Difference between revisions 1131361 and 1131408 on tawiktionarysuability n. வழக்குத் தொடரத்தக்க நிலை, வழக்குத் தொடர் தகவு.
suaviter in modo fortiter in re adv. மென்பட்டு உறை போர்த்த இரும்புக்கையுடன், மென்னயமாகவும் உறுதியாகவும்.
sub silentio adv. பொதுமக்கள் அறியாமல், சந்தடியின்றி.
sub specie aeternitatis adv. நிலைபேறுடைமை முறைமையில், உள்ளார்ந்த மெய்யியல்பின் படி.
sub-acute a. சற்றே கூரிய, மட்டான அறிவுக்கூர்மையுடைய, (மரு.) முனைப்பக்கும் நாட்பட்ட சீர்கேட்டிற்கும் இடைநிலைப்பட்ட.
sub-bonnet n. வெயில்காப்புத்தொப்பி, முகத்தையும் கழுத்தையும் வெயிலினின்றுக் காக்கும் அமைவுடைய தொப்பி.
subacidity n. சற்றே புளிப்பான தன்மை.
subagent n. துணை முகவர், கீழ்நிலை ஆட்பெயர்.
subaltern n. கீழ்நிலைப்பணியாளர், துணைநிலைத்தலைவர், துணைநிலையாளர், கீழ்நிலையாளர், (அள.) சினைநிலைவாசகம், (பெ.) கீழ்நிலை வகுப்பிற்குரிய, துணைமையான, துணைநிலைசார்ந்த, கீழ்நிலைப்பணிகளுக்குரிய, அடுத்த கீழ்ப்பணி சார்ந்த, அடுத்தடுத்துக் கீழ்ப்பணிகளுக்குரிய, (அள.) வாசகவகையில் முழுப்படர்வற்ற, சினை நிலையான.
subalternate n. (அள.) முழுப்படர்வு வாசகத்திற்குரிய குறிப்பு வாசகம், (பெ.) கீழிணக்கமான, (தாவ.) எதிரிநிலையாகும் பாங்குள் ஒற்றைமாற்றல் இயல்கிற.
subalternation n. (அள.) ஓரினக்குறிப்பு முழுப்படர்வு வாசகத் தொடர்புறவு.
subalternity n. கீழுறுநிலை, துணைமைநிலை.
subapostolic a. இயேசுநாதரின் திருத்தொண்டர்களுக்குப் பிற்பட்ட காலத்திய.
subaquatic a. நீரடியான, நீரின் கீழுள்ள, ஒரு சார்பு நீர் வாழ்வுப் பழக்கமுடைய.
subarborescent a. ஓரளவு மரம்போன்ற.
subarctic a. வடதுருவ ஓர அணிமையிலுள்ள.
subarcuate a. வில் வளைவு போன்ற.
subarcuation n. வில் வளைவினள் வில்வளை வமைப்பு.
subarration n. நகில்விலை, நிச்சயதார்த்தம்.
subastral a. நிலவுலகுக்குரிய.
subatom n. அணுவின் உட்கூறு.
subatomic a. அணு உட்கூறமைவு சார்ந்த, அணு உட்டுகள் மாறுபாட்டுக்குரிய.
subatomics n. pl. அணு உட்கூறமைவியக்க ஆய்வியல்.
subaudition n. அவாய் நிலை, தொனிக்குறிப்பு, எச்சப் பொருள்கோள், உய்த்துணர நிற்றல்.
subcantor n. திருக்கோயில் தலைமைப்பாடகர் துணைமைப் பதிலாள்.
subcelestial a. வானகத்துக்குக் கீழுள்ள.
subcentral a. மையத்தின் கீழுள்ள, மையத்திற்கருகிலுள்ள.
subcommittee n. உட்குழு, குழுப்பிரிவு.
subcontiguous a. நெருக்கத்திலுள்ள, தொடும் நிலையிலுள்ள.
subcontinent n. துணைக்கண்டம், கண்டத்தின் தனிப்பண்புடைய பகுதி, தனிப்பண்புடைய பெரும்பரப்பு, சிறுகண்டம்.
subcontinental a. துணைக்கண்டப் பண்புடைய.
subcontinuous a. முற்றிலுந் தொடர்ச்சிபெறாத.
subcontract -2 v. உள் ஒப்பந்தஞ் செய்துகொள், கீழ்க்குத்தகை ஏற்றக்கொள், கீழ்குத்தகை விடு.
subcontractor n. கீழொப்பந்தக்காரர், துணைக் குத்தகையாளர், உட்குத்தகையாளர்.
subcontrariety n. (அள.) குநிலை முரண், முற்கோள்களின் சிறிது முரண்பட்ட தொடர்பு.
subcontrary n. குறைநிலைமுரண், சிறிதளவு முரண்பட்ட முற்கோள், (பெ.) குறைநிலை முரணான, சிறிது முரண்பாடான.
subcontrat -1 n. உள் ஒப்பந்தம்.
subcordate a. இதய வடிவணுக்கமுடைய, ஏறத்தாழ நெஞ்சுக்குலை வடிவான.
subcortical a. மரப்பட்டையில் உள்ளுரிக்கு அடியிலுள்ள.
subcosta n. வண்டுச்சிறகின் விளிம்போர நரம்புச்சட்டம்.
subcostal n. வண்டுச்சிறகின் விளிம்பயல் நரம்புச்சட்டம், (பெ.) விலாவெலும் படுத்த, வண்டுச்சிறகின் விளிம்பயலான.
subcrystalline a. ஓரளவு பளிங்குபோன்ற.
subculture n. இருமடிச் செய்முறை வனத்தொகுதி, நுண்மவகையில் செய்முறை வனத் தொகுதியிலிருந்து பெறப்பட்ட செய்முறைவளத் தொகுதி.
subcutaneous a. தோலடியான, தோலின் கீழான.
subdiaconate n. துணைமைக் கோயிற்குரு பதவி, துணைநிலைக் கோயிற்குரு நிலை.
subdominant n. (இசை.) ஐந்தாவது சுரத்திற்குக் கீழ்ப்பட்ட சுரம், (பெ.) மிகமுனைப்பாய் இராத.
subduce, subduct (அரு.) பின்வாங்கிக்கொள், திரும்ப எடு, தள்ளுபடி செய், குறை, கழித்துவிடு.
subduction n. கழிப்பு, தள்ளுபடி, குறைப்பு.
subduplicate a. (கண்.) பெருக்க மூலங்களின் தகவுப் பொருத்தமுடைய.
subedit v. உதவிப் பதிப்பாசிரியராகச் செயலாற்று.
subeditor n. செய்தித்தாள் துணையாசிரியர்.
subeditorial n. துணைத்தலையங்கம், (பெ.) துணையாசிரியரைச் சார்ந்த, துணையாசிரியருக்குரிய.
suberect a. செங்குத்துச் செலவான.
subfeudation n. கீழ்மானிய அளிப்பு.
subfeudatory a. கீழ்மானியமாக அளிக்கப்படுகிற, கீழ் மானியச்சார்பான.
subinfeudation n. பண்ணை நிலவுரிமை வகையில் கீழ் மானிய அளிப்பு.
subinfeudatory n. கீழ்மானியதாரர், (பெ.) கீழ்மானியமாக அளிக்கப்பட்ட.
subinspector n. துணை மேற்பார்வையாளர், துணை ஆய்வாளர், காவல் துறைத் துணைமேலர்.
subintellection n. அவாய் நிலைக்கோள்.
subintelligence n. அவாய் நிலைக்குறிப்பு.
subintelligential a. தொக்கநிற்கும் குறிப்புப் பொருளுடைய.
subintelligitur n. தொக்கு நிற்கும் பொருள்.
subintroduce v. மறைமுகமாமக உட்புகுத்து, மெல்ல இடைச்செருகவிடு.
subjacent a. கீழாக அமைந்திருக்கிற, அடிநிலையான.
