Difference between revisions 7088 and 7089 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)*தாயைப் பார்த்து பெண்ணை கொள்.
*தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை.
*தாயோடு அறுசுவை உணவு போம்.
*தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.
*தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
*தான் சாகணும் சுடுகாடு பார்க்கணும்.
*தானத்தில் சிறந்தது நிதானம்.

*தானம் கொடுத்த மாட்ட பல்லப்புடுச்சு பதம் பாத்த கதெயா.
*தானிருக்கும் அழகுக்குத் தடவிக்கொண்டாளாம் வேப்பெண்ணெய்.

==தி==
* திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை
* திரைகடல் ஓடியும் திரவியம் தேடு (சேர்)
* திருப்பதியில் மொட்டையனைத் தேடினாற்போல....
* திருடனுக்கு தேள் கொட்டினாற் போல...
* திருடனுக்கு இருட்டு உதவுவதைப் போல...
(contracted; show full)* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.

==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]