Revision 1131224 of "பயனர்:Info-farmer/சொற்பதிவுச் சோதனை3" on tawiktionarysupplicating a. கெஞ்சுகிற, குறையிரக்கிற. supplicatingly adv. கெஞ்சி வேண்டும் முறையில், கெஞ்சுதலாக. supplication n. குறையிரத்தல், கெஞ்சிக்கேட்டல், பணிவு மனு. supplicatory a. குறையிரக்கிற, கெஞ்சி வேண்டுகிற, தாழ்மையுள்ள, பணிவான. support n. துணை, உதவி, துணை வலு, பக்க வலிமை, பின்பலம், கைத்துணை, ஊக்குதவி, ஆதரவு, ஆதரவாயுள்ளநிலை, ஆதாரம், பளுத்தாங்கும் பொருள், உதைகால், நாற்காலி முதலியவற்றின் நிலைக்கால், பக்க வலிமை தருவது, பின்பலமாகவது, ஆதரவாயுள்ள தி, வாழ்க்கைக்கு ஆதரவான தொழில், உறுதி தருவது, ஆதரிப்பவர், துணை தருபவர், உதவியாளர், துணைவலுவானவர், பின்பாலமானவர், பக்கவலிமையனாவர், காத்துப்பேணுபவர், பாதுகாப்பாளர், புகழ்நடிகர் துணைவர், நடிப்புப்பகுதியில் உதவுபவர், (வினை.) தாங்கு, சும, ஏந்திநில், பளுவுக்கு ஆதாரமாயிரு, உதைகாலாயிரு, ஆதாரங் கொடு, உதைகால் கொடு, அண்டைகொடு, தூக்கிப்பிடி, வலுக்கொடு, வலிமைப்படுத்து, தூக்கிச்செல், விழாமல் தடு, அமிழாமல் தடு, ஆதரி, ஆதரவளி, ஆதரவாயிரு, வைத்துப்பேணு, காப்பாற்று, துணையாதரவளி, ஊட்டிவளர், உணவுகொடுத்து ஆதரவு செய், உணவு வகையில் ஊட்டமளி, உரமளி, ஊக்கமளி, வாழ்க்கையாதரவு செய், பிழைப்பாதாரம் வழங்கியாதரி, வேண்டுவன கொடுத்துக் காப்பாற்று, உதவு, துணைசெய், நிலைநிறுத்த உதவு, ஊக்கி உதவு, ஊக்கிநடைமுறைப்படுத்த உதவு, நீடித்து உழைக்க உதவு, சார்பாளாராயிரு, சார்பாளாராயிருந்து உதவு, உடனிருந்துதவு, உடந்தையாயிரு, பக்கபலமாயிரு, பின்பலமாயிரு, கருத்தாதரி, கருத்தாதரவு செய்து உடந்தையாயிரு, ஏற்றுதரி, ஏற்றாதரவுகாட்டு, ஆதரித்துப் பேசு, ஆதரவு தெரிவி, ஆமோதி, வழிமொழி, வாத ஆதாரங் கொடு, எடுத்துக்காட்டால் உறுதிப்படுத்து, எடுத்துக்காட்டு விளக்கங்களால் வலிமையூட்டு, விளக்கச் செய்திகளால் உறுதிப்படுத்து, பொறு, ஏற்று அமை, உடனொத்த ஒரே மேடையில் ஈடுபட்டிரு, ஒத்த கருத்துக் கொண்டிரு, ஒப்புதல் அளி, நிலைவரி செலுத்திஆதரவு காட்டு, நடிகர் துணைவராயிரு, நடிப்பில் பங்குறுப்பு மேற்கொள், நாடக உறுப்பின் பகுதி மேற்கொண்டு நடி, நாடக உறுப்பின் பண்போவியங் கெடாது நடிப்பிற் பேணு. supportable a. தாங்கத் தக்க, ஆதரிக்கத் தக்க. supportably adv. தாங்கத் தக்கதாய், ஆதரிக்கத்தக்கதாய், நேர்மையானதாக. supporter n. ஆதரவாளர், பொறுப்பு ஏற்பவர், ஆர்வலர், (கட்.) இணையான ஈருயிர்கள் கேடயத்துக்கருகில் நிற்பதாகவோ அல்லது அதைப் பற்றியிருப்பதாகவோ அமைக்கும் அமைவு. supporting a. துணையான, ஆதரவான. supportless a. ஆதரவற்ற, ஆதராமற்ற. supposition n. பாவித்தல், பாவிப்பு, புனைவுக்கொள், தற்காலிகப் புனைவியல் கருத்து, ஊகம், ஊகக் கருத்து, பாவனை, உய்த்துணர் புனைவு, ஊகமதிப்பு, உத்தேசம், நம்பிக்கை, நம்பப்பட்ட கருத்து, முற்கோள், சங்கற்பம், ஊக முடிவு, தற்கோள், தன்னாண்மைக் கருத்து. suppositious a. புனைவான, கற்பிதமான, கருதிக்கொண்ட படியான, பாவனை பண்ணியவாறான. supposititious a. போலியான, உண்மையல்லாத. suppository n. (மரு.) உட்கரை குளிகை, மலக்குடல்-சிறுநீர்த்துளையுள் நுழைத்து அங்கேயே கரையவிட்டுவிடப்படுங்கூருருளை அல்லது நீளுருளை வடிவான குளிகை. suppurate v. சீழ்வை, சலம்பிடி, சீக்கட்ட, புரைத்துச் சீக்கொள், உட்புண்ணாகு. suppuration n. சீழ் வைப்பு, சீக்கட்டு. suppurative n. சீழ்வைப்புத் தூண்டும் மருந்து, (பெ.) சீழ் வைப்புடைய, சீழ்வைப்புத் தூண்டுகிற. supra-orbital a. கண்குழிகட்கு மேலுள்ள. supracostal a. விலாவெலும்பு மேலுள்ள, விலா எலும்புக்கு மேலேயுள்ள. supratemporal a. கால அளவைக்கு அப்பாற்பட்ட, செவித்தடத்திற்கு மேற்பட்ட. surat n. சூரத்துப் பருத்தி வகை, சூரத்துப் பஞ்சாடை வகை. surchargement n. மிகு கட்டண விதிப்பு, மிகு