subject -1 n. குடிமகன், குடிமகள், பிரஜை, ஆளப்படுபவர், ஆட்சிக்கு உட்பட்டவர், நாட்டில் மன்னரல்லாத ஒருவர், வாழ்குடி, குடியுரிமையாளர், குடியாள், குடியானவர், குடியாண்மை ஏற்பவர், கீழுரிமையாளர், அடங்கியவர், ஆட்பட்டவர், ஆணைக்கு உட்பட்டவர், ஆணைக்கு உட்பட்ட நாட்டின் குடி,
subject -2 v. அடிப்படுத்து, கீழடக்கு, கீழ்ப்படுத்து, ஆட்படச்செய், செயலுக்கு உள்ளாக்கு, விளைவுக்கு உரியதாக்கு.
subject-heading n. பொருள் அட்டவணை.
subject-matter n. நுதல் பொருள், கூறப்படுஞ் செய்தி, அடிமூலச் செய்தி, உட்கிடைப்பொருள்.
subject-object n. உணர்வில் உருவாகும் புறப்பொருட்படிவம்.
subjectify v. அகநிலைப்படுத்து, அகநிலைச்சார்பாக்கு.
subjection n. அடிப்படுத்துதல், கீழ்ப்படுத்துதல், ஆட்சிக்குட்பட்ட நிலை, கீழ்ப்படிந்த நிலை, அடிமை நிலை, தன்னுரிமையற்ற நிலை.
subjective n. (இலக்.) எழுவாய் வேற்றுமை, (பெ.) (மெய்.) அக உணர்வு நிலைக்குரிய, அக எண்ணஞ் சார்ந்த, தன் உள்ளுணர்வுக்குரிய, உணர்ந்தறியும் தான்' சார்ந்த, கற்பனை நிலையான, கலை-கலைஞர்கள் வகையில் தனி மனப்பாக்குக்கு முனைப்புத்தருகிற, தனி முரமண்பாட்டினையே பெரிதுஞ் சார்ந்திருக்கிற, புற உண்மைகளை உள்ளபடிக்காட்டாத, (இலக்.) எழுவாய் சார்ந்த.
subjectivism n. அகநிலை வாய்மைக்கோட்பாடு, அறிவெல்லாம் உள்ளுணர்வு சார்ந்ததேயன்றிப் புறவாய்மை தேர்ந்து துணியத்தக்கவையல்ல என்ற கோட்பாடு.
subjectivist n. அகநிலை வாய்மைக் கோட்பாட்டாளர், அக நிலைவாய்மைக்கே பெருமதிப்புக் கொடுப்பவர், அக உணர்வுச் சார்பாளர்.
subjectivistic a. அகநிலை வாய்மைக் கோட்பாட்டுச் சார்பான, அகநிலை வாய்மைக் கோட்பாடு முனைப்பான.
subjectivity n. அகநிலை, உள்ளுணர்வுச் சார்பு.
subjectivize v. அகநிலை மயமாக்கு, உள்ளுணர்வு நிலைப்படுத்து.
subjoint n. துணைமைக்கண மூட்டு, பூச்சி வகைகளின் கை-கால் மூட்டு உட்பிரிவுகளில் ஒன்று.
subjugate v. அடிப்படுத்து, கீழ்ப்படுத்து,தோல்வியுறச் செய், வென்று வயப்படுத்து, கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவா, அடிமை நிலைப்படுதது.
subjunction n. கீழிணைப்பு, பின்னொட்டிணைப்பு, பின்னிணைப்புப்பகுதி.
subjunctive n. (இலக்.) வினைச்சொல்லின் கருத்துப் புனைவியல் பாங்கு, கருத்துப் புனைவியல் பாங்கு வினையுரு, (பெ.) துணைக்கீழிணைப்பான, பின்னோட்டமான, (இலக்.) வினைச் சொல் வகையில் கருத்துப் புனைவியல் பாங்கான.
sublanceolate a. (தாவ.) ஓரளவு ஈட்டித்தலை போன்ற வடிவுடைய.
sublate v. (அள.) மறு, (மெய்.) உயர்தளப்படுத்து.
sublation n. (செய்.) உயர்தளப்பாடு.
sublet n. கீழ்க்குத்தகைக்கு விடுதல், (பெ.) கீழ்க்குத்தகைக்கு விடப்பட்ட, (வினை.) கீழ்க்குத்தகைக்கு விடு.
sublieuetenant n. துணைத்தரப் படைத்தலைவர், சிறு துணைமைப் பணித் தலைவர்.
sublimate n. பதங்கம், ஆவி உறைபடிவு, சூடேற்றி ஆவியாக மாற்றிப் பின்னர் கெட்டியாக ஆறவிடப்பட்ட சரக்கு,(பெ.) பதங்கமாக்கப்பட்ட, (வினை.) உயர்வுபடுத்து, ஆவி உறை படிவாக்கு, நயமாக்கு, மேன்மைப்படுத்து, தூய்மையாக்கு.
sublimation n. மேம்பாடுறுவிப்பு, பதங்கமாதல், ஆவிஉறைபடிவாக்கம், ஆவிஉறைபடிவு, ஆவி உறைபடிவாக்கத்தூய்மைப்பாடு, நிறைவெய்திய நிலை, உயர்வு, உருமாமற்ற மேம்பாடு, உணர்ச்சி மேம்பாடு, இயல்புணர்ச்சி சார்ந்த ஆற்றல், தன்னையறியாமலேயே உயர்குறிக்கோள்களை நோக்கித் திரும்புதல்.
sublimtiy n. விழுப்ம், உயர்நிலை, மேம்பாடு, மேதகைமை, எண்ணம், பெருந்தகைமைப் பண்பு, இறம்பூது,மதிப்பச்சமும் வியப்பார்வமுடைய மனக்கிளர்ச்சி, இறும்பூதூட்டுஞ் செய்தி, உயர் முகடு, நிறைவெய்திய நிலை.
sublineation n. அடிவரையீடு.
sublittoral a. கரையடுத்தருகே வாழ்கிற, கரையிலிருந்து சிறிதே விலகி வளர்கிற.
sublunate a. பிறையணுக்க வடிவுடைய.
sublunation n. அரைகுறை இடப்பிறழ்ச்சி.
submaster n. பள்ளித் துணையாசிரியர்.
submediant n. (இசை.) சுரவரிசை வகையின் ஆறாவது சுரம்.
submental a. (உள்.) மோவாயின் கீழான.
submit v. சரணடை, கீழ்ப்படி, ஆய்வுக்காக எடுத்துரை, தெரிவி, பணிவிணக்கத்தோடு வற்புறுத்து, விட்டுக்கொடு, எதிர்க்காமலிரு, விலகிக்கொள், இடங்கொடு.
submontane a. மலை அடிவாரத்திலுள்ள, மலையடியிலுள்ள.
submultiple n. சரி ஆக்கக்கூற்றென், ஓர் எண்ணை மீத மில்லாமல் வகுக்கிற மற்றோர் எண், (பெ.) சரி ஈவான், சரிநேர் கூறான.
subnarcotic a. ஏறத்தாழத் தூக்கமயக்கம் ஊட்டுகிற, இள மறமறப்பூட்டுகிற.
subnascent a. அடியில் வளர்கிற.
subnatural a. இயல்நிலைக்குக் குறைவான.
subnormality n. இயல்நிலைக்குக் குறைந்த தன்மை.
suboccipital a. (உள்.) பிடரியெலும்பின் கீழான.
suboctupie a. எட்டின் ஒரு கூறுகொண்ட, 1:க்ஷ் என்னும் தகவுப்படியுள்ள.
suborbital a. கட்குழியின் கீழுள்ள.
subordinate n. கீழ்ப்பணியாளர், ஒருவர்கீழ்ப் பணிசெய்பவர், (பெ.) கீழ்நிலைப்பட்ட, கீழ்ப்படியான, துணைமையான, இரண்டாம் படியான, குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த, சிறப்புக்குன்றிய, தரம் குன்றிய, அடிமைபோல் நடக்கிற, (இலக்.) வாசக உறுப்பு வகையில் சார்பியலான, (இலக்.) இடைச்சொல் வகையில் சார்பியல் உறுப்புக்களை முதலுடன் இணைக்கிற, (வினை.) கீழ்நிலை எய்துவி, குறைந்த முக்கியத்துவமுடையதாக்கு, சிறப்புக்குன்றியதாக நடத்து, குறைவுடையதாக மதிப்பிடு, கருவி நிலைக்குத் தாழ்த்து, கருவியாக மட்டுங் கருது.
