Difference between revisions 1140325 and 1140822 on tawiktionaryascesis n. தன்னொடுக்கம்.
ascertin v. உறுதியாய் அறி, உறுதிப்படுத்து.
ascent n. ஏறுதல், ஏற்றம், உயர்வு, முன்னேற்றம், இறந்தகாலம் நோக்கிச் செல்லுதல், முன்மரபு, ஏறுசரிவு, சாய்வுமேடு, மேடு, ஏறுநெறி.
ascensive a. ஏறுகிற, உயர்ந்து செல்கிற, மேற்சொல்லும் போக்குடைய, ஏறுபாங்கான.
ascensional a. ஏறுகிற, ஏற்றம் சார்ந்த, ஏற்றமான, மிகுஉயர்வான,(இலக்.) செறிவுடைய.
ascension n. ஏறுதல், எழுந்துசெல்லல், விண்ணேறுதல்.
ascending a. ஏறுகிற, உஸ்ர்கிற, நிமிர்கிற, உச்சிநோக்கிச்செல்கிற, மேன்மேல் விரைகிற.
ascendible a. ஏறிச்செல்லக்கூடிய, ஏறத்தக்க.
ascendancy n. மேம்பாடு, மேலாட்சி, ஆதிக்கம்.
ascend v. ஏறு, தாவி ஏறு, உயர்ந்துசெல், இறந்தகாலம்நோக்கிச் செல், மரபில் முன்னோக்கிச் செல்.
ascarid n. சிறுகுடற்புழு.
asbestos n. கல்நார், தீக்கிரையாகா ஆடையாய் நெய்யப்பயன்படுகிற நாரமைவுடைய கனிப்பொருள்வகை.
asbestine a. கல்நாராலான, கல்நார் போன்ற, கல்நார்இயல்புடைய, எரியாத, தீக்கிரையாகாத.
asbestiform a. கல்நார் உருவான, கல்நார் தோற்றமுடைய.
asafoetida n. பெருங்காயம்.
as,relpron. பெயரெச்சத்தொடரில் அவன்-அவள்-அவர்கள்-அது-அவைகள் என்ற பெயர் சுட்டிய இடைச்சொல்,(வினையடை.) ஒப்பாக, சரியாக, எந்த அளவிலாயினும், (வினையடை.) போல, போன்று, அளவில், படியில், வேளையில், காரணமாக, இருநதபோதிலும், எடுத்துக்காட்டாக.
as -3 n. (மண்.) படிகரை, பணியடி ஒடுக்கினாலோ சறுக்குப்பனிக்கட்டியினாலோ படியவிடப்படும் மணல் சரளையின் கரை.
as -2 n. பண்டை ரோம எடையளவை, பண்டைச்செப்புக்காசுவகை.
as -1 n. நார்வே நாட்டுத் தெய்வத்தின் பெயர்.
arytaenoid, arytenoid குரல்வளைக் குருத்தெலும்பு, குரல்வளைத்தசை, (பெ.) குடவடிவுடைய.
aryl n. நெடிவீறூம் தனி இணைத்திறன் வாய்ந்த நீர்க்கரிமக்கலவைக் கூறுவகை.
aryballos n. கழுத்துடைய உருண்டைக்குடுவை.
Aryanize v. இந்தோ-செர்மானிய மயமாக்கு, கீழை இந்தோ-ஐரோப்பியப் பண்பூட்டு.
Aryan n. இந்தோ-ஐரோப்பிய இனத்தவர், இந்தோ-ஐரோப்பிய இனத்தின் ஆசியக்கிளையினர், இந்தோ-செர்மானியமொழி, இந்தோ-செர்மானிய இனத்தின் ஆசியக்கிளை மூலமொழி, (பெ.) இந்தோ-ஐரோப்பிய, இந்தோ-செர்மானிய இனத்தின் ஆசியக்கிளைக்குரிய, இந்தோ-ஐரோப்பிய இனத்தொடர்புடைய.
arvicoline a. வயல்களில் வசிக்கிற.
Arvicola n. நீர் எலியினம்.
arval a. உழுநிலத்துக்கு உரிய.
arundinaceous a. நாணல் போன்ற, நாணலுக்கு உரிய.
arum n. சேம்பையினச்செடி.
arty-andcrafty a. கலைத் தன்முனைப்புடைய, பயனைவிடக் கலைமுனைப்பான.
artsman n. கலைப்பயிற்சி கொள்பவர்.
arts n.pl. கலைத்துறை.
Artocarpus n. பலாவிளக்காய், பஷ்வினப்பழம்.
artless a. திறமையற்ற, பண்பாடில்லாத,ஒழுங்கற்ற, இயல்பான, கபடற்ற, பேதைமையான.
artistry n. கலைநாட்டம்,கலை வேலைப்பாடு, கலைத்திறன்.
artistic, artistical a. கலைஞர்களைச் சார்ந்த, கலைக்குரிய, கலைத்திறனோடு செய்யப்பட்ட, கலைச்சுவையுள்ள.
artiste n. கலைத்தொழிலர், கைவினை முற்றியோர்.
Artisan கைவினைஞர், கைத்திறத் தொழிலாளர்
artisan n. கம்மியர், கைவினைஞர்.
artiodactyl n. இரட்டைப்படைக் கால்விரல்களுள்ள விலங்கு, (பெ.) இரட்டைப்படைக் கால்விரல்களுள்ள.
artilleryman n. பீரங்கிப்படைவீரன்.
artillery-plant n. மலர்த்துகளை வெடித்து வீசும் அமெரிக்க முட்செடிவகை.
artillery n. பீரங்கித்தொகுதி, பீரங்கிப்படை.
artillerist n. பீரங்கிகளைக் கையாள்வதில் வல்லவர், பீரங்கி இயக்குபவர்.
artiist n. கவின்கலைஞர், ஓவியர், கலைஞர், கற்பனை உனத்தர், சுவைஞர்.
artificialize v. செயற்கையாக்கு, இயல்பல்லாததாக்கு.
artificiality n. செயற்கையாயுள்ள தன்மை, இயல்பு அற்றநிலை.
artificial a. செயற்கையான, மனிதனால் செய்யப்பட்ட, பொயயான, போலியான, தொகுக்கப்பட்ட, கற்பனையான, போலிப்பகட்டுடைய.
artificer n. கைவினைஞர், பொறிவலர், புதிதுபுனைபவர்.
artifice n. கருவி, சாதனம், பொறியமைப்பு, கைத்திறன், கைவேலைப்பாடு, சதுரப்பாடு, சூழ்ச்சி, தந்திரம், ஆள்வினைத்திறம்.
articulatory a. ஒலிகளைத் தெளிவாக உச்சரிப்பதற்குரிய.
articulator n. தெளிவாக உச்சரிப்பவர், எலும்புகளைக்கோத்து எலும்புக்கூடுகளை உருவாக்குபவர்.
articulation n. இணைத்தல், இணைக்கும் விதம், இணைப்பு, துண்டம், தெளிவான ஒலி, தெளிவான பேச்சு, மெய்யெழுத்து.
articulated a. மூட்டுக்களால் இணைக்கப்பட்ட.
articulate n. (வில.) இணைப்பு உறுப்புகள் கொண்ட உயிரினம், (பெ.) இணைக்கப்பட்ட, தனித்தனி கூறுகளால் பகுதிகளாகப் பொருத்தப்பட்ட, பிரித்து வைக்கக்கூடிய, தெளிவாகக் காணக்கூடிய, தெளிவாகக் கேட்கக்கூடிய ஒலிகளால் ஆன, தெளிவாய்ப் பேசக்கூடிய, (வினை.) மூட்டினால் இணை, பல மூட்டுக்களைக் கொண்டு சேர், தெளிவான ஒலிகளாக அமை, தெளிவாகப்பேசு.
Articulata n.pl. இணைப்புடலி உயிரின வகுப்பு.
articular a. மூட்டுகளுக்குரிய, மூட்டினருகில் உள்ள.
articulable a. இணைக்கக்கூடிய.
articles n.pl. பொதுவிதிகள் அல்லது திட்டங்கள்.
articled a. பணி பயில்வோராகப் பிணைக்கப்பட்ட, வகுக்கப்பட்டட, குறிக்கப்பட்ட.
article n. எண்ணத்தக்க பொருள், பண்டம், இனம், உருப்படி, சரக்கு, விவரம், சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம், விதி, ஒழுங்கு, பிரிவுக்கூறு, உறுப்பு, மூடப்பட்ட பகுதி, வேளை, இணைப்பு, கட்டுரை, (இலக்.) சார்படை, (வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு, குற்றம் சாட்டு, பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து, நிபந்தனைகூறு.
artichoke n. உண்ணத்தக்க கிழங்குகளையுடைய முள்ளியினச்செடி.
Arthurian a. பிரிட்டனின் பழங்கதை மன்னன் ஆர்தருக்கு உரிய, ஆர்தர் கதைக்காப்பியங்களைச் சார்ந்த.
arthrospore n. உதிர்சிதல்.
arthrosis n. மூட்டிணைப்பு, தெளிவொலி எழுப்புதல்.
arthropod n. ஒட்டுத்தோடுடைய இணைப்புடலி உயிரினங்களின் வகை.
arthropathy n. சூலை, கணுக்கங்களில் நோவுதரும் பிணி.
arthromere n. இணைப்புடலி வகை சார்ந்த உயிரினத்தின் உடற்கூறு.
arthritis n. மூட்டுவீக்கம்.
arthritic n. கீல்வாத நோயாளி, (பெ.) மூட்டுக்குரிய, மூட்டுக்கு அண்மையிலுள்ள, மூட்டுவீக்கத்துக்குரிய, கீல்வாதத்தின் இயல்புள்ள.
artful a. தந்திரமான, சூழ்ச்சித்திறமுடைய, வஞ்சிக்கிற, கலைத்திறம் வாய்ந்த.
artesian a. வடபிரான்சிலுள்ள ஆர்ட்டாய் என்னும் இடத்துக்குரிய, நீர்கொப்புளிக்கிற.
artery n. நாடி, குருதிக்குழாய், பாய்குழாய், உயிர்நாடிபோன்ற நாட்டின்பெருவழி.
arteritis n. நாடி அழற்சி.
arteriotomy n. குருதி வடிப்பு, நாடியை வெட்டிக் குருதி வடியவிடல்.
arteriosclerosis n. நாடிகளின் இறுக்கம்.
arteriole n. நுண்நாடி, குறுநாடி.
arterialize v. நாடியின் இயல்புள்ளதாக்கு, நுரையீரலில் உயிரகம்பட விடுவதனால் நரம்பு நாணுக்கு நாடியியல் பூட்டு.
arterial a. நாடிக்கு உரிய, நாடியின் இயல்புடைய, நாடியைப் போன்ற.
artel n. ரஷ்யத்தொழிலாளர் கழகம்.
artefact n. கலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருள்.
art ஒரு; ஏதாவதொரு; முதல்தரமான
art n. கலை, கலைத்திறன், கலைத்திறன் அமைந்த வேலைப்பாடு, கலைப்பொருள், அறிவார்ந்த திறமை, செயல்துறை நுலறிவு, விஞ்ஞானத்தொழில்துறை, தொழில்,கைவினை, கைவினைக்காரர்களின் கழகம், சூழ்ச்சி, சூழ்திறம், சதுரப்பாடு, தந்திரம், மந்திரசாலம், செய்முறை, பேச்சுநயம், நடைநயம், கரவு, இரண்டகம்.
arsonist,arsonite தீக்கொளுத்தி.
arson n. தீக்கோள், எரியூட்டல், தீயால் அழிவு செய்யும் கொடுங்குற்றம்.
arsis n. (இசை.) சந்த எரப்பு, ஆங்கில அலகீட்டில் ஒலி அழுத்தும் பெற்ற அசை, அளபெடை.
arsine n. உள்ளிய நீரதை.
arses n.pl. ஆர்சிஸ் என்பதன் பன்மை.
arsenopyrites n. இரும்பு உள்ளியம் கந்தகம் கொண்ட கனியம்.
arsenious a. உள்ளியம் சார்ந்த, அவாதார நஞ்சு அடங்கிய, மும்மடி இணைதிறத்துடன் உள்ளியங்கலந்துள்ள.
arsenical a. உள்ளியம் சார்ந்த, உள்ளியம் அடங்கிய, ஐமடி இணைதிறத்துடன் உள்ளியம் கலந்துள்ள.
arsenic n. உள்ளியம், அரிதார நஞ்சு, (பெ.) அரிதார நஞ்சு சார்ந்த, அரிதார நஞ்சு கலந்த.
arsenal n. படைக்கலச்சாலை, படைக்கொட்டில்.
arrowy a. அம்புகளுக்கு உரிய, அம்புகள் போன்ற.
arrow-shot n. அம்பு பாயும் தூரம்.
arrow-root n. கூவைக்கிழங்கு, சத்துள்ள மாப்பண்டம் செய்வதற்கு ஏதுவாயுள்ள கிழங்குவகை.
arrow-headed a. அம்புத்தலை வடிவுடைய.
arrow-head n. அம்புத்தலை, பகழிமுனை, அம்பு போன்ற இலைகளையுடைய நீர்ச்செடிவகை.
arrow-grass n. பொதியுறை வெடித்தபின் அம்புத்தலை போன்றிருக்கும் சதுப்புநிலச் செடியினம்.
arrow n. அம்பு, கணை, வாளி, அம்பு வடிவமுடைய பொருள், சுட்டிக்காட்டும் முள், அம்புக்குறி, செடியின் நடுக்குருத்து, கரும்பின் பூத்தண்டு.
arrondissement n. பிரெஞ்சு ஆட்சித்துறையின் உட்பிரிவு.
arrogation n. தகாத உரிமை, தருக்குதல், உரிமைகற்பித்தல்.
arrogate v. பொருந்தாத உரிமை பேசு, உரிமை கற்பி.
arrogant a. தருக்கு நிறைந்த, வீம்புமிக்க தன்முனைப்பான.
arrogancy n. தான் தோன்றித்தனம், தன்முனைப்பு.
arrogance n. இறுமாப்பு, அகந்தை, திமிர்.
arriviste n. தன்னலவேட்டையர், திடுமெனமுன்னுக்குவரமுயல்பவர்.
arrive v. சென்றுசேர், வந்தமை, முடிவிடம் சேர், முன்தோன்று, முடிவுறு, புகழ் இலக்கு அடை, கொணரப்பெறு, வந்துபொருந்து, நிகழ், நேர் அமைவுறு.
arrival n. பயண முடிவு, வந்துசேர்கை, வந்து தோன்றுதல், வருகையர், வந்துசேர்ந்தவர், வருபொருள், வரவினம், புதுக்குழந்தை, கப்பல் வந்ததும் ஒப்புவிக்கப்பட வேண்டிய சரக்கு.
arris n. இணைவிளிம்பு வரை.
arriere-pensee n. உள்நோக்கம், மறைவான எண்ணம்.
arret n. நீதிமன்றத்தீர்ப்பு, தீர்ப்பு, முடிவு.
arrestment n. தடுத்தல், நிறுத்தல், நிறுத்திவைத்தல்,(சட்.) தடுப்புக்காவல், கைதுசெய்யப்பட்டவர் பிணையத்தின் பேரிலோ ஈடுகாட்டுவதன்பேரிலோ விடுவிக்கப்டும் வரையில் அவரை மறியல் செய்துவைத்தல்.
arrestive a. கருத்தைக்கவரும் பாங்குள்ள, (இலக.) பொருள் எல்லையைக் குறுக்குகிற.
arresting a. கருத்தை ஈர்க்கிற.
arrestergear n. பற்றுவல்ம், விமானந்தூக்கிக் கப்பலில் இறங்கும் விமானங்களின் அதிர்ச்சி தரப்புக்குரிய கம்பிவடஅமைவு.
arrester n. சிறைபிடிப்பவர், தடுத்து நிறுத்தும்பொருள்.
arrestee n. பற்றுகைக்குட்பட்ட சொத்தினை வைத்திருப்பவர்.
arrestation n. நிறுத்துதல், பிடியாணைகொண்டுபிடித்தல்.
arrest n. நிறுத்தல், பிடித்தல், கவனப்பிணிப்பு, (வினை.)நிறுத்து, தடைசெய், (சட்.) நடவடிக்கைகளை நிறுத்து, பிடி ஆளைக்காட்டிக் கைப்பற்று, கருத்தைக்கவர்.
arrect a. நெட்டுக்குத்தான, விழிப்புள்ள.
arrearages n.pl. கடன்கள்.
arrearage n. பிற்பட்டிருத்தல், செலுத்தப்படாத எச்சத்தொகை.
arrear n. (சட்.) ஊர்வல வரிசையின் பின்பகுதி, நிலுவை.
array n. வரிசை, படையணி, மக்களின் அணிவகுப்பு, பரிவாரம், அணிகலன்கள், (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை,(வினை.) ஒழுங்குபடுத்து, அணிவகு, பகட்டாக உடுத்து, ஒப்பனை செய், தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு, (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
arrasene n. பூப்பின்னல் வேலைக்குரிய கம்பளி அல்லது பட்டு.
arrasad a. ஓவியத்திரையினால் மூடப்பட்ட.
arras n. ஓவியத்திரை, சுவர்மறைப்புத்திரை, அலங்காரச்சிலை.
arrant a. அறக்கொடிய, அவச்சொல்லுக்கு ஆளான, படுகேடான, தீர்ந்த, முழுமோசமான.
