Difference between revisions 9809 and 9810 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)* ஊருடன் ஒட்டி வாழ்.
* ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
* ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
* ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
* ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா?
* ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி. 
* ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.

* ஊருக்கு உபதேசமடி பெண்ணே, அது உனக்கில்லையடி கண்ணே.
* ஊர் அறிந்த பிராமணனுக்கு பூணூல் எதற்கு?
* ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
* ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.
* ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
* ஊரான் வீட்டு நெய்யே, தன் பெண்டாட்டி கையே.
* ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்.

==எ==
(contracted; show full)==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]