Revision 1142489 of "பயனர்:Info-farmer/சொற்பதிவுச் சோதனை3" on tawiktionarychrysanthemum n. கொத்து மலருடைய செடிவகை. chrysalid, chrysalis, n. pl. chrysalides. முட்டைப்புழு, முட்டைப்புழுக்கூடு. chronometric, chronometrical a. நுண்காலக் கணிப்பு முறை சார்ந்த. chronologically adv. கால வரிசைப்படி. chronologic, chronological a. காலக்கணிப்பு முறை சார்ந்த, காலவரிசையான, கால வரிசைப் படுத்தப்பட்ட. chronography n. கால வரிசைக் கணிப்பு, கால முறை, நுண்ணிடைக்காலக் கணிப்புமுறை. chronographic a. நுண்காலக் கணிப்புக்குரிய. chronographer n. காலக்கணிப்பு வரலாற்றாளர், ஆண்டுக்குறிவாய்பாடு வகுப்பவர். chronograph n. நுட்பதிட்பமுடைய காலக் கணிப்புப்பொறி, நொடிப்பொழுது காட்டும் மணிப்பொறி, விசை கணித்துக் காட்ட உதவும் நுண் மணிப்பொறி, ஆண்டுக் குறிவாய்பாடு. chronogrammatic a. ஆண்டுக்குறி வாய்பாடு குறித்த, எழுத்துக்களிலிருந்தே ஆண்டுக்குறிப்பு தருகிற. chronogram n. ஆண்டுக் குறிவாய்பாடு, இலத்தீன் மொழியில் ரோம எண் இலக்க வடிவன்ய் வரும் எழுத்துக்களின் எண் மதிப்பைக் கூட்டி ஆண்டுத்தொகை உய்த்துணர வைக்கும்படி அமையும் எழுத்துப்பதிவு. chronique scandaleuse n. (பிர.) அலர் தூற்றல் தொகுப்பு. chronical a. நாட்பட்ட, சீர்கேடுற்ற. chromolithography n. வண்ணக்கல் அச்சு முறை. chromolithographic n. வண்ணக்கல் அச்சுக்குரிய. chromolithographer n. வண்ணக்கல் அச்சாளர். chromolithograph n. வண்ணக்கல் அச்சு, வண்ணந்தோய்த்து அடிக்கத்தக்க கற்படிவ அச்சு. chromograph n. வண்ணச் சாயமூலம் எடுக்கப்படும் பசைமப் படியெடுப்புக் கருவி, (வி.) வசைமப் படியெடுப்புக்கருவி மூலம் படியெடு. chromogram n. கலப்பால் இயற்கை வண்ணந்தரும் பல் வண்ணத் தொகுதி. chromo-xylography n. வண்ண மரப்பாள அச்சு முறை. chromo-typography n. வண்ண அச்சு வேலை. chrome-tanning n. குரும உப்புகளின் உதவியால் தோற்பதனீடு செய்தல். chrome-plating n. குரும மின் பூச்சுமானம். chrome-leather n. குருமச்சேர்மான வகைகளால் பதனிடப்பட்ட தோல், குருமத்தோல். chromatype n. குரும உப்புகளைப் பயன்படுத்தும் நிழற்படமுறை, வண்ண நிழற்படம், வண்ண அச்சு பதிக்கப்பட்ட தாள். chromatopsphere n. சுழல்வட்டாடி மூலம் பல்வண்ணங்காட்டும் ஒளிக்காட்சி. chromatopsia, chromatopsy n. வண்ணக்காமலை, நிறமாறிய காட்சி தரும் கண்ணோய் வகை. chromatophore n. (வில.) நிற உயிர்மம், (தாவ.) ஊன்மத்தில் நிறப்பொருள் கொண்ட பகுதி. chromatography