arrangements n.pl. ஏற்பாடுகள், திட்டங்கள்.
arrangement n. ஓழுங்கு செய்தல், ஒழுங்கு, சீர், சீரமைக்கப்பட்ட பொருள், வழக்கு முதலியவற்றிற்குத் தீர்வு காணல், தீர்வு, ஒத்திசைவு.
arrange v. சீராக அமை, சரிப்படுத்து, ஒழுங்குபண்ணு, வரிசைப்படுத்து, தீர்த்துவை, இணக்குவி, ஏற்பாடுசெய், வழிவகைபண்ணு, முன்கூட்டித் திட்டப்படுத்து, செயற்கட்டளையிடு.
arraignment n. குற்றம்சாட்டு, கண்டனம்.
arraign v. நீதிமன்றத்துக்கு முன் குற்றம் சாட்டு, வெளிப்படையாகப் பழிசுமத்து, குற்றம் காண், மறுத்துக்கூறு, விளக்கம் தரும்படி கேள்.
arrah int. உணர்ச்சிவியப்பு வாதமறுப்பு முதலியவற்றை உணர்த்தும் ஆங்கிலோ-அயர்லாந்து நாட்டு வழக்கான இடைச்சொல்.
arrack n. பட்டைச் சாராயம், தென்னை பனை அரிசி வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புனிதப்பேறிய மதுவகை.
arracacha n. உணவுக்குரிய கிழங்குவகை தரும் தென்அமெரிக்கச் செடிவகை.
arquebusier n. பழைய மாதிரியான கைத்துப்பாக்கி தாங்கிய வீரன்.
arquebusade n. துப்பாக்கிக் குண்டுகளினால் ஏற்படும் காயங்களுக்கான மருந்து நீர்.
arquebus n. பழைய மாதிரியான துப்பாக்கி வகை.
arpent n. பழைய பிரெஞ்சு நிலப்பரப்பளவை.
arpeggio n. அடுத்தடுத்து விரைவாக இசைக்கருமவி நரமபினை ஏற்றி மிழற்றுதல், ஏற்றிசையில் மிழற்றப்படும் நரம்பு.
arow adv. வரிசையாக, நிரலாய்.
arouse n. எழுப்புதல், எச்சரிக்கைக்குரல், (வினை.) எழுப்பு, எழுச்சியுறப்பண்ணு, செயற்படுத்து.
arousal n. எழுப்புதல்.
around adv. எல்லாப் பக்கங்களிலும், ஒவ்வொரு திசையிலும், சுற்றி, வட்டமாக, வளைந்து, திரும்பி, அருகு, எழுச்சியுற்று, எல்லாப் ப க்கங்களிலும், சூழ, சுற்றிலும், மேற்பொதிவாக, இங்குமங்குமாக, நெடுக, ஏறத்தாழ.
arose v. அரைஸ் என்பதன் இறந்தகாலம்.
aromatize v. நறுமணம் ஊட்டு.
aromatic n. நறுஞ்சுவை மணமருந்துப்பொருள், (பெ.) நறுமணமுள்ள, இன்சுவையான, (வேதி.) மூடுதொடர்க்குழுச்சார்ந்த, நீர்க்கரியக் குழுவில் ஒன்றன் கலப்புடைய.
aroma n. நறுமணம், இன்நறுஞ்சுவை, மனங்கவர் நுண்ணிய பண்பு.
arnica n. காயங்களுக்குப் போடுவதற்காக மலைப்புகையிலையிலிருந்து வடித்திறக்கப்டும் மருந்துவகை.
army-worm n. பருத்திச்செடிகளை அழிக்கும் பூச்சியின் முட்டைப்புழு.
army-list n. படைத்துறைப் பணியாளர்களின் பெயர்ப்பட்டியல்.
army-corps n. படைத்துறையின் எல்லாப் பிரிவுகளையுங்கொண்ட செறுதொகுதி.
army n. படை, தானை, மக்கள் தொகுதி, தொண்டர்அணி, ஊழியர் குழு, தொகுதி, ஈட்டம், பெருந்திரள், படைத்துறை.
armpit n. அக்குள்.
armoury n. படைக்கலக் கொட்டில், படைக்கலங்கள்.
armourer n. படைக்கலவினைஞர், படைக்கலக் கொட்டில் முதல்வர்.
armoured a. கவசப் பாதுகாப்புடைய.
armour-plated a. கவசத்தகடு பொருத்தப்பெற்ற.
armour-plate n. கப்பல் இயங்கரண் முதலியவற்றிற்கான காப்புத் தகடு.
armour-clad a. கவசம் பூண்ட.
armour-bearer n. பரிசையர்.
armour n. போர்க்கவசம், போர்க்கப்பல்களின் புற உலோகத்தகடு, இயங்கு அரண்மேற்காப்பு, விசைவண்டிகளின் மேற்காப்பு, கவச வண்டித்தொகுதி, மேல்தோடு, மரபு வழிச்சின்னங்கள், (வினை.) காப்புக் கவசம் இடு.
armory n. கட்டியம்.
armorist n. கட்டியம் வல்லுநர்.
armorial n. கட்டியக்காரர் படைக்கலச் சுவடி, (பெ.) கட்டியக்காரர் படைக்கலங்களைப் பற்றிய.
armlet n. காப்புவளை, கையைச்சுற்றி அணியும் பட்டை, குடாக்கடல், கிளையாறு, சிறுகை.
armless a. கையில்லாத, கிளையற்ற, படைக்கலம் ஏந்தாத, வெறுங்கையரான,
armistice n. தற்பொழுதைய போர் நிறுத்தம், போர் ஓய்வு.
armipotent a. படைக்கல ஆற்றலுடைய.
Arminianism n. ஆலந்து நாட்டைச் சேர்ந்த ஆர்மீனியஸ் என்பவரது கோட்பாடு.
Arminian n. ஆலந்து நாட்டைச் சேர்ந்த சீர் திருத்தக்கிளைச் சமயத்தவராகிய ஆர்மீனியஸ் என்பவரின் கொள்கையைக் கடைப்பிடிப்பவர், (பெ.) ஆர்மீனியக் கொள்கை சார்ந்த.
armillary a. கைவளைகள் சார்ந்த.
armilla n. கைவளை,(தாவ.) காளான் தண்டின் மேல் உள்ள குஞ்சம்.
armil n. கைவளை, கடகம்.
armigerous a. கொடி வழிப் படைக்கலங்களை அணியத்தகுதியுடைய.
armigeral a. கேடயமேந்திகளுக்கு உரிய.
armiger n. கேடயமேந்தி, கொடிவழிப் படைக்கலங்களை அணியத் தகுதி பெற்றவர்.
armhole n. சட்டையில் கைவிடுவதற்கென்று அமைந்துள்ள துளை.
armful n. சிரங்கை, அங்கை அளவு, பிடிக்கக்கூடிய அளவு, குவியல்.
armet n. 15ஆம் நுற்றாண்டுக்கு உரிய கவசத் தலையணிவகை.
Armenian n. மேற்கு ஆசியாவிலுள்ள ஆர்மீனியாவைச் சேர்ந்தவர், ஆர்மீனியக் கிறித்தவ சமயக் கிளையினர், ஆர்மீனியர்களின் மொழி, (பெ.) ஆர்மீனியாவுக்குரிய.
armed a. கைகள் உடைய, படைக்கலம் பூண்ட, முழுபடைக்கலக் காப்புடைய.
arme blanche n. குதிரைப்படையின் வாள் அல்லது ஈட்டி, இவுளிப்படை.
armchair n. கை நாற்காலி, (பெ.) ஆர்வ ஈடுபாடுடைய, கலைவினோதமான, வெளியறிவற்ற, செயல்தொடர்பற்ற.
armband n. சட்டைக் கைப்பட்டி, கைதுணியைச் சுற்றி அணியப்படும் துணிப்பட்டை.
armature n. படைக்கலங்கள், கவசம், விலங்குசெடிகளின் பாதுகாப்புத் தோடு, காந்த விசைக்கை, சுழலுஞ்சுருள், மின் ஆக்கப் பொறியின் கருப்பகுதி.
armament n. போர் எழுச்சிப்படை, கடற்போர்ப்படை, போர்க்கப்பல் தொகுதி, போர்த்தளவாடங்க்ள, போர்க்கப்பலின் தற்காப்புப் படைக்கலங்க்ள, போர் ஏற்பாடு, போருக்கு உரிய பொருள்களைச் செப்பணிடும் செயல்முறை.
Armageddon n. (விவி.) ஆக்க அழிவுச் சக்திகளுக்கு உரிய இறுதிப் போராட்டக்களம்.
armadillo n. கீழறுக்கும் இயல்புடைய தென் அமெரிக்க விலங்கு.
armada n. கப்பற்படைத்தொகுதி, போர்க்கப்பல்களின் கூட்டம்.
arm-in-arm adv. கையுடன் கை கோத்துக்கொண்டு.
arm n. மேற்கை, புயம், தோள், விலங்கின் முன் சினை,உணர்கொம்பு, மரத்தின்பெருங்கிளை, சட்டைக்கை, கைபோன்ற பொருள், கிளை, பக்கம், கூறு, துணை, நீண்டொடுங்கிய இடம், நிலக்கோடு, கல்ற்கூம்பு, ஆற்றல், படைப்பிரிவு, போர்க்கலங்க்ள, படைக்கல அணிகள், (வினை.) படைக்கலங்கள் பூட்டு, போர்க்கோலங் கொள்ளுவி, மேற்கொள்ளுவி கருவி பொருத்து, கவசம் போர்த்து, காந்தத்துக்கு விசைக்கை இணை.
arles n.pl. அச்சாரம், ஒப்பந்தம், அல்லது நம்பிக்கைக்காக பணி ஏற்பினடையாளமாக அளிக்கப்படும் முன்பணம்.
arkose n. களிம நுண்பொடிகள் மிகுதியான மணற்பாறைவகை.
arkite n. நோவாவினது தோணியில் இருந்தவர்களில் ஒருவர்,(பெ.) நோவாவின் தோணிக்குரிய, நோவா தோணியோக தொடர்புடைய.
ark-shell n. பெட்டி போன்ற கிளிஞ்சல் வகை.
ark n. பெட்டி, பேழை, (விவி.) யூதர்களின் திருமுறைக்கட்டளைகள் அடங்கிய மரப் பெட்டகம், உலகப் பெருவெள்ளத்தின் போது நோவா என்பவருக்குப் புகல் அளித்த பெரிய தோணி, நோவாவினது தோணி போன்ற பொம்மை வடிவம், (வினை.) பெட்டியில்வை.
arithmometer n. கணிப்புமானி.
arithmetician n. கணக்காளன், எண்கணிப்பியலாளர்.
arithmetic(2), arithmetical a. கணக்குச் சார்ந்த, எண்கணிதத் தொடர்புடைய, எண்கணிப்பு முறையான.
arithmetic -1 n. கணக்கு, எண்கணக்கியல், எண்ணளவை, கணக்கறிவு, கணிப்புத்திறம், கணக்கீடு, கணிப்பியல்.
Aristotelianism. Aristotelism n. அரிஸ்டாட்டிலின் முறை அல்லது கொள்கை.
Aristotelian n. அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க மெய்ந்நுலாசிரியரைப் பின்பற்றுபவர், (பெ.) அரிஸ்டாட்டிலுக்கு அல்லது அவரது மெய்ந்நுல் கொள்கைக்குத் தொடர்புடைய.
Aristophanic a. அரிஸ்டொபனிஸ் என்னும் கிரேக்க நாடகாசிரியருக்கு உரித்தான.
aristology n. உணவுக்கலை, உணவு ஆய்வு நுல்.
Aristolochia n. ஆடுதின்னாப்பாளையை உள்ளடக்கிய செடியினம்.
aristocratism n. உயர் குடியாட்சிக் கோட்பாடு, மேற்குடியாட்சி நம்பிக்கை.
aristocratic, aristocratical a. மேற்குடி ஆட்சிக்குரிய, மேற்குடித் தொடர்புடைய, உயர்குடி இயல்புடைய, மேட்டிமையான, நாகரிகமாக, ப கட்டான, ஆரவார முறையில் அமைந்த.
aristocrat n. ஆட்சி வகுப்பினர், மேற்குடியாளர், இறுமாப்புடையவர், சிறந்தோர், மேம்பட்ட ஒன்று.
aristocracy n. உயர்குடிஞர் ஆடசி, உயர்குடியாட்சி நாடு, உயர் பண்பாட்சி, தனி உரிமை பெற்றவர்களின் மேட்டிமை, சிலர் ஆட்சி, மேற்குடி ஆட்சிக்குழு, ஆட்சி வகுப்பு, மேற்குடி மக்கள், பண்பாளர், சான்றோர்.
aristate a. சூகமுடைய.
Aristarch n. கண்டிப்பான நுண்ணாய்வாளர்.
arista n. சூகம், கூலக்கதிர், புல்வார்.
arisen v. அரைஸ் என்பதன் முடிவெச்சம்.
arise v. எழு, எழுந்திரு, மேலேழுந்து வளர், தோன்று உண்டாகு, மனத்தில் தோன்று, காட்சியில் புலப்படு, செயலில் முனை, விளைவாகு, எதிர்ப்படு.
aripple adv. சிற்றலைகளாக.
ariot adv. கலாம் விளைத்து, குழப்பமாக.
arioso n. இன்னிசைப்பாடல், (பெ.) இன்னிசையான, (வினையடை.) இன்னிசையாக.
arillode n. விதைமூடி, விதையலகுப்போலி.
arillary, arillate, arillated தாள் பொதிவுடைய.
aril n. செடி விதைகளின் பொதிவுத்தாள், விதையலகு.
aright adv. நேராக, சரியான முறையில்.
ariel,n. -1 மேலே ஆசிய மான் வகை, பறவையினங்களின் வகை.
aridity n. வறட்சி, பாழ்நிலை.
arid a. உலர்ந்த, வறண்ட, ஒன்றும் விளையாத, வெறுமையான.
Arianize v. ஏரியஸ் கொள்கையைப் பின்பற்று, ஏரியஸ் கொள்கைக்கு மாற்று.
Arianism n. ஏரியஸின் கொள்கை, இயேசுநாதர் கடவுளின் திருமகனார் என்பதை மறுக்குங்கொள்கை.
Arian n. கி.பி.4ஆம் நுற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியாவில் வாழ்ந்த ஏரியஸ் என்பவரின் கொள்கையினைக் கடைப்பிடிப்பவர், கடவுள் மூவர் அல்லர் ஒரு முழுமுதற்பெரும் பொருளே என்னுங் கொள்கையினர்,(பெ.) ஏரியஸ் கொள்கையைச் சார்ந்த, ஏரியஸைப்பின்பற்றுகிற.
aria n. (இசை.) மூன்று பகுதிகளாகப் பிரித்து விரிவாகப்பாடப்படும் பாடல்வகை.
argyrophyllous a. வெள்ளிபோன்ற இலைகளையுடைய.
argyria n. வெள்ளி நச்சூட்டு, வெள்ளி கலந்த பொருள் உட்கொண்டதால் ஏற்படும் மேனி நிறமாற்றம்.
argyranthous a. வெள்ளி போன்ற மலர்களையுடைய.
argute a. அறிவுக்கூர்மையான, நுழைபுலமுள்ள, கீச்சென்ற, காதைத் துளைக்கிற.
argus-shell n. கண்போன்ற புள்ளிகளையுடைய பீங்கான் ஓடு.
argumentative a. அளவை முறையை ஒட்டிய, வாதிக்கும் ஆர்வமுள்ள, விவாதத்துக்கு இடமான.
argumentation n. முறைப்படி வாதித்தல், சொற்போர், விவாதம்.
argument n. வாதாடல், வாதம், சான்று, ஆதாரம், எடுத்துக்காட்டப்படும் காரணம், காரண காரிய விளக்கம், விவாதப்பொருள், நுற்பொருள் சுருக்கம், (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று,(கண்.) சார்பளவைச் சுட்டு, (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
argue v. சொல்லாடு, வாதிடு, காரணங்காட்டி நிலைநாட்டு, மெய்ப்பி, முடிவு சுட்டிக்காட்டு,விரித்துறை, விளக்கிஎழுது, வாதமூலம் தூண்டுதல் அளி.
arguable a. வாதாடுதற்குரிய, நிலைநாட்டக்கூடிய.
argot n. குமூஉமொழி, திருடர் நாடோடிகள் போன்றவர்வழக்கு, கொச்சைமொழி.
argosy n. மிகப்பெரிய முற்கால வாணிகக் கப்பல், கப்பல், துணிவுச் செயல்.
argonautic a. ஆர்கோ என்ற கப்பலில் சென்றதாகப் பழங்கிரேக்க புராணக் கதைகளில் கூறப்படும் வீரர்களுக்குரிய.
argonaut,n. -1 ஒருவகை நத்தை இனம்.
