Difference between revisions 1152227 and 1152228 on tawiktionaryzeta -2 n. அனலணுக் காப்பான தேர்வுக்கல அமைவு.
zeta -1 n. கிரேக்க நெடுங்கணக்கில் ஆங்கிலக் கடைசி எழுத்தின் ஒலிக்குரிய எழுத்து.
zealot -2 n. ரோம ஆதிக்கத்தை இடைவிடாது எதிர்த்த யூத வெறியர் குழுவினர்.
zealot -1 n. உணர்ச்சி வெறியர், முனைப்பர்வலர், விடாப் பிடிக் கொள்கையர்.
zambo n. நீகிரோ-ஐரோப்பியக் கலப்பினத்தவர்.
ygdrasil,yggdrasil மும்மை சால்மரம், ஸ்தாந்தினேவிய பழங்கதைமரபு வழக்கில் மூவுலகிலும் வேர்-கிளை பாயவிட்டிணைத் தெய்வீக மதம்.
yard -2 n. முற்றம், சுற்றுவட்டகைபெளி, (வினை) ஆடுமாடுகளைக் கொட்டிலில் அடை.
yap n. வள்ளொலி, நாயின் சிறுகுரைப்பு, (வினை) வள்ளென்று குரை, கீச்சொலியோடு குரை,(பே-வ.) வீண்பேச்சுப் பேசு.
yankeedom n. (பே-வ.) அமெரிக்க நாடு, அமெரிக்க மக்கள் தொகுதி, அமெரிக்க பண்பு.
xenial a. விருந்தோம்பும் பண்பு சார்ந்த, விருந்தினர்-விருந்தோம்புநர் நல்லுறவிற்குரிய.
yawl -2 n. (அரு.) கூக்குரல், ஊளையிடும் ஒலி, (வினை) கூக்குரலிடு, ஊளையிடு.
yawl -1 n. சிறுபடகு, நொய்தான இன்ப உலாப்படகு, மீன் பிடிக்கும் படகு.
yaw n. விலாத்தீடு, கப்பல் நெறிக்கோட்டம், கப்பல் நெறித்திறம்பீடு, புடை தடுமாற்றம், விமானவழித் தடுமாற்றம், விமான வழி விலகீடு, (வினை) விலாத்து, கப்பல்-விமானம் முதலியவற்றின் வகையில் தள்ளாடிச்செல், வளைந்து வளைந்து செல்.
yea n. ஆம் எனுஞ்சொல், இணக்கந் தெரிவிக்குங் குறிப்பு ஏற்பு வாக்களிப்பு, ஆம் அப்படித்தான் அப்படியே, உண்மையாகவே, இன்னும் மேலாக, இன்னுஞ் சொல்லப்போனால், என்றுமட்டுமல்ல - இன்னுஞ் சொல்ல வேண்டும்.
witenagemot n. அறிஞர் பேரவை, முற்கால ஆங்கில இனத்தவரிடையே நாட்டு-இன மாமன்றம்.
Wellsian a. எச், ஜி, வெல்ஸ் (1க்ஷ்66-1ஹீ46) என்பாருக்குரிய.
weave n. நெசவுப்பாணி, (வினை.) நெய், நெசவுத் தொழிலாற்று, நுலால் செய்து துணியாக்கு, செய்திகளைப் புனைந்து கதை உருவாக்கு, விவரங்களைப் புகுத்திக் கதைகட்டு, செய்யுளியற்று, சதிசெய், சூழ்ச்சி பண்ணு, (பே-வ) ஏய்த்துப்பசப்பு.
weathering n. காற்றுவாட்டச் செலவு, வானிலைப்பாடு, (மண்.) வானிலைப்பதம், (க-க) கட்டுமான முகட்டுத் தளச் சாய்வு, (அரு.) வானிலைகள்.