subordination n. துணைமைநிலை, கீழ்நிலை, துணைமை நிலைக்கு இறக்குதல், கீழ்நிலை எய்துவித்தல், கீழடக்கம், குறைந்த முக்கியத்துவம், குறைந்த படித்தரம், பணிவு, படிப்படி இறக்க ஒழுங்கு, படிப்படி இறக்கக் கவான் உள்வளைவுத்தொகுதி.
subordinationism n. பின்னிறக்கக்கோட்பாடு, கிறித்தவ மூவொருமைத்துவத்தில் முதலாவதற்கு இரண்டாவதும் மூன்றாவதுந் தாழ்ந்தவையென்னுங் கோட்பாடு.
subordinative a. பணிவடக்கப் பாங்குள்ள, துணைமை நிலைக்குரிய, துணைமைநிலை குறித்த.
subovate a. ஏறத்தாழ முட்டைவடிவான.
subplot n. துணைக்கதைக்கூறு, துணைநிகழ்ச்சிக் கூறு.
subprefect n. துணைப்படையாட்சியாளர், பண்டை ரோமாபுரியில் துணை ஆட்சி அரங்கத் தலைவர், துணைச்சட்டாம் பிள்ளை.
subprefecture n. துணைப்படையாட்சியாளர், பதிவ, பண்டை ரோமாபுரியில் துணை ஆட்சி அரங்கத் தலைமைப் பதவி, துணைச்சட்டாம்பிள்ளை நிலை.
subquintuple a. 01:05:00 AM என்னும் தகவுப்படியுள்ள.
subrectangular a. ஏறத்தாழ நாற்கோணமான, ஏறத்தாழ நாற்கட்டமான.
subrector n. ஊர் மதகுருவின் அதிகாரம் பெற்ற பிரதிநிதி, கல்விநிலைய முகவர் உரிமை பெற்ற ஆட்பெயர்.
subrent v. கீழ்வாடகைக்கு விடு.
subreption n. புரட்டீட்டு, புரட்டுரையினால் ஒன்றைப்பெறுதல், அதிரடிப்பேறு, அதிரடியால் ஒன்றைக் கைப்பற்றுதல்.
subretinal a. கண்விழித்திரைக் கீழான.
subrogation n. (சட்.) கடன் பற்றுரிமை மாற்றீடு.
subsaturation n. ஏறத்தாழ முழுநிறை செறிமான முடைமை.
subscript a. (இலக்.) கிரேக்க எழுத்துக்களுடனே எழுத்தாக அடியில் எழுதப்பட்ட.
Subscript கீழ் எழுத்து
subscription n. அடியில் எழுதுதல், அடியெழுத்து, கீழே எழுதப்பட்டது, கடையெழுத்து, கையொப்பம், இசை விணக்கம், ஒப்புதல் தெரிவிப்பு, நிலைவரி, சந்தா, உறுப்பினர் கட்டணம், தவணை வரி விற்பனை முறை, நிதி-கழகம் முதலியவற்றிற்குத் தொகை வழங்கீடு, கையொப்பம் பணம்.
subsection n. உட்பிரிவு.
subseptule a. 1:ஹ் என்னுந் தகவுப்படியுள்ள.
subsequent a. பின் தொடர்ந்து வருகிற, பிற்பட்ட, பின் தொடர்பான, அடுத்துவந்த, பிற்காலத்திதான, பிற்பட நேர்ந்த.
subsequently adv. பின்னர், அடுத்து, பிறகு, அதன் பின்.
subservient a. துணைக்கருவியாகப் பயன்படுகிற, கெஞ்சுகிற, அடிமைப்பண்புடைய, அடிவருடி வாழ்கிற.
subsextuple a. 01:06:00 AM என்னுந் தகவுப்படியுள்ள.
subsist v. உளதாகு, பிழைத்திரு, பிழைத்துவாழ், வாழ்ந்து கொண்டிரு, மெய்ம்மையாயிரு, உயிர்காத்துக்கொண்டிரு, உயிர்தாங்கியிரு, வாழ்க்கைக்குரியன பெறு, வாழ்க்கைக்குரியன பெற்று வாழ், உயிர்வாழ்வுக்குரியன கொடுத்துதவு.
subsistence n. வாழ்வு, பிழைப்பு, பிழைப்பாதாரம், வாழ்வுத்தேவை, பிழைப்புவழி, சீவனோபாயம், வாழ்க்கைத்தொழில்.
substage n. அடித்தட்டு, நுண்ணோக்காடியில் காட்சிச் சில்லுக்குக் கீழுள்ள கருவிகலப்பகுதி.
substance n. பொருள், பண்டம், பொருளின் உருவகை, பிழம்பு, பண்பி, பண்புக்கு அடிப்படையான பொருட்கூறு, காட்சியின் அடிப்படைக்கூறு, நிகழ்ச்சியின் இன்றியமையாப் பகுதி, அடிப்படை, ஆதார முக்கியமான பகுதி, சாரம், உயிர்நிலைப்பகுதி, கருமூலம், கருப்பகுதி, உட்கரு, கருப்பொருட் செய்தி, உடற்கூறான பகுதி, கருத்துரை, சுருக்கம், உண்மைப்பொருள், உண்மையாயிருப்பது, கற்பனையில்லாதது, மூலப்பொருள், திண்மை, கெட்டிமை, திண்ணியதகுதி, திட்டமான மதிப்பு, மெய்ப்படி உடைமை, செல்வநிலை, சொத்து.
substantial a. பொருண்மையுடைய, பொருளியலான, சடமான, பிழம்புருவான, திடப்பொருளான, கெட்டியான, செறிவான, கருத்துள்ள, தடித்த, வலிமையான, நொய்தாகாத, உறுதியான, நீடித்துழைக்கக்கூடிய, வாணிகத்துறையில் கட்டுறுதியான, மெய்யான, உள்ளபடியாயிருக்கிற, பொய்த்தோற்றமல்லாத, அனுபவபூர்வமான, செயல்துறையில் கண்ட, பயனுடைய, சாரமான, முக்கியமான, உண்மையான முக்கியத்துவம் சார்ந்த, மெய்ம்மதிப்புடைய, மெய்த்தகுதி வாய்ந்த, பெரும்பகுதியான, உருப்படியான, கணிசமான, போதியஅளவான, சொத்துடைய, போதிய செல்வமுள்ள.
substantialism n. புறப்பொருள் வாய்மைக்கோள், இயற்காட்சிகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் அடிப்படையான புறநிலை மெய்ம்மைக் கூறுகளே உண்டு என்று கொள்ளுங் கோட்பாடு.
substantialist n. புறப்பொருள் வாய்மைக் கோட்பாட்டாளர்.
substantialize v. மெய்யாக்கு, மெய்ப்படிவங் கொடு, செயல்வாய்மைப்படுத்து, மெய்வாழ்வியல்பூட்டு, மதிப்புடைய தாக்கு, முக்கியமானதாக்கு, போதிய அளவுடையதாக்கு, மெய்யாகு, மெய்யாகப் பெறு, மெய்ப்படிவம் பெறு, செயல்வாய்மைப்படு, மெய்ந்நிலை எய்து, மதிப்புடையதாகு, முக்கிய மானதாகு, போதிய அளவுடையதாகு.
substantially adv. மெய்ந்நிலையில், பொருண்மை வகையில், காரிய அளவில், உருப்படியான முறையில, முக்கிய கூறுகளில், கணிசமான நிலையில், போதிய அளவில், மொத்தத்தில், ஏறத்தாழ, கிட்டத்தட்ட, பெரிய அளவு மாறுதலின்றி, சொல்லின் பொருளளவில்.
substantiate v. எண்பி, மெய்ப்பி, உறுதிப்படுத்து, கண்கூடாகக் காட்டு, காரணங் காட்டி விளக்கு, எடுத்துக்காட்டுகளுடன் வலியுறுத்து.
substantival a. (இலக்.) பெயர்ச்சொல்லின் இயல்பினதான.
substantivally adv. பெயர்ச்சொல்லின் இயல்பினதாக.
