Difference between revisions 7195 and 7196 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)* ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.
* ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
* ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு, ஊரெல்லாம் தேடினானாம்.
* ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
* ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம்
** இது 'ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்' என்பதன் திரிந்த வழக்கு.
* ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்
* ஆண்டை எப்ப சாவான் திண்ண எப்ப காலியாகும்
?
** ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் (வழியாக) தெளிவு, நிம்மதி என்பது பொருள்.
* ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
* ஆத்திரத்த அடக்குனாலும் மூத்திரத்த அடக்கக்கூடாது.
* ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
* ஆயிரங்கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
* ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
* ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
(contracted; show full)
==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]