n. நிற ஆய்வியல், இயலீர்ப்பாற்றல் மூலம் சேர்மானம் பிரிக்கும் முறை. chromatogram n. இயலீர்ப்பாற்றல் மூலம் சேர்மானப் பிரிவினையில் கிட்டும் வண்ணப் படிகப்பட்டி. chromatin n. இனக்கூறு, எளிதில் நிறம் மாறிக் கறைப்படும் இயல்புடைய உயிர்மத்தின் கருவுட் பகுதி. chromatics n. நிற ஆய்வியல். chromatic a. நிறம் சார்ந்த, வண்ணத்தினால் உண்டாகிற, நிற முனைப்புடைய, (இசை.) அயலுருக்கள் விரவிய. chroma n. வண்ணப்பண்பு, நிறத்தின் சாயல். Christwards adv. இயேசுநாதரை நோக்கி, இயேசுநாதர் அருட்பண்பினைக் குறிக்கொண்டு. Christward a. இயேசுநாதரை நோக்கிய, இயேசுநாதர் பண்பினைக் குறிக்கொண்ட, (வினையடை) இயேசுநாதரை நோக்கி, இயேசுநாதர் அருட்பண்பினைக் குறிக்கொண்டு. Christophany n. இயேசுநாதர் திருக்காட்சி வெளிப்பாடு. Christomaniac n. இயேசுநாதர் பற்றார்வ வெறியர். Christological a. இயேசுநாதர் ஆளுமைத்துறை பற்றிய, இயேசுநாதர் வாழ்க்கைப் பண்பு கூறும் இறையியல் பகுதிக்குரிய. Christolatry n. இயேசுநாதர் வழிபாடு. Christmassy a. திருப்பிறப்புப் பண்டிகைக்குரிய மகிழ்வு ஊட்டுகிற. Christmas-tree n. பண்டிகைக்குரிய பரிசுகளும் விளக்குகளும் நாட்டி ஒப்பனை செய்யப்பட்டுள்ள விழா மரம். Christmas-time n. திருபிறப்புப் பண்டிகைக் காலம், திருபிறப்புப் பண்டிகைக்குரிய பருவம். Christmas-tide n. இயேசுநாதர் திருப்பிறப்புக்குரிய பண்டிகைப் பருவம். Christmas-pudding n. திருப்பிறப்பு விழாவுக்கான அப்ப வகை. Christmas-eve n. இயேசுநாதர் பிறந்த நாள் பண்டிகைக்கு முந்திய நாள் (டிசம்பர் 24). Christmas-day n. இயேசுநாதரின் பிறந்த நாள் விழா வாழ்த்துச்சீட்டு. Christmas-box n. திருப்புறப்புப் பண்டிகைக்குரிய பரிசுகள் அல்ங்கிய பெட்டி, திருப்புறப்புப் பண்டிகைப் பரிசு, அஞ்சல்காரனுக்கு அளிக்கப்படும் திருப்பிறப்புப் பண்டிகை நல்லெண்ணப் பரிசு. Christmas n. இயேசுநாதர் பிறந்தநாள் விழா, இயேசுநாதரின் திருப்பிறப்புநாட் பண்டிகை (டிசம்பர் 25), திருப்பிறப்புப் பண்டிகைப் பருவம், வாடாப் பசுந்தழை வகை, பண்டிகை ஒப்பனைக்குரிய பசுந்தழைச் செடிகொடியினம். Christie, n. Christiania என்பதன் சுருக்கக் குறிப்பு. Christianzation n. கிறித்தவராக்குதல், கிறித்தவ மயமாக்குதல், கிறித்தவப் பண்பூட்டுதல், கிறித்தவராதல். Christianly a. கிறித்தவப் பண்புக்குகந்த. Christianize v. கிறித்தவ சமயத்துக்கு மாற்று, கிறித்தவ மயமாக்கு, கிறித்தவராக்கு, கிறித்தவப் பண்பூட்டு. Christianity n. கிறித்தவ சமயம், கிறித்தவ சமயநெறி முறை, கிறித்தவ சமயக்கோட்பாடு, கிறித்தவப் பண்பு. Christianism n. கிறித்தவ இயல்பு, கிறித்தவப் பண்பு, கிறித்தவர் சமயக்கோட்பாடு. Christiania n. பனிச்சறுக்கலில் திடீர் நிறுத்தத்துக்கு உதவும் திருப்பச் சறுக்கல் முறை. Christian-like a. கிறித்தவத் தகுதிவாய்ந்த. Christian n. கிறித்தவர், இயேசுகிறித்துவின் சமயத்தைச் சார்ந்தவர், இயேசுவைப் பின்பற்றுபவர், இயேசுவை நம்புபவர், இயேசுவின் பண்பாளர், கடவுட்பற்றாளர், நல்லார், தக்கார், மனிதர், (பெ.) கிறித்தவ, இயேசுகிறித்துவுக்குரிய, கிறித்தவ சமயஞ்சார்ந்த, இயேசுவின் திருச்சபைக்குரிய, இயேசுவைப் பின்பற்றுகிற, இயேசுவின் கோட்பாடு மேற்கொண்ட, இயேசுவின் பண்பு அளாவிய, கடவுட்பற்றார்ந்த, தகுதிவாய்ந்த, அருளிரக்கமுடைய, மனிதப்பண்பு நிரம்பிய. chrismatory n. திருமுழுக்கு நெய்க்குரிய கலம். chrismal n. திருமுழுக்கு நெய் வைக்கப்படத்தக்க பேழை, பெயரீட்டு விழாவின் போது பயன்படுத்தப்படும் திரை, (பெ.) திருமுழுக்கு நெய்யைக் குறித்த, திருமுழுக்குக்குரிய. chrestpmathic, chrestomathical a. தொடக்கப் பயிற்சிக்குரிய திரட்டு வடிவான. chrestomathy n. அயல்மொழி மாணவர்க்குரிய தொடக்க நிலைத் திரட்டுச்சுவடி. chrematistics n. செல்வ இயல், பொருள் நிலை பற்றிய ஆய்வு நுல். chrematist n. நாட்டுப் பொருளியல்வாதி. chremastic n. நாட்டுப் பொருளியல் பற்றிய, செல்வநிலை பற்றிய, பணவளம் பற்றிய. chowkidar n. (இ.) காவலாள். chota haziri, chota hazri n. (இ.) காலைச் சிற்றுண்டி. chorological a. நிலப்பரப்பு வளம்சார்ந்த. chorography n. விரிநிலநுல், மாவட்ட வழியாக விரிந்து செல்லும் நிலநுல். chorographic, chorographical a. விரிநில நுல் சார்ந்த, விரிநில நுலுக்குரிய. chorographer n. விரிநிலநுலார், மாவட்ட வாரியாக நிலநுல் விரித்தாராய்பவர். choripetalous a. (தாவ.) தனித்தனி வேறொன இதழ்களையுடைய. choriambic n. நெடில் குறில் இணை நெடிலான நாற்சீரடியாலான பாவகை, (பெ.) நெடில் குறில் இணை நெடிலான நாலசைச் சீர்சார்ந்த, நெடில் குறில் இணை நெடில் அசைகளடங்கிய. choriamb n. நெடில் குறிலிணை நெடிலான நாலசைச்சீர். choreography n. ஆடற்கலை, கூடியாட்டவகைக்குரிய கலை, கூடியாட்ட வகைக் கலைக்குறியீட்டுப் பதிவு, ஆடல் தொகுதி அமைப்பாண்மை, கூடியாட்டவகை அமைப்பாண்மை. choreographic a. கூடியாட்ட ஆடல்வகை அமைப்புக்குரிய, ஆடல்வகை ஏற்பாட்டுக்குரிய. choreograph, choreographer n. கூடியாட்ட ஆடல்வகையின் அமைப்பாளர். chorea n. (ல.) காக்காய் வலிப்பு