Revision 16051 of "உதவி:ஒருவர் பக்கமொன்றைத் தொகுப்பது எப்படி?" on tawikisource

88 பகைத்திறம் தெரிதல்

 அஃதாவது, மாணாத பகையை ஆக்குதல் குற்றமும், முன் ஆகிநின்ற பகையுள் நட்பாக்கற்பாலதும், நொதுமலாக்கற்பாலதும், அவற்றின்கண் செய்வனவும், ஏனைக் களைதல்பாலதன்கண் செய்வனவும், களையும் பருவமும், களையாக்கால்படும் இழுக்கும் என்று இத்திறங்களை ஆராய்தல். ‘இரட்டுறமொழிதல்’ என்பதனால் பகையது திறமும், பகையிடத்து ஆக்கும் திறமும் என விரிக்கப்பட்டது. இவையெல்லாம் மாணாப்பகைய ஆகலின், இது பகைமாட்சியின் பின் வைக்கப்பட்டது.


பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.                871

  பகை என்று சொல்லபடும் தீமை பயப்பதனை ஒருவன் விளையாட்டின் கண்ணேயாயினும் விரும்புதல் இயற்கைத்தன்று.‘மாணாத பகையை ஆக்கிக்கோடல் எவ்வாற்றானும் தீமையே பயத்தலின், பண்பிலது என்றும், அதனை விளையாட்டின்கண் வேண்டினும் செற்றமே விளைந்து மெய்யே ஆகலின், ‘நகையேயும்’ வேண்டாமை தொல்லையோரது துணிவு என்பார் நீதிநூல் மேல்வைத்தும் கூறினார். அப்பெயர் அவாய்நிலையான் வந்தது.”
 
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.                            872

 
விளக்கம் ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
( குறள் எண் : 874 ) 
விளக்கம் பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.
( குறள் எண் : 875 ) 
விளக்கம் தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
( குறள் எண் : 876 ) 
விளக்கம் தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
( குறள் எண் : 878 ) 
விளக்கம் வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.
( குறள் எண் : 879 ) 
விளக்கம் இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.
( குறள் எண் : 880 ) 
விளக்கம் உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.