weathered a. இயல்வளிப்பட்டுப் பதமான, (க-க) தண்ணீர் வடியும்படி சாய்வாகக் கட்டியமைக்கப்பட்ட, (மண்.) இயல்வளி நிலைமாற்றங்களால் மேற்பரப்பில் பண்பு படிவ ஆக்க மாறுபாடுகளுற்ற.
wear -1 n. ஆடையணி, உடுத்துதல், உடை, உடுக்கப்பெறல், ஆடைகளாகப் பயன்படுத்தப்படுதல், அணியப் பெடும் பொருள், காலத்தில் வழங்கப்படும் உடை, ஏற்ற ஆடை, வழங்கீட்டுத் தேய்மானம், தேய்மானத்தை எதிர்த்துத் தாங்குந் திறன், (வினை.) ஆடை உடுத்துக்கொள், அணிமணி தரித்துக்கொள், பூண் ஆ
wean -2 v. பால்குடி மறக்கச் செய், பால்மாறாச் செய், பழக்கத்தொடர்பு விடுவி.
wean -1 n. ஸ்காத்லாந்து வழக்கில் குழந்தை.
weal -2 n. சவுக்கடி வரித்தழும்பு, பிரம்புத்தடம், (வினை.) சவுக்கடியால் வரிவரியாகத் தழும்பெழும்பு, வரிவரியாகத் தடம் படப்பிரம்பாலடி.
weal -1 n. இன்னலம், சேமம், வாழ்வு வளம், நற்பேறு.
wear -2 v. (கப்.) சுக்கான் பிடியைத் திருப்பிக் கப்பலை வேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்.
wax -3 v. பிறை வகையில் வளர்ந்துகொண்டு போ, ஒளிமிகுந்து கொண்டு செல், பெருக்கமடைந்து கொண்டு செல், வரவர ஆகிக்கொண்டுசெல், ஆகத்தொடங்கு, (செய்.) பெருகு, பெரிதாகு, வளர்வுறு.
wax -2 n. (பே-வ) திடீர்ச் சீற்ற எழுச்சி.
wax -1 n. மெழுகு, தேன்மெழுகு, தேனடையின் சக்கை, விளக்குக்குப் பயன்படும் தூய்தாக்கப்பட்ட வெண்மெழுகு, மெழுகொத்த பொருள், சிலவகைப் பூச்சிகளின் மெழுகொத்த சுரப்பு, காதுக்குறும்பி, ஒலிப்பதிவு கருவு, (பெ.) மெழுகினால் செய்யப்பட்ட, (வினை.) மெழுகிடு,மெழுகு மேற்பூச்சிடு,
wavy -2 a. அலையலையான, விழுந்தெழுந்து செல்லுகிற.
wavy -1 n. பனிப்பிரதேச வாத்து வகை.
wattle -2 n. தசைத் தொங்கல்.
wattle -1 n. மிலாற்றுப்படல் வேய்வு, வேலிகள்-சுவர்கள்-கூரைகள் வகையில் பின்னி முடைதற்கான கம்பு வழிகள், இடையீட்டுத் தடைவேலி வகை, (வினை.) கழிகம்புகளை இடை மிடைந்து பின்னு, மிலாற்றுப்பாடல் அடை.
watery a. நீராளமான, மிகுதியும் நீர்கொண்டுள்ள, பெரிதும் ஈராமான, கண்கள் வகையில் நீர் கசிகிற, உதடுகள் வகையில் எச்சில் வடிகிற, நீர்த்த, நீர்மங்கள் வகையில் நீர்கலத்தலால் செறிவு குறைக்கப்பட்ட, நீர்போன்ற, சொல்லமைப்பு-பேச்சு-எழுத்து நடை வகையில் சுவையற்ற, சத்தற்ற, செறிவற்ற, எழுச்சியற்ற, மந்தமான, கிளர்ச்சியற்ற, கவர்ச்சியற்ற, வலுக்குறைந்த, நிறம் வகையில் வெளிறிய, சாயம்போன, மழைவருங்குறிகாட்டுகிற.