வகை. chordate n. தண்டெலும்பு அல்லது அதன் கருமூலத்தடங்கள் உடைய உயிரினப் பெரும்பிரிவு சார்ந்த உயிர். chordal a. யாழ்நரம்பு சார்ந்த, நரம்பு நாளம் சார்ந்த, நாண்வரைக்குரிய, தளைநாண்போன்ற, நிற இயைபுக்குரிய, தளைநாண் போன்ற, நிறஇயைபுக்குரிய, சுரஇயைபு சார்ந்த. chorally adv. ஒரே பாடற்குழுவாக, பாடற்குழுவுக்கேற்ப, பாடகர் குழாத்தினைச் சார்ந்து, பாடகர்குழு உடனிசைக்கும் நிலையில். choralist n. பாடற்குழுவினர், பாடகர் குழாத்தின் உறுப்பினர், பாடுவார். choral -2 a. பாடகர் குழாத்துக்குரிய, பாடற்குழுவினரால் மிழற்றப்பட்ட, பாடகர் குழாத்தின் உடனிசைப்புடைய. choral -1 n. எளிய இன்னிசைப்பாட்டு, தேவபாணிப் பாசுரம், ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலில் பாடகர் குழு முழுமையும் இணைந்து பாடும் வழிபாட்டுப் பாடல். choragus n. கிரேக்க நாட்டின் ஆடல்பாடற்குழுவின் அமைப்பாளர், ஆடல்பாடல்குழு இயக்குநர். choragic a. ஆடல்பாடல் குழுத்தலைவருக்குரிய. chop-fallen a. நாடிதளர்ந்த, முகஞ்சோர்ந்த, கிளர்ச்சியற்ற, ஊக்கம் குலைந்த. chondral a. எலும்புக் குருத்தியலான, குருத்தெலும்பு சார்ந்த. choliambic a. மூ ஏறு சீர்யாப்புக்குரிய, குறுந்துள்ளல் யாப்பிலமைந்த. choliamb n. கிரேக்க ரோம மொழிகளில் குறுந்துள்ளல்யாப்பு வகை, கடைச்சீர் மட்டும் இருநெடிலாயமைந்த மூ ஏறுசீர்யாப்பு. choleraic a. வாந்திபேதிக்குரிய, கொள்ளைநோய் சார்ந்த. cholera-belt n. கொள்ளை நோய் தடுத்துக் காக்கும் நோக்குடன் அணியப்படும் பட்டு அல்லது மென் சணல் அரைக்கச்சை. cholera n. வாந்திபேதி. cholagogic a. பித்தபேதி உண்டுபண்ணுகிற, பித்தபேதி மருந்துக்குரிய. cholaemia n. பித்த சோகை, குருதியில் பித்தநீர் தேங்குவதனால் ஏற்படும் நோய். chokra n. (இ.) சிறுவன், வேலைக்காரன். choke-pear n. தசைமஞ் சுருக்கும் ஆற்றலுடைய பேரியினப்பழ வகை, வாயடைப்பு, பேசாதிருக்க வைக்கும் செய்தி. choke-damp n. சுரங்க நச்சாவி, கிணறுகளிலுள்ள நச்சு வளி. choir-organ n. பேரிசைக்கருவியின் உறுப்பு. choir-master n. பாடற்குழுவின் இயக்குநர். choir-man n. பாடகர் குழுவினன். choctaw n. கால்மாறு சறுக்காட்டம், பனிச்சறுக்கு விளையாட்டில் சறுக்கு கட்டத்தின் கோடியிலிருந்து கோடிக்கு எதிரெதிர்க் கால்களால் சறுக்கிச் சென்று மீளுதல். chocolate n. இன்பசைப்பண்டம், கொக்கோ விதை மாவுடன் வெல்லம் கலந்து செய்யற்படும் இனிப்புத் தின்பண்டம், நறுவிதைக்குடி தேறல் வகை, பாலிலோ வெந்நீரிலோ கலந்த