Difference between revisions 7226 and 7227 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)* பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே
* குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
* குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
* குலத்தைக்கெடுக்கவந்த கோடாலிக்காம்புபோல
* குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே.
* குழந்தையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிட்டாற் போல....
* குறி வைக்க ஏற்ற ராம சரம்

* குறைந்த வயிற்றிற்கு கொள்ளுமாம் பலாக்காய்
* குறைகுடம் ததும்பும், நிறைகுடம் ததும்பாது.
* குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
* குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
* குனிய குனியத்தான் குட்டு விழும்.
* குண்டுமணிக்குத் (குன்றிமணி) தெரியாதாம் தன் குண்டி கருப்பென்று.
* கும்பி எரியுது, மீசைக்கு சம்பங்கி எண்ணெய்யா?
* கும்பி கூழுக்கு அழுததாம், மீசை சம்பங்கி எண்ணெய் கேட்டதாம்.
* கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி........
(contracted; show full)
==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]