watershed n. ஆற்றுப் பள்ளத்தாக்குகள் இரண்டினைப் பிரிக்கும் வரை, (பே-வ) நீர் கீழ்நோக்கிப் பாயுஞ் சரிவு, (பே-வ) ஆற்றுப் பள்ளத்தாக்கு.
water n. நீர், மழைநீர், கண்ணீர், வியர்வை நீர், உமிழ்நீர், சிறுநீர், ஊனீர், கடல், ஏரி, ஆறு, நீர்நிலை, வேலைநீர், கடலின் ஏற்ற இறக்க நிலை, நீர்க்கரைசல், மருத்துக்கலவை அலம்பு நீர்மம், மணிக்கல்லின் ஒளிநீரோட்டம், கழுவுநீர், கழிவுநீர், நிதித்துறையில் புதிய பங்குவெளியீட்டினால் ஏற்படும் பெயராளவான முதலீட்டுப்பெருக்கம், (வினை.) தாவரங்களுக்கு நீர் தெளி, பயிர்களுக்கு நீர் பாய்ச்சு, நீராளமாக்கு, பால்-தேறல் முதலியவற்றில் நீர் கலந்து கலப்படஞ் செய், நீரருத்து, குதிரை-கால்நடை ஆகியவற்றிற்குத் தண்ணீர் காட்டு, கால்நடை வகையில் நீர்குடிக்க நீர்நிலைக்குச் செல், ஊர்தி-பொறி வகையில் நீர் ஊற்றப்பெறு, கப்பல்-தொடர் ஊர்தி ஆகியவற்றின் வகையில் நீர் நிரப்பிக்கொள், கண் வகையில் கண்ணீர் ததும்பப்பெறு, நா வகையில் உணவு உணர்வில் நீர் ஊறப்பெறு, பட்டுத்துகில் வகையில் அலையலையான தோற்றந் தருதற்காக நனைத்து அழுத்து, வாணிகச் சங்க வகையில் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் பெயரளவான மூலதனப் பெருக்கம் உண்டுபண்ணு.
waste n. பயனின்மை, வீணான நிலை, பாழடிப்பு, வீணடிப்பு, வீண்செலவு, பயனழிவு, வீணாகிவிட்ட பொருள, பயனற்ற பொருள், வீண்பொருள், பயன்தீர்ந்த பொருள், கழிவுப்பொருள், சக்கை-சவறு, தரிசு நிலம், வன்பாலை, மக்கள் வாழ்வற்ற இடம், பயனில் வளர்ச்சி, காட்டு வளர்ச்சி, பயனில் மிகுதி, கவர்ச்சியற்ற, பாழ்ப்பரப்பு, வெறும்பாழ், தேய்மானம், சேதாரம், நடைமுறைத் தேய்வுமாய்வு, (சட்.) அழிமதி, குடிவாரத்தாரின் தவறினால் ஏற்படும் உடைமை அழிவுக்கேடு, (பெ.) பாழான, வன்பாலையான, தரிசான, மக்கள் வாழ்வுக்கிடந்தராத, மக்கள் வாழ்வுற்ற, வீணாகக் கிடக்கிற, பயன்படுத்தப்படாத, பயன்படாத, வெறும்பாழான், கவர்ச்சியற்ற, பயன்படாப் பரப்பான, கவர்ச்சியற்ற பரப்பான, இடைக்கவர்ச்சி வேறுபாடற்ற, பயனற்ற, வீணான, பயன் தீர்ந்த, கழிக்கப்பட்ட, கழித்தொதுக்கப் பட்ட கழிவான, பயன்படா விளைவான, பயன்படா வளர்ச்சியான, பயன்படாக் கிளைவிளைவான, வேண்டா அளவான, பயனில் அளவான, பயன்படா விளைவான, பயன்படா வளர்ச்சி யான, பயன்படாக் கிளைவிளைவான, வேண்டா அளவான, பயனில் அளவான, பயன்படா அளவான, பயன்படுத்தாது கழிகிற, பயன்படாது கழிகிற, (வினை.) வீணாக்கு, பாழடி, வீணாகச் செலவு செய், வீண் பெருஞ்செலவு செய், வீணழிவு செய், பயனின்றிப் பொருளை அழிவு செய், பயனின்றி வறிதாக்கு, பயனின்றி ஆற்றலை வீணாக்கு, பயனின்றி நேரங்கழி, வீணாகக் கழி, வீணடிப்புச் செய், நன்றியற்ற செயலாக்கு, தேய்வுறுத்து, நலிவி, மெலியச் செய், வாட்டு, வதக்கு, தேய்வுறு, நலிவுறு, மெலிவுறு, வாடு, வதங்க, சூறையாடு, சுட்டுத்தீக்கிரையாக்கு, கீழ்வாரத்தார் வகையில் இழிப்பழிவு உண்டுபண்ணு.