நறுவிதைச்சத்து, (பெ.) இன்பசைப் பண்டம் கலந்த, திண்ணிய கருந்தவிட்டு நிறம் வாய்ந்த. chock-a-block a. செம்மிய, மிடைந்து நிரம்பிய. chloroplast n. பாசணு, இலை-தழைகளில் பசுமைக்கும் காரணமான பாசியம் ஆக்கும் கூறு. chlorination n. பாசிகச் செயற்பாடு. chlorinate v. பாசிகச் செயற்படுத்து, நீரின் நுண்ம அழிப்பு வகையிலும் கனிவிளைவிலிருந்து தங்கம் பிரிப்பதிலும் பாசிகத்கை ஈடுபடுத்து. chlorate n. பாசிகக்காடியின் உப்புவகை. chlorargyrite n. வெள்ளிப்பாசிகை, கொம்பின் திண்ணியல்புடைய கனிப்பொருள் வகை. chloralize v. பாசிக உலர்வெறியமூட்டு, பாசிக உலர்வெறிய மூலம் மயக்கமூட்டு. chloralism n. பாசிக உலர்வெறியப் பழக்கம், பாசிக உலர்வெறியந் தரும் மயக்கக் கோளாறு. chloral n. பாசிக உலர்வெறியம், நீரகற்றப்பட்ட வெறியத்தில் பாசிகம் இயைந்து செயற்படுவதால் உண்டாகிற நிறமற்ற கூர்மணமுடைய தெளிவான நீர்மம், நச்சுத்தடை காப்பிலும்-வசியத்திலும் பயன்படுகிற நீரியல் பொருள். chloasma n. பொன்தவிட்டு நிறம் படரும் படைநோய் வகை. chlamys n. குட்டையான மேலுடுப்பு, செந்நீல மார்ச்சட்டை. chlamydospore n. திண்தோற்சிதல். chivalry n. வீரப்பண்புமரபு, வீரதர்மம், நயநாகரிக வீரமரபு, வீரப்பெருந்தன்மை, காப்புக் கட்டுப்பாட்டுணர்வு, மாதர்-துணையிலார் மாட்டு ஆதரவுடைமை, பண்பகலம், மன அகலம், பெருவீரம், சால்பு, மேலையுலகின் முற்கால வீரப்பெருந்தகை அமைப்பு, அருள்வீரர் குழுமம், வீரச்சான்றோர் குழாம், குதிரை வீரர் தொகுதி. chivalrously adv. பெருந்தன்மையுடன், பெண்பாலருமையறிந்த பீடுடன், பெண்பாற் காப்புக்கடம் பூண்ட நிலையில், விட்டுக்கொடுப்பு மனப்பான்மையுடன். chivalrous a. வீரப்பெருந்தகைமையுடைய, பெண்பாலரிடம் அன்பாதரவுடைய, சால்புமிக்க, விட்டுக்கொடுக்கின்ற, பெருந்தன்மைவாய்ந்த, வீரப்பண்பு நயத்துக்குரிய, முற்கால வீரப்பண்புநய அமைப்புக்குரிய, சான்றாண்மைக்குரிய. chivalric a. வீரப்பெருந்தகை அமைப்புச்சார்ந்த, சான்றாண்மைக்குரிய. chittack n. வங்காள எடையளவுக் கூறு, ஆங்கிலக் கல்லெட்டையில் 16-இல் ஒரு பங்குக்கு ஒப்பான அளவை. chital n. (இ.) புள்ளிமான் வகை. chit-chat n. சிற்றுரையாடல், நேரப்போக்குப் பேச்சு, இன்ப உரையாடல், வம்பளப்பு. chiropractor n. வர்ம முறை மருத்துவர். chiropractic n. வர்மமருத்துவ முறை, தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயல் தடுத்து நோவு குணப்படுத்தும் முறை. chirograph n. முறைப்படி எழுதிக் கையொப்பமிட்ட பத்திரம். chiragric, chiragrical a. கைச்சந்துவாதம் சார்ந்த, கைவாத சூலையுடைய. Chippendale n. 