Difference between revisions 20365 and 20375 on tawikisource

இப்பாடலில் சிலஇடங்களில் தளை தட்டுகின்றது. 

பாரதிதாசன் அவ்வாறு நிச்சயம் பாடி இருக்கமாட்டார்; அது பதிப்புப்பிழையாக இருக்கலாம்! அவர் யாப்பு வல்லவர்! இங்குப் பதியப்பட்டுள்ள பாடல் மூலம், ''''பாரதிதாசன் கவிதைகள் தொகுதி ஒன்று'''' , ஏழாம் பதிப்பின்(1950) அடிப்படையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

இதன் '''முதல்பதிப்பு 1938''' இல் வெளிவந்தது;
 
இரண்டாம்பதிப்பு 1940 ஆம் ஆண்டிலும்,
 
மூன்றாம்,நான்காம் பதிப்புகள் 1944 ஆம் ஆண்டிலும்,
 
ஐந்தாம் பதிப்பு 1946 ஆம் ஆண்டிலும்,
 
ஆறாம் பதிப்பு 1947 ஆம் ஆண்டிலும்,
 
ஏழாம்பதிப்பு 1950 ஆம் ஆண்டிலும் வெளியாயின. 

அந்நாளில் இதனை வெளியிட்டோர் புதுக்கோட்டை, இராமச்சந்திரபுரம்,'''செந்தமிழ் நிலையம்''' பதிப்பகத்தார் ஆவர். முதற்பதிப்பைப் பார்ப்பின் 'மூலவடிவம்' தெளிவாகும்; அதனை வைத்திருக்கும் அன்பர்கள் யாராவது தந்து உதவலாமே! அது பாரதிதாசனுக்கும் ,தமிழுக்கும் செய்யும் தொண்டு அல்லவா? வணக்கம். நன்றி! அன்புடன்,--[[பயனர்:Meykandan|Meykandan]] 07:49, 5 மார்ச் 2010 (UTC)