wasp -1 n. குளவி.
wash n. கழுவுதல், கழுவப்பெறுதல், ஆடை துவைப்பு, ஆடை அலக்கீடு, வெளுப்புக்கிடும் துணிமணித் தொகுதி, வெளுக்கப்படுந் துணிமணித் தொகுதி, வெளுத்து வந்த துணிமணித்தொகுதி, நீரலம்பீடு, நீரலம்பொலி, நீர்போழ் வலைவு, கப்பல் நீர்கிழத்துக்கொண்டு செல்வதால் உண்டாகும் அலைகள், நீரரிப்பு, நீரரிப்பு மண், நீரினால் அடித்துக்கொண்டு போகப்பட்ட மண், அரிப்பு வண்டல், ஆறிடுமண், கழிவுக்கழுநீர், பன்றிகளுக்குக் கொடுக்கப்படும் காய்கறிக் கழிவுத்துண்டுகளுடன் கூடிய காய்கறி கழுவிய நீர், பாழ்ங்கஞ்சி நீர், செறிவு குறைந்த நீராளக் கரைசல் நீர்மம், மட்ட நிர்மம்,பிதற்றல், பயனற்ற பேச்சு, கழுவுநீர்மம், அலம்புநீர்மம், நோய்த்தடை மருத்தலம்பு நீர்மம், மருத்துவப்பூச்சுக் குழைவுநீர்மம், மேற்பூச்சு வண்ண நீர்மம், ஒப்பனை நீர்மம், நீர்வண்ணச்சாயம், (வினை.) கழுவு, அலம்பு, மேலோடி அலம்ப விடு, அலம்பிச் செல், உடம்புறுப்புக்களை நீரால் அலம்பு, கழுவித் துப்புரவுப்படுத்து, கழுவிக் கறைநீக்கு, அலக்கு, சலவைத்தொழில் செய், ஆடைவெளு, சாயப்பொருள், வகையில் துவைப்பில் நிறம் இழக்காமலிரு, ஈரமாக்கு, ஆறு-கடல் வகையில் நீர் கரையலம்ப விடு, பாயும் நீர்ம வகையில் குறிப்பிட்ட திசையில் அடித்துக்கொண்டு செல், பாறை றகவிந்தடித்து வெறுமையாக்கு, குடைந்தெடு, தோண்டு, நீர் சிதறடித்துக்கொண்டு செல், துடைத்தழித்துக்கொண்டு செல், உலோகக் கலவையை நீர்விட்டுச் சலித்தெடு, தூரிகை கொண்டு நீர்வண்ண மென்பூச்சுக்கொடு, மட்டமான மெல்லிய பொன்மூலாம் பூசு.
was v. 'பீ' என்பதன் தன்மை-படர்க்கை இடங்கள் சார்ந்த ஒருமை இறந்த கால வடிவம்.