Argonaut n. பொன் கம்பளி தேடி 'ஆர்கோ' என்ற கலத்தில் சென்றதாகக் கூறப்படும் பண்டைக் கிரேக்க புராணவீரர்.
argon n. வளிமண்டலத்தின் அணுஎடை எண் ட1க்ஷ் உடைய இயக்கத்திறனற்ற வளிக்கூறு, 'மடியம்'.
argol n. கொடி முந்திரித்தோலிலிருந்து படிந்து இறுகும் உப்புவகை, மண்டிகம்.
argle-bargle n. சொற்போர், வாதம்.
argillite n. திண்ணிதாக்கப்பட்ட களிமண்பாறை.
argillaceous a. களிமண்ணால் ஆன.
argil n. பாண்டஞ் செய்வதற்குரிய களிமண்.
arghan n. நுண்ணயமான நார்வகை, நார்தரும் செடிவகை.
argentine n. வெள்ளிப்போலி, வெள்ளிப் பூச்சுடைய வெண்ணிற உலகம், மீன்செதிளின் வெண்தோடு, (வில.) சிறு மீன் இனம், (கனி.) கற்பலகைப் பாளம், (பெ.) வெள்ளிக்குரிய, வெள்ளிபோன்ற, வெள்ளியைப்போல் ஒளிர்கிற.
argentiferous a. வெள்ளி விளைகிற, வெள்ளியை உடைய.
argent n. வெள்ளி, வெண்பொன்நிறம், (பெ.) வெள்ளி நிறமான, வெண்மையான.
argemone n. முன்னினையுடைய கசகசா வகை.
argand n. வட்டமாகக் கொழுந்துவிட்டெரியும் ஆவிவிளக்கு வகை, (பெ.) ஆவி மூலம் எரியும் குழல் திரியுடைய.
argan n. எண்ணெய்விதை வகை, எண்ணெய் விதைதரும் மொராக்கோ நாட்டுக் கட்டுமான மரவகை.
argali n. மலையாடு.
argala n. புதா, பெருநாரை.
arete n. செங்குத்தான மலைச்சரிவு.
Areopagus n. கிரேக்க மீயுயர் நீதிமன்றம் கூடியகுன்று, உயர்நீதிமன்றம்.
Areopagitic a. கிரேக்க மீயுயர் நீதிமன்றத்துக்கு உரிய.
Areopagite n. கிரேக்க மீயுயர் நீதிமன்ற உறுப்பினர்.
areolation n. சிறு சிறு பரப்புக்களாகப் பிரித்தல்.
areolar a. சிறு சிறு பரப்புக்களாகப் பிரிக்கப்பட்ட.
areola n. சிறுபரப்பு, சிற்றிடைவெளி, இழைம இடைவெளி, மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம், கருமணியை அடுத்த பாவையோரம்.
areography n. செவ்வாய்க்கோளின் பரப்பாய்வு.
arenose a. மணல் நிறைந்த.
arenicolous a. மணலில் வாழ்கிற.
arenation n. மணல் மருத்துவமுறை.
arenaceous a. மணல் போன்ற, மணற்பாங்கான, மணலில் வளர்கிற, மணலாலான, மணற்பாறையான.
arena n. களரி, வட்டரங்கு, செயற்களம், செயற்றுறை, மணற்பரப்பு.
aree-show n. கண்காட்சிப்பெட்டி, பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு போகப்படும் காட்சிப்பொருள், கண்காட்சி.
areca-nut n. பாக்கு, அடைக்காய்.
areca n. கழுகு இனம்.
areasneak n. பதுங்கித் திருடுபவர்.
arears n.pl. நிலுவை, தொகை செலுத்துவதில் தாமதம், செய்யப்படாமலிருக்கிற செயல், பிறபட்டிருத்தல்.
areal a. வெற்றிடத்துக்கு உரிய, நிலப்பகுதிக்கு மேலுள்ள, நிலப்பகுதிக்கு உரிய.
area n. பரப்பு, நிலப்பரப்பு, பரப்பளவு, வெற்றிடம், மேற்பரப்பு, மேற்பரப்பின் பகுதி, பரப்பெல்லை, ஆட்சிஎல்லை, புறஎல்லை, அடித்தள அகழ்வாய், நிலத்தளத்தின் அடியறைகளின் வாயில், பலகணி முகப்புகளுக்கு ஒளியோகாற்றோ செல்லவிடும் குழிவான அணைவாயில்.
are -2 v. பீ என்பதன் நிகழ்காலப் பன்மை வடிவம்.
are -1 n. பிரெஞ்சு முறைப் பரப்பளவைக் கூறு( நுறு சதுர மீட்டர்).
arduous a. செங்குத்தான, வரமுடியாத, எளிதில் செய்ய இயலாத, கடினமான, சுறுசுறுப்புள்ள, வலிமையுடைய.
ardour n. கடுவெப்பம், பாச உணர்ச்சி, ஆவல், ஆர்வமுனைப்பு.
ardent a. வெப்பமான, அளவான, சூடேறிச் சிவந்த, கனல்கக்குகிற, எளிதில் தீப்பற்றிக்கொள்ளத்தக்க, ஆர்வமிக்க.
ardency n. வெப்பு, ஆர்வம், உணர்வறிமுனைப்பு.
Ardea n. நாரையை உள்ளடக்கிய பறவை வகை.
arcus senilis n. மூப்புப்படலம், வயது ஆக ஆக கருவிழியைச் சுற்றி உருவாகும் வெளிறிய மஞ்சள் வளையம்.
arcuate, arcuated வில்போல் வளைந்த, கவான் வடிவான.
arctoid a. கரடி போன்ற.
Arctogaea n. நிலவுலகின் வடதுருவப்பகுதிகள்.
Arctiidae n.pl. ஒருவகைப் பட்டுப்பூச்சி இனம்.
arctic,a.(1). மிக்க குளிர்ச்சி பொருந்திய.
arclamp, arclight பிறைவிளக்கு, வட்டை விளக்கு.
archwise adv. வில்வளைவு போன்ற நிலையில்.
archway n. வில்வளைவான விதானம் கவிந்துள்ள வழி.
archontic a. ஆட்சியாளருக்குரிய.
archontate n. ஆளுநரின் ஆட்சிக்காலம்.
archonship n. குற்றநடுவர் நிலை.
archon n. பண்டைய ஆதன்ஸ் நகரில் இருந்த முதன்மையான ஒன்பது குற்றநடுவர்களில் ஒருவர், ஆளுநர், தலைவர்.
archness n. வளைவாயிருக்கும் தன்மை, போக்கிரித்தனம்.
archly adv. கவான்போல் வளைந்திருக்கும் நிலையில், போக்கிரித்தனமாக.
archlute n. பெரிய இரட்டைக்கழுத்து யாழ்வகை.
archlet n. சிறிய வில்வளைவு.
archivolt n. கவானின் உள்வளைவு, கவானின் உள்வளைவை அழகுசெய்யும அச்சுருக்கள்.
archivist n. சுவடிக்கூடம் காப்பவர், சுவடிகளைக் காப்பவர்.
archive n. சுவடிக்கூடம், பொது ஆவணக்களரி, பொதுப்பத்திரங்கள்.
archival a. சுவடிக்கூடம் சார்ந்த.
architraved a. சித்திர வேலைப்பாடமைந்த அச்சுரு அமைக்கப்பெற்ற.
architrave n. நுணின் உச்சியிலுள்ள பரற்கட்டையின் மீது தங்கியிருக்கும் முதன்மையான தூலம், வாயிற்படிஅல்லது ஜன்னலைச் சுற்றியுள்ள பல்வேறு பாகங்கள், கவானின் வெளிப்புறத்தைச் சுற்றியுள்ள அச்சுரு.
architectural a. கட்டிடக்கலை நுல், சிற்பக்கலை நுல், கட்டப்பட்ட பொருள், கட்டுக்கோப்பு, கட்டிடப்பாங்கு, கட்டுதல்.
architectonics n. சிற்பக்கலை நுல், அறிவுக்கூறுகளின் ஒழுங்கமைப்பு நுல்.
architectonic, architectonical a. சிற்பக்கலை சார்ந்த, சிற்பிகளைப் பற்றிய, ஆக்குந்திறனுள்ள, கட்டுப்படுத்துகிற, கட்டளையிடுகிற, அறிவுக் கூறுகளை ஒழுங்காயமைப்பது பற்றிய.
architect n. சிற்பி, கட்டிடக்கலைஞர், இயற்றுபஹ்ர், உலகைத் தோற்றுவித்த கடவுள், எண்ணியாங்கு எய்துபவர்.
archipelago,n.(1). தீவுகள் செறிந்த கடல், தீவுக்கூட்டம்.
Archipelago n. ஈஜியக்கடல்.
archipelagic a. தீவுகள் செறிந்த கடல் சார்ந்த, தீவுக்கூட்டத்தின் இயல்புடைய.
Archimedean a. ஆர்க்கிமிடீஸ் (கி.மு.2க்ஷ்ஹ்-212) என்ற கிரேக்கக் கணிதநுற் புலவர் தொடர்பான.
archimandrite n. கிரேக்கத் திருச்சபைத் துறவிகள் மடத்தின் முதல்வர்.
archimage n. தலைமை மந்திரவாதி.
archil n. பலவகைப்பாசிகளிலிருந்து செய்யப்படுகிற சிவப்பு அல்லது ஊழ் நிறச் சாயப்பொருள், பாசி வகைகள்.
archiepiscopal a. அதிமேற்றிராணியாருக்குரிய.
archiepiscopacy n. தலைமைக் கண்காணியாரின் மதிப்பு அல்லது ஆட்சிப் பரப்பு.
archidiaconal a. மேற்றிராணியாருக்கு உரிய.
archibald n. விமான எதிர்ப்புப் பீரங்கி.
archetype n. மூலப்படிவம், முன்மாதிரி.
archetypal a. மூலப்பிரதியான.
archery n. வில்லாண்மை, விற்றொழில் கலை, வில்லாளர்களின் ஈட்டம்.
archeress n. விற்றொழில் கைவந்த பெண்.
archer n. வில்லாளர், தனுசு இராசி.
archenteron n. கருமுளையில் முதலில் தோன்றும் குடல்.
arched a. கவான் வடிவன்ன, வில்வளைவு கவிந்துள்ள.
archduke n. பெரிய கோமகன், ஆஸ்டிரியப் பேரரசரின் மப்ன்.
archduchy n. கோமகனின் அல்லது கோமகனின் ஆட்சிப்பரப்பு.
archduchess n. பெரிய கோமகனின் மனைவி, ஆஸ்டிரியப்பேரரசின் மகள்.
archdiocese v. அதிமேற்றிராசனம்.
archdeacon n. மேற்றிராணியர், கண்காணியருக்கு அடுத்த பெரிய அதிகாரி.
archbishorpric n. தலைமைக் கண்காணியாரின் ஆட்சிக்கு உட்பட்ட மாவட்டம், அதிமேற்றிராசனம்.
archbishop n. தலைமைக்குரு, அதிமேற்றிராணியார், தலைமைக் கண்காணிப்பாளர்.
archangel n. தலைமைத் தேவதூதன், பெரிய இலைகளையும் மஷ்ர்க் கொத்துக்களையுமுடைய தோட்டச் செடிவகை, வறட்டு முட்செடிவகை, ஒருவகைப்புறா.
archaize v. பண்டைய வழக்கைப் பின்பற்று, தொல்வழக்கைக் கடைப்பிடிப்பதாகக் காட்டிக்கொள், தொல்வழக்குடையதாகச் செய்.
archaistic a. தொல்வழக்குகளைப் பின்பற்றுபவர்போல் நாட்டிக்கொள்கிற, பண்டை வழக்குகுளைக் கடைப்பிடிக்கிற.
archaist n. தொல்வழக்குகளைக் கையாள்பவர்.
archaism n. மொழியிலும் கலையிலும் பழமையையும் வழக்கற்றவைகளையும் வைத்துக் கொள்ளுதலும் பின்பற்றுத, அத்தகைய மனப்பாங்கு, தொல்சொல்.
archaic a. பழைய, தொன்மையான, இப்போது வழக்கில் இல்லாத.
Archaeornithes n. ஊர்வன போன்ற பண்டைக்காலப்பறவைகள்.
archaeopteryx n. தெரிந்த வரையில் மிகப்பழமையானதும் பறப்பனவற்றிற்கும் ஊர்வனவற்றிற்கும் இடைப்பட்டதுமான பறவை.
archaeology n. தொல்பொருள் ஆராய்ச்சி, மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு.
archaeologic, archaeological a. மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு சார்ந்த.
archaeoljogist n. மனித குலத்தின் தொன்மைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வாளர், தொல்பொருள் ஆஜ்ய்ச்சியாளர்.
archaean n. மண் நுலில் பேசப்பட்ட முதல் ஊழியைச் சார்ந்த.
arch-villain n. அறக்கொடியவன்.
arch-traitor n. பெருந்துரோகி, நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களில் முன்னணியிலிருப்பவன், சாத்தான், இயேசுநாதரைக் காட்டிக்கொடுத்த யூதரஸ் என்ற சீடன்.
arch-rogue n. பெரிய திருடன், பெரும்போக்கிரி.
arch-priest n. தலைமைப்புரோகிதன், குருக்களில் முதல்வர்.
arch-pirate n. கடற்கொள்ளைக்காரத் தலைவன்.
arch-mock n. கேலிக்கூத்தின் உச்சநிலை.
arch-liar n. பெரும்புளுகன்.
arch-knave n. பெயர்போன போக்கிரி.
arch-imposter n. பெரிய ஆள்மாறாட்டக்காரன், பெரியஎத்தன்.
arch-fiend n. பெரும் பிசாசு, சாத்தான்.
arch-enemy n. பெரும்பகைவன், முதல்எதிரி, சாத்தான்.
arch-builder n. புகழ்வாய்ந்த கட்டிடச் சிற்பி.
arch n. மேல்வளைவு, வில்வளைவு, கவான், பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு, வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள், வில்வளைவானகூரை, மேலே கவான் அமைந்த நடை வழி, (பெ.) முதன்மையான, விளங்கித் தோன்றுகிற, தந்திரமுள்ள, சதுரப்பாடுடைய, வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற, (வினை.)வில்வளைவு அமை, கவான் ஆக்கு, மேல்வளைவு கட்டு, கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு, வில் போல்வளை.
arcanum n. மறைபொருள், இரகசியம், மாமருந்து, சஞ்சீவி.
Arcady n. கிரீஸ் தேசத்து மாவட்டம் ஒன்று, நாட்டுப்புற இலட்சிய மோக்கம், விண்ணுலகு.
arcading n. வில்வளைவு விதானங்களை அலங்காரமாய் அமைத்தல்.
Arcadian n. நாட்டுப்புறத்தான், (பெ.) நாட்டுப்புறஞ்சார்ந்த, கள்ளங்கபடற்ற, அப்பாவியான.
Arcadia n. நாட்டுப்புறப் பொழில்.
Arcades ambo. இருவரும் கயவர்கள்.
arcaded a. வில்வளைவு விதானம் அமைந்த.
Arcade வில் வளைவு
arcade n. வில் வளைவு விமானப்பாதை, நடை, வானப்பந்தல்,(க.க.) ஒரே மட்டத்தில் உள்ள மேல்வளைவுத் தொகுதி.
arc n. வில், வட்டவரையின் அல்லது வளைவரையின் பாகம்,(மின்.) தனித்தனியான இரண்டு கரிய துருவங்களுக்கிடையில் தோன்றும் ஒளி வட்டப்பகுதி.
arboured a. இளமரக்கா அமைந்துள்ள.
arbour n. பொதும்பர், கொடிவீடு.
arborization n. மரம் போன்ற தோற்றம்.
arboriculturist n. மர ஆய்வாளர்.
arboriculture n. காடுகள் பேணும் கலை, மரங்களையும் புதர்களையும் சிறப்பாகத் தேக்கு மரங்களையும் வளர்த்தல், மரவேளாண்மை.
arboricultural a. மரங்களை வளர்ப்பதற்கு உரிய.
arboretum n. பயிர்நுல் முறைப்படி அமைந்துள்ள தோட்டம்.
arborescent a. மரம் போல் வளர்கிற, மரம் போன்ற தோற்றமுடைய.
arborescence n. மரம் போன்ற வளர்ச்சி.
arboreous a. மரங்கள் நிறைந்த மரங்களின் தன்மை வாய்ந்த, மரம் போன்ற தோற்றமுடைய.
arboreal a. மரங்களுக்குரிய, மரங்களில் வாழ்கிற, மரங்களுக்குத் தொடர்புடைய.
arboraceous a. மரம் போன்ற, மரங்கள் நிறைந்த.
arbor n. மரம், பொறியின் முதன்மையான ஆதாரம், சக்கரம் சுழலும் இருசு அல்லது கதிர், காம்பு, உத்திரம்.
arbitress n. பெண் மத்தியஸ்தர், பெண் காரணிகர்.
arbitrator n. (சட்.) நடுவர், காரணிகர்.
arbitration n. நடுவர் தீர்ப்பு, நடுவர் தீர்ப்புக்கு விடுழ்ல்.
arbitrate v. நடுவராயிருந்து, தீர்ப்புக்கூறு மத்தியஸ்தத்திற்கு விடு, காரணிகராய் இரு.
arbitrary a. விதிக்கட்டின்றி, மனப்போக்கான, கொடுங்கோன்மையான, (சட்.) விருப்பப்படியான.
arbitrament, arbitrement n. மத்தியஸ்தத்தால் முடிவு செய்தல், நடுவர் தீர்ப்பு, அதிகாரத்தோடு ஒட்டிய தீர்ப்பு.
arbitral a. காரணிகத்துக்கு உரிய.
arbitrage n. மத்தியஸ்தம், பற்பல சந்தைகளில் நிலளம் வெவ்வேறு விலைகளினால் ஆக்கம் பெறுவதற்காக உண்டியல்களில் அல்லது பங்குகளில் நடத்தும் வாணிகம், விலை வேற்றுமை வாணிபம்.
arbitrable a. நடுவர் தீர்ப்புக்கு உரிய.
arbiter n. நடுவர், நீதிபதி, காரணிகர், மத்தியஸ்தர், முழுஆளுகை உடையவர்.
arbalester n. குறுக்கு வில்லாளர்.
arbalest n. குறுக்குவில், கணை அல்லது கல் எ றிவதற்காக இடைக்காலத்திற் கையாண்ட வில் போன்ற படைக்கலன், குறுக்கு நிலை தாங்கி, நிலை அளவை செய்வோர் கையாளும் கருவி.