substantive n. தன்னிலைப் பெயர்ச்சொல், லத்தீன் கிரேக்கமுதலிய பண்டை மொழி வழக்கில் பெயரடையல்லாத பெயர்ச்சொல், (பெ.) நிலையான, தனியியலான, பிறிதின் சார்பற்றுத் தனி இருப்புக் கொண்ட, அறிவு வகையில் உய்த்தறிய வேண்டியதல்லாத, தன்னிலையான, துணைமை நிலையினதாயிராத, தற்சார்பியலான, ஒட்டு நிலையினதாயிராத, தனிநிலையான, சார்பு நிலையினதாயிராத, (படை.) பொருள் நிலையான, பணி வகையில் மதிப்பியலாகவோ-மதிப்புரிமைப்பேறாகவோ-தற்காலிகமாகவோ இராத, (இலக்.) கிரேக்க லத்தீன் முதலிய பண்டை மொழிகள் வகையில் பெயர்ச்சொற்களுள் பெயரடை உட்படுத்தாத தனியியலான.
substation n. துணை நிலையம்.
substellar a. விண்மீனுக்கு நேர்கீழான, நிலவுலகப்பரப்பு வல் விண்மீன் உச்சமாகத் தெரிவதற்கிடமான.
substemperate a. மட்டணவிய, மித மண்டலத்தைவிடச் சற்றே குளிர்மிக்க.
substernal a. மார்பெலும்பிற்குக் கீழான.
substitute n. பதிலாள், மாற்றாள், பதிற்பொருள், மாற்றுப்பொருள், பகரப்போலி, (வினை.) பதில் ஏற்பாடு செய், பதிலாள் அமர்த்து, மாற்றீடு செய், பரிமாற்றமாகக் கொடு.
substitution n. பதிலீடு, பதில்வைப்பு, ஆள் மாற்றீடு, பொருள் மாற்றீடு, பதிலாள் நிலை, மாற்றுப்பொருள் நிலை, (வேதி.) அணுமாற்றீடு, அணுத்திரண்மத்தில் திரண்மம்பிளக்காமலேயே அணுவினிடம் அணுவாக மாறுபடல்.
substratum n. கீழடுக்கு, அடித்தள அடுக்கு, கீழாக இருப்பது, அடிநிலைப்பளாம், அடிநிலத் தளம், அடிநிலைக் கூறு, அடிமூலக் கூறு, பண்புகள் செறிந்த மூலுக்கூறு, அடி உயிர்த்தளம், செடியின வளர்ச்சித்தளம், அடிவாழ்வுத்தளம், உயிரின வாழ்விற்குரிய தளம்.
substruct v. கீழே கட்டு, அடிப்படையிடு, கடைகாலிடு.
substruction n. கீழ்க் கட்டுமானம்.
substructural a. கீழ்க் கட்டுமானஞ் சார்ந்த.
substyle n. கதிர்மணி வட்டத்தில் கோல் அமைந்துள்ள வரை.
subsultive, subsultory a. வெட்டி வெட்டி இயக்குகிற, சுரித்திழுக்கிற.
subsultus n. நடுக்கியக்கம்.
subtack n. ஸ்காத்லாந்து வழக்கில் கீழ்க் குத்தகை.
subtacksman n. ஸ்காத்லாந்து வழக்கில் கீழ்க் குத்தகை எடுப்பவர்.
subtangent n. ஊடுவரையில் தொடுவரை நீட்டம்.
subtenanch n. கீழ்க்குடிவாரம்.
subtenant n. கீழ்க்குடிவாரத்தார்.
subtend v. (வடி.) நாண்வரை-முக்காணப் பக்கம் ஆகியவற்றின் வகையில் கோணத்திற்கு எதிர்வீழ்வாயிரு.
subtense n. (வடி.) எதிர்வீழ்வரை, கோண வகையில் எதிர்வீழ்வாகும் நாண்வரை அல்லது முக்கோணப்பக்கம்.
subterfuge n. நழுவமைப்பு, தப்புச்சாக்கு, சூழ்ச்சித்தலைக்கீட்டு வாதமுறை, திருக்கு மறுக்கு வாதம்.
subterhuman a. மனித இயல்பிற் குறைந்த, மனிதனுக்குக் கீழ்பட்ட.
subternatural a. இயல்நிலைக்குக் கீழான, இயற்கை நிலையிற் குறைந்த.
subterposition n. கீழ்வைப்பு, கீழ் உள்ள நிலை.
subterranean n. பொதியறை வாழ்வோர், பொதியறை, (பெ.) நிலத்திற்குக் கீழான, அடிநிலத்தினுடான, சுருங்கை வழியாயமைந்த, மறைவழிவான.
subterraneously adv. அடிநில வழியாக, மறைமுகமாக, மறைவழியூடாக.
subthoracic a. மார்புக் கூட்டிற்குக் கீழேயுள்ள.
subtilize v. நொய்தாக்கு, நுண்மையதாக்கு, தூய்மைப்படுத்து, நயமுடையதாகு.
subtitle n. ஏட்டுத் துணைத்தலைப்பு, சுருக்கத்தலைப்பு, பக்கமோடும் தலைப்புத்துணுக்கு, இரண்டாம் பெயர், திரைப் படச் சுருளின் முனைப்பான முகப்புரை.
subtle a. நுட்பமான, நுட்பநுணுக்கமான, நொய்தினம் நொய்தான, சூட்சுமமான, நுண்ணயம் வாய்ந்த, மென்னயமிக்க, உள்ளார்ந்த நுணுக்கமுடைய, நுழைபுலம் வாய்ந்த, கூர்த்த மதியுடைய, கூருணர்வுடைய, நுட்பவேறுபாடுடைய, நுட்பவேறுபாடுகள் காண்கிற, நுட்பமாகச் செய்யப்பட்டுள்ள, மென்படர்வான, மறைநுட்பம் வாய்ந்த, புலம்படா நுணுக்க இரகிசயமான, பிடிகொடாதிருக்கிற, நழுவிச் செல்லுந்திறமுடைய, பின்தொடரமுடியாத, நுண்ணயச் சூழ்ச்சித்திறமிக்க, இரண்டகமான.
subtlety n. நுட்பநுணுக்கம், நுண்ணயம், நயநுணுக்கம், நுழைநுட்பம், மயிரிழை நுணுக்கம், நுண்ணய வேறுபாடு, மயிரிழை வேறுபாட்டு நுட்பம், நுழைபுலம், மதிநுட்பம், கூருணர்வு, மறைநுட்பம், மர்மத்திறம், பிடிகொடாத்திறம், புரியாத் திறநுட்பம், நழுவுதிறம், தட்டிக்கழிப்புத்திறம், நுண்ணயச் சூழ்ச்சித்திறம், ஈரடி, இரண்டகத்தன்மை, நுட்ப நேர்த்தி நயம்.
subtly adv. நுண்ணயத்துடன், மென்னயமாக, மெல்லிழைவு நயத்துடன், கூருணர்வுடன், நுண்ணயச் சூழ்ச்சித்திறம்பட.
subtonic n. (இசை.) சுதிக்கு அடுத்த கீழ்ச்சுரம்.
subtopic n. உருக்கெடுக்கும் நகரக் கட்டுமானப்பகுதி, அருவருப்பான ஊர்க் கட்டுமானப்பகுதமி.
subtract v. கழி, நீக்கு, அகற்ற, பிரித்தெடு, பின்வாங்கிக்கொள், தொகையிலிருந்து பகுதியை எடுத்துவிடு.
subtraction n. கழித்தல், நீக்கல், பின்வாங்கிக்கொள்ளுதல், எடுத்துவிடல், கொடாமல் வைத்துக்கொள்ளுதல், (கண்.) கழிப்புமுறை, வேற்றுமை கண்டுபிடிப்புமுறை.
subtractive a. கழித்தலைக் குறிக்கிற, நீக்கிவிடும் பாங்குள்ள, குறைத்துவிடும் இயல்புடைய, எதிர்மறையான.
subtractor n. நிறமகற்றி, குறிப்பிட்ட நிறமகற்றத்தக்க, ஒளிக்கதிர் அரிப்பு.
subtrahend n. (கண.) குறைக்கப்படவேண்டிய எண்.