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த தச்சு விற்பனர், சிப்பெண்டேல் என்ற தச்சு விற்பனர் வகுத்தமைத்த உயர்தரச் சித்திர வேலைப்பாடுடைய மரத்தாலான தட்டுமுட்டுக் கலன் வகை, புத்தக மேலட்டைப் பாணி வகை, (பெ.) சிப்பெண்டேலுக்குரிய, சிப்பெண்டேலின் பாணியுடைய, உயர்தரச் சித்திரவேலைப்பாடுடைய மரக்கலன்கள் சார்ந்த. chipboard n. ஒட்டுமரக்கட்டை, மரத்தூள் சருகு செத்தைகளுடன் மெழுகிணைத்து ஆக்கப்படும் கட்டை, கழிவுத்தாள் கூழால் செய்யப்படும் பெட்டிக்குரிய அட்டைத்தாள். chip-hat n. பனை ஓலை நறுக்குகளால் இயற்றப்பட்ட தலைக்கவிகை, ஓலைத்தொப்பி. chip-carving n. இடையிடையே சிம்பு செதுக்குவதன் மூலம் இயற்றப்படும் செதுக்குவேலை, கொத்துச் செதுக்குப் பணி. chip-basket n. வரிச்சல் கூடை, பழக்கூடை. Chiondoxa n. விடியற்காலத்தில் அலரும் நீலமலர்ச் செடிவகை. chinchonaceous a. காய்ச்சல் மருந்துப் பொடிதரும் பட்டைக்கு உரிய மரத்தினைச் சார்ந்த. chinchilla n. மென்மயிர்தோலுடைய எலிபோன்ற தென் அமெரிக்கக் கொறிக்கும் இன விலங்கு வகை, கொறிக்கும் இன விலங்கு வகையின் மென்மயிர்த்தோல். Chinatown n. நகரில் சீனர் வாழும் பகுதி. chinampa n. மிதவைத் தோட்டம், நடு அமெரிக்காவில் மெக்ஸிகோ நாட்டில் ஏரிகளில் பாசிச் செடிவகைகளைப் பரப்பி வளர்த்துப் பேணும் தோட்டம். Chinaman n. சீனக்காரன், சீனநாட்டன், மரப்பந்தாட்டத்தில் வலக்கை ஆட்டக்காரன் எல்லைக்குள் இடக்கை ஆட்டக்காரன் பந்தின் புகுதரவு, புகுதரவுப் பந்தெறி. china-ware n. மங்குக்கலத் தொகுதி, பீங்கான் கலங்கள். china-maniac n. மங்குலக்கல ஆர்வ வெறியர், பீங்கான் பித்தர். china-mania n. மட்டுமீறிய மங்கார்வம், பீங்கான் பைத்தியம். China-grass n. தாளும் நாறும் தரும் பூச்சிமுள் பூண்டுவகை. china-closet n. மங்குக்கலக் காட்சி நிலைப்பெட்டி. china-clay n. மங்கு செய்ய உதவும் களிமண் வகை. China n. சீனநாடு, (பெ.) சீனநாட்டுக்குரிய, china -1 n. மங்கு, பீங்கான், (பெ.) மங்கினால் செய்த. chimpanzee n. மனித உருவை மிகுதியும் ஒத்த வாலில்லா ஆப்பிரிக்கக் குரங்கு வகை. chimney-swallow n. குருவி வகை. chimney-stalk n. நீடுயர் புகைப்போக்கி. chimney-stack n. புகைப்போக்கித் திரள், ஒரே அடியிடத்தில் தொடங்கும் புகைக்போக்கிகளின் தொகுதி. chimney-shaft n. புகைப்போக்கிக் குழாய். chimney-jack n. காற்றோட்டத்துக்கான புகைப்போக்கியின் சுழல் முகடு. chimney-board n. அடுப்பங்கரைத் தட்டி. chimerical