Difference between revisions 9833 and 9834 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)* தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
* தந்தையோடு கல்விபோம்; தாயோடு அறுசுவை உண்டிபோம்.(பெற்றோர் தரும் கல்வியும், உணவுமே சிறந்தவை)
* தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை. (அப்பா கூறும் அறிவுரைகளே, அறங்களில் உயர்ந்தவை ஆகும்.)
* தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
* தருமம் தலைகாக்கும்.
* தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
* தலை இருக்க வால் ஆடலாமா ?

* தலையைப் பார்த்து கல்லைப் போடு!
:*'''கல்''' என்பது தோசைக்கல்லைக் குறிக்கும்..'''தலை''' என்பது ஆள்/நபர்...சாப்பிட ஆள் இருந்தால் மட்டுமே கல்லைப் போட்டு தோசை சுடு அதாவது தேவை/அவசியம் இல்லாமல் செலவு செய்யாதே என்னும் பொருள்.
* தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
* தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
* தலெ எழுத்து தலெய செரச்சா போவுமா?
* தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
* தலைக்கு மிஞ்சினால்தான் தானமும், தருமமும்.
* தனக்கு மிஞ்சியது தான் தானமும் தருமமும்.
* தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
* தவளை தன் வாயாற் கெடும்.
(contracted; show full)==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]