Araucaria n. தென் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலிறள்ள விதை மூடா முள்ளிலை மரம்.
araroba n. கோவாப்பொடி.
arar n. பிசின்வகை தரும் ' சாந்தரக்கு' மஜ்ம்.
arapaima n. நன்னீரில் வாழும் தென் அமெரிக்க உணவு மீன்வகை.
Araneidan a. சிலந்தியினத்தைச் சார்ந்த.
araneid n. சிலந்தி.
Aramaism n. அரமிய மொழிமரபு, அரமிய மரபுவழக்கு.
Aramaic n. மேலை ஆசியாவிலுள்ள மொழி வகை, (பெ.) அரமியா நாட்டுக்குரிய, அரமிய மொழி சார்ந்த.
Aralia n. ஒப்பனைக்குரிய கொடியின் வகை.
araf off,from afar தூரத்திலிருந்து.
araeostyle n. (க.க.) நாவலகு ஈரலகுத் தூண் வரிசை.
araeometry n. செறிவு அளத்தல்.
araeometer n. செறியுமானி, செறிவெண் இன்னதெனக்காட்டும் கருவி, நீர்மச் செறிவுமானி.
arachnology n. சிலந்திப் பேரின ஆய்வுத்துறை.
arachnologist n. சிலந்திப் பேரின ஆராய்ச்சியாளர்.
arachnoid n. சிலந்திநுல் போன்ற சவ்வு, (பெ.) நுலாம்படை போன்ற, (தாவ.) சிலந்திநுல் போன்ற நீள் மயிரால் மூடப்பட்டுள்ள.
arachnid n. (வில.) சிலந்திப்பேரினம், சிலந்தி தேள் ஆகியவற்றை உள்ளடக்கிய பூச்சியினப் பிரிவு.
arable n. சாகுபடி நிலம், உழுது பயிரிடத்தக்க நிலம், (பெ.) உழுது பயிரிடத்தக்க.
Arabist n. அரபுமொழி இலக்கியங்களில் வல்லவர்.
Arabism n. அரபுமொழி மரபு, அரபு மரபுவழக்கு.
Arabis n. (தாவ.) கடுகுச் செடியினம்.
arabin n. பிசினம், வேல் இன மரப்பிசினில் உள்ள அடிப்படைப்பொருள்.
Arabic n. அரபுமொழி, (பெ.) அராபியாவுக்குரிய, அரபுமொழித்தொடர்பான.
Arabian n. அராபியர், (பெ.) அராபியாவுக்குரிய, அராபிய இனத்தவருக்குரிய.
arabesque(2), arahesqued a. அராபிய முறை சார்ந்த, விசித்திரமான, விசித்திரப் பூப்பின்னல் வேலைப்பாட்டினால் ஒப்பனை செய்யப்பட்ட.
arabesque -1 n. அராபிய வண்ணச்சித்திர வேலை, தொடர்வண்ண இசைப்பாட்டு, ஆடல் நிலைவகை, உடலையும் ஒருகாலையும் நிலத்தளத்துக்கு இணையாக்கி ஒருகாலில் நிற்கும் நிலை.
araba n. மூடாக்கு வண்டி, கட்டை வண்டி.
Arab n. அராபிய நாட்டவர், அராபிய இனத்தவர், அராபியக்குதிரை, அநாதைச் சிறுவர், (பெ.) அராபிய, அராபியர்களுக்குரிய.
aquosity n. நீர்த்தன்மை.
Aquila n. பொன்னிறக் கழுகினம், கழுகு வடிவமான விண்மீன் குழு.
aquifoliaceous a. பசுமை மாறாத, இலையுதிராத.
aqueous a. நீர் சார்ந்த, நீர்கலந்த, நீர்த்த, (மண்.) நீரினால் படியவிடப்பட்ட.
aqueduct n. கட்டுக்கால்வாய், கால்வாய்ப்பாலம், உயர்தளத்தின் ஊடாகச் செல்லும் நீர்க்குழாய், சாலகம், (உட.) பாலுணிகளின் தலையில் அல்லது உடலில் உள்ள சிறுகுழாய்.
aquatint n. காடிச் செதுக்குமுறை, பிசினையும் வெடியக்காடியையும் கொண்டு செம்பின்மேல் செதுக்குவேலை இழைக்கப்படும்முறை, (வினை.) செம்பில் பிசினும் காடியும் கொண்டு செதுக்கு.
aquatics,n.pl நீர்விளையாட்டுக்கள்.
aquatic n. நீர்வாழ் செடி, நீர்வாழ் உயிரினம், நீர்விளையாட்டுக்காரர், (பெ.) நீரில் வளர்கிற, நீருக்கருகில் வளர்கிற, நீரில் வாழ்கிற, நீரில் நிகழ்கிற, நீர்மேல் கடத்தப்படுகிற.
Aquarius n. கும்பராசி, 11வது வான்மனை, கும்பராசியடுத்த விண்மீன் குழு.
aquarium n. நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை.
aquariist, aquarist நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை வைத்திருப்பவர்.
aquarian n. நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை வைத்திருப்பவர், (பெ.) நீர்வாழ் பொருட்காட்சிச்சாலைக்கு உரிய.
aquarelle n. நீர்வண்ண ஓவியம், நீர்வண்ணப்படம்.
aquaplane n. விரைவோடத்திற்குப் பின் இழுக்கப்படும் பலகை, (வினை.) விரைவோடப் பலகை மீது ஏறு.
aquamarine n. கடல் வண்ணக்கல், (பெ.) நீர்ப்பச்சை நிறமுடைய.
aqualung n. மூழ்க உதவும் அமைவு, நீர்மூழ்குபவர் கொண்டு செல்லும் உயிர்ப்புக்குழாய்க்கலம்.
aquafortist n. வெடியக்காடியைக்கொண்டு செதுக்கு வேலை செய்பவர்.
aqua-vitae n. வெறியம், சாராயம், வெறிநீர்வகை.
aqua-regia n. அரச நீர்மம், பொன்னையும் விழுப்பொன்னையும் கரைக்கக்கூடிய வெடியக்காடியும் நீர்ப்பாசிக் காடியும் சேர்ந்த கலவைநீர்.
aqua-mirabilis n. இலவங்கம் சாதிக்காய் இஞ்சி மதுச்சாரம் இவற்றிலிருந்து வடித்திறக்கப்படும் சாறு.
aqua-fortis n. வெடியக்காடி, வெடியக்காடியைக் கொண்டு செதுக்குதல்.
aqua Tofana n. 1ஹ்ம் நுற்றாண்டில் வாழ்ந்த டொபானா என்ற மாது உண்டு பண்ணிய நச்சுப்பொருள்.
aqua n. (வேதி.) நீர், நீர்மம், நீரியற்பொருள், கரைசல்.
apyrexia n. காய்ச்சல் நின்றிருத்தல், காய்ச்சல் இல்லாமை.
aptotic a. வேற்றுமை ஏற்கமாட்டாத.
aptote n. வேற்றுமையுருபு ஏற்கமாட்டாத பெயர்ச்சொல்.
aptitude n. தகுதி, இயற்கைப்பாங்கு, போக்கு, நாட்டம், திறமை, கற்றுக்கொள்ளும் ஆர்வம்.
apteryx n. நியூசிலாந்தில் காணப்படும் வாலற்றதும் பறக்காததுமான ஒருவகைப்பறவை.
apterous a. சிறகற்ற, (தாவ.) மென்தோல் நீட்டிப்பு இல்லாத.
apterium n. பறவைகளின் இறகுகளுக்கு இடைப்பட்ட வெறும் இடம்.
apt a. தகுதியுள்ள, பொருத்தமான, பாங்குடைய, ஒருதுறையில் அறிவுக்கூர்மையுள்ள.
apsis n. ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அல்லது மிக அண்மையில் அமைந்த கிரகத்தின் இடம், திங்கள் நிலவுலகுக்கு நெடுஞ்சேய்மையாக அல்லது மிக அண்மையாக இருக்கும் நிலை.
apsidal a. திருக்கோயிலில் உள்ள ஒதுக்கிடத்தின் வடிவுள்ள, கிரகத்தின் ஞாயிற்றுச்சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய, நிலவுலகத்தின் திங்கள் சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய.
apse n. திருக்கோயில் கவிகைக் கூரையுள்ள அரை வட்டஒதுக்கிடம், பல பக்கங்களுள்ள வளைவு ஒதுக்கிடம்.
apropos n. பொருத்தம், (பெ.) பொருத்தமான, தொடர்பான, காலத்துக்கேற்ற, ஏற்புடைய, (வினையடை.) பொருட்டாக, நிமித்தமாக, பொருத்தமாக.
aproned a. முன்றானை பொருத்தப்பட்டுள்ள.
apron-string n. முன்றானையை உடம்போடு சேர்த்துக்கட்டும் கயிறு.
apron n. முன்றானை, தூசிதாங்கி, உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல், சமய நிலைகளுக்குரிய உடுப்பு, திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை, வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை, அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி, வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு, (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
apriorist n. காண்ட் என்ற செர்மானியத் தத்துவப் பேராசிரியர், கொள்கையைப் பின்பற்றுபவர், நுகர்ச்சி சாராத மனக்கோட்பாடுகளிலிருந்து மெய்ம்முடிவுகளுக்கு வரவேண்டுமென்னும் கொள்கையினர்.
apriorism n. காரண காரிய வாதம்.
Aprilian, Aprilish ஏப்ரல் மாத்ததுக்குரிய, ஏப்ரல் மாத இயல்புள்ள.
apricot n. வாதுமை போன்ற கொட்டைப் பழவகை, சீமைவாதுழைப்பழம், சீமை வாதுமை நிறம், சீமை வாதுமை மஜ்ம்.
appurtenant n. உடைமை, (பெ.) உடைமையான, இணைந்துள்ள, தொடர்பான.
appurtenance n. உடைமை, சேர்மானம், துணைப்பொருள், (சட்.) உடைமைக்கு உரிமை.
appui n. (படை.) துணைவலி, துணை, அண்டைகட்டு, (வினை.) தாங்கு, காப்புப்படைவரிசையில் ஆற்றல் மிக்க இடத்தண்டை நிறுத்து.
approximative a. அணித்தான.
approximation n. ஒத்திருத்தல், அணுகுதல், (கண.) நெருங்கிய அளவீடு, ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
approximate a. மிக்க அண்மையில் உள்ள, பெரிதும் ஒத்திருக்கிற, ஏறத்தாழச் சரியாயிருக்கிற, (வினை.) பெரிதும் ஒத்திருக்கச் செய, அணுகு.
approver n. ஒப்புக்கொள்பவர், (சட்.) குற்ற உடந்தைச்சாட்சி, குற்றத்துக்கு உடந்தையாயிருந்து பிறகு குற்றவாளிக்கு எதிராகச் சான்று கூறு அனுமதிக்கப்ட்ட ஒருவர்.
approved a. அங்கீகாரம்பெற்ற.
approve -1 v. ஏற்றுக்கொள், நற்சான்றளி, மெய்ப்பித்துக்காட்டு, உறுதிப்படுத்து, பாராட்டு.
approval n. ஏற்றல், ஒப்புறுதி, அங்கீகாரம்.
approvable a. ஒப்புக்கொள்ளத்தக்க, ஏற்கக்கூடிய.
appropriation n. கைப்பற்றல், ஒதுக்கிவைத்தல்.
appropriate a. உரிய, ஒன்றுக்கே சிறப்பான, தகுதியுள்ள, சரியான, பொருத்தமான, ஒன்றுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட, (வினை.) உரிமைப்படுத்திக்கொள், தனதாக்கிக்கொள், குறிப்பிட்ட, காரியங்களுக்குப் பயன்படுத்து அல்லது ஒதுக்கிவை.
approopriative a. தன் சொந்த உடைமையாக்கிக் கொள்கிற, ஒன்றனுக்கென ஒதுக்கி வைக்கிற.
approof n. தேர்வு, தெளிவு, ஏற்பிசைவு.
approbative, approbatory a. பாராட்டுகிற, ஏற்றுக்கொள்கிற.
approbation n. பாராட்டு, ஏற்றுக்கோடல், அங்கீகாரம்.
approbate v. ஒப்புறுதியளி, அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள்.
approaches n.pl. (படை.) முற்றுகையிடுபவர்க்ள தாக்குக்குறியை அடைவதற்கு வெட்டுக்குழிகள் போடும் பாதைகள் முதலியன.
approachable a. கிட்டிச் செல்லத்தக்க, நெருங்கக்கூடிய.
approachability n. அணுகக்கூடிய நிலை.
approach n. அணுகுதல், ஏறத்த்ழஒத்திருத்தல், அணுகுநெறி, செல்வழி, பாதை, (வினை.) அணுகு, இயல்பு முதலியனவற்றில் ஏறத்தாழ ஒத்திரு, கண்டுபேசு, (படை.) தாக்குக் குறியை அடைவதற்குக் குழிகள் வெட்டிச் சாலைகள் போடு.
apprize v. மதிப்பிடு, தரமுணர், நலங்கண்டுபாராட்டு, கல்ன்தீர்க்க விற்பனை செய்.
apprise v. அறிவி, தெரிவி.
apprenticeship n. தொழில் பயில்வோர் நிலை, தொழறிபய்ற்சி, செயல்முறைப்பயிற்சிக்காலம், பயிற்சிப்பருவம்.
apprentice n. பணிபயில்பவர், மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர், புதுவேலையாள், கற்றுக்குட்டி (வினை.) பணிபயில்வோராகப் பிணைப்படுத்து.
apprehensive a. புலன்களால் பற்றுதற்குரிய, மனத்தால் வாங்குதற்குரிய, கருத்துடைய உணர்கிற, அறிவுக்கூர்மையுள்ள, ஐயுற்றஞ்சுகிற, அச்சங்கொள்கிற.
apprehension n. கைப்பற்றல், கைதுசெய்தல், மனத்தில் வாங்கிக்கொள்ளுதல், கருத்துபுரிந்து கொள்ளுதல், அச்சம்.
apprehensible a. உளங்கொள்ளத்தக்க.
apprehendibility n. மனங்கொள்ளும் தன்மை, புலனுணர்வாற்றல்.
apprehend v. கைப்பற்று, கைதுசெய், புலன்கொள், பொருளறி, உணர், அறி, எதிர்நோக்கி, அஞ்சு, ஐயுற்று அஞ்சு.
appreciator n. பாராட்டுபவர், சரியாக மதிப்பிடுபவர்.
appreciative a. உண்மையுனரும் இயல்புடைய பாராட்டுதல் தெரிவிக்கிற.
appreciation n. மதிப்பீடு, நடுநிலை முடிபு, உண்மையுணர்ந்து போற்றுதல், நுகர்வுணர்வு, பாராட்டு, குணநலன்களைத் தக்கவாறு ஒப்புக்கொள்ளல், மதிப்புயர்வு, திறனாய்வுரை, திறனாய்வுக்கட்டுரை.
appreciate v. மதிப்பிடு, சரியாகக் கணி, உணர், உணர்ந்துநுகர், பாராட்டு, மதிப்பை உயர்த்து, மதிப்பில் உயர்.
appreciable a. மதிப்பிடத்தக்க, உணரத்தக்க, புலன்களுக்குத் தெரியக்கூடிய, கணிசமான.
appraiser n. சொத்து மதிப்பாளர், தரம் கவனிப்பவர்.
appraisement n. மதிப்பீடு, மதிப்பிடுதல், தரமதிப்பு.
appraise v. விலைகுறி, மதிப்பிடு, தரம்குறி.
appraisable a. மதிப்பிடக்கூடிய.
apposition n. முத்திரை பொறிப்பு, புடைவைப்பு, அருகமைவு, (இலக்.) நேரிவு ஒரேதொடர்புற வைத்தல்.
apposite a. நன்கமைந்த, இசைவான, தகுதியான, பொருத்தமான.
apposistional, appositive a. அடுத்தடுத்து வைக்கப்பட்ட, நேரியைபான.
appose v. ஒன்றன்மேல் மற்றொன்றாகப் பொருந்த வை, ஆவணத்தின் மேல் முத்திரை வை, ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக வை, எதிர்நில்.
apportionment n. பங்கீடு, பகுத்துக்கொடுத்தல், பாதீடு.
apportion n. பகுத்துக்கொடு, பங்கீடு செய், பிரித்துக்கொடு.
apport n. கண்காணா ஆற்றலால் கொண்டுவந்து காட்டப்படும் பருப்பொருள்.
appointment n. வேலையில் அமர்த்தல், நியமனம், பணி, குறிப்பிடுதல், உறுதிசெய்தல், சந்திப்புத்திட்டம், விதித்துக்கொடுத்தல், தீர்ப்பு, அவசரச்சட்டம்.