a. பெருந்தாப்புனைவான, கட்டற்ற கற்பனாகாரமான, கதம்ப உருவான, நம்ப முடியாத. chimera n. பழம் புராணகதைகளுக்குரிய சிங்கத்தின் தலையும் வெள்ளாட்டின் உடலும் பாம்பின் வாலும் உடைய வேதாள விலங்கு வகை, கதம்பப் புனைவுருவான விலங்கு, கலப்படப்புனைவு, பொருந்தாக் கற்பனை, கட்டற்ற கற்பனை, கதம்ப உரு, கதம்ப விலங்குச் சித்திரம், சுறா போன்ற முதிரா எலும்புடைய மீனினம், இருவகைத் தளசம மரபின் இணைவுடைய உயிரினம். Chilopoda n. pl. பூரான்கள். Chilognatha n. pl. ஆயிரங்கால் அட்டைகள், மரவட்டைகள். chiliastic a. திரு ஆயிரக்கோட்பாடு சார்ந்த, இயேசு நாதர் ஆயிர ஆண்டுகள் உடல் வாழ்வுடன் உலகில் ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கையுடைய. chiliast n. திரு ஆயிரக்கோட்பாட்டாளர், இயேசு நாதர் ஆயிர ஆண்டுகள் உடல் வாழ்வுடன் உலகில் ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கையுடையவர். chiliasm n. திரு ஆயிரக்கோட்பாடு, இயேசு நாதர் ஆயிர ஆண்டுகள் உடல் வாழ்வுடனே ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கை. chiliarch n. ஆயிரமுதல்வர், ஆயிரம் பேருக்குத் தலைமை தாங்குபவர். chiliahedron n. ஆயிரம் முகப்பரப்புகளைக் கொண்ட பிழம்புரு. chiliagon n. ஆயிரக்கோணங்கள் கொண்ட வரையுரு, ஆயிரக்கோணம். chiliad n. ஆயிரம், ஆயிரம் அடங்கிய தொகுதி. Chilean n. தென் அமெரிக்காவிலுள்ள சிலிநாட்டுக்குரியவர். (பெ.) சிலிநாட்டுக்குரிய. Childermas n. டிசம்பர் 2க்ஷ்-ஆம் நாளில் நடைபெறும் புனிதக் குழந்தைகள் விழா. child-welfare n. குழந்தைநலம், குழந்தைகளின் உடல் உளநலங்கள் பற்றிய திட்டமிட்ட சமூகப் பணித்துறை. child-bearing n. குழந்தைப்பேறு, குழந்தைகளைப் பெறுதல், (பெ.) குழந்தைகளைப் பெறுவதற்குரிய. chilblain n. கடுங்குளிரால் ஏற்படும் கன்னிய கைகால் கொப்புளம். chikara n. (இ.) நான்கு கொம்புகள் வாய்ந்த மான் வகை. chikara n. (இ.) நரப்பிசைக் கருவி வகை. Chihuahua n. அஸ்டக் என்ற பண்டைச் செவ்விந்திய இனத்தவரால் தெய்விகமாகக் கருதப்பட்ட குறுங்கண் பெருஞ்செவி வாய்ந்த சிறுநாய் வகை. chiff-chaff n. பாடும் சிறு பறவை வகை. chieftainship n. தலைமகன் நிலை, தலைமை, தலைமைப்பதவி. chieftainess n. குலமரபுத் தலைவி, பெண் தலைவர், தலைவி. chieftaincy n. தலைமகனாட்சி, குடிமரபுத் தலைவர் நிலை, தலைமகனாட்சி எல்லை. chieftain n. தலைமகன், குலமரபுத் தலைவர், பழங்குடித் தலைவர், மக்கள் தலைவர், படைவீரர் தலைவர், தளபதி. chief-baron n. பொருண்முறை மன்றத் தலைவர். chicken-wallah n. (இ.) துன்னாