) போனாலும் மூன்று பேர் ஆகாது. * முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு. * முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா * முதல் கோணல் முற்றுங் கோணல் * முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார். (contracted; show full)* மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம் * மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும் ==மொ== * மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டாற்போல! * மொழி தப்பினவன் வழி தப்பினவன் ==மோ== * மோகம் முப்பது நாள், [[ஆசை]] அறுபது நாள். * மோரை பெருக்கு, நெய்யை உருக்கு. * மெளனம் மலையைச் சாதிக்கும். ==ய== *யதார்த்தவாதி வெகுசன விரோதி. :*உள்ளதை உள்ளபடியே, ஒளிவு, மறைவு இல்லாமல், நடைமுறைப்படி சொல்பவன்/பேசுபவன் பெரும்பாலாருக்கு/எல்லாருக்கும் பிடிக்காத '''விரோதி''' போலாகிறான் என்பது கருத்து. ==யா== * யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ? * யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். * யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. * யானைக்கு வாலாக இருப்பதைவிட, எறும்புக்குத் தலையாக இருப்பது மேல். * யானைப் பசிக்கு சோளப் பொரி. * யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்). ==யோ== * யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை. ==ரா== * ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது. * ராஜாவ மிஞ்சுன ராஜ விசுவாசி. ==வ== * வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும். * வட்டி [[ஆசை]] முதலுக்கு கேடு. * வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது. * வடக்கே கருத்தால் மழை வரும். * வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் மோகம், வண்ணாத்திக்கோ கழுதை மேல் மோகம். * வணங்கின முள் பிழைக்கும். * வணங்குன புல்லு தைக்கும். * வந்த மாட்டயும் கட்ட மாட்டான் வராத மாட்டயும் தேட மாட்டான். * வந்த விதி வந்தால் வாய் திறக்க வழியிருக்காது! (contracted; show full)* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை. * வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.<ref>[http://www.edubilla.com/tamil/pazhamozhigal/ தமிழ் பழமொழிகள்]</ref>\ == சான்றுகள் == {{Reflist}} [[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]] [[பகுப்பு:பழமொழிகள்]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=13990.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|