subtreasurer n. துணைக் கருவூலத் தலைவர்.
subtreasury n. துணைக்கருவூலம், துணைப்பண்டாரம், துணைக்கஜானா.
subtribe n. (வில., தாவ.) துணைக்குழுமம்.
subtriple a. (கண.) 01:03:00 AM என்னும் தகவுப்படியுள்ள.
subtropic, subtropical a. வெப்பமண்டலம் அணவிய, ஏறத்தாழ வெப்பமண்டல நிலை சார்ந்த.
subtropics n. pl. வெப்ப மண்டல அணிமையிடம்.
subulate, subuliform a. (தாவ.,வில.) தமரூமசி வடிவுடைய.
subungulate a. (வில.) குளம்புகளும் பல கால்விரற் கூறுகளும் ஒருங்கேயுடைய.
subvariety n. வகையுள் வகை.
subvention n. உதவித்தொகை.
subvert v. கவிழ்த்து, தலைமறிவாக்கு, தலைகீழாய்புரட்டு, நிலைகுலைவி, சீர்கெடச்செய், அழி, பாழாக்கு, வீழ்ச்சியுறச் செய்.
subvertebral a. தண்டெலும்பின் அடியிலுள்ள, தண்டெலும்புக் கண்டங்களின் கீழுள்ள.
subvertical a. பெரும்பாலும் செங்குத்தான.
subvitreous a. சற்றே பளிங்குபோன்ற, அரைகுறைப் பளிங்கியல்புடைய.
succentor n. இசைக்குழுத் தலைவரின் ஆட்பேர்.
success destime n. ஏறத்தாழ நல்ல வரவேற்பு.
successionist n. பரம்பரைக் கோட்பாட்டாளர், இயேசுவின் திருமாணவ உரிமை மரபு இன்றியமையாத் தொடர்புடையதென்று நம்புபவர்.
succictly adv. செறிவாக, மணிச்சுருக்கமாக.
succictness n. செறிவு, மணிச்சுருக்கத்தன்மை.
succinct a. செறிவான, செறிக்கப்பெற்ற, சுருக்கமான, மணிச்சுருக்கமான.
succotash n. அவரை சோள வேவல் பண்டம்.
succulent a. சாறுகட்டிய, சாற்றுச்செறிவான, சாறுததும்பலான, சாறுதசைக் கண்ணிறுக்கம் உடைய, (தாவ.) மென்கொழுந் தசையுடைய, கனிவுச் செறிவுடைய.
suction n. உறிஞ்சுதல், ஒத்தியெடுத்தல், உறிஞ்சியெடுத்தல், உள்வாங்குதல், பற்றீர்ப்பு.
suction-fan n. பதருறிஞ்சி, தானியத்திலிருந்து பதர் வாங்கிட உதவும் உறிஞ்சு விசிறி.
suction-plate n. ஒட்டண்ணம், செயற்கைப் பல்தாங்கி.
suction-pump n. இறைப்புக் குழாய்ப்பொறி.
suctorial a. உறிஞ்சு வாய்ப்புடைய, பற்றுன்று வாய்ப்பிணைப்புடைய, உறிஞ்சீர்ப்பு வலிமையுடைய, உறிஞ்சு உறுப்பு இணைவுடைய, பற்றுறுப்பு இணைவுடைய, உணவுறிஞ்சாற்றலுடைய.
sudatorium n. புழுக்கறை, வியர்ப்புக்கூடம்.
sudatory n. புழுக்கமருந்து, வியர்ப்பூட்டும் மருந்து, (பெ.) வியர்ப்பூட்டுகிற.
suet n. ஊன் கொழுப்பு, எருது-ஆடு முதலியவற்றின் குண்டிக்காயிடைச் சேரும் திண்கொழும்பொருள்.
suffete n. பண்டைக் கார்தெஜ் நகராட்சியின் முறைமன்ற நடுவருள் ஒருவர்.
sufficient n. போதுமான அளவு, போதுமானது, தேவைக்குப் போதிய அளவு, (பெ.) போதிய, போதுமான, போதிய அளவான, தேவைக்கு ஏற்ற, போதிய எண்ணிக்கையுடைய, போதிய திறமையுள்ள.
suffocate v. திக்குமுக்காட்டுவி, மூச்சுத் திணற வை, மூச்சுத்திணறும் உணர்ச்சி உண்டுபண்ணு, மூச்சுவிட முடியாமற் செய், பேச முடியாமற் செய், திக்குமுக்காடு, மூச்சுத்திணறும உணர்ச்சி பெறு, மூச்சுவிடத் திணறு.
suffocation n. மூச்சுத்திணறல்.
suffragette n. பெண்வாக்குரிமைப் போராட்ட அணங்கு, மகளிர் வாக்குரிமைக்காககப் போராடிய பெண்.
suffragist n. வாமக்குரிமை எல்லை விரிவு ஆர்வலர், வாக்குரிமைச் சிறப்பை வற்புறுத்துபவர்.
suffumigate v. கீழிருந்து புகை படர்வி.
sugar-beet n. சர்க்கரை வள்ளி, தித்திப்பான சாறுடைய கிழங்குதரும் செடிவகை.
sugar-coated a. சர்க்கரை மேற்பூச்சுடைய, கட்டி பூசிய.
sugar-mite n. வெல்லப்பூச்சி, பதனிடாச் சர்க்கரையை மொய்க்கும் பூச்சிவகை.
suggest v. புதுக்கருத்துத் தெரிவி, யோசனை கூறு, புதிது எடுத்துக்கூறு, குறிப்பிடு, ஏற்புநாடி முன்வை, பிரேரணை செய், ஆய்வுரைக்கு வை, திட்டம்-கோட்பாடு-கருத்து ஆகியவற்றின் வகையில் முன்னிலைப்படுத்து, ஆய்வுதவியுரையாகக் கூறு, குறிப்பாகச் சொல், மறைமுகமாகச் சுட்டிக்குறிப்பிடு, சுற்றுமுகமாகக் குறி, தொனிப்பொருள் தோற்றுவி, ஒன்று உணர்த்தி மற்றொன்று குறி, குறிப்புக்காட்டு, மெல்ல நினைவூட்டு, கருத்துத்தூண்டு, உளத்தில் கருத்துப்படிவம் எழுப்பு, தொடர்வுறவாக உளத்திற் கருத்து எழுப்பு, மறைமுகமாகக் கருததில் புகுதரவு செய், மெல்லக் கருத்துப் படியவை, கருத்துப் படியவிடு, உள்ளத்தின் போக்கைத் தன் வயப்பகுதி ஆள்.
suggested a. உய்த்துணர் வகையான, புறமிருந்து குறிக்கப்பட்ட, கருத்துத் தூண்டுதல் முறையான.
suggestibility n. குறிப்பாகத் தெரிவிக்குந் திறம், குறிப்புப்பொருள் ஆற்றல், வசியத்துக்கு ஆட்படத்தக்க நிலை, கருத்துத் தூண்டுதலுக்கு உட்படத்தக்க தன்மை.
suggestible a. குறிப்பாகக் கூறத்தக்க, தொனிப்பொருள்படுகிற, கருத்துத் தூண்டுதலுக்கு உட்படத்தக்க, கருத்து வசியத்துக்கு ஆட்படத்தக்க.
suggestinoize v. தூண்டுதல் வசியம் செய்.
suggestio falsi n. பிறழவைப்பு, பொய்யை மெய்போல் வைப்பு.
suggestion n. புதுக்கருத்து, யோசனை, குறிப்பீடு, குறிப்புரை, முன்வைப்புரை, பிரேரணை, தூண்டுரை, தூண்டுதல், கருத்து, கருத்துத் தூண்டுதல், தொனிப்பொருள்.