warm n. வெதுவெதுப்பானது, படைத்துறை மேற்சட்டை, குளிர் காய்வு, குளிர் காய்வுதவி, குளிர்காய்விப்பு, மூட்டம், குளிர்காய்வமைவு, வெப்பூட்டமைவு, (பெ.) மிகு வெப்பான, மிகு உடல் வெப்பநிலையுடைய, உடல்வெப்பநிலை மிகுதியாய்விடப்பெற்ற, ஆடைவகையில் உடடைலக் கதகதப்பாக வைத்திருக்கிற உதவுகிற, மனமார்ந்த, மனமுவந்த, சிரத்தையுள்ள, ஆவலுள்ள, ஆர்வமிக்க, கிளர்ச்சியுடைய, விறுவிறுப்பான, எழுச்சிமிக்க, கிளர்ச்சிமிக்க, சினமுடைய, தீவிரமான, மனவெழுச்சி கொண்ட, இடரார்ந்த, நிலைபெறச் செய்யமுடியதபடி இடர்ப்பாடான, உணர்ச்சி வகையில் இரக்கமுள்ள, உணர்ச்சி வசப்படுகிற, அன்புமிக்க, எளிதில் பதியத்தக்க, ஏற்குந்தன்மையுள்ள,வண்ண வகையில் வெப்பத்தைத் தோற்றுவிக்கிற சிவப்பு-மஞ்சள் நிறமுடைய, மோப்ப வாடை வகையில் புதிதாகவும் கடுமையாகவும் உள்ள, குழந்தைகள் மறைந்து பிடிக்கும் விளையாட்டில் மறைவிடத்திற்கு மிக அருகில் உள்ள, கண்டுபிடிக்கும் தறுவாயிலுள்ள, நல்ல நிலையிலுள்ள, செல்வமிக்க, வளவாய்ப்பு நிறைந்த, (வினை.) சூடுபடுத்து, சுடவை, குளிர்காயவை, ஆடையை உலர வை, நன்றாக அடித்து நொறுக்கு, ஆவல்கொள், ஆர்வங்கொள், எழுச்சிகொள், சுறுசுறுப்பாடை, பரபரப்புக்கொள், ஒத்துணர்வுகொள்.
ware -2 a. (செய்.) கவன நிலையிலிருக்கிற, தெரிந்துள்ள நிலையிலிருக்கிற, உணரு நிலையிலுள்ள.
ware -1 n. செய்கலம், விற்பனைக்காகச் செய்யப்படும் பொருள்கள், மட்கல வகை, செய்தாக்கப்பட்ட விற்பனைப் பொருள்கள்.
warden -2 n. கறிக்குதவும் பேரியினக் காய்.
warden -1 n. பாதுகாவலர், எல்லைக்காவலர், அரண் காவலர், துறைமுக ஆட்சிக்காவலர், போர்க்கால விமானத் தாக்கு நேரப் பொதுநிலைப் பாதுகாப்பு முறையாளர், சிறைக்கூட மேற்காப்பாளர், மாணவர் இல்ல மேற்பார்வையாளர், கல்வி நிறுவனப் பொதுப் பொறுப்பாளர், (அரு.) காவல் நிலையினர், நிலைகாவலர
ward n. இளங்கணர், முதுகணாளரின் பாதுகாப்பில் இருப்பவர், முதுகண்மை, முதுகணாளர் மேற்பார்வை, நகர்வட்டம், நகரின் உட்பிரிவு, கூடம், சிறை-மருத்துவமனை-ஏலார் விடுதி ஆகியவற்றின் பிரிவு, மருத்துவமனைப் படுக்கைத்தொகுதி, காவல் பாதுகாப்புக் கவனிப்பு, காப்பாரண் மாளிகைக் காவற்கூடம், (பழ.) வாட்போரில் தடுப்பு முறை, (அரு.) முதுகணாளர் பாதுகாப்பு, (அரு.) சிறைகாப்பு, சிறைகாவலீடு, (வினை.) வாட்போரில் தடுப்பு முறை கையாளு, எதிர்த்துத் தாக்கிக் தடு, தடுத்துக் காப்பாற்று, கடவுள் வகையில் தடுத்தாளு, காத்தமை, தடுப்புக்காப்புநிலையில் போரிடு, பாதுகாப்புப் போரிடு, கூடத்தில் வை, கூடத்தில் அமர்வி.