பளுவேற்றம். surcoat n. கவசமேலங்கி, கவசத்தின் மேல் அணியும் நெகிழ் மேலங்கி. sure-footed a. தவறாக அடியெடுத்து வைக்காத, தடுமாறாத, செயல்திட்பம் மிக்க. surety n. கட்டாயநிலை, உறுதி, பிணையம், பிணைப்பொருள், உத்தரவாதம், பிணை ஆள். surface-craft n. அலைமேவு கலம், நீர்முழ்கியல்லாத கப்பல் தொகுதி. surface-printing n. முனைப்பச்சு, உருக்கள் உட்செதுக்காக இல்லாமல் முனைப்புவடிவாக அமையும் அச்சுமுறை. surface-tension n. நீர்ம அலைவியக்க ஆற்றல், நீர்ப்பரப்பின் மீது காணப்படும் நீர்ம நெகிழ்வமுக்க ஆற்றல். surface-water n. மேல் ஓடுநீர், நில மேற்பரப்பின் மீதாக ஓடும் நீர், சாக்கடை நீர். surfboat n. அலைத்தோணி, அலைமீது செல்லும்படி நொய்ம்மைக் கட்டுமானமுடைய கரையோரப் படகு. surfeit n. மடுப்பு, கழிமிகைத் துய்ப்பு, உணவின் மிதமிஞ்சிய அளவு, குடியின் வரம்பு, தெவிட்டல், எதுக்களிப்பு, கழிமிகை அருவருப்பு, திகட்டுவளம், தேக்குவளம், (வினை.) பெருந்தீனி புகட்டு, வரம்பின்றி ஊட்டு, மிதமிஞ்சித்துய்ப்பி, மட்டுமீறி நுகர், வெறுப்பூட்டு, அருவருப்பூட்டு, வெறுப்புக்கொள், அருவருப்புக்கொள். suricate n. தென்னாப்பிரிக்க கீரியின விலங்கு வகை. surmaster n. பள்ளித் துணையாசிரியர். surmount v. முகடேறு, உச்சிக்கண் செல், அடுத்துர்ந்து வெல். surmountable a. ஏறிக் கடக்கத் தக்க, கடத்தற்குரிய, எதிர்த்துச் சமாளிக்கத் தக்க, வெல்லற்குரிய, அடக்கி ஆள்வதற்குரிய. surmullet n. செந்நிறக் கடல்மீன் வகை. surrebut v. வாதி வகையில் எதிர்வாதி மறுப்புரைக்கு எதிருரை கூறு. surrebutter n. எதிர்வாதி மறுப்புரைக்குரிய வாதியின் எதிருரை. surreptitious a. கள்ளத்தனமான, நேர்மையற்ற, மறையாக வைக்கப்பெற்ற, வஞ்சமான. surrogate n. துணைக்குரு, பெயராள். surrogateship n. துணைக்குரு பதவி. surtax n. கூடுதல் வரி, வருமான வரி எல்லைக்கு மேலாக வருவாய்க்கு ஏற்றவாறு படிப்படியாய் உயர்த்தப்பெறும் வரி. surtout n. புறமேற்சட்டை. susceptibilities,n. pl. மென்னய உணர்ச்சிகள். susceptibility n. மசிவியல்பு, கூர்ந்துணரும் பண்பு, எளிதில் பாதிக்கப்படும் தன்மை, இயலுணர்ச்சிச் சார்பு. susceptible a. மசிவியல்புடைய, தொய்வுடை, எளிதிற் பாதிக்கப்படக்கூடிய, எளிதாக மாறுபடுத்தப்படக்கூடிய, எளிதிற் புறத்தடம் பதிய விடுகிற, எளிதில் உள்ளாக்கத்தக்க, எளிதில் ஆளாகக் கூடிய, எளிதாக உட்படுகிற, கொள்ளத் தக்க, ஏற்குந்தன்மை வாய்ந்த, மேற்கொள்ளத் தக்க, உண்டுபண்ணத் தக்க, ஏற்படத் தக்க, இயற் சாய்வுடைய, இயலாற்றற் பாங்குடைய, இயற்சார்புப் போக்குடைய, கூர்ந்துணருந் தன்மையுடைய, கூருணர்வு கொள்ளத் தக்க, எளிதில் உணர்ச்சிக்கு ஆளாகக் கூடிய, தொடப்பொறா மெல்லியல்பு வாய்ந்த, கூரிய உணர்ச்சியுடைய. susceptive a. உணர்வேற்புடைய, உணர்வேற்கிற, உணர்வேற்புச் சார்ந்த. suspect -1 n. ஐயத்திற்கிடமானவர், ஐயுறவுக்குரிய பேர்வழி, (பெ.) ஐயப்படுதற்குரிய, குறைக்கிடமான. suspect -2 v. ஐயுறவுகொள்ளு, ஐயப்படு, இருக்கலாமா என்று கருது, அயிர்ப்புறு, அவநம்பிக்கை கொள்ளு, நம்பமாறு, நம்பாதிரு, அரைகுறையாக நம்பு, ஊகி, ஊகமாகக் கொள், உத்தேசமாகக் கருது, தவறாக எண்ணு, ஐயச்சார்பு கொள், உறுதியில்லை என்று கருது, ஐய மனப்பான்மை கொள், குற்றவாளியென்று ஐ suspected a. ஐயுறவுக்குட்பட்ட. suspiration n. நெடுமூச்சு, பெருமூச்சு விடல். sustain v. பளுத்தாங்கு, தாங்கிப்பிடி, விழாமல் தடுத்துநில், அமிழாமல் தடுத்து நிறுத்து, ஆதாரமாயிரு, ஆதாரங்கொடுத்து நிறுத்து, நிலைகுலையாது தாங்கு, காத்துப்பேணு, ஊக்ளுதலளி, ஆதரி, ஏற்றாதரவு காட்ட, உரமூட்டு, எதிர்ப்பதற்கான வலிமை வழங்கு, நிலைநாட்டு, உறுதிசெய், வாத ஆதாரங்கொடு, வாத ஆதாரங்களால் வலியுறுத்து, மெய்ப்பி, எண்பித்துக் காட்டு, ஆதரவாகத்தீர்ப்பளி, ஏற்றுப் பாராட்டு, பாராட்டி ஆதரி, மேவிக்கொண்ட