Suggestion கருத்துரை
suggestionism n. உளத்தூண்டுதல் மருத்துவம், தூண்டுதல் வசியக்கோட்பாடு, வசியம் கருத்துத் தூண்டுதல்விளைவே என்ற கொள்கை.
suggestive a. குறிப்பாகத் தெரிவிக்கிற, தூண்டு குறிப்பினை உட்கொண்ட, குறிப்புப் பொருளுடைய, கருத்துத் தூண்டுகிற, உள்ளத்தைத் தட்டி எழுப்புகிற, சிந்தனையைக் கிளறுகிற, கருத்து விறுவிறுப்பூட்டுகிற, உளவசியம் சார்ந்த.
suggestively adv. குறிப்பாக, மறைமுகமாக, கருத்துத் தூண்டு முறையில.
suggestiveness n. குறிப்புப் பொருட் செறிவு, குறிப்பில் தெரிவிக்கும் தன்மை, கருத்துத் தூண்டுதல், குறிப்புப் பொருள் நயம்.
suit n. வழக்கு, வழக்கீடு, சட்டப்படியான வழக்குத் தொடுப்பு, கோரிக்கை, விண்ணப்பம், மனு, வேட்டம், காதல் கூர்வு, காதல் ஆர்வ வேண்டுகோள், தொகுதி, தொடர்கோவை, ஒருதரமான வரிசை, பயனீட்டுப்பொருள் தொகுதி, சீட்டின் ஒருவகைத் தொகுதி, தொடுத்த சீட்டு வகை, அங்கி, முழு ஆடைத்தொகுதி, ஒரே நிற ஆடைத்தொகுதி, ஒரு தவணை கப்பற்பாய்க்குழுமம், ஒரே நேரப் போர்க்கவசத் தொகுப்பு, (வினை.) இசைவாக்கு, ஏற்பமைவுடைய தாக்க, சேர்த்தியாக்கு, இயைந்த அழகுடையதாக்கு, பயன்படும் தகுதியுடையதாக்கு, சேர்த்திணைவி, இணங்கியமைவி, பொருத்தமாயமைவி, இசைவுறு, இணங்கியமை, பொருத்தமாயமை, கால-இடச்சூழல் வகையில்வாய்ப்புடையதாயிரு, ஏற்றதாயிரு, மனதுக்கு உகந்ததாயிரு, பிடித்தமாயிரு, பயன்படும் தகுதியுடையதாயிரு, சேர்த்தியாயிரு, இயைந்த அழகுடையதாயிரு.
Suit case உடைப் பேழகம், கைப்பெட்டி
suitability n. பொருத்தம், தகுதி, சேர்வு, ஏற்பமைதி, விருப்பேற்பு, இயைவு, உகந்த தன்மை.
suitable a. பொருத்தமான, இசைவான, இணக்கமான, சரியான, தக்க, வேண்டிய அளவான, சூழலுக்கேற்ற, நிலைமைக்கேற்ற, தறுவாய்க்கேற்ற, கருத்துக்கியைந்த, நோக்கத்துக்குகந்த, சேர்வான, அழகியைவான, தக்க செவ்வியாயமைந்த, விரும்பத்தக்க, ஏற்றமையக்கூடிய.
suitably adv. தகுதியாக, பொருத்தமாக, சேர்வாக, இயைவாக, தக்கபடி, தறுவாய்க்கேற்ற்படி, விருப்பப்படி, ஏற்பமைவாக.
suitcase n. கைப்பெட்டி, தூக்குபேழை.
suite n. பின்செல் குழு, பரிவாரம், புடைவரு சுற்றம், தோழமைக்குழு, ஊழியர் தொகுதி, கோவை, ஒருசீர்த்தொகுதி, உடைமை வரிசைத்தொகுதி, அறைத்தொகுதி, தட்டுமுட்டுப்பொருள் தொகுதி, இசைக்கருவிக் குழாம், நடன அடுக்கிசை வரிசை.
suited a. நன்கு பொருத்தப்பட்ட, சேர்வியைவான, வாய்ப்பமைந்த, முழுமை அங்கியணிந்த.
suiting n. மகளிர் உடுக்கை.
suitor n. வழக்குத் தொடுப்போர், காதலர், காதல் கூர்பவர், மண இணைவு நாடும் ஆடவர்.
suitress n. வழக்குத் தொகுப்பவள், கோரிக்கையிடும் பெண், மண இணைவு நாடும் அணங்கு.
sulcate a. (தாவ., உள்.) வரிப்பள்ளமுடைய, மீதாக இயங்கவதற்குரிய வடுவாயினையுடைய.
sullabicate v. அசைப்படுத்து, அசை அசையாக அலகிடு, அசை அசையாகப் பிரி, அசை அசையாக ஒலி.
sulphite n. கந்தகியம்.
sulphonation n. கந்தகக் காடியின் செயற்பாடு.
sulphur-bottom n. மஞ்சள் அகட்டுத் திமிங்கிலம்.
sulphur-wort n. மஞ்சள் மலருடைய மூலிகை வகை.
sulphurate v. கந்தகச் செறிவூட்டு, கந்தகப் புகையூட்டு, கந்தக வினைமையூட்டு, கந்தகத்தின் செயலுக்கு ஆளாக்கு.
sulphuretted a. கந்தகக் கூட்டுடைய.
sultan n. இஸ்லாமிய வழக்கில் அரசர், பகட்டுவண்ணப் பறவை வகை, துருக்கி மரபுடைய வெண்ணிற வீட்டுக்கோழி வகை.
sultana n. இஸ்லாமிய வழக்கில் அரசி, துருக்கிநாட்டு அரசரின் தாய், துருக்கிநாட்டு அரசரின் மனைவி, துருக்கிநாட்டு அரசரின் மகள், அரச மாதேவி, பகட்டுவண்ணப் பறவை வகை, விதையற்ற உலர் முந்திரிப்பழ வகை.
sultaness n. இஸ்லாமிய வழக்கில் அரச மாதேவி, அரசரின் தாய், அரசர் மனைவி, அரசர் மகள்.
sultry a. புழுக்கமான, காற்று இறுக்கமான, உள்வெப்புமிக்க, மனநிலை வகையில் உணர்ச்சிமிக்க, மனவெழுச்சி மிக்க.
summarist n. தொகுப்பாளர், திரட்டாளர், சுருக்கிப்பொழிப்புரை, தருபவர்.
summation n. கூட்டுதல், கூட்டுத்தொகைக் கண்டுபிடித்தல், ஆகமொத்தங்காணல்
summertide, summertime n. வேனிற்பருவம்.
summit n. கொடுமுடி, உச்சி, சிகரம், உச்சநிலை, மீயுயர்படிநிலை, (பெ.) மேல்தள அரசயில் தலைமை சார்ந்த.
summit-level n. உச்ச உயர்தளம், உச்ச மேல்மட்டம்.
summitless a. சிகரமற்ற.
sumpit, sumpitan எறிகுழாய், மலாய்நாட்டில் வழங்கும் நச்சு எறிகணை வீசவல்ல நீள் ஊதுகுழல்.
sumpter n. பொதிகுதிரை, பொதிவிலங்கு ஓட்டி.
sumpter-horse n. பொதிகுதிரை.
sumpter-mule n. கோவேறு கழுதை வகை.
sumpter-pony n. மட்டப் பொதிகுதிரை.
sumption n. (அள.) முற்றரவு, மூவளவையின் பெருநிலை வாசகம்.
sumptuary a. செலவினைக் கட்டுப்படுத்துகிற.
sumptuous a. முதல்தரமான, மதிப்பேறிய, பெருஞ்செலவுபிடிக்கிற, பணம் வாரிச் செலவிட்டுச் செய்யப்பட்டம, வளங்குன்றாத, தாராளமான, உயர்வளமிக்க.
sumptuously adv. குறைவிலா உயர்வளத்துடன்.
sumptuousness n. பொங்குயர்வளம், பொங்குமா நிறைவு.
sun-bath n. வெயில் காய்வு, வெயில் முழுக்காட்டு, ஞாயிற்றுக் கதிர்கள் உடலிற்படும்படி இருத்தல்.
sun-cult n. ஞாயிற்று வழிபாட்டு மரபு, ஞாயிற்று வழிபாட்டுச் சமயப் பண்பு மரபுக்கூறு.
sun-hat, sun-helmet n. வெயில்காப்புத் தொப்பி.
sun-myth n. ஞாயிற்றியக்கங்களை விளக்குவதாகக் கருதப்பட்ட பழமரபுக் கதைக்கூறு, ஞாயிற்றுச் சார்பான பழங்கதைத் தொகுதி.
sun-picture, sun-print நிழற்படம்.
sun-spot n. ஞாயிற்றுக் கறைத்தடம், ஞாயிற்றின் பரப்பில் எப்பொழுதாவது காணப்படும் கரும் புள்ளிகளுள் ஒன்று.
sun-star n. விண்மீன் வடிவச் சிவப்புமீன் வகை.
sun-stone n. சூரியகாந்திக் கல், படிகக்கல்வகை.
sunburnt a. வெயில் வாட்டான, வெயிலினாற் கன்றிச் சிவந்த, வெயிலில் அடிபட்டுக் கறுத்த.
sunburst n. கதிர்வட்டவாணம், கதிரவனையும் கதிர்களையும் ஒத்து ஒளிவிடும் வாணவேடிக்கை, கதிர்வட்ட அணி, ஞாயிற்றுவட்டக்கதிர் போன்ற அணிவகை.