warble -2 n. பிடர்க் கரணை, சேணம் கட்டுவதால் குதிரை முதுகில் ஏற்படும் காழ்ப்புப் புண், உண்ணிக் கழலை, உண்ணியின உயிரினால் குதிரைக்கு ஏற்படும் புண்.
warble -1 n. பாடும் புள்ளிசைப்பொலி, நீள் அதிர்குரல் பண்ணிசைப்பு, (வினை.) பாடும் புள் வகையில் நீளதிர் குரல் இசைப்பொலியுடன் முரலு, நீளதிர் குரல் எடுத்து இசை, தனி நீளதிர் குரலில் பாடு, முரலு, மென்குரலில் பாடு, புள்ளிசைப்புக் குரலுடன் பேசு, மெல்லிசைக் குரலுடன் கூறு,
wanting a. தகுதியில் குறைபட்ட, பண்பு வகையில் போதாத, இல்லாக்குறையுடைய, போதாக்குறையுடைய, (பே-வ) அறிவுபற்றாத, இல்லாமல், குறிப்பிட்ட அளவில் குறைபட்டு, குறைபட.
Walloon n. பெல்ஜியம்-பிரான்சு ஆகிய நாட்டுப் பகுதிகளில் வாழும் இனமரபினர், வாலுன் மரபினரின் பிரஞ்சு மொழிவகை, (பெ.) வாலுன் மரபினத்தவருக்குரிய, வாலுன் மரபினரின் வழக்கு மொழி சார்ந்த.
wallaby n. சிறுகங்காரு வகை, (பே-வ) ஆஸ்திரேலியர்.
wall n. சுவர், வளாகப் புறமதில், மதிலகச் சுற்றுச்சுவர், கட்டடத்தின் பக்கக் கட்டுமானம், அறையின் புடைச்சுவர், கோட்டை மதில், மதிலரண், பக்க மதில், பெட்டியின் பக்கப் பலகை, பொருளின் பக்க பகுதி, சுவர் போன்ற பக்கத் தட்டு, அறைகளின் இடைச்சுவர், இடைத்தடுப்பு, இடைப்பிரிவு, மதில்போன்ற இயற்கையமைவு, மதில்போன்ற தடை, எல்லைத் தடைவேலி, தடையெல்லை, குறுக்கிட்டுப் பளாம், ஊடுதடை, வழித்தடை, அரணடைப்பு, பாதுகாப்பமைவு, தொங்கலாதார அமைவு, பாதையின் ஓரம், நடைபாதையின் புற ஓரம், சீன ஒட்டுச் சில்லாட்டத்தில் ஆடுவதற்கு முன்னுள்ள ஆட்டச் சில்லுகளின் அடுக்கு, தாழ்வாரப் பாறை, சுரங்கக் கொடிக்கால் சூழணுக்கப் பாறை, (உள்.) உடல்-உடலுறுப்பு-உயிர்மக்கூறுகளின் சூழ்புறப் பகுதி, (தாவ.) சுற்றுப்புற இழைமம், (வினை.) சுவர் எழுப்பு, சுவர் அடைப்புச் செய், சுவரிட்டு வளை, மதிற்காப்பளி அரண்காப்புச் செய், தடைகாப்புச் செய், பாதுகாப்பு உண்டுபண்ணு, துளையினை அடை, வழியடை, இடைச்சுவரிட்டுப் பிரி.
walk n. நடத்தல், நடை, நடமாட்டம், நடந்து செல்லுதல், நடைப்பாணி, நடந்துசெல்லும் முறை, நடவேகம், நடைத்தொலைவு, உலா, உலாச்செலவு, உலாவரவு, உலாவிடம், உலாவுதற்கேற்ற இடம், தனி மனிதர் விருப்பார்வ உலாவிடப்பாதை, நடைபாதை, நடைபாதை வழி சாலை, இருபுற மரவரிசைப்பாதை, ஒற்றையடிப்பாதை, நடைப்பந்தயம், கூட்டணியின் நடை ஊர்வலம், விலங்கினப் பயிற்சியிடம், வேட்டை நாய்ப் பயிற்சியிடம், சண்டைக் கோழி வளர்ப்பிடம், அகல்வெளிக் கோழிப்பண்ணை, தெரு விற்பனையாளர் சுற்றோட்டம், தெரு விற்பனையாளர் சுற்றோட்ட வட்டகை, நடத்தை, வாழ்க்கை முறை, வாழ்க்கைத்துறை, காட்டின் பகுதி, (வினை.) நட, நடந்து செல், நிலமீது செல், கால்நடையாகச் செல், மெல்லச் செல், ஊடாகச் செல், மீதாகச் செல், குறுக்காகச் செல், சுற்றிச் செல், நடந்து திரி, உலாவு, நடத்து, நடததிச் செல், உடனாக நடந்த செல், உடனாக நடத்தற் போட்டியிடு, நடத்தையுடையவராயிரு, நடந்து கொள், ஒழுகு, மென்னடை நடனத்தில் ஈடுபடு,நடமாடு, பேய்வகையில் சுற்றி ஊடாடு, வேட்டைநாய்க்குட்டி வளையில் வளர்ப்புப் பொறுப்பை எடுத்துக்கொள், ( கப்.) முன்னேறிச் செல், (அரு.) எங்கும் சுற்றிச்செல், (அரு.) உயிரில் பொருட்கள் வகையில் இயங்கு, (பே-வ) நெசவு-நுல்-ஆடை ஆகியவற்றின் வகையில் அலம்பித துப்பரவு செய்.
waked v. 'வேக்' என்பதன் இறந்த கால-முடிவெச் வடிவங்களுள் ஒன்று.
wake -2 n. பின்காப்பமைதி, செல்லும் கப்பலின் பின்பக்கத்துள்ள உலைவு குன்றிய பின்பகுதி, பின்கல அலைவு,பறக்கும் வான்கலத்தின் பின்புறமுள்ள உலைவுமிக்க காற்றுப் பகுதி.
wake -1 n. திருக்கோயில் நிவந்த நோன்பு விழிப்பு, நோன்பு விழிப்பு விழாக் களியாட்டயர்வு, பிணக் காவல் விழிப்பு, பிணக்காப்பு விழிப்புக் களியாட்டம், (வினை.) உறக்கம் விட்டெழு, உறக்கம் கலை, விழிப்பூட்டு, உறங்காது விழித்திரு,விழிப்புக் கொள், விழிப்படை, அயர்வுநிலை அகற்ற
wage -2 v. போர்-சச்சரவு வகையில் நடத்து, கொண்டு செலுத்து.
wage -1 n. நாட்கூலி, உழைப்புக்கூலி, வேலைநேரக் கணிப்புச் சம்பளம்.
wag -2 n. குறும்பன், கேலிக்காரன்.
wag -1 n. அசைவாட்டம், ஓர் அசைப்பு, வாலாட்டம், (வினை.) உறுப்பினை ஆட்டு, வால் ஆடவிடு, உறுப்பு ஊசலாடச் செய், உறுப்பு வகையில் அடு, வால் வகையில் ஊசலாடு.
waffle -2 n. ஓயாத வீண் வம்பளப்புப் பேச்சு, (வினை.) ஒயாது சளசளவென்று வம்பளந்து கொண்டிரு.