appointee n. நியமிக்கப்பெற்றவர்.
appoint v. காலங்குறி, உறுதிச்செய், நியமி, இடத்தில் அமர்த்து, விதித்துக்கொடு, உடைமை முதலியவை சேரிடம் அறிவி.
appoggiatura n. (இசை.) முன்வரும் துணைச்சரம்.
apply v. இடு, அருகேவை, மேல்வை, கருத்தூன்று, பயன்படுத்து, தொடர்புடையதாக்ச செய், பொருந்து, ஈடுபடுத்திக்கொள், நன்குகவனி, குயரந்து, கேள், விண்ணப்பம் செய்துகொள், வேண்டுகோள் விடு.
applique n. மேலடைப்பணி, ஒரு பொருளினின்று வெட்டப்பட்டு மற்றொன்றின் மேல் பொருத்தப்படும் ஒப்பனை வேலைப்பாடு அல்லது அணிகஷ்ன்.
applied a. செயல்முறை சார்ந்த.
applicatory a. பயன்படுத்தக்கூடிய.
applicative a. செயல்முறையான.
application n. வேண்டுகோள், விண்ணப்பம், மேலேபூசுதல், செயற்படுத்தல், பயன்படுத்துதல், பூசப்படும் சாந்துதைலம் முதலியன, பற்று, பூச்சு, பொருந்தவைத்தல், பொருத்தம், இடைவிடாமுயற்சி.
applicant n. குறையிரப்போர், மனுதாரர், விண்ணப்பம் செய்துகொள்பவர்.
applicable n. பயன்படத்தக்க, பொருத்திக் காட்டக்கூடிய, இயைபுள்ள.
appliance n. பயன்படுத்துதல், துணைக்கருவி, சாதனம்.
apple-pomace n. சாறு பிழிந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் பழச்சக்கை.
apple-pie n. ஆப்பிள் பணியாரம்.
apple-john n. வாடியும் கெடாமலிருக்கும் ஆப்பிள்வகை.
apple-jack n. ஆப்பிள் சாராயத்தின் அமெரிக்கப்பெயர்.
apple-cheese n. அழுத்தப்பட்ட ஆப்பிள் பழச்சக்கை.
apple-butter n. புளிப்பேறிய ஆப்பிள் சாற்றில் வதக்கிய ஆப்பிள் சுவைச் சத்து.
apple-brandy n. புளிப்பேறிய ஆப்பிள் சாற்றிலிருந்து வடிக்கப்படும் சாராயம்.
apple n. ஆப்பிள்பழம்.
applausive a. பாராட்டி ஆர்ப்பரிக்கிற.
applause n. கைகொட்டி ஆர்ப்பரித்தல், உரக்கத்தெரிவிக்கப்பட்டஒப்புதல், ஆரவாரப்பட்டு.
applaud v. கைதட்டுவது மூலமாய் உடன்பாட்டினை உரக்கத்தெரிவி, ஆதரவு தெரிவி, மெச்சு, பாராட்டு, புகழ்.
appettitive a. பசியைத்தூண்டும் இயல்புடைய, ஆவலெழுப்புகிற,
appetizing a. பசிச்சுவை உண்டுபண்ணுகிற.
appetizer n. பசிச்சுவை பெருக்கும் பொருள்.
appetize v. பசியுண்டாக்கு, ஆராயத்தூண்டு.
appetite n. விருப்பம், நாட்டம், இயல்பான தேவைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஆவல், பசி, பசியார்வம், நுப்ர்ச்சி வேட்கை, இன்சுவைக்கவர்ச்சி.
appetent a. ஆர்வங்கொண்ட, பெருவிருப்புடைய.
appetence, appetency வேட்கை, ஆவல், விருப்பம், நாட்டம்.
appertain v. உரித்தாயிரு, சார்ந்திரு, பொருத்தமாயிரு, தொடர்புடையதாயிரு.
apperceptive, appercipient a. பொறிவுணர்வவாங்கிப்புலனுணர்வாக்கும் இயல்புள்ள, புதிய பொறியுணர்வைப்பழையஉணர்வுகளுடன் இணைக்கும் திறமுள்ள.
apperception n. மனத்தில் தன்னுணர்வு, உள்நோக்கு, உட்புலன் உணர்ச்சி, புலன் உணர்வு, முன்னறிவோடு புணர்த்தல்.
apperceive v. பொறியுணர்வை உளங்கொண்டு புலனுணர்வாக்கு.
appendix n. பிறசேர்க்கை, இணைப்பு, அனுபந்தம்(உள்.) முனை, முனை, ஓர் உறுப்பின் மேற்புறத்தினின்று தோன்றும் சிறிமுளை, குடல்முளை.
appendicular a. துணையுறுப்புச்சார்ந்த.
appendicle n. சிறுதுணையறுப்பு.
appendicitis n. குடல்முளை அழற்சி
appendicectomy n. குடல்முளை அகற்றுதல்.
appendant n. அண்டியிருப்பவர், அடுத்துள்ள பொருள், துணைப்பண்பு, இயல்பு.
appendage n. இணைப்பு, பின் ஒட்டு, தொங்கல், தொங்குபவர், பின்சேர்ப்பு, துணையுறுப்பு, சினை, புடை வளர்ச்சி, மிகை ஒட்டுப்பொருள், துணைப்பொருள், சார்பொருள்.
append v. ஒட்டு, ஒட்டித் தொங்கவிடு, இணை.
appellative n. பொதுப்பெயர், ஒருகுழுவினத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் வழங்கத்தக்க பெயர், இடுபெயர், (பெ.) ஒருவகுப்பைக் குறிப்பிடுகிற, பொதுவான பெயரீட்டுக்குரிய.
appellation n. பெயர், தனி மனிதருக்கு இட்டழைக்கும் குறிச்சொல், பட்டப்பெயர், இடுபெயர்.
appellate a. மேல்வழக்குச் சார்ந்த, மேல்முறையீடுகளை ஏற்று ஆஜ்ய்கிற.
appellant n. மேல் வழக்காடி, கீழ்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பவர், (பெ.) வேண்டுகோள் செய்கிற, (சட்.) மேல்வழக்குத் தொடர்பான.
appeasement n. ஆற்றுதல், தணித்தல், திருப்திப்படுத்துதல், தணிக்கப்பெற்றநிலை.
appease v. ஆற்று, தணி, சமாதானப்படுத்து, அமைதிப்படுத்து, இனமொழி கூறிச் சாந்தப்படுத்து, திருப்திப்படுத்து, பணம் கொடுத்துச் சரிப்படுத்து, விட்டுக்கொடுத்து இணக்குவி, ஆவல் நிறைவேற்று.
appeasable a. ஆற்றத்தக்க, அமைதிப்படுத்தத்தக்க.
appearance n. தோன்றுதல், வந்திருத்தல், தோற்றம், வெளித்தோற்றம், வெளிப்பகட்டு, பொய்த்தோற்றம், உருவெளித்தோற்றம், வெளிவரல்.
appear v. கண்ணுக்குத்தோன்று, முறைப்படி முன்னிலைப்படு, பலர்முன் காட்சியளி, பிரதிநிதியாகச் செயலாற்று, வெளிப்படு, வெளிப்படையாகப் புலப்படு, போன்று தோற்றமளி.
appealing a. கவர்ச்சியூட்டுகிற.
appealable a. மேல் வழக்காடத்தக்க, வேண்டுகோள் விடுத்ததற்குரிய.
appeal n. மேல் முறையீடு, மேல்வழக்கு, மேல்வழக்காடும் உரிமை, வேண்டுகோள், (வினை.) மேல்வழக்காடு, வேண்டுகோள்விடு, அழை, கவனிக்கும்படி செய், நோக்கிச்செயலாற்று, கவர்ச்சியூட்டு.
apparitor n. ரோமக் குற்றஇயல் நடுவரின் ஏவலர், பொது நீதிமன்றத்தின் அல்லது சமயத்துறை நீதிமன்றத்தின் அதிகாரி, கட்டியக்காரன், வாயிலோன்.
apparition n. பொய்த்தோற்றம், இறந்தவர்களின் உருவத்தோற்றம், ஆவியுரு, பேய்.
apparent a. தோற்றமான, வெளிப்படையான, எளிதில் உணரத்தக்க, மேலீடாகத் தோன்றுகிற, காட்சிமூலம் உணரப்பட்ட, உறுதிப்படுத்தப்பெறாத.
apparency n. வெளிப்படைத் தெளிவு, சட்டப்படி உறுதியான பின்னுரிழை.
apparel n. கிறித்தவ சமயக்குருக்கள் அங்கியிலுள்ள சித்திரப் பூவேலைப்பாடுகள் ஆடை, உடை, (வினை,) அணிவி ஒப்பனை செய்.
apparatus n. ஆய்கருவி, செய்கருவி, கருவிகலம், இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு, இயற்கை உறுப்பமைவு, ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்,
appalling a. திகைக்க வைக்கிற.
appal v. திகைச்சுவை அச்சுறுத்து.
apozem n. வடிசாறு, கியாழம்.
apotropaic a. தீங்குவிலக்குகிற தீமை விலக்கத்தக்க.
apotheosize v. தெய்வமாக்கு.
apotheosis n. தெய்வமாக்கல், புகழ்ந்து போற்றுதல், கடவுள்மங்கலம், பிரதிட்டை, அடியவர் குழாத்தில் சேர்த்தல், கொள்ளை வழிபாடு.
apostrophize v. இறந்தாரை அல்லது உடன் இராதவரை முன்னிலைப்படுத்திப்பேசு.
apostrophic -2 a. எழுத்தெச்சக்குறி சார்ந்த.
apostrophic -1 a. முன்னிலையணிக்குரிய.
apostrophe -2 n. எழுத்தெச்சக்குறி, உடைமை வேற்றுமைக்குறி.
apostrophe -1 n. முன்னிலையணி, சொற்பொழிவில் அல்லது பாட்டில் இறந்துபோன ஒருவரை அல்லது உடன் இராத ஒருவரை முன்னிலைப்படுத்தி விளித்தல், எதிரே இல்லாத ஒருபொருளை முன்னிலைப்படுத்தல். (தாவ.) பாசிய ஒதுக்கம், முனைத்த ஒளிக்கு விலகி உயிர்மங்களில் பாசியம் ஓரத்தில் ஒதுங்கல்.
apostolicism, apostolicity n. திருத்தூதர் நிலைக்குரிய இயல்பு.
apostolic, apostolical a. திருத்தூதர்களுக்குரிய, திருத்தூதர் இயல்புள்ள, போப்பாண்டவர் சார்ந்த, போப்பாண்டவர் நிலை சார்ந்த.
apostolate n. திருத்தூதர் நிலை, கொள்கை பரப்புவதில் முதன்மை, இயக்கத்தலைமை.
apostleship n. திருத்தூதர் நிலை.
apostle n. திருத்தூதர், இயேசு தமது கொள்கைகளைப் பரப்புவதற்கு அனுப்பிய பன்னிரண்டு திருத்தொண்டர்களில் ஒருவர், ஒரு நாட்டில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி வெற்றி கண்ட முழ்ல் தொண்டர், சீர்திருத்தத்தலைவா, செயல்துணையாளர்.
apostil, apostille பக்கக்குறிப்பு, ஓரக்குறிப்பு.
apostatize v. சமயக் கொள்கைகளை எதிர்ப்பவராகிவிடு.
apostatic, apostatical a. சமயத்தைத் துறக்கிற, கொள்கை மீறுகிற.
apostate n. சமயப்பகைவன், பழைய கொள்கைகளைக் கைவிடுபவன், (பெ.) சமயக் கோட்பாடுகளுக்கடங்காத.
apostasy n. கொள்கை மீறுகை, கட்சிமாறுதல், சமயஎதிர்ப்பு, சமயத்தலைமையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தல், கடமை தவறுதல்.
apositia n. உணவு வெறுப்பு.
aposiopesis n. வாசகத்தின் நடுவில் திடீரென நிறுத்தி உணர்ச்சி அல்லது ஆற்றல் பெருக்கிக் காட்டும் அணிமுறை.
aposematic a. (வில.) எச்சரிக்க உதவும் நிறம் சார்ந்த, எச்சரிக்கிற.
apoplexy a. வலிப்பு நோய், சன்னி, மூளையின் குருதிப்பெருக்கினால் பெரும்பாலும் விளைகிற உவ்ர்ச்சி செயல் ஆகியவற்றின் இழப்பு.
apoplectic, apoplectical a. வலிப்புநோய்க் குரிய, வலிப்புநோய் விளைவிக்கிற, வலிப்புநோய் கண்டுள்ள, வலிப்பு நோய்க்குள்ளாகும் பாங்குடைய.
apophthegmatic a. சுருங்கிய செறிமொழிகளாலான.
apophthegm n. பொருள் பொதிந்த உரை, செறிமொழி.
apopemptic a. பிரிவு குறித்த, பிரிவுபசாரமான.
apology n. செய்ததற்கு இரங்கல், குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுதல், மனமாரத் தெரிந்துசெய்த குற்றமல்ல என விளக்க உறுதிகூறல், சமாதானம், விளக்கம், வாத விளக்க ஆதாரம், பெயருக்குத் தகுதியற்ற ஆள், கண்துடைப்புப்பொருள்.
apologue n. நீதிக்கதை, கட்டுக்கதை, விலங்குகதை.
apologize v. இஜ்ங்கியுரை, காப்பு விளக்கங்கூறு.
apologist n. இரங்கியுரைப்பவர், வாதம் செய்து தன் சமயம் ஆதரிப்பவர், பட்டிமன்றம் ஏறித் தன்கோள் நிறுவுபவர்.
apologia n. தன்கோள் விளக்கும் எழுத்துமூலம்.
apologetics n. தன் சமயத்துக்கு ஆதரவான வாதம்.
apologetic, apologetical a. குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுகிற, செய்ததற்கு இரங்கும் இயல்புடைய, தவறுக்குக் காரணங்காட்டுகிற.
apollonian, apollonic அப்போலோவின் இயல்புகளமைந்த.
apolline n. அப்போலோ என்ற கிரேக்க தெய்வத்துக்குரிய.
Apollinaris n. பிரஷ்யா நாட்டில் ஆர் பள்ளத்தாக்கில் ஊறும் மருந்து நீர்.
apolaustic n. இன்பநாட்டக்கோட்பாடு,(பெ.) இன்பநுகர்ச்சி நாட்டமுடைய, தற்கட்டுப்பாடின்றி இன்பத்தில் மிதக்கிற.
apograph n. மெய்ப்படி, முற்றிலும் சரியான பகர்ப்பு.
apogeotropic a. நில ஈர்ப்பின் திசைக் கெதிராகத் திரும்புகிற.
apogee n. (வான்.) புவிச்சேணிலை, ஞாயிறும் திங்களும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலை, பூமி உச்சநிலை, முகடு.
apogeal, apogean நிலவுலகச் சேண்சார்ந்த, ஞாயிறும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலைசார்ந்த.
apogamy n. பால் கலவா மாற்றுத் தலைமுறையுடைமை.
apogamous a. பால் தொடர்பற்ற இன மரபுடைய.
apodyterium n. குளிப்புக்கூட ஆடை மாற்றும் அறை.
apodosis n. நிபந்தனை வாக்கியத்தின் முடிந்த வாசகம், தொடர் வாக்கியத்தின் நிலைவாசகம்.
apod n. கால்கள் அல்லது வயிற்றடிச்செதிள்கள் இல்லாத உயிரினம்.
apocryphal a. ஏற்கப்படாத, மேற்கோளாக ஏற்கப்படமுடியாத, ஐயத்துக்கிடமான, போலியான, கட்டுக்கதையான.
apocrypha n.pl. மறைவுச்செய்திகள்கிறித்தவத் திருமறைத்தொகுதியிலிருந்து பிரித்தொதுக்கப்ட்ட ஏடுகள்.
apocope n. கடைக்குறை, சொல்லின் இறுதி எழுத்தை நீக்கிவிடல்.
apocarpous a. (தாவ.) சூல் இணையாத, சூலகம் வேறாக உடைய.
apocalyptic, apocalyptical a. கடவுள் அருள் வெளிப்பாட்டுக்குரிய, கடவுள் அருள் வெளிபாட்டுத் தன்மை வாய்ந்த.
apocalypse n. கடவுள் அருள் வெளிப்பாட, தூயதிருயோவானுக்கு வெளிக்காட்டுப்பட்டட செய்தி, புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு, பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல்.
apnoea n. மூச்சு நின்றுபோதல்.
aplomb n. செங்குத்துநிலை, தன்னிறைவு, நிறைவமைதி.
aplantaic a. உருளாடிக்கோட்டம் சரிசெய்யப்பட்டுள்ள.
aplanat n. உருளாடிக் கோட்டத்துக்கு இடந்தராத முழு ஒளி ஓடுருவவல்ல கண்ணாடி ஈரொட்டுச் சில்லு.
aplacental a. கொப்பூழ்க்கொடியற்ற.
apivorous a. தேனீக்களைத் தின்கிற.
apish a. குரங்கின் இயல்புடைய, குரங்கின் தோற்றமுடைய, குரங்குபோல் நடந்துகொள்கிற, மடத்தனமான.
apiezon oils,. (தொ.) சேற்றெண்ணெய்த்துறையின் வளிவாங்கு வடிப்புமுறையின் பின் மீந்த ஆவியழுத்தக்குறைவான சரக்கு.