Sunday market ஞாயிற்றங்காடி
sunlight n. வெயில, வெயிலொளி, பகலொளி.
sunlit a. கதிரவன் ஒளியூட்டப்பட்ட, கதிரவனொளி தங்கு தடையின்றிப் படுகிற.
Sunni, Sunnite இஸ்லாமிய மரபுக் கிளையினர்.
sunset n. அந்திநேரம், மாலைச் செவ்வான், கதிரவன் மறைவு
sunstroke n. வெயில் வெப்பத்தாக்கு நோய்.
Super market சிறப்பங்காடி, பேரங்காடி
superabundant a. மிக ஏராளமான, மட்டுமீறிய வளமார்ந்த.
superacute a. மட்டுமீறிய நுட்பம் வாய்ந்த, அளவு மீறிய கூர்மதியுடைய, மிகைப்படக்கூரிய.
superaddition n. மிகைப்படிச் சேர்ப்பு, மிகை.
superaltar n. புனித மேற்பீடம், புனிதமாக்கப்படாத பலிபீடத்தின் மேல் வைக்கப்படும் புனிதமாக்கப்பட்ட கற்பாளம்.
superannuate v. பழமைப்பட்டதாக்கு, மிகப் பழமைப்பட்டுவிட்டதென்று கருது, மிகு பழமை காரணமாக ஒதுக்கித் தள்ளு, மூப்புக் காரணமாக ஒதுக்கி வை, வேலையினின்று வயது காரணமாக ஒதுக்கி விட, வேலையினின்று மூப்புக்காரணமாக விலக்குவி, ஓய்வூதியங் கொடுத்து விலகச் செய், குறைந்த தகுதியினையும் பெறாத மாணவரை நீக்கும் படி கோரு.
superannuated a. பழமைப்பட்டுப் போன, பழமை காரணமாகப் பயன்படுந் தகுதியற்றுப்போன, ஏலா மூப்படைந்துவிட்ட, வேலைவயது கடந்த.
superannuation n. பழமைப்பட்டுவிடல், பழமைப்பாடு, மிக மூப்படைவு, மிக மூப்பறிவிப்பு, மிகு மூப்புகாரணமான விலக்கீடு, மூப்போய் வளிப்பு, மூப்போய்வு உதவித்தொகை, வேலைவயது கடத்தல், ஒய்வுகாலப்படி.
superbipartient a. மூன்றில் இரண்டு கூறு கூடுதலான.
superbiquintal a. ஏழுக்கு ஐந்து என்ற தகவுப்படியான.
superbitertial a. ஐந்துக்கு மூன்று என்ற தகவுப்படியான.
supercelestial a. வான் கடந்த, வானத்திற்கு மேற்பட்ட, மட்டுமீறிய புனிதத்தன்மையுடைய, திப்பியங்கடந்த.
supercolumniation n. அடுக்கியல் அமைதிக் கட்டுமானம், ஓர் ஒழுங்கமைதியின் மீது பிறிதோர் ஒழுங்கமைதியாக அமைந்த கட்டடக் கலை.
superdreadnought n. மீ வலிமைப் போர்க்கப்பல்.
superelevation n. குறுக்கு வாட்டம், தண்டவாள வளைவுப்புற உயர்வு.
supereminent a. தேவைக்கு மேற்பட்ட மிகு மேம்பாடுடைய, மட்டுமீறிய உயர்தரமுடைய.
supererogation n. மீச்செயல், தேவைக்கு மேற்பட்ட செல், மீநலச் செயல், செய்யக் கடமைப்பட்டிருப்பதை விட அதிகமாகச் செய்தல, மீமிகை, அவசியமின்மை, (இறை.) சேம வினைநலம், பாவிகளுக்குப் பயன்படுத்த உதவத்தக்க மிகைச் சேமிப்பான புண்ணியத்தொகுதி.
supererogatory a. கடமை தாண்டிய மீநலத்தன்மையுடைய, தேவைக்கு மேற்பட்ட, தவிர்க்கக்கூடிய, மிகையான, அவசியமற்ற.
superessential a. உச்சநிலை முதன்மை வாய்ந்த, பொது நிலை தாண்டிய முதன்மையுடைய.
superethical a. ஒழுக்கவியல் எல்லைக்கு மேம்பட்ட, அறத்தளத்திற்கு மேம்பட்ட.
superexalt v. மிகு மேல்தரத்திற்கு உயர்த்து.
superexaltation n. மீமிசை உயர்வு, மிகு மேல்தர உயர்த்தீடு.
superexcellent a. மற்றவைகளை விட மிகச் சிறந்த, இயல் நிலை கடந்த அளவிற்கு மேம்பட்ட.
superfatted a. மிகு கொழுப்பு வாய்ந்த, சவர்க்காரம் வகையில் மட்டுமீறிய கொழுப்புக் கலந்துள்ள.
superfecundation, superfetation n. (உட்.) மிகைச் சூலுறவு, முன்பே சூல் கொண்டுள்ள நிலையில் மேலும் கருக்கொள்ளுநிலை.
superficiality n. மேலீடான தன்மை, ஆழமற்ற தன்மை.
superfluity n. மீமிகை, தேவை கடந்த அளவு.
superfortress n. சேணரண்', ஆற்றல் வாய்ந்த வெடி குண்டு விமான வகை.
superfrontal n. பலிபீட முன்தொங்கல் திரை.
superheat n. மீவெப்பு, கொதிநிலைக்கு மேற்பட்ட வெப்பம், மீவெப்பு நிலை, மீவெப்பு அளவு, (வினை.) மிக அதிகமாக வெப்பூட்டு, கொதிநீர் நிலைக்கு மேற்பட்டு நீராவியைச் சூடாக்கு.
superheater n. மீ வெப்பமைவு, நீராவியைக் கொதி நீர் நிலைக்கு மேல் வெப்பூட்டுவதற்கான அமைவு.
superhet, superheterodyne n. வானொலி விசைத்தகைப்பு ஏற்புமுறை, வானொலி விசைத் தகைப்பேற்பு முறைப் பயனீடு.
superhumanity n. மனிதநிலை கடந்த தன்மை, மீமானிடம்.
superimposition n. மேற்சுமத்தீடு.
superimpregnation n. மிகைச் சூலுறவு, முன்பே சூல் கொண்டுள்ள நிலையில் மேலும் கருக்கொள்ளும் நிலை.
superincumbent a. மேற்கிடக்கின்ற.
superinducement n. மேற் புகுத்தீடு, மேன்மேல் தூண்டுதல்.
superinduction n. மேற்புகுத்தீடு, மேற்சுமத்தீடு.
superinstitution n. மானிய மேலமர்த்தீடு, ஏற்கெனவே ஆள் இருக்கிற திருக்கோயில் மானியத்தில் மற்றொரவரை அமர்த்துதல்.
superintend v. மேலாண்மை செய், நடைமுறை மேற்பார்வையிடு, கண்காணி.
superintendence n. மேற்பார்வை, கண்காணிப்பு, மேலாண்மை, செயல் மேலாட்சி.
superintendency n. கண்காணிப்பாளர்பணி, கண்காணிப்பாளர் ஆட்சி வட்டகை.
superintendent n. கண்காணிப்பாளர், காவல்துறை மீமேலர்.
superiority n. மேம்பாடு, உயர்வு.