செல், தொடர்ந்து நடத்து, நீடித்து நடக்கச் செய், நீடித்து உழைக்கச் செய், தளராமல் தொடரச்செய், விடாது ஊக்கு, தளராமற் கொண்டுசெலுத்து, மேற்கொண்டு நடத்திச் செல், திறம்படி நடத்திக்காட்டு, படு, கொள்ளு, அடை, எய்து, ஆளாகு, முறைமன்ற ஆணைவகையில் சட்டப்படி ஏற்றமைவுறு. sustained a. தொடர்ந்த, விடா உறுதி வாய்ந்த, தளராது நீடித்த. sustaining a. தாங்கிப் பிடிக்கிற, வலுவாதாரமான, வலுக்கொடுக்கிற, வலுவூட்டுகிற. sustainment n. நீடிப்பு, தொடர்வு, ஆதரவு, ஊட்டம். sustenence n. உடலோம்பல், வாழ்வாதாரம், ஊட்டப்பண்பு, உள்ள ஊட்டம், அறிவூட்டம். sustentation n. வாழ்க்கை ஆதரவு. susurration n. குசுகுசுவெனல், முணுமுணுப்பு. sutler n. பாசறை அங்காடியர். sutor n. சக்கிலியர். Sutra n. நுற்பா, சூத்திரம், சூத்திரத்தொகுதி. suttee, sati உடன்கட்டை, உடன்கட்டையேறல். suture n. பொருத்துவாய், மண்டையோட்டுப் பொருத்துவாய், எலும்புப் பொருத்துவாய், அறுவை மருத்துவத்தில் தையல், (வினை.) காயத்துக்குத் தையலிடு. suzerainty n. மேலாதிக்க உரிமை, மேலாட்சி நிலை, மேலரசு நிலை. svelte a. மெல்லிழைவான, உடல்வகையில் மென்கட்டான, பெண்டிர் உடல்வல் ஒசிந்த, துவள்கிற, மொழிநடைவகையில் திண்ணிழைவான, கலைவகையில் எளிமையுந்திட்பமும் வாய்ந்த. swaddling-bands, swaddling-clothes n. அணையாடை, குழந்தை பொதியாடை, அடக்கி வைக்கும் ஆற்றல்கள், செயல் சிந்தனை உரிமைகளைக் கட்டுப்படுத்துஞ் செயற்கைச் சூழல்கள். swallet n. பாதாள ஓடை, ஆறு உட்பாயும் அடிநிலக்குகை. swallow-tail n. கவைமுள் வால் பறவை வகை, வண்ணத்துப்பூச்சி வகை, தொங்கல்வாய் துகிற்கொடி முனை. swallow-tailed a. ஆழ் கவை முள்வடிவ வாலுடைய. swallow-wort n. இறைப்பணிக்கலம், தெய்வ உரு வேலைப்பாடு தாங்கிய வெள்ளி வேலைப்பாட்டுப் பொருள். swan-shot n. பரும்படித் துப்பாக்கிக் குண்டு. swart a. (பழ.) கருநிறங்கொண்ட. swarthily adv. கருமையாக. swarthiness n. கருமை. swarthy a. கரிய, கருநிறங்கொண்ட. swash-plate n. ஊசலியைவுச் சுழற் பல்வட்டு, முனையை மேலும் கீழுமாக இயங்குவிக்கும் பற்சக்கரச் சாய்வியைவுவட்டு. swastika n. மங்கலக்குறி, சுவஸ்திகை. swat v. நையப்புடை. swath n. புல் அரிதாள், அறுவடை அரிதாள் கட்டை, புல்தளக்கட்டை, ஒருமுறை வெட்டிய புல்லின் அடிக்கட்டைத் தளம். swathe n. புண்கட்டுத் துணி, கட்டுத்துணி மடி, (வினை.) கட்டுத்துணியால் இறுக்கிக்கட்ட, பல ஆடைகளால் அல்லது துணிகளால் சுற்றிப் போர்த்து. swatter n. ஈக்கொல்லி. sweat n. வியர்வை, வியர்ப்பு நிலை, கடுமுயற்சி, கடுஉழைப்பு, அரும்பாடு, தளர்வுழைப்பு, கடு உடலுழைப்பு, குறைகூலிக் கடுவேலை, அயர்வடிப்புழைப்பு, கட்டநட்டம், பொடிநீர், வியர்வை போன்ற ஆவிநீர்ப்பரப்பு, வியர்ப்புவலிப்பு, வியர்வை நோய், ஆர்வத்துடிப்பு, (இழி.) படைவீரன், (பே-வ) வியர்ப்பு விறுவிறுப்பு, ஆர்வக்கவலை நிலை, (வினை.) வியர்வை வெளியிடு, வியர்த்துக்கொட்டு, வியர்வைசிந்து, வேர்க்கச்செய், வேர்வையால் நனைந்துவிடு, வேர்வையால் அழுக்காக்கு, ஈர ஆவி வெளியிடு, ஆவி கசியவிடு, ஆவி பனிப்பிடு, ஈர்ந்துளி கவிச் செய், குருதி கசியவிடு, குருதி கக்கு, குருதி பொடிப்பிடு, மர வகையில் பிசின் கசியவிடு, அச்சத்தால் வியர்ப்பு விறுவிறுப்படை, பிழைக்கு வருந்து, பிழைக்குத் தண்டனைபெறு, பாடுபடு, கடும் உழைப்புச்செய், வியர்க்க வியர்க்க வேலை செய், குறைகூலிக்கு மாடாய் உழை, பட்டினி எல்லைக் கூலிபெற்று வேலை செய், கட்டநட்டம்படு, கடு உழைப்பு வாங்கு, குறைகூலிக்கு வருத்தி வேலை வாங்கு, பட்டினிக்கூலி உழைப்பிலீடுபடுத்து, மட்டுமீறிய நீண்டநேர வேலை வாங்கு, போட்டியைப் பயன்படுத்தி முடிந்தவரை உழைப்பைச் சுரண்டு, தாக ஆதாயம் பெறு, பணம் பறி, கூடியமட்டும் பணம் கறந்துவிடு, கொள்ளைவட்டி வாங்கு, ஆள் அல்லது குதிரை வகையில் வியர்க்கவியர்க்கப் பயிற்றுவி, குதிரை