Difference between revisions 9835 and 9836 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)* கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
* கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல.
* கழுதை கெட்டால் குட்டிச் சுவர்.
* கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
* கழுதைக்கு உபதேசம் காதில் ஓதினாலும் அபயக் குரலே குரல்.
* களவுக்குப் போறவன் தும்பக் கூடாது, கடை வச்சவன் தூங்கக் கூடாது.
* களவும் கற்று மர

**( இது 'களவும் கத்தும் மற' என்பதன் திரிந்த பழமொழி)
* களவும் கத்தும் மற
#:*களவையும் சூதாட்டத்தையும் மறந்துவிடு என்பது பொருள்.
* களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
* கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
* கள்ள மனம் துள்ளும்.
* கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
* கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
* கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
* கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
(contracted; show full)==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]