waffle -1 n. குழிவப்பம், ஈரடைவுக் குழிவுக்கலத்தில் செய்யப்படும் இட்டலி போன்ற அப்பம்.
wad n. செம்முப்பொருள், இடை இடச்செறிப்பு மென்பொருள், துப்பாக்கிக்குழல் துளை அடைக்க உதவும் ஒட்டுக்கம்பளவட்டு, (வினை.) இடைவைத்துச் செம்மு, மென்பொருளை இடையே வைத்து அடை, திணி, மென்பொருளால் உள்வரியிடு, ஆள்-சுவர் முதலியவற்றிற்கு மெல்லடைப் பாதுகாப்பளி, துப்பாக்கிக் குழல் முதலியவற்றில் தொய்வுப்பொருளால் துளையை அடை, துப்பாக்கி மருந்தினை உராய்வின்றி இடைகாப்பிட்டு வை.
vulcanism n. எழுச்சிக் கோட்பாடு, பாறை வகைகள் பெரிதும் எரிமலை எழுச்சி காரணமாகவே ஏற்பட்டன என்னும் ஜேம்ஸ் ஹட்டன் (1ஹ்26-1ஹ்ஹீஹ்) என்பாரின் கோட்பாடு.
vulcan -2 n. கொல்லர், இரும்பு வேலைக்காரர்.
Vulcan -1 n. பண்டை ரோமர் வழக்கில் தீக்கடவுள், கொல்லுலைத் தெய்வம்.
voluntary n. தன் விருப்பார்வச் செயலர், தனிமேளம், திருக்கோயில் வஸீபாட்டு முறையில் தொடக்க இடை இறுதிகஷீல் நிகழ்த்தப்பெறும் தனி இசைப்பேழை வாசிப்பு, தன் விருப்பார்வக் கோட்பாட்டாளர், சமயத்துறைத் தன்னியலாட்சியாளர், கல்வித்துறைத் தன்னயலாட்சி முறைமை, படைத்துறை-கடற்படைத்துறை முதலியவற்றில் தன் விருப்பார்வ ஆட்சேர்ப்பு முறைமை, குதிரை ஏற்ற வகையில் வேண்டா வீழ்ச்சி, (பெ.) தன்னியலான, மனமார்ந்த, தன் விருப்பார்ந்த, தன் விருப்பத் தேர்வான, தன்னார்வ முனைப்பான, வலிய முன் வரலான, புறத்தூண்டுதலற்ற, முன் வந்து ஏற்கப்பட்ட, கோராது வழங்கப்பெற்ற, மனமாரச் செய்யப்பட்ட, மனமாரத் தெரிந்து செய்யப்பட்ட, கைம்மாறு எதிர்நோக்காது செய்யப்பட்ட, தன் முனைப்பாகத் திட்டமிடப்பட்ட, தெரிந்து வேண்டுமென்றே செய்யப்பட்ட, தன் விருப்பச் செயல் விளைவான, தன் விருப்பார்வ வழங்கீட்டுத் தொகையினால் நடத்தப்படுகிற, முறைமன்றத் தலையீடின்றித் தாமாகச் செய்துகொள்ளப்பெற்ற, நிறுவனங்கள் வகையில் அரசியற் கட்டுப்பாடற்ற, உள்ளுறுப்பு நாடிநரம்பு முதலியவற்றின் வகையில் மூளையின் விருப்பாற்றல் துணிவினாலேயே இயக்கப்பட்ட.
Voltairian a. வால்டேர் (16ஹீ4-1ஹ்ஹ்க்ஷ்) என்ற பிரஞ்சு எழுத்தாளரைச் சார்ந்த, வால்டேரின் ஐயப்பாட்டு நிலைக் கோட்பாடுகளுக்குரிய.All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wiktionary.org/w/index.php?diff=prev&oldid=1152228.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|