superjacent a. அடுத்து மேற்கிடக்கிற.
superlative n. (இலக்.) பெயரடை வல் ஏற்றுயர்படி, (இலக்.) பெயரடை வினைஅடை ஆகியவற்றின் ஏற்றுயர்படி வடிவம், (இலக்.) ஏற்றுயர்படியிலுள்ள சொல், உச்ச உயர்நிலை, உச்ச உயர்தரம், (பெ.) மிகவுயர்ந்த தரஞ் சார்ந்த.
supernatant a. புறப்பரப்பில் மிதக்கிற.
supernatation n. புறப்பரப்புமிதப்பு, நீர்மநெகிழ்ம மேல்நிலை, தளமிதப்பு.
supernatural n. இயல்நிலை கடந்தவர், தேவர், தெய்வம், தெய்வ நிலையினர், உலோகதீதம், இயற்கை மீறிய பொருள், (பெ.) இயற்கை கடந்த, இயற்கைமுறைக்குளடங்காத, இயன்முறைக் காரணகாரியத் தொடர்புக்கு அப்பாற்பட்ட, வியக்கத்தக்க, தெய்விக அருநிகழ்வான, தெய்விக ஆற்றல் சுட்டிய, ஆவித்தொடர்புடைய.
supernaturalism n. இயற்கை கடந்த நிகழ்வு, தெய்விக அருநிகழ்வு நம்பிக்கை.
supernaturalist n. இயற்கைக்கு அப்பாற்பட்டதில் நம்பிக்கையுள்ளவர்.
supernaturalize v. இயல்மீறிய நிலைப்படுத்து, இயல்கடந்த அருநிகழ்வாக்கு.
superoctave n. (இசை.) மீசுரக்கட்டை, முதன்மைச் சுரத்திற்கு இருபாலைகளுக்கு மேற்பட்ட கேள்விக்கட்டை.
superordinate n. மேம்பட்ட பதவித் தரத்தினர், மேம்பட்ட தரத்தினர், (பெ.) பதவித்தர மேம்பட்ட, (அள.) வாசக இனமுழுமைத்தொடர்புடைய, (வினை.) மேம்பட்ட தரத்திரனராக்கு, மேம்பட்ட தரத்ததாக்கு.
superordination n. (அள.) வாசக வகையில் இனமுழுமைத்தொடர்பு.
superovulation n. கருவணுப்பெருக்கம், இனக்கூற்றுசியீட்டினால் பசுவுக்கு உண்டாகும் செயற்கைக் கருநுண்மப் பெருக்கம்.
superparasite n. (உயி.) ஒட்டொட்டு, ஒட்டுயிரின் ஒட்டுயிர்.
superphosphate n. எரியக்காடி பெரிதுங்கலந்துள்ள எரியகி.
superposition n. மேற்கிடை, மேல்வைப்புநிலை.
superquadripartient, superquedriquintal a. (கண்.) ஹீக்கு 5 என்னுந் தகவுப்படியுள்ள.
supersalt n. மீயுப்பு, காடித்தன்மை மிக்க உப்பு.
supersaturate v. மீச்செறிவூட்டு.
supersaturation n. மீச்செறிவு.
superscript a. வரைக்கு மேல் குறிக்கப்பட்ட, மேலிடத்திலுள்ள.
Superscript மேல்எழுத்து
superscription n. முகட்டுவரைவு, மேல் எழுதப்பட்டது.
supersensitive a. உறுகூருணர்வுடைய, மிகுநுட்ப உணர்வுத்திறம் வாய்ந்த.
supersesquialteral a. (கண.) 05:00:00 AM 2 என்னுந் தகவுப்படியுள்ள.
supersesquitertial a. (கண.) ஹ்: 3 என்னுந் தகவுப்படியுள்ள.
superspiritual a. மட்டுமீறிய ஆன்மிகச் சார்புடைய.
superstate n. மேலிட அரசு, அரசுநிலை கடந்த பெருநிலை அரசு.
superstition n. மூடநம்பிக்கை, போலிக்கோட்பாடு, தெய்விக அருநிகழ்வு நம்பிக்கை, இயற்கை கடந்த ஆற்றலச்சம், அறியாநிலைக்கிலி, தவறான மதிப்பச்சம், குருட்டுப் பழக்கவழக்கம்ர பின்பற்றும் பண்பு.
superstitious a. குருட்டு நம்பிக்கை வாய்ந்த, போலிப்பற்றுடைய, விளங்காதவற்றைப் பற்றிய ஆதாரமற்ற அச்சங்கொண்டுள்ள, தெய்விக அருநிகழ்வு நம்பிக்கையுடைய, இயற்கை கடந்த ஆற்றல் நம்பிக்கைகொண்ட, இற்கை கடந்த ஆற்றல் நம்பிக்கை சார்ந்த.
superstratum n. (மண்.) மேற்படிவடுக்கு.
superstruct v. மேற்கட்டுமமானம் எழுப்பு, மீதாகக் கட்டு.
superstruction, superstructure n. மேற்கட்டுமானம், மேற்கட்டடம், கட்டட மேற்கட்டுமானப்பகுதி.
supersubstantial a. பருப்பொருள் கடந்த, பருப்பொருளியலுக்கு அப்பாற்பட்ட.
supersubtle a. நுண்ணிதின் நுண்ணிய, உறுநுட்பமான, மட்டுமீறிய நுட்பம்.
supertax n. மீவரி, மிகைவருமான மேல்வரி.
supertelluric a. நிலமேலான, நிலத்தடியல்லாத.
supertemporal -1 a. தலைப்பொட்டெலும்புகளுக்கு மேலுள்ள.
supertemporal -2 a. காலங்கடந்த, நிலைபேறுடைய.
superterrene, superterrestal a. நிலத்துக்கு மேலேயுள்ள, நிலமேற் காணப்படுகிற.
supertonic n. (இசை.) சுர வரிசையில் முதன்மைச் சுரத்திற்கு அடுத்து மேலுள்ள சுரம்.
supertripartient, supertrequartal a. (கண.) ஹ்: 4 என்னுந் தகவுப்படியுள்ள.
supertuberation n. மீ கிழங்காக்கம், கிழங்குகளின் மேல் கிழங்குகள் உருவாதல்.
supervention n. இடையுறவு, இடையீட்டு நிகழ்வு, இடையீட்டு நிகழ்ச்சி.
supervolute a. (தாவ.) பக்கவாட்டிற் சுருண்ட.
supinate v. அங்கை மலர்வி, உள்ளங்கை மேலிருக்குமாறு திருப்பு.
supination n. கை மலர்விப்பு, கை மலர்த்தீடு, உள்ளங்கை மேற்புறமாயிருக்கும்படி கைவிரிப்பு.
supinator n. கைக்கீல் தசை.
suppertime n. இரவுணா நேரம்.
supplant v. குப்புறத்தள்ளு, அகற்று, பிடுங்கியெறி.
supplement -1 n. துணைநிறைவு, குறைநிறைவுக்கூறு, பத்திரிகைச் சிறப்பு மலர், பிற்சேர்ப்பு, (வடி.) நிரவுகோண், கோணத்துடன் இணைந்து நேர்க் கோணமாகும் துணைக்கோணம்.
supplemental, supplementary a. குறைநிரப்பான, இணைவு நிறைவான, இணைகூட்டான, இணைவளமான, பிற்சேர்வான.
supplemet -2 v. குறை நிரப்பு, இணைந்து நிறைவாக்கு, இணைந்து வளமூட்டு, இணைத்து நிறைவூட்டுவி, இணைத்து வளம்பெருக்குவி.
suppliant n. குரையிரப்போர், (பெ.) தாழ்ந்து வேண்டுதலசெய்கிற, பணிந்து குறையிரக்கிற, பணிந்து குறையிரத்தலைக் காட்டுகிற.
supplicant n. கெஞ்சி வேண்டுபவர், (பெ.) கெஞ்சி வேண்டுகிற.
supplicate v. தாழ்மையாக மனுச்செய்து கொள், பணிந்து குறையிர, கெஞ்சிக்கேள்.
.All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wiktionary.org/w/index.php?diff=prev&oldid=1131408.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|