வியர்வை தேய்த்துத் துடைத்தகற்று, சுவர் வகையில் மேற்பரப்பில் ஈரங்கட்டு, புகையிலை-தோல் ஆகியவற்றின் வகையில் ஆவியில் புழுக்கிப் பதப்படுத்து, உலோகப் பகுதிகளைப் பரப்பின் இழைவால் ஒன்றபடுத்திப் பொருத்துவி, நாணயத்திலிருந்து பொன்னெடுத்துத் தனா ஆதாயம் பெறு, நாணயங்களைப் பையிலிட்டுக் குலக்கிப் பொன்னளவு குறைத்துவிடு. sweat-cloth n. குதிரைச் சேணத்தின் அடியிற் போடப்படும் மென்கம்பளம். sweat-duct n. வியர்வை நாளம். sweater n. வியர்வை சிந்தபவர், வியர்வை சிந்தப் பாடுபடும் தொழிலாளி, கனமான கம்பளிச் சட்டை. sweater-girl n. (பே-வ) ஈர்க்கிடைபோகா மார்பணங்கு. sweater-gland n. வியர்வைச் சுரப்பி. sweatiness n. வியர்ப்புடைமை, கடும் உழைப்புடைமை. sweating n. வியர்த்தல், வியர்ப்பு, (பெ.) வியர்க்கிற, வியர்ப்பபூட்டுகிற. sweating-bath n. வியர்வைக் குளியல், வியர்வை உண்டாக்குவதற்கான குளிப்பு. sweating-iron n. குதிரை தேய்ப்பிருப்பு. sweating-room n. குளிப்புக்கூட வியர்ப்பு அறை. sweating-sickness n. ல்ணடனின் 15, 16 ஆம் நுற்றாண்டுக்கால வியர்வைக் காய்ச்சல் கொள்ளைநோய். sweatshop n. மாடுழைப்புக் கூடம், மாடாய் உழைப்பு வாங்கும் தொழிற்சாலை. sweaty a. வியர்க்கிற, வியர்வையுள்ள, வியர்ப்பு விறுவிறுப்பான. sweep-net n. வீச்சுவலை, ஒடுவலை, பூச்சி நுலாய்வாளரின் கவிகை வலை. sweepstake, sweepstakes n. குதிரைப்பந்தயச் சூதாட்டம். sweet n. இனிப்பு, தித்திப்புப்பண்டம், மிட்டாய், இன்கூறு, இனிமைப்பகுதி, இனியார், காதற் கண்மணி, அன்பிற்கு உரியார், (பெ.) இனிய, இனிப்பான, இனிப்பு மிகுதியான, தெவிட்டுகிற, குமட்டுகிற, நறுஞ்சுவை வாய்ரநத, இன்மணம் உடைய, இன்னோசையுடைய, இன்னிழைவான, கார உணவல்லாத, காரம் ஊட்டப்படாத, புளிக்காத, புளிப்பேற்றப்படாத, உறைப்பற்ற, உப்புப் பதனிட்ப்படாத, உறைப்பு ஊட்டப்படாத, ஊசாத, கெடாத, நன்னிலையிலுள்ள, புத்தம் புதிய நிலையிலுள்ள, இன்னலம் வாய்ந்த, நிறைநல மார்ந்த, மென்னயம் வாய்ந்த, மெல்லிழைவான, கவர்ச்சியான, கண்கவர் வனப்புடைய, அழகான, மகிழ்ச்சியூட்டுகிற, மெல்லிணக்கமுடைய, மெல்லமைதி வாய்ந்த, முற்றெளிமை வாய்ந்த, தட்டுத்தடங்கல் அற்ற, அரிய, அன்புக்குமிய, பற்று மிக்க, பிடித்தமான, பாசத்தில் இழைந்த, காதல் கூர்வுடைய, பசப்புகிற. sweet-briar, sweet-brier n. மணங்கமழும் இலைகளையுடைய ரோசா வகை. sweet-gale n. சதுப்பு நில மணமலர்ச் செடிவகை. sweet-john n. மண மலர்ச்செடிவகை. sweet-savoured a. இன்சுவை வாய்ந்த. sweet-scented a. நறுமணமுடைய. Sweet-stall இன்பண்ட நிலையம், இனிப்பகம் sweet-stuff n. இனிப்புப் பண்டம், மிட்டாய். sweet-tempered a. இன்னயமுடைய, இனிய பண்புடைய. sweet-william n. மணமலர்ச் செடிவகை. sweetbread n. கன்றிறைச்சியுணவு, கன்றின் கணையக் கறி, கழுத்துக் கணையச் சுரப்பி. sweeten v. இனிப்பூட்டு, இனிப்பாக்கு, இனிமையுடையதாக்கு, மனத்திற்கேற்றதாக்கு, விருப்புடையதாக்கு, மகிழ்வுடையதாக்கு. sweetener n. இனிப்பூட்டுபவர், இனிப்பூட்டுவது, இனிப்பூட்டும் பண்பு. sweetening n. இனிப்பூட்டுதல், (பெ.) இனிப்பூட்டுகிற. sweetheart n. கண்ணாட்டி, காதலி, கண்ணாளன், காதலன், (வினை.) காதல் நாடு, காதல் நாட்டங்கொள். sweeting n. இனிப்பு ஆப்பிள் பழவகை. sweetish a. சற்று இனிப்புடைய. sweetly adv. இனிமையுடன், இன்னயத்துடன், கவர்ச்சியாக. sweetmeat n. மிட்டாய், பாகிலிட்ட பழம், இன்பண்டம், பாகிலிட்ட பழவற்றல். sweetness n. இனிமை, இன்மணம், ஓசையின்மை, இன்னயப் பண்பு, இன்கவர்ச்சியுடைமை. sweets n. pl. இனிய உணவு வகை, இனப்புப் பிட்டு, இன்களி, இனப்பழப்பாகு, இன்பாலேடு, இன்மணம், இனியதேறல் வகை, தேம்பாகுச் சுவையூட்டப்பட்ட தேறல், இன்குழம்பூட்டப்பட்ட தேய நற மருந்து, மனமகிழ்வூட்டும் பொருள்கள், விருப்பூட்டுஞ் செய்திகள், இன்பநுகர்வுகள். sweetsop