Difference between revisions 7221 and 7222 on tawikiquote==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும் * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு. * அகல் வட்டம் பகல் மழை. * அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. * அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன். (contracted; show full)* ஆக்கியவனுக்கு சட்டியும் பானையும்தான் மீதம். * ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும். * ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். * ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க! * ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு! * ஆசை வெட்கம் அறியாது. * ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.(A bad workman blames his tools. * ஆட்டசெல்லம், பூட்டசெல்லம், அடிக்க செல்லம் அயலாரகத்திலே!⏎ * ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா? * ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும். * ஆடிப் பட்டம் தேடி விதை. * ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும். * ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும். * ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் பொது இலவம்பஞ்சு என் கதி என்ன என்று கேட்டதாம்! * ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம். * ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம். (contracted; show full) ==வை== * வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. * வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது. * வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா? * வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை. [[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=7222.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|