apiece adv. தனித்தனியாக, ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றுக்கும்.
apiculturist n. தேனீ வளர்ப்பவர்.
apiculture n. தேனீ வளர்ப்பு.
apices,n.pl.apex. என்பதன் பன்மை.
apical a. மேல் நுதிக்குரிய, முகட்டுக்குரிய, முக்கோணமேல் நுனிக்குரிய.
apiary n. தேனீப்பண்ணை.
apiarist n. தேனீ வளர்ப்பவர், தேனீக்களின் பழக்கவழக்கங்களை ஆய்பவர்.
apiarian a. தேன்கூட்டுக்குரிய, தேனீ வளர்ப்புக்குரிய.
apian a. தேனீக்கள் சார்ந்த.
aphylly n. (தாவ.) இலையின்மை.
aphyllous a. (தாவ.) இயல்பாகவே இலையற்ற.
aphtha n. கொப்புளவகை.
aphrodisiac n. இணைவிழைச்சினைத் தூண்டுகிற மருந்து, சிற்றின்ப நுகர்ச்சியைத் தூண்டும் பொருள்,(பெ.) இணைவிழைச்சுக்கு உரிய.
aphotic a. ஒளியற்ற, ஒளியின்றி வளரக்கூடிய.
aphoristic a. முதுமொழி, இயல்பான, சூத்திரவாய்பாடுடைய.
aphorist n. நுற்பா இயற்றுபவர், முதுமொழியாளர்.
aphorism n. நுற்பா, மணிமொழி, முதுமொழி.
aphorise v. மணிச்சுருக்கமாகக் கூறு, நுற்பா இயற்று.
aphonic, aphonous வாய்பேசாத.
aphonia n. நரம்புக்கோளாறமினால் பேச்சாற்றல் இழப்பு.
aphis n. செடிப்பேன், செடிச்சாறுகளை உறிஞ்சுவதும் ஒத்த இரு சிறகுப்ளை உடையதும் ஆகிய பூச்சிவகை.
aphidian a. செடிப்பேனுக்குரிய.
aphetic a. சொல்லின் முதல் உயிரெழுத்து மறைந்து போவதற்குரிய.
aphesis n. முதலுயிர்க்கேடு, சொல்லின் தொடக்கத்தில் ஒலியழுத்தம் பெறாத உயிரெழுத்து பையப்பைய மறைந்து போதல்.
aphelion n. ஞாயிற்றின் சேண், ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம்.
aphasic n. பேச்சிழப்புக் கோளாறுக்குரிய மருந்து,(பெ.) பேச்சிழப்புக் கோளாறுக்குரிய.
aphasia n. மூளைக்கோளாறினால் ஏற்படும் பேச்சிழப்பு.
aphaeresis n. (இலக்.) சொல்லில் முதற்குறை, தலைக்குறை.
apex n. மேல் நுதி, மேல் நுனி, உச்சி, முகடு, முக்கோணம் வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு, கோடி, முடிவிடம்.
apetalous a. (தாவ.) இதழில்லாத.
apery n. பிறர்போல் நடித்தல், குரங்கினதுபோன்ற செயல், குரங்கினம் கூடிவாழும் இடம், குரங்கு மனை.
aperture n. துளை, இடைவெளி, ஒளியியல் கருவிகளில் ஒளிக்கதிர் ஊடறுத்துச் செல்லும் இடையிடம்.
aperitif n. பசியெழுப்பும் நீர்மம், பசியூட்டும் மதுபானம்.
aperiodic a. கால ஒழுங்குப்படி நிகழாத, ஊசலாட்டமின்றி அமைந்திருக்கிற.
aperient n. பேதிமருந்து,(பெ.) குடல்இளக்குகிற, பேதியாகச்செய்கிற.
apercu n. சுருக்க விளக்கம், குறிப்புரை.
apepsia,apepsy வயிற்றுமந்தம், செமிக்கும் ஆற்றல் குறைவாயிருத்தல்.
apeak adv. (கப்.) செங்குத்தாக, நேர் நிமிர்வாக.
ape n. குரங்கு, வாலில்லாக்குரங்கினம், பிறரைக்கண்மூடித்தனமாய்ப் பின்பற்றுபவர், பிறர்போல் நடிப்பவர்,(வினை.) பிறரைக் கண்மூடிப் பின்பற்று, பிறர்போல் நடி.
apathy n. உவ்ர்ச்சியின்மை, அக்கறையற்ற நிலை, பற்றின்மை, உவர்ப்பு, மடிமை.
apathetic a. உணர்ச்சியற்ற, பராமுகமாயிருக்கிற, ஆர்வமில்லாத.
apartments n.pl. அறைகளின் தொகுதி.
apartmental,a; தனி அறைக்குரிய.
apartment n. தனி அறை.
apartheid n. தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக்கொள்கை, இன ஒதுக்கீடு.
apart adv. புறம்பாக, வேறாக, தனியாக, சார்பின்றி, ஒட்டாமல், சேராமல், பிரிந்து, நீங்கலாக.
apanage n. இளைய அரசகுடியினர் உயர் குடியினர் ஆதரவுக்கான ஏற்பாடு, மேல்வருமானம், ஒட்டுநிலம், சார்பு நாடு, இயல்பான அடை, துணைப்பண்பு.
apagoge n. மறுதலைத் தவறு மூலம் மெய்ம்மை எண்பிக்கும் முறை.
apache n. செவ்விந்தியர் இனக்குழு வகை, பாரிஸ் தெருவீணர்.
apace adv. விரைவாக, விரைநடையில்.
aorta n. கண்டரை, ஆதார நாடி, இதயத்தின் இடது ஏற்றறையிலிருந்து புறப்படும் பெரிய இரத்தக்குழாய்.
aoristic a. சிறப்பு வரையறையில்லாத, இறந்தகாலம் சார்ந்த.
aorist n. (இல.) பொது இறந்தகாலம், கிரேக்க முதலிய பண்டைமொழிகளின் இலக்கணத்தில் தொடர்ச்சி-இரட்டுற காலத்தை மட்டும் காட்டும் வினை வடிவம்,(பெ.) வரையறையில்லாத.
Aonian a. கிரீசில் உள்ள அயோனியாவுக்குரிய, அயோனியாவில் வதிவாதக் கருதப்பட்ட இசைக்கடவுளர்கட்குரிய.
Anzac(Australian-New_Zealand-Army_Corps) n. ஆஸ்திரேலியத் தண்டுப்படை வீரர், (பெ.) ஆஸ்திரேலியத்தண்டுப்படை சார்ந்த.
anywise adv. எவ்வகையிலாவது, எம்முறையிலேனும்.
anywhere adv. எங்காவது, எந்த இடத்திலாவது.
anyway.adv conj. எப்படியும், எந்த வழியிலாகிலும், எப்படியாவது.
anytime adv. எந்த நேரத்திலும், எந்த நேரத்திலாவது.
anythingarian n. எதிலும் நம்பிக்கையற்றவர்.
anything pron ஏதாவது ஒன்று, (வினையடை) சிறிதளவாவது, கொஞ்சமாவது.
anyone pron எவராயினும் ஒருவர்.
anyhow adv. எப்படியோ ஒருவகையில். ஏதோ ஒரு வழியாக, எது எப்படியானாலும், குறைந்த அளவிலாவது.
anybody pron எவரேனும் ஒருவர், எத்தகையவராயினும் ஒருவர்.
any pron யாராவது ஒருவர், ஏதாகிலும் ஒன்று.(பெ.) யாராவது, எவராவது, ஒருவராவது,ஏதாவது, எவ்வளவாவது, கொஞ்சமாவது, ஒன்றாவது,(வினையடை) எம்முறையிலேனும், எந்த அளவிலாவது, கொஞ்சமாயினும், ஒருவகையிலாவது.
anxious a. கவலையுள்ள, ஆவலுள்ள, ஆர்வமுடைய, அக்கறையுடைய, கவலைக்கிடமான.
anxiety n. கவலை, ஏக்கம், அக்கறை, பற்றார்வம்.
anvil n. பட்டடைக்கல், அடைகடல், (உட.) செவியெலும்புகளில் ஒன்று.
anus n. எருவாய், குதம், மலங்கழியும் வாய்.
anurous a. வாலில்லாத.
anuria n. சிறிநீர்ப் பிடிப்பு, சிறுநீர்த்தடை.
Anura n.pl. தவளைபோன்ற வாலில்லாத நீர்நிலை உயிரினம்.
antrum n. குடுவை, பொந்து, உடற்குழிவு, மேல்தாடை உள்வளைவு
antre n. முழைஞ்சு, மலைக்குகை.
Antonym dictionary எதிர்ச்சொல் அகராதி
antonym n. எதிர்ப்பொருட்சொல்.
antonomasia a. சிறப்புப் பெயரைப் பொதுப் பெயராக வழங்குதல், அடைமொழியையே இயற்பெயர் போல வழங்குதல்.
antliate a. உறிஞ்சு குழலுடைய.
antlia n. உறிஞ்சு கூம்பு விட்டில் வகைகளில் உறிஞ்சுகுழல்.
antlered a. கஹ்ர் கொம்புடைய.
antler-moth n. சிறகில் மான்கொம்பு போன்ற அடையாளங்கயடைய விட்டில் வகை.
antler n. மானின் முன்னெலும்பிலிருந்து கிளைக்கும் எபு வளர்ச்சி, மான்கொம்பு.
antivenene n. நச்சுமாற்று, பாம்பு நச்சுமாற்று.
antivaccinationism n. அம்மைகுத்தெதிர்ப்பு.
antitype n. மாதிரிப்படிவமுலம், நேர் எதிர்ப்பாமுகம்.
antitypal a. மாதிரிப்படிவ முலத்துக்குரிய.
antitrinitarianism n. முன்றொருமை மறுப்புக்கோட்பாடு.
antitrinitarian n. முன்றொருமைக்கோட்பாட்டை எதிர்ப்பவ்,(பெ.) முன்றொருமைக்கோட்பாட்டை மறுக்கிற.
antitragus n. செவிக்கரடு, புறச்செவியின் நுழைவாய் எதிர்ப்புடைப்பு.
antitoxin n. எதிர்நச்சு, நச்சுமுறி.
antitoxic a. எதிர் நச்சுத்தன்மை வாய்ந்த.
antithetic, antithetical a. முரணிசைவான, முரணான, முரண்பட்ட, நேர்எதிரான.
antithesis n. முரணிசைவு நயம், எதிரிணை இசைவமணி, எதிர்ஆய்வுரை, நேர்மாறு, எதிர்ப்பு.
antitheistic a. கடவுட் கொள்கைக்கு மறுப்பான, கடவுட் கோட்பாட்டுக்கு மாறான.
antitheist n. கடவுள் மறுப்பாளர், கடவுட்கோட்பாடு, எதிர்ப்பாளர்.
antitheism n. கடவுட் கொள்கை மறுப்பு, கடவுள் மறுப்புக் கொள்கை, கடவுட்கோட்பாட்டுக்கு மாறான கொள்கை, கடவுளெதிர்ப்பு.
antithalian n. களிப்பு எதிர்ப்பான, மகிழ்ச்சி வெறுக்கிற.
antistrophon n. வாத எதிர்வீச்சு, எதிர் மறுப்புவாதம்.
antistrophic a. மீனிசைக்குரிய, எதிர்ச்சந்தஞ் சார்ந்த.
antistrophe n. மீளிசை., கிரேக்க இசைக்குழுக்கள் முன்னேறிச் சென்று திரும்பும்சமயம் பாடும் பாடற்பகுதி, எதிர்ப்பாடல், எதிர்ச்சந்தம், சந்தப்போக்கு எதிர்மாறியஇசை, எதிர்நிரல்நிரை, எதிர்மறித்துரைத்தல், கூறியதைத்தலைமாற்றி மீண்டும் கூறல், எதிர்மறுப்புவாதம்.
antispastic a. ஏறிறங்கு நாலசைச்சீரான, ஈரசை ஏறுசீரும் ஈரசை இறங்கு சீரும் கூடிய.
antispasmodic n. நடுக்கு அப்ற்றும் மருந்து, (பெ.) நடுக்கமகற்றுகிற, துடிப்புத் தடுக்கிற.
antisociality n. மன்னாயப்பற்றின்மை, சமுதாய வெறுப்பு, மன்னலக்கேடு.
antisocialist n. மன்னாயத்ததுக்கு எதிரானவர், மன்பாசமற்றவர், மன்னுடைமை வெறுப்பவர்.
antisocialism n. மன்னலத்துக்கு எதிரான, மன்னலக்கேடான.
antisocial n. நச்சரி, நோய் நுண்மந்தடை, (பெ.) நோய் நுண்மங்களை அக்ஷ்க்கிற, நுண்மத்தடையான, நச்சுத்தடையான.
antisepsis n. நுண்ம அக்ஷ்ப்பு, நுண்மத்தடை, நுண்மங்க்ள வளர்ச்சியடையாமல் தடுத்தல்.
antisepalous a. புல்லிக்கு எதிரே உள்ள.
antiscriptural a. திருன்றை நுலுக்கெதிரான, மறைநுலுக்கு மாறான.
antiscorbutic n. கரப்பானுக்குரிய மருந்து, (பெ.) கரப்பான்வராமல் தடுக்கிற, கரப்பானைக் குணப்படுத்துகிற.
antiscian n. எதிர் மைவரையாளர், ஒரே மைவரையில் நடுநேர்வரையின் மறுபுறமுள்ளவர்,(பெ.) எதிர் மைவரைநிலையான.
antisabbatarian n. புண்ணிய கிழமை மறுப்பாளர், திருக்கிழமை எதிர்ப்பாளர், (பெ.) புண்ணிய கிழமை மறுக்கிற, திருக்கிழமை மறுப்புக்கு உரிய.
antirrhinum n. நொடித்தால் சுடக்கிடும் மலர்களையுடைய செடிவகை.
antirachitic n. கணைச்சூட்டுக்குரிய மருந்து, (பெ.) கணைச்சூடு தரக்கிற, கணைச்சூட்டைக் குணப்படுத்துகிற.
antiquity n. தொல்பழமை, பண்டைக்காலம், கிரேக்கரோமர் பெருவாழ்வுக்காலம், தொல்பழமைக்காலம், பழமைச்சின்னம்.
antiquities n.pl. பழமைச் சின்னங்கள், பழங்காலப்பண்புகள், பண்டைக்காலப் பழக்க வழக்கங்க்ள, தொன்மை நடைமுறைகள் தொன்மை நிகழ்ச்சிகள், முன்னை மரபு முறைகள்.
antique n. தொல்பழம் பொருள், பழமைச்சின்னம், அரும்பழமைப்பொருள், பழமைச்சேகர ஆர்வலரின் தேட்டப்பொருள், 'முருட்டுரு', முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுருவகை, (பெ.) தொல்பழமை வாய்ந்த, பழங்காலத்துக்குரிய, முதிய, நெடுநீள் காலஞ்சென்ற, பழம்பாணியான, முற்காலத்தடமுடைய, பண்டைக்காலப் பாணியைப் பின்பற்றுகிற.
antiquated a. பழமைப்பட்டுப்போன, காலங்கடந்த.
antiquate v. பழமைப்படுத்து, காலங்கடந்ததாக்கு.
antiquary n. பழமையார்வலர், பழம்பொருள் ஆய்வாளர், அரும்பழமைத் திரட்டாளர்.
antiquarianism n. பழமையாய்வு, பழமையார்வம், அரும்பழமை நாட்டம்.
antiquarian n. பழம்பொருள் திரட்டுபவர், பழம்பொருள் ஆர்வலர், 53 அங்குலத்துக்கு 31 அங்குலம் நீள அகலமுள்ள வரைதாள் அளவு, (பெ.) பழம்பொருள் ஆய்வு சார்ந்த.
antipyrin n. கீலெண்ணெயின் துணை விளைபொருள்களிலிருந்து எடுக்கப்டும் வாணிக மருந்துச்சரக்கு.
antipyretic n. காய்ச்சல் முரணி, காய்ச்சல் அகற்றும் மருந்து,(பெ.) காய்ச்சல் அகற்றும் தன்மையுடைய.
antipope n. போப்பாண்டவருக்கு எதிரானவர், போட்டிப்போப்பாண்டவர்.
antipole n. நேர் எதிரடியிடங்க்ள, எதிர்க்கோடிமுனை, எதிர்த்துருவம், நேர் எதிர்மாறு.
antipodes n.pl. எதிரெதிர் முகடுகள், கோளகையின் எதிரெதிர் நிலைக்ள.
antipodal -2 a. கோள எதிரெதிர் நிலையான, நேர் எதிர்மாறான, (கண.) நேர் எதிர்மாறான புள்ளிகளையுடைய.
antipodal -1 a. சூலகத்துளைக்கெதிரிலுள்ள, கருவகத்தில் கருவிற்கெதிரிலுள்ள.
antiphrastic, antiphrastical a. எதிர்மறைப்பொருள்தருகிற, போலிப்புகழ்ச்சியான.
antiphrasis n. நேர்பொருளுக்கு எதிர்மாறான பொருளில் சொற்களை வழங்குதல்.
antiphonic, antiphonical a. எதிரிணைப்பாட்டான, எதிர்ப்பாட்டான.
antiphoner n. இணையெதிரொலி, புகழ்ப்பாடல் ஏடு.
antiphonal,. Antiphonary n. எதிரெதிர்ப்பாடல் ஏடு, புகழ்பாடல் தொகுதி, (பெ.) எதிரெதிர் பாடுவதற்கு உரிய.
antiphon n. எதிரெதிர்ப்பாடல், திருக்கோயில் இணைக்குழு பாட்டு.
antiphlogistic n. வீக்கம் தணிக்கின்ற மருந்து,(பெ.) வீக்கம் அகற்றுகிற, வெப்புத்தணிக்கிற.
antipetalous a. இதழுக்கு எதிரிலுள்ள.
antiperiodic n. நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவததடுக்கும் மருந்து, (பெ.) நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவதைத் தடுக்கிற.
antipathy n. இயல்பான வெறுப்பு, நீடித்த உவர்ப்பு, எதிர்உணர்ச்சி, பணபொவ்வாமை, பண்புமுரண், இயல்பான முரண்பாடு, வெறுப்புக்குரிய பொருள், வெறுப்புக்குரியவர்.
antipathist n. வெறுப்பவர்.
antipathic a. நேர் எதிர்ப்பண்புடைய, (மரு.) நேரெதிர்க்குறிகளையுடைய.
antipathetic, antipathetical a. வெறுப்புடைய, எதிருணர்ச்சியுடைய, இயல்பிலே ஒவ்வாத, முரண்பட்ட பண்புடைய.
antiparallel n. எதிரிணை வரை, வெட்டுக்கோட்டின் மீது கோணங்களில் ஒன்றன் அப்ம் மற்றதன் புறத்துடன் ஒப்பாகக்கொள்ளும் இரு வரைகளுள் ஒன்று, எதிரிணை தளம், எதிரிணை வரைபோலமைந்த தளம், (பெ.) எதிரிணையான, குறுக்குகோட்டின் மீது அகக்கோணத்துடன் புறக்கோணம்ஒப்பாகக்கொண்ட.
antipapal a. போப்பாண்டவர்க்கு எதிரான, போப்பாண்டவரின் கொள்கை முறைக்கு எதிரான.
antiodontalgic n. பல்வவி தடுக்கும் மருந்து, (பெ.) பல்வலிக்கெதிராகப் பயன்படுத்தப்படத்தக்க.
Antiochian n. சிரியா நாட்டிலுள்ள அண்டியாக் நகரத்துக்குரிய, பண்டை ரோம நாட்டைச் சேர்ந்த அண்டியோக்கஸ் என்ற அறிஞரின் பொதுநிலைக் கோட்பாட்டுக்குரிய, அண்டியோக்கஸ் என்ற அரசருக்குரிய.
antinomy n. அறமுரண், முரண்பட்ட அறங்களின் இணைவு, ஆணை முரண், முரண்பட்ட கட்டளை இணைவு, மேலீடான சொல்லிசைவுடைய பொருள் முரண், முரணுரை.
antinomic, antinomical a. அறமுரணான, அறமுரணுடைய, முரணாணையான, உள்ளார்ந்த முரண்பாட்டுடன் சொல்லளவில் மேலீடாக இசைவான.
antinomian n. அற மறுப்பாளர், அறவொழுக்கத்தின் கட்டுப்பாடுடைமையை மறுப்பவர், அறங்கடந்த சமயப்பற்றாளர், கிறித்தவத் திருன்றையே அற அமைதியின் கட்டுப்பாட்டிலிருந்து கிறித்தவரை விடுவித்து விட்டமையால் கிறித்தவருக்கு அற ஓழுக்கம் வேண்டியதில்லை என்றும் சமயப் பற்றுறுதியே போதுமென்றும் நம்புபவர், (பெ.) அறமுறைக் சுட்டுப்பாடேற்காத, ஒழுக்கக் கட்டுப்பாட்டை மறுக்கிற.
antinode n. நள்ளிடைக்கணு, கணுவிடையே உச்ச அளவு அலைப்புடைய மையப்பகுதி.
antinodal a. நள்ளிடைக்கணு சார்ந்த, கணு இடையிடத்தின் வலிவு மையம் சார்ந்த.
anting n. எறும்பேற்றுதல், உயிருள்ள எறும்பையே பிறஉறுத்தற் பொருளையே சிறகுகளுக்குள் செருகுவித்து இற்ககையையும் தோலையும் துப்புரவாக்கும் பறவைகளின் செயல்.
antineutron n. எதிர் நொதுமின், நொதுமின்னுடன் கலந்து அதனுடன் தானும் வெற்றாற்றலாக அழிந்து போகின்ற மின்னியக்குறாத நுண்துகள்.
antinephritic a. குண்டிக்காய் பற்றிய நோய்களுக்கெதிராகச் செயலாற்றுகிற.
antimony n. அஞ்சனக்கல், கருநிமிளை, எளிதில் உடையுமியல்புடைய நீலச்சாயல் வாய்ந்த வெண்ணிறத் தனிப்பொருள்.
antimonite n. கருநிமிளை உப்புவகை, கருமிநிமிளை உப்புப்போன்ற கனிப்பொருள்.
antimonial a. அஞ்சனக்கல்லுக்குரிய, கருநிமிளை அடங்கிய.
antimonarchist n. முடியரசினை எதிர்ப்பவர், முடியாட்சி எதிர்ப்பாளர்.
antimonarchical a. முடியரசுக்கெதிரான, முடியாட்சியை எதிர்க்கிற.
antimnemonic n. நினைவாற்றல் தளர்த்துவது, (பெ) நினைவாற்றலைப் படிப்படியாகக் குறைக்கும் திறமுடைய.
antimetathesis n. எதிர் முரணணி.
antimetabole n. சொல்லெதிர் மறியணி.
antimask, antimasque n. இடைக்காட்சிக் களி நாடகம், உயர்நாடகங்களுக்கு முன்னோ இடையிலோ ஆடப்படும் களியாட்ட இடை நாடகம்.
antimalarial a. முறைக்குளிர் காய்ச்சலுக்கெதிரான.
antimacassar n. நாற்காலியுறை, சாய்மான இருக்கையுறை.
antilogy n. முரண், முரணுரை.
antilogous a. எதிர்மாறான, வெப்பத்தால் எதிர்மின் ஊட்டப்பட்ட.
antilogarithm n. எதிர் அடுக்குமூலம், முரண்மடக்கை.
antiknock n. உள்வெப்பாலையில் வெடிப்புத்தடுக்கும்பொருள்.
antihistamine n. 'எதிர் விழுப்புப்பொருள்', புண்ணுற்ற இடத்தில் குருதியில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் மருந்துச்சரக்குகளில் ஒன்று.
antihelix n. புறச்செவியின் உள்வளைவு.
antigen n. 'காப்பு மூலம்', அஸ்ற் பொருளிலிருந்து உயிரினைக் காக்கும் உயிர்த்தற்காப்புப் பொருளை உண்டுபண்ணும் பொருள் மூலம்.
antifriction a. உராய்வு தடுக்கிற.
antifouling a. கப்பல் அடிப்புறம் கெடாமல் பாதுகாப்பதற்குரிய,.
antidote n. மாற்று, மாற்று மருந்து, முறிவு.
antidotal a. மாற்றான, நச்செதிரான.
anticyclone n. எதிர் சூறாவளி, அழுத்தமிக்க கையத்திலிருந்து புறநோக்கிச் சுக்ஷ்ன்று செல்லும் வான்காற்று.
antics n.pl. கேலிக்குரிய கற்பனைவினை, சிறுகுறும்பு, ஆட்டபாட்டம்
anticlinorium n. (மண்.) வளைமடிப்புக்களடங்கிய மாபெருங் கவிகை மடிப்பு, மேல்வளைவுத்தொகுதி.
anticline n. (மண்.) நில அரக்கின் வளைமடிப்பு, மேல்வளைவு.
anticlinal n. (மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான, இருபுறச் சாய்வுடைய, (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள, (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.
anticlimax n. உயர்ந்தேறியிழிதல், சுவையிறக்கம், உணர்ச்சி நிலையில் வீழ்ச்சி.
anticlimactic a. உச்ச நிலைக்கு எதிரான, சுவையிறக்கமான.
anticlerical n. திருச்சபைப் பணியாளருக்கெதிரான கட்சியினர், (பெ.) திருச்சபைப் பணியாளருக்கெதிரான, திருச்சபைப் பணியாளரின் உரிமைகளை எதிர்க்கிற.
anticivic a. குடியுரிமைக்கெதிரான.
anticipatory a. எதிர்பார்க்கும் இயல்புடைய, எதிர்பார்க்கப்பட்ட, முன்னீடான.
anticipator n. எதிர்நோக்குபவர்.
anticipative a. எதிர்பார்க்கும் இயல்புடைய.
anticipation n. எதிர்பார்த்தல், கால முன்னிடைவு, முன்னறிவு, முன்செயல், முன்நிகழ்வு, முன்கருதுதல், முன்கருத்து, முன்னுணர்வு, முற்பாவனை, முன்சுவை, முன்முகம், (இசை.) பின் வரவெதிர் நோக்கிய முன்னீடு.
anticipate v. எதிர்பார், எதிர்நோக்கு, அவாவு, முன்கூட்டி நிகழ்த்து, முன்னதாகவே அமை, காலத்தை முற்படக்குறி, முற்படு, முன்நிகழ், முந்து, முந்திக்கொள், முந்துறக்குறி, அவசரப்படு, விரைவுபடுத்து, முன்னறி, முன்னரே உறுதிக்கொள், முன்னேற்பாடாயிரு, முன்கருதலாயிரு, முன்கருது.
anticipant n. எதிர்நோக்குபவர், (பெ.) எதிர்நோக்குகிற.
antichthones n.pl. நிலவுலகக் கோளகையின் நேர் எதிர் பாதியிலிருப்பவர், நேர் அகட்டு நிலையினர்.
antichristianism n. எதிர் இயேசுவின் ஆட்சி, எதிர் இயேசுவின் முறைமை அல்லது கோட்பாடு, கிறித்தவ சமய எதிர்ப்பு.
antichristian a. எதிர் இயேசுவுக்குரிய, கிறித்தவ சமயத்துக்கு எதிரான.
antichrist n. எதிர் இயேசு, இயேசுவின் எதிரி, எதிர்காலத்தில் வரப்போவதாக முற்காலக் கிறித்தவர் கருதியமறுஇயேசு.
anticholor n. 'எதிர்ப்பாசிகம்' தாள் உண்டுபண்ணும் தொழிலில் கூழில் படிந்துள்ள பாசிகத்தை இறுதியாக அகற்றக் கையாளப்படும்பொருள்.
anticatholic a. ரோமன் கத்தோலிக்க நெறியை எதிர்த்த, கத்தோலிக்க நெறியை எதிர்த்த, பொது நோக்கெதிர்த்த.
anticathjode n. ஊடு கதிருக்குரிய வெற்றுக்குழாயின் மின்னோட்டட இலக்கு, எதிர்மின் கதிர்களின் குவியம்.
antic n. கோணங்கி உருவம், கூத்தாடித்தனம்.
antibody n. (உட்.) நோய் எதிர்ப்பொருள், உயிரின் தற்காப்புப்பொருள், தீங்கு த அயற்பொருளுக்கெதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள்.
antibiotic n. உயிர் எதிரி, உயிர் வாழ்வுக்கு ஊறு செய்யும் பொருள், (பெ.) உயிர் வாழ்வுக்கு ஊறு செய்கிற, இயல்பான இனப்பகைத் தொடர்புடைய.
antibiosis n. உடன்வாழ்வொவ்வாமை, இயல்பான இனப்பகைத்தொடர்பு, ஓர் உயிரின் இயல்பான வாழ்க்கை விளைவான பொருள் மற்றொர் இன உயிரின் வளர்ச்சிக்குக் கேடாய் இருக்கும் தன்மை.
antibilious a. பித்தத்துக்கு எதிரான, பித்த மாற்றான.
antiar n. மலாய் நில நச்சுமரவகை, நச்சுப்பால், நச்சுப்பிசின்.
antiaditis n. தொண்டைச்சதை வளர்ச்சி.
anti-vivisectionist n. உயிரோடறுமை எதிர்ப்புக்கோட்பாட்டாளர்.
anti-vivisection n. உயிரோடறுவை எதிர்ப்பு,உயிருடன் விலங்கு சிற்றுயிரினங்களை அறுத்து ஆராய்வதை எதிர்த்தல்.
anti-vitamin n. எதிர் ஊட்டம் ஊட்டசத்தின் செயல் தடுக்கும் ஊட்டப்போலி.
anti-trade n. எதிர்தடக்காற்று,(பெ.) தடக்காற்றுக்கு எதிரான.
anti-tank a. இயங்கரணுக்கு எதிரான, வெடித்தொட்டியைத் தாக்குகிற.
anti-Semitism n. யூதப்பகைமை, செமித்திக் இனவெறுப்பு.
anti-Semitic a. யூதரை வெறுக்கிற, செமித்திக் இனத்துக்கு எதிரான.
anti-Semite n. யூதவைரி, செமித்திக் இனத்தை வெறுப்பவர்.
anti-saloon a. மதுக்கூடங்களுக்கு எதிரான, குடிவகைகள் அருந்தப்படும் அருந்தகங்களை எதிர்க்கிற.
anti-ritualistic a. வினைமுறையை எதிர்க்கிற, சடங்கெதிர்ப்பான.
anti-rabic a. வெறிநாய்க்கடியின் நச்சு அகற்றுகிற.
anti-proton n. எதிர்மின்னுட்டப்பட்ட நேர்மின்.
anti-personnel a. ஆள் தொகுதிக்கு எதிரான.
anti-national a. தாய்நாட்டுக்கெதிரான, நாட்டாண்மைக்கெதிரான, தேசிய எதிரியான.
anti-matter n. எதிர் மீப்பொருள், நிலவுலகப்பொருட்சூழல் கடந்த மறிமின் அல்லது மறிகாந்த ஆற்றலுடைய பொருளின் துப்ள்.
anti-league, anti-League a. நேசக்குழு எதிர்த்த, முதல் உலகப்போரின்பின் உருவான நேசதேசக்குழுவை எதிர்த்த, நேசதேசக் குழுவில் அமெரிக்க ஐக்கிய நாடுக்ள சேர்வதை எதிர்த்த.
anti-king n. எதிரரசன், போட்டியரசன்.
anti-Jacobin n. பிரஞ்சுப் புரட்சிக்கு எதிரானவர், (பெ.) பிரஞ்சுப்புரட்சிக்கெதிரான, புரட்சிக்கெதிரான, குடியாட்சிக்கொள்கைக்கு மாறான.
anti-Gallican n. பிரஞ்சுப்பண்பு வெறுப்பவர், (பெ.) பிரஞ்சுப்பண்பு வெறுக்கிற.
anti-federalist n. கூட்டாட்சி எதிர்ப்பவர், அமெரிக்க ஐக்கியநாட்டுக் கட்சி வகையினர்.
anti-federal a. கூட்டாட்சிநிலை எதிர்க்கிற.
anti-dysenteric n. அளைச்சலுக்கெதிரான மருந்து, (பெ.) அளைச்சலுக்கெதிரான.
anti-chorus n. எதிர் இசைக்குழு, இசைக்குழுவில் பாடலை எரத்திசைக்கும் குழு, எதிரிசைப்பாடல், இசைப்பாடலில் தொடுப்பு என்னும் உறுப்பு, அனுபல்லவி.
anti-alcoholist n. வெறிய வெறுப்பாளர், மதுபான விரோதி, வெறிக்குடி வெறுப்பவர்.
anti-aircraft a. விமான எதிர்ப்புக்குரிய.
antI n. எதிர்ப்பாளர், (பெ.) எதிரான, எதிர்ப்புச்செய்கிற.
anthroposophy n. மனித இயல்புபற்றிய அறிவு, மனித இன அறிவு, ருல்ல்ப் ஸ்டீனரின் கோட்பாடு.
anthropopsychism n. மன்னுணர்வேற்றம், இயற்கைக்கோ கடவுளுக்கோ மனித உள்ள உணர்ச்சிகளை ஏற்றுதல்.
anthropophagy n. மனிதத் தசை மிசைதல்.
anthropophagous a. மனிதரைத் தின்னுகிற.
anthropophagite n. மனிதரைத் தின்பவர், மனிதரைத் தின்னும் உயிரினம்.
anthropophagi n.pl. மனிதரைத் தின்பவர், மனிதரைத் தின்னும் மாக்கள்.
anthropopathism, anthropopathy n. இறைவனுக்கும் இயற்கைக்கும் பிற பொருட்களுக்கும் மனித உணர்ச்சி ஏற்றுதல்.
anthropopathic a. மன்னுணர்வேற்றுகிற, இறைவனுக்கும் இயற்கைக்கும் பிறபொருட்களுக்கும் மனித உணர்ச்சி கற்பிக்கிற.
anthropomorphous a. மனித வடிவில் அமைந்த, மனிதனைப்போன்ற.
anthropomorphosis n. மனித வடிவாக மாற்றுதல்.
anthropomorphitism n. மன்னியல் வழிபாட்டுக்கோட்பாடு, இறைவனை மனித வடிவுடையவராக் கொள்ளும் சமயக்கிளையின் கோட்பாடு, மனித வடிவங்கற்பித்தல், மனிதப்பண்பேற்றுதல்.
anthropomorphite n. மன்னியல் வழிபாட்டாளர், இறைவனை மனித வடிவு உடையராவக் கொள்ளும் கோட்பாடுடைய சமயக்கிளையினர், இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவு அல்லது பண்பு ஏற்றுபஹ்ர்.
anthropomorphist n. மன்புனைவாளர், இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவம் அல்லது பண்பு ஊட்டுபவர்.
anthropomorphism n. மன்னியல்பு சார்த்தும் கொள்கை, மனிதவடிவம் கற்பித்தல், மனிதப்பண்பேற்றுதல், இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனிதவுருஅல்லது பண்பு சார்த்துதல்.
anthropomorphise v. மன்னியலாக்கு, மனித உருவில் ஆக்கு, இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவு அல்லது மனிதப்பண்பினை ஏற்று.
anthropomorph n. மன்கலைவடிவம், கலைமரபு வழிப்பட்ட மனித வடிவின் சாயல்அமைவு.
anthropometry n. மனித இனநுல், மனி
anthropology n. மனித இன நுல், மனிதன் உடல் உளம் இரண்டும் சார்ந்த முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை.
anthropologist n. மனித இன நுலர்.
anthropological a. மனித இன ஆராய்ச்சிக்குரிய.
anthropolatry n. மனித வழிபாடு, மனிதரைக் கடவுளாக வழிபடுதல்.
anthropoidal a. மனிதக்குரங்குக்குரிய.
anthropoid n. மனிதக்குரங்கு, (பெ.) மனிதனைப்போன்ற மனித உருவான.
anthropography n. மன்னினப் பரப்பாய்வு, நிலஇயல் அடிப்படையான மனித இன ஆராய்ச்சி, நிலஇயல்அடிப்படையான மக்கள் இனங்களின் பரப்புப்பற்றிய ஆராய்ச்சி
anthropogeography n. மன்பதை நிலை நுல், மக்கள் இனங்க்ள உலகில் பரவி இருக்கும் பான்மை பற்றிய நுல்.
anthropogeny n. மன்முதலாய்வு, மனித இனத்தோற்ற ஆராய்ச்சி, மனித இனத்தோற்ற வரலாறு.
anthropogenesis n. மனித இனத்ததோற்றம் பற்றிய ஆராய்ச்சி
anthropocentric a. மன்மையமான, மனிதனை மையமாகக் கொண்ட, மனித இனத்தையே இயறகையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற, மனித உள்ளத்தினுடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற.
anthronic, anthropical a. மனித்ததன்மையுடைய, மாந்தரியல்புடைய.
anthrokpomorphic a. மன்புனைவான, இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவம் அல்லது மனிதப்பண்பு கற்பிக்கிற, மனிதப்பண்பு ஏற்றப்பட்ட.
anthrax n. நச்சுப்பரு, கால்நடைகளுக்கு உண்டாகும் ஆபத்தான நச்சுச் சீக்கட்டு.
anthracosis n. நிலக்கரித்தூள் கலந்த காற்றை உட்கொள்வதனால் ஏற்படும் நுரையீரல் நோய்.
anthracoid a. நச்சுப்பருப்போன்ற, கால்நடை நச்சுச் சீக்கட்டு மாதிரியான.
anthracitic, anthracitous a. மட்கரி சார்ந்த, நிலக்கீலற்ற நிலக்கரிக்குரிய.
anthracite n. 'மட்கரி', நிலக்கரிவகை, நிலக்கீல் சத்தற்றநிலக்கரி.
anthracic a. நச்சுப்பருவுக்குரிய, கால்நடைகளின் நச்சுச் சீக்கட்டுக்குரிய.
anthracene n. கீலிலிருந்து எடுக்கப்படும் சாய்ப்பொருள் மூலம்.
Anthozoa n.pl. கடற்பஞ்சு-பவழம் முதலியவற்றை உள்ளடக்கிய உயிரினங்களின் வகை.
anthophilous a. மலர்விருப்புடைய, பூப்பயில்கின்ற, பூமிசைகிற.
anthomaniac n. பூவெறியர்.
anthomania n. மலர்வேட்கை, பூவெறி.
anthology n. பாடல் திரட்டு, தொகைநுல், நுற்கோவை, மணிமொழித் தொகுதி, மலர்த்தொடையல்.
anthologist n. மலர்தொடுப்பவர், பாத்தொகுப்பாளர், நுல் திரட்டாளர்.
anthologise v. மலர்தொகு, பூத்தொகு, பாத்தொகு, நுல்திரட்டு, தொகை நுலாக்கு.
anthoid a. பூவடிவான, பூப்போன்ற.
anthocyan,anthocyanin n. காடிப்பொருள்களால் சிவப்பாகவும் காரப்பொருள்களால் நீலமாகவும் காடியும் காரமுமல்லாத நடுநிலைப்பொருள்களால் செந்நீல நிறமாகவும் மாறவல்ல செடியின் வெல்லச் சத்து, மலர் நிறத்துக்கு மூலமான வேதிப்பொருள்.
anthochlore n. மலர்களின் பொன்னிற வண்ணப்பொருள்.
anthocarp n. பன்மலர்களிலிருந்து ஒன்றுபட்டு உருவாகும் காய், பல்சுளைக்கனி.
anthesis n. அலர்வு, பூவிதழ்விரிவு, அரும்பவிழ்வு, மலர்வுக்காலம், அலர்ச்சி முதல் விதைபிடிப்பு வரையிலுள்ள மலர்ப்பருவம்.
antheroid a. (தாவ.) பூந்தாதுப்பை போன்ற.
antheriferous a. (தாவ.) பூந்தாதுப்பை உடைய.
antheridium n. (தாவ.) ஆண்பாலணுக்கள் உண்டாகுமிடம், ஆண் அணுவகம்.
antheral a. (தாவ.) பூந்தாதுப்பையைச் சார்ந்த.
anther n. (தாவ.) பூந்தாதுப்பை, மகரந்தப்பை.
anthemion n. பழங்கலையில் பயன்படுத்தப்பட்ட தளிர்க்கொடி வகைகளின் சித்திரப்படிவம்.
anthem n. உறழொலிப்பாடல், இசைப்பாடல், கோயிற்றிருப்பாடல், திருவிசைப்பா, நாட்டுவணக்கப்பாடல், தேசியகீதம்,(பெ.) இசைப்பாடலால் புகழ்.
anthelminthic,anthelmintic n. குடற்புழு அகற்றும் மருந்துப்பொருள்,(பெ.) குடற்புழு அழிக்கிற, குடலிலுள்ள புழுக்களை வெளியேற்றுகிற.
anthelion n. ஒண்ணிற முகில் வளையம், முகில்உறைபனிப்படலம் ஆகியவற்றிற்கு அப்பால் கதிரவ்ன ஒளிபடுவதால் ஏற்படும் வண்ண அருகுவளையம்.
anteriority n. காலத்தால் முந்தியது, முன்புறம் இருத்தல், முன்னிடம்.
anterior a. காலத்தால் முற்பட்ட, முந்திய, முன்நிகழ்வான, முன்புறமான, முன்பக்கமான, (தாவ.) காம்பின் கவட்டிலிருந்து எதிர்ப்புறமான.
anteprandial a. உண்டிக்கு முந்திய, சாப்பாட்டுக்கு முற்பட்ட.
antepenultimate n. ஈற்றயலடுத்தது, (பெ.) ஈற்றயல் அடுத்த, ஈற்றயலுக்கு முன்னான.
antepenult n. ஈற்றயல் அடுத்தது, கடையிரண்டு அடுத்தது.
antependium n. பலிபீடத்துக்கு முன்னாலுள்ள திரை.
antenuptial a. திருமணத்துக்கு முன் நிகழ்ந்த, திருமணத்துக்கு முந்திய.
antenniform a. உணர்கொம்பு வடிவான.
antenniferous a. உணர்கொம்பு தாங்கிய.
antennary a. உணர்கொம்பியல்புடைய, உவ்ர்ச்சியுறுப்புத்தாங்கிய.
antennal a. உணர்கொம்பினுடைய, உணர்ச்சியுறுப்புக்குரிய.
antenna n. உணர்கொம்பு, பூச்சிவகையில் உவ்ர்ச்சியுறுப்பு, (தாவ.) செடிவகைகளில் ஊருதல் தர அமைவு, வானலைக்கொடி, கம்பியில்லாத் தந்தியில் வானலை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு.
antenati n.pl. குறிப்பிட்டதொரு காலத்திற்கு முன் பிறந்தவர், ஸ்காத்லாந்தில் 1603க்கு முன் பிறந்தவர், அமெரிக்காவில் 1ஹ்ஹ்6க்கு முன் பிறந்தவர்.
antenatal a. பேறுகாலத்துக்கு முற்பட்ட.
antemundane a. உலகத்தோற்றத்துக்கு முற்பட்ட, உலகப்படைப்புக்கு முன் நிகழ்ந்த.
antemeridian a. நண்பகலுக்கு முந்திய, முற்பகல் சார்ந்த.
antelope n. மானியல் ஆட்டுவகை, மறிமான, மானினது போன்ற கொம்பினையுடையதும் அசைபோடுவதும் ஆகிய விலங்கினம்.
antediluvian n. விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர், ஊழி மூதாளர், நீள்வாழ்வுகண்டவர், முதுபேராளர், காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர், (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய, பழம்பேரூழி சார்ந்த, தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள, காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட, உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
antediluvial a. உலக்பபெரு வெள்ளத்துக்கு முற்பட்ட, முன்னுழிக்குரிய, மிகப்பழமைப்பட்ட, நாகரிகமற்ற.
antedate -2 v. முந்துநாள் குறி, மெய்யான தேதிக்கு முற்படத்தேதியீடு, முன்னாட்களுக்குரியதாக்கு, குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே செயல்முறைப்படுத்து, முற்படு, முன்தேதியுடையதாயிரு, விரைவுபடுத்து, முன்கூட்டிச்செல்.
antedate -1 n. மெய்யான காலத்துக்கு முற்பட்டதாக்க குறிக்கப்படும் காலம் முற்பாடாகக் குறிக்கப்பட்டகாலம்,
antechapel n. திருக்கோட்டத்தின் வாயிற்கூடம், கோட்டத்திருறன்.
antechamber n. இடைக்கூடம், கூடத்தின் முக்கிய அறைக்குச் செல்வதற்குரிய இடைவழியறை.
antecedents n.pl. முற்பண்புகள், முன்னடத்தை, முன்வரலாறு.
antecedent n. முன்னோடி, முன்னிகழ்ச்சி, முற்சான்று,(இலக்.) பொருள் முதற்சொல், மறுபெயர், மறுபெயரிணைவினையடுத்த இணை ஆகியவற்றின் குறிப்பு மூலமான சொல், மறுபெயர்-மறுபெயரிணை-வினையடுத்த இணை ஆகியவை குறிக்கும் மூலவாசம், (அள.) நிபந்தனை வாக்கியத்தின் நிபந்தனை வாசகம், (கண.) தகவெண்ணின் முகவெண், வீதஎண்ணிணையின் முன்னிணை.
antecedence n. முன்னிகழ்வு, முந்திய நிலை, முதன்மைநிலை, முற்பகுதி, முன்மொழி, பீடிகை, (வான.) கோளின் பின்னிடைவுத்தோற்றம், கோள்கள் மேற்கு நோக்கிச் செல்வதாகத்தோன்றும் தோற்றம்.
anteater n. எறும்பைத் தின்னும் விலங்குவகை.
ante-room n. முப்ப்பு அறை, முக்கிய அறைக்குச்செல்லும் இடைவழியறை.
ante-post a. பந்தய எண் அறிவிப்புக்கு முற்பட்ட.
ante-bellum a. போருக்கு முந்திய.
ante meridiem,(a.m.) முற்பகலில், நண்பகலுக்கு முன்.
ante -2 adv. முன்னால், மேலே.
ante -1 n. பந்தயச் சீட்டாட்டக்காரரால் சீட்டுப்பார்ப்பதற்கு முன்னே கட்டப்படும் பூச்சியினம்.
antarctic n. தென்துருவமடுத்த பெரும் பனிப்பரப்பு, (பெ.) தென்துருவமடுத்த, தென்துருவப்பகுதி சார்ந்த.
antaphrodisiac n. சிற்றின்பம் தணிக்கும் மருந்து, (பெ.) சிற்றின்ப வேட்கை தணிக்கிற.
antalkaline a. காரப்பொருளுக்கு எதிர்மாற்றான.
antakali n. காரப்பொருளுக்கு எதிர்மாற்றான பொருள்.
antagonize v. எதிரியாக்கு, எதிர்ப்பைத் தூண்டு, எதிர்ச்செயலாற்று, எதிர்ததுப்போராடு.
antagonistic a. எதிரான, எதிர்ப்பான, மாறான, பகையான.
antagonist n. எதிரி, பகைவன், (உட.) எதிர்த்தசை,(பெ.) எதிர்ச்செயலாற்றுகிற.
antagonism n. எதிர்ப்பு, பகைமை, முரண்பாடு.
antacid n. வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து, (பெ.) புளிப்பு மாற்றான, காடித்தன்மைக்கு எதிரீடான.
anta n. சுவர்ப்பட்டிகைக் கல், வாயிலருகே அல்லது மூலைஓரமாகச் சுவரில் குறுக்காகப் பதிப்பிக்கப்பட்டிருக்கும் பட்டிகைக் கல்,
ant-lion n. முட்டைப்புழுப் பருவத்தில் மணற்குழி செய்து எறும்புகளைப் பொறியிட்டுப் பிடித்துத் தின்னும் சிறகுடைப்பூச்சிவகை.
ant-cow n. 'தேனா', உடலிலுள்ள தேன் கசிவுக்காக எறும்பினத்தால் வளர்க்கப்படும் பூச்சியினம்.
ant-bear n. எறும்பைத்தின்னும் மிகப்பெரிய தென் அமெரிக்கக் கரடியினம், தென் ஆப்பிரிக்கக் கரடியினம்.
ant n. எறும்பு.
answerable a. மறுமொழி கூறத்தக்க, பொறுப்புடைய பொறுப்பேற்பதற்குரிய தக்க, நேர் எதிரான, ஒத்திசைந்த, அளவொத்த.
answer n. மறுமொழி, விடை, பதில், மறுப்பு,வினா எதிர்விளக்கம், புதிர் விடுவிப்பு, சிக்கலின் தீர்வு, ஒப்புக்கொள்ளுகை, எதிர்மாறு, மாற்று, எதிர்ச்செயல், எதிரொலி, (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு,(வினை.) மறுமொழிபப்ர், விடைகூறு, பதில் எழுது, எதிர்மாற்றம் அனுப்பு, இணங்கநட, இசை, இசைவாயிரு, அளவொத்திரு, ஒத்திசை, புதிர்விடுவி, பிரச்சனை, தீர்வு செய், தறுவாய்க்குப் போதியதாயிரு, நிறைவேற்று, சரியீடுசெய், தக்க தண்டனை பெறு, பொறுப்பேற்று நட, பொறுப்பேற்றுக்கொள், உத்தரவாதமாயிரு, விளைவு ஏற்றுக்கொள், தேறு, உறுப்படு, எதிர்ச்செயலாற்று, பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு, குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
anserine a. வாத்தின் இயல்புடைய, மடமை மிக்க, முட்டாள்தனமான.
anschluss n. ஐக்கியம்.
ansate a. கைப்பிடியுடைய.
anoxic a. உயிரகக் குறைபாடுடைய.
anoxia n. இழைமங்களுக்கு உயிர்வளியின் வருவளம் போதாமை, உயிரகக் குறைபாடு.
anourous a. வாலில்லாத.
another pron வேறொருவர், இன்னும் ஒருவர், இன்னும் ஒன்று, வேறொன்னு, ஒப்புடைய இன்னும் ஒருவர், ஒத்த இன்னொன்று (பெ.) வேறொரு, இன்னும் ஒரு, ஒப்புடைய ஒரு, இனத்தில் இன்னொரு.
anosmia n. முகர்வுணர்வு இழப்பு.
anorthic a. மூன்று முரண்பாடான ஊடச்சுக்களையுடைய.
anorexia, anorexy உணவவாவின்மை, பசிச்சுவையின்மை.
anorak n. வடதுருவப்பகுதியிலுள்ள மக்கள் அணியும் தலைக்கவிகையோடு கூடிய தோலால் அல்லது துணியால் செய்யப்பட்ட நீர் ஏறாத உரப்புவகை.
Anoplura n.pl. மூட்டைப்பூச்சியினம்.
anopheles n. கொசுவகை, முறைக்குளிர் காய்ச்சலுக்குரிய நச்சுக்கொசுவினம்.
anonymous a. பெயர் அறியப்படாத, எழுதியவர் பெயரில்லாத.
anonymity n. பெயர் தெரியப்படாநிலை, பெயர் மறைவுநிலை.
anonaceous a. சீத்தாப்பழ இனப்பிரிவு சார்ந்த.
Anona n. சீத்தாப்பழ இனம்.
anon adv. ஒரு கணத்துக்குள்ளாகவே, உடனே, உடனடியாக, விரைவில், இன்னொரு தடவை, என்ன அது.
anomophyllous a. ஒழுங்கு திறம்பிய இலை அமைப்புடைய.
anomocarpous a. வழக்கத்துக்கு மாறாகக் காய்கனியுடைய, வழக்கத்துக்கு மாறாக விளைந்த.
anomaly n. ஒழுங்கற்ற தன்மை, நெறி திறம்புதல், முறைகேடு, (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு, கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wiktionary.org/w/index.php?diff=prev&oldid=1140822.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|