n. அமெரிக்க வெப்பமண்டலப் பசுமை மாறாப்பழச்செடி வகை, இனிய சதைப்பற்றுள்ள அமெரிக்க வெப்பமண்டலப் பழவகை. sweety a. இன்பண்டம், மிட்டாய். swelter n. புழுக்க மிக்க வானிலை, வெப்பமும் அழுத்தமும் மிக்க காற்றுமண்டலம், (வினை.) புழுங்கு, புழுக்கத்தால் அயர்வுறு, புழுங்கித் தளர்வுறு, புழுங்கி அளிவுறு. sweltering a. புழுங்குகிற, புழுக்கமான, புழுக்கமிக்க. swept -1 a. தூர்த்துப் பெருக்கப்பட்ட, துடைத்துத் தூய்மையாக்கப்பட்ட. swept -2 v. ஸ்வீப்' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம். sweptback a. பின்னேந்தலான, விமான இறக்கைகளின் புறப்பகுதி வகையில் பின்னோக்கி வளைந்த. sweptwing a. பினனேந்து இறக்கையுடைய, விமான வகையில் புறப்பகுதி பின்னோக்கி வளைந்த இறக்கைகளையுடைய. swift n. நீள்சிறைப் பறவை வகை, பல்லி வகை, புறாவகை, திரிவட்டம், நுல் சுற்றுவதற்குரிய சுழல் வட்டு, (பெ.) விரைவான, வேகமான, திடுமென்ற, மின்னீடான, திடீரெனவந்து திடீரெனச் செல்கிற, உடனடியான, விரைந்து செயல்படுகிற, செயல் திறத்தில் துடிப்பு மிக்க, சொல் திறத்தில் துடியான, (செய்.) சுணங்காத, தாமதமற்ற, (வினையடை.) விரைவாக, உடனடியாக, தமாதமின்றி. swift-footed a. விரைந்த நடையுடைய, வேகமாகச் செல்லக்கூடிய. swift-handed a. வேகமாக எழுதக்கூடிய, விரைந்து செயலாற்றக்கூடிய. swift-winged a. வேகமாகப் பறக்கக்கூடிய, விரைந்து செல்லக்கூடிய. swimmeret n. நீந்தும் ஆற்றலுடைய தோட்டு உயிரிகளின் கால். swimming-bath n. நீச்சல்குளம். swimming-belt n. நீச்சல் பட்டிகை. swimming-stone n. கடற்பஞ்சு போன்ற மென்படிகக் கல் வகை. swine-stone n. உரைத்தால் நாறும் சுண்ணக் கல்வகை. swine-sty n. பன்றிப்பட்டி. swines-snout n. வாளிலைச் செடிவகை. swing-stock n. சணல் சிக்குவாரிக் கட்டை, சணலடித்துச் சிக்கம் பிரிக்கும் மழுங்கல் மேல்முனையுடைய செங்குத்து மரக்கட்டை. swing-tree n. ஏர்க்கால் நுகத்தடி. swingboat n. ஊசல் தொங்குவண்டி, சட்டத்திலிருந்து தொங்கவிடப்பட்டு இங்குமங்கும் ஆடும் படகு வடிவ ஊர்தி. swinging-post n. குடுமிக்கம்பம். swingle-tree n. நுகத்தடி, ஏர்நுகம், சணல் சிக்குவாரிக் கட்டை. swingling-stock n. சணல் சிக்குவாரி. swingling-tow n. சணற் சிக்கம், சணலிற் செப்பமற்ற பகுதி. switch n. மிலாறு, மென்கூர்ங் கழி, மெல்லொசிவான கம்பி,வெட்டுவீச்ச, வீச்சடி, விளாசல், கசையடி, கம்பியிணைவு, திருப்பன், இடுமுடி, கூந்தல் ஒப்பனைக்கான சவுரிமுடிக்கற்றை, கடைகோல், முட்டை பால் கலந்தடிக்குங் கருவி, மின்விசை மாற்றுக்குமிழ், இருப்பூர்தி நெறிமாற்றமைவு, நெறிமாற்றமைவின் புடைபெயர் தண்டாவாளப் பகுதி, திடீர் விலகல், திடீர்த்திருப்பம், நெறிமாற்று, விசைமாற்று, இனமாற்று, சிட்டாட்ட வகைமாற்று, மின்விசைமாற்றுச்சட்டகை, தொலைபேசி,நெறியிணைப்புப் பட்டிகை, (வினை.) விளாசி அடி, விளாசு, கசையினை வீசியடி, உராசு, உரசில் செல், முட்டைபால் அடித்துக் கலக்கு, கத்தரித்து விடு, வெட்டித் திருப்பு, திடுமென விலகு, திடுமெனத் திருகு, திடுமெனப் பற்று, திடுமெனத் தட்டிப் பறி, திடுமென மாற்று, திடுமென மாறு, மின்விசைக்குமிழ் இயக்கு, நெறி மாற்றமைவு இயக்கு, உந்துகலத்தை விசைக்குமிழ்இயக்கி ஓட்டு, ஊர்தி நெறிமாற்றமைவு இயக்கு, திசை மாற்று, வகை மாற்று, சீட்டாட்டக் கேள்வி வகையில் மற்றோர் இனத்திற்கு மாற்று, கருத்தின் போக்கை மாற்று, எண்ணத்தை வேறொரு பொருளுக்கு மாற்று, பேச்சின் போக்கை மாற்று, தொலைபேசித் தொடர்பு ஏற்படச் செய். switch-bar n. இருப்புப்பாதை விசைக்குமிழ்ப் பகுதி, மின்னோட்ட விசைக்குமிழ்ப் பகுதி. switch-lever n. மின்குமிழ் நெம்புகோல். switch-man n. இருப்பூர்தித்துறை நெறிமாற்றமைவாளர். switch-plant n. செதினிலைச் செடிவகை. switchback n. மலையூர்தி, செங்குத்துச் சரிவுகளில் ஏறவோ இறங்கவோ ஆன வளைவு நெளிவு இருப்புப்பாதை, இறக்கவிசை ஏற்ற ஊர்தி, விழாக் காட்சிகளிலும் மற்றும் அமைக்கப்பட்டு ஏற்ற இறக்கங்களில் இறங்கு விசையிலேயே இயங்கும் தொடர் ஊர்தி. switchboard n. மின் தொடர்பிணைப்புப் பலகை. swithler n. தயக்கம், பதற்றம், (வினை.) தயங்கு, குழம்பு, பரபரப்புறு. Switzer n. ஸ்விட்சர்லாந்து நாட்டவர். swizzle-stick n. கூட்டுவெறித் தேறல் நுரையெழுக்கலக்கங் கழி. sword-belt n. உடைவாள் தொங்கல் வார். sword-flighted a. வாட்சிறையுடைய, பறவை வகையில் தனிநிறம் வாய்ந்த வாள்போன்ற மடிந்த நிலைச்சிறகுகளையுடைய. sword-knot n. வாள் கைப்பிடிகுஞ்சம். sword-tail n. நடு அமெரிக்க நன்னீர்மீன் வகை. swot n. (இழி.) கடும் பாடப்பயிற்சி, பொட்டை மனப்பாடம், (வினை.) கடுமுயற்சி செய்து படி. Sybarite n. சிபாரிஸ் என்ற இத்தாலி நாட்டுப்பண்டைக் கிரேக்க குடியேற்ற நகரத்தார், ஊதாரிச் செலவினர், சொகுசு வாழ்வினர். sybaritic a. சொகுசு வாழ்வுடைய. sybaritism n. ஊதாரி வாழ்வுக் கொள்கை. sycophant n. அண்டிப் பிழைப்போர், கெஞ்சிப் பிழைப்பவர், கொத்தடிமையர். sycophantic a. அண்டிப் பிழைக்கிற, ஒட்டி வாழ்கிற, கெஞ்சிப் பிழைக்கிற, அடிமைத்தள மிக்க. syenite n. களிமப் பாறை வகை. syllabication n. அசை அலகீடு, அசைப்பிரிவீடு, அசையொலிப்பு. syllabification n. அசைப்பிரிவீடு, அசையலகுமுறை. sylleptic a. ஒருவழித்தழுவல் மயக்க அணி சார்ந்த, (இலக்.) ஒருவழித்தழுவலான. syllogistic, syllogistical a. (அள.) முக்கூற்று முடிவு சார்ந்த, விதிதரு முறையான, நேரியல் வாத முறைன. sylviculture n. காடு வளர்ப்பு. symbion, symboint ஒத்துடன் நிற்றி,ஒருங்கொத்தியை வாழ்வுத் திறமுடைய உயிர்களுள் ஒன்று. symbiotic a. இணைதிற வாழ்வுத் திறமுடைய. symbiotically adv. இணைவாழ்வுத் திறம்பட, இணைவாழ்வுத் திறச் சார்பாக. symmetric, symmetrical a. செவ்வொழுங்கான, செஞ்சீரான, செப்பமுடைய, (தாவ.) சரிசீரமைவுடைய, உறுப்புக்களை ஒத்த எண்ணிக்கையுடையனவாகக் கொண்ட. symmetrically adv. ஒத்தியைவாக, செவ்வொழுங்காக. symmetry n. செவ்வொழுங்கு, இருபுடை இயைவு, உறுப்பு ஒப்பியைவழகு, செப்பம், ஒத்திசைவு, செஞ்சீர்மை, ஓத்தகூறுகள் ஆக்கவல்ல அமைவு, (தாவ.) சரிசீரமைவு, உறுப்புக்கள் ஒத்த எண்ணிக்கையுடையனவாக அமையுந் தன்மை. sympathetic n. பரிவதிர்வுத் தொகுதி, ஒப்பியைவதிர்வு மண்டலம், உடனதிர்வு நரம்பு, பைங்கணர், வசிய ஆற்றலுக்கு எளிதில் ஆட்படத்தக்க தனி இயல்புடையவர், (பெ.) ஒத்துணர்வுக்குரிய, ஒத்துணர்வுடைய, ஒத்துணர்வு காரணமான, ஒத்துணர்வு தூண்டக்கூடிய, பரிவிரக்கஞ் சார்ந்த, பரிவிரக்கமுடைய, பரிவிரக்கந் தூண்டுகிற, பரிவிரக்கங்காட்டுகிற, பரிவிரக்கங் குறித்த, பரிவிரக்கந் தெரிவிக்கிற, பரிவிரக்கம் உண்டுபண்ணுகிற, உணர்வலையால் தூண்டப்பட்ட, உணர்வதிர்வலை தூண்டுகிற, உணர்வதிர்வலைகளைச் சூழப் பரவவிடுகிற, வாசகர் உளந் தொடுகிற, பரிவதிர்வு சார்ந்த, உடனதிர்வியைபுடைய, உடனதிர்வொலியுடைய. sympathize v. ஒத்துணர்வு காட்டு, உடனோத்துணர், பரிவிரக்கங்கொள், மற்றவர் மனப்பாங்கு உணர், உடனிரங்கு, ஒத்தியைபுகொள், உடனதிர்வு கொள். sympathy n. ஒத்துணர்வு, உணர்ச்சி ஒருமைப்பாடு, ஒத்த உள்ளுணர்வீடுபாடு, ஒத்துணர்வாற்றல், உடனுணர்வுத்திறம், பரிவு, பரிவிரக்கம், உணர்வொத்தியைபு, கருத்து ஒப்புயைபு, ஒத்தியைபதிர்வு, உடனதிர்வுத் தொடர்பு. sympetalous a. மலர்வகையில் ஒருங்கிணை இதழ்களையுடைய, செடிவகையில் ஒருங்கிணை இதழ் மலரினையுடைய. symphonist n. சுரமேளம் பாடுபவர், சுரமேள இசை இயற்றுநர். symphyseotomy n. கூட்டிணை வளர்ச்சி அறுவை. symphytic a. கலந்திணைந்து வளர்ந்த. sympiesometer n. நீரோட்ட வேகமானி, அழுத்தவளியிணைவுப் பாராமானி, நீர்மத்துடனிணைவாக, அழுத்தமிக்க வளியும் அழுத்த அளவையாகப் பயன்படுத்தப்படும் வளிமண்டல அழுத்தமானி. symposiast n. கருத்தரங்கிற பங்குபெறுவோர். symptom n. நோய்க்குறி, தனிச்சிறப்புக்குறி. symptomatic a. நோய்க்குறி சார்ந்த, தனிப்படக்குறித்துக் காட்டுகிற, நேரறிகுறியான, மேல்வருகை குறித்த, மேற்படர் வளர்ச்சி குறித்துக்காட்டுகிற. symptomatics, symkptomatology n. நோய்க்குறி ஆய்வியல், நோய்க்குறி நுல். symptosis n. தேய்வு, மெலிவு. synaesthesia n. பிறிதிட உணர்வு, உறுத்திய இடத்தன்றிப் பிறிதிடம் ஊறுணர்வு ஏற்படுங் கோளாறு, பிரிது நுகர்வுணர்வு நுகர்ந்தவர் நுகர்வுப் பொருளை மாறுபட உணரும் உணர்வு. synallagmatic a. ஒருவர்க்கொருவர் கட்டாயமான, பரஸ்பரம் அனுசரிக்கவேண்டிய. synantherous a. பூவிழைக் குழலியான, பூவிழைகள் சூலகம் சுற்றிய சூழலாயிழைந்து பூந்துகட் பைகளை ஏந்திய. synanthy n. மலர்ப்பொலிவு. synarthrosis n. அசையா மூட்டுவாய். synchronization n. ஒரே கால நிகழ்வு, ஒரு கணத்தொகை நிகழ்வு, பல்நிகழ்வொருகாண இசைவு. synchrotron n. மின்மவிசைப் பெருக்கமூட்டப் பயன்படும் மின் காந்த விசை இணைவமைவு. synclastic a. முற்றிலும் உட்குழிவான. syncopate v. இடைக்குறைப்படுத்து, (இசை.) ஓசையில் இழுப்பிசையாக்கு, செயற்கையாக அழுத்தமாற்றிச் சந்தத்தைத் தற்காலிகமாக வேறுபடுத்து. syncopated a. இடைக்குறுக்கமான. syncopation n. (இலக்.) இடைக்குறைப்படுத்துதல். syncopic, syncoptic இடைக்குறை சார்ந்த, இடைக்குறுக்கம் உடைய. syncotyledonous a. இரு கதுப்பிணைவான. syncretic a. சமசரஞ் சார்ந்த. syncretism n. சமரசப் பண்பு, சமயக் கிளைகளிடையே சமரச இணைப்பு, பல்சமய இணைப்புக் குளறுபடி. syncretist n. பொதுச்சமய முயற்சியாளர். syncretistic a. பொதுச்சமய சமரச முயற்சிக்குரிய. syncretize v. ஒருமைப்படுத்த முயலு. syncytium n. பல கருவுள் உயிர்ம அணு, கருவுட்கள் பலப்பல அடங்கினும் ஒரே உயிர்மமாயமைந்து செயலாற்றும் ஊன்மத் திரள். syndactyl, syndactylous a. இடைத்தோலால் ஒன்றுபட்டிணைந்த விரல்களையுடைய, வாத்தின் கால்விரல்கள் போன்றிணைந்த. syndactylism n. இடைத்தோல் விரலிணைவமைவு. syndesmotic a. எலும்புத் தசைநாண் இணைப்புச் சார்ந்த. syndetic a. இணைப்பிடைச்சொல் சார்ந்த, இணைப்பிடைச் சொல்லைப் பயன்படுத்தகிற. syndicate n. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாமன்ற ஆட்சிக்குழு, வணிக மன்றக் கூட்டவை, பொதுநல நோக்குடன் அமைக்கப்பட்ட வணிக மன்றங்களின் கூட்டு, உரிமைவிளம்பரக்குழு, இலக்கியப்படைப்புகளின் உரிமைகளை வாங்கி ஒரே சமயத்தில் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்கென அமைந்த குழு, குத்தகைக் குழு, வேட்டை-மீன் பிடிப்பு ஆகிய துறைகளில் உரிமைகளைக் குத்தகையாகப் பெற்றுக்கொள்ளும் குழு, (வினை.) ஆட்சிக்குழுவாக உருவாக்கு, உரிமைக்குழுவாக அமைவி, உரிமைக் குழுவாகச் செயலாற்று, ஆட்சிக்குழுவாகச் செயற்படு, குழுவாக நின்ற உரிமைபெற முயலு. syndication n. உரிமைக் குழு நிறுவுகை, உரிமைக் குழு அமைவு, ஆட்சிக் குழுவாகச் செயலாற்றுதல், ஆட்சிக்குழு, உரிமைக்குழு. syndicator n. பொருட்கூட்டமைப்பின் சார்பிற் கொடுக்கல் வாங்கல் செய்பவர். syngnathous a. மீன் வகையில் கூம்பாக ஒட்டியிணைந்த தாடைகளையுடைய. Synonym dictionary இணைச்சொல் அகராதி synonymity n. ஒரே பொருளுடைமை, பொருளொப்புடைமை. synoptic, synoptical n. வாய்மொழியார், விவிலிய ஏட்டின் ஆசிரியர் மாத்யூ-மார்க்-லியூக் ஆகியோருள் ஒருவர், (பெ.) பொழிப்பான, பொதுச்சுருக்கவிவரமான. synoptist n. பொதுத்தொகுப்பாளர், அருள்மொழி விவரம் தந்துள்ள அருட்டிரு மாத்யூ-மார்க்-லியூக் ஆகிய மூவருள் ஒருவர். synosteology n. உடல் மூட்டிணைப்பு நுல். synosteosis, synostosis n. எலும்புக் கூட்டொருமை. syntagma n. முறைத்தொகுப்பு. syntax n. சொற்றொடரியல். syntctic, syntactial a. சொற்றொடரியலான, சொற்றொடர்பு சார்ந்த. syntectic, syntectical a. இளகலான, உருகுகிற, மெலிவான. syntexis n. இளகல், உருகல், மெலிதல். synthesis n. கூட்டிணைப்பு, இணைப்பாக்கம், பல்பொருட்சேர்க்கை, கூட்டு, கலவை, உறுப்பிணைவு, கூறிணைவாசகம், (அள.) கருத்துக் கூட்டாக்கம், ஆக்கக்கோள், தொகுப்புக்கோள், (வேதி.) செயற்கைச் சேர்மப்பொருள்ஆக்கம், (மொழி., இலக்.) சொற்கூட்டிணைப்பாக்கம், முன்வைப்பின்றி உருவு விகுதிகளாகலேயே சொல் திரிபாக்கமுறை, (அறு.) மீட்டிணைப்பு,அறுத்துப் பிரிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்த்தல். synthesist n. தொகுப்பிணைவாளர். synthesize v. சேர்த்திணை, பல்பொருள் ஒன்றுசேர்த்து இணை, இணைத்துருவாக்கு, தொகுத்து நோக்கு. synthetic a. கூட்டிணைப்பு முறை சார்ந்த, கூட்டிணைப்பாலான, கூட்டிணைப்பிற்குரிய, கூட்டிணைப்புட்கொண்ட, கூட்டியிணைத்த உருவாக்கப்பட்ட, பல்பொருளாக்கமான, இணைப்பாக்கமான, செயற்கைச் சேர்மமான, தொகுத்துப்பார்க்கிற. synthetical a. இணைவிப்பான, பல்பொருளாக்கமான, கூட்டிணைப்பு முறை சார்ந்த, தொகுப்பு நோக்குடைய. synthetist n. பொருட் கூட்டிணைப்பாளர், தொகுத்துக்காண்பவர். synthetize v. தொகுத்துக்காண். synthronus n. மாவட்டக் குருவின் பலிபீடப் பின்இருக்க syntonic a. சேணொலிக் கருவிகலத்தில் அதிர்வுகள் இயைகின்ற. syntony n. சேணொலிக் கருவிகலத்தில் அதிர்வுகளின் இசைவு. sypher-joint n. இழைப்பிணைப்பு, பலகை வகையில் ஓரங்களை ஒன்றன் மேல் ஒன்றாக்கி மேற்பரப்பை இழைத்து ஏற்படுத்தும் இணைப்பு. syringotomy n. காது உட்குழல் அறுவை. syrtis n. புதை மணல், மணற் புதைகுழி. systaltic a. விரிந்து சுருங்குகிற, விரிந்து சுருங்கித் துடிதுடிக்கிற. system n. முறை, ஒழுங்கு, முறைமை, ஒழுங்குடைமை, ஒழுங்குமுறை, வகைமுறை, வகுப்பு தொகுப்புமுறை, அமைப்புமுறை, செயல் ஒழுங்கமைதி முறை, தொகுதி வட்டம், கோவை, கோசம், மண்டலம், கோப்பு, அண்டம், சேர்வை, முழுநிறை வட்டம், பல்பெருக்கத் தொகுப்பு, ஒருங்கியங்கும் கருவித் தொகுதி, ஒருமுகப்பட்ட பல்கிளைப் பரப்பு, ஒரே ஆக்கப் பண்புடைய கூறுகளின் முழுமொத்தம், தொடர்புடைய பல்பொருள் குவை, ஒருசீர் ஆன வரிசை, ஒரு பயனோக்கிய உறுப்புத் தொகை, விளக்கக் கோட்பாடு வகை, அறிவு விளக்கக் கோவை, அறிவியல் கோட்பாட்டுத் தொகுதி, சமயக்கொள்கைப் பரப்பு, (மெய்.) விளக்கவகைக் கோட்பாடு, (இயற்.) மணியுருப்படிவின் தனி அமைவுவகை, (வான்.) அண்டம், ஒருங்கியங்கு கோளத் தொகுதி, (இசை.) வரித்தொகுப்புக் குறிமுறை, (மண்.) அடுக்குப்படுகைப் பரப்பு, (இலக்.) கிரேக்க மொழி வழக்கில் வரிப்பாத் தொடர் கோவை. systematic a. முறையான, முறைப்படுத்தப்பட்ட, திட்டப்படியான, திட்டமிட்டுச் செய்யப்பட்ட, இடைவிடாப் பழக்கம் ஆக்கப்பட்ட, முழுநிறை முனைப்புடைய, விட்டு விட்டு நிகழாத, முழுமனம் ஊன்றிச் செய்த, சிறிதும் இடைவிடாத. systematically adv. முறையாக, ஒழுங்காக, முறை தவறாமல், ஒழுங்கு குலையாமல், விடாத்தொடர் பழக்கமாக, திட்டமிட்டு, திட்டமிட்டப்படி, முழுநிறைவாக, எதுவும் விட்டுவைக்காமல், முழுநிறை முனைப்புடன், முழுதும் மனமூன்றி. systematism n. முறைமை. systematize v. முறைப்படுத்து, ஒழுங்குபடுத்து, திட்டமுறையாக்கு, இடையறாப் பழக்கப்படுத்து, முழுநிறைவாக்கு. systemic a. (உட.) உடலமைப்பு முழுதுஞ் சார்ந்த, உடலின் ஓர் உறுப்பு மட்டிலுஞ் சாராத. systole n. (உட.) நெஞ்சுப்பைச் சுருங்கியக்கம், குருதிநாளச் சுருங்கியக்கம். systolic a. நெஞ்சுப்பைச் சுருக்கியக்கஞ் சார்ந்த. systyle a. தூண் வகையில் நெருக்க அமைவுடைய. systylous a. (தாவ.) ஒன்றுபட்ட சூலகங்களையுடைய. All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wiktionary.org/w/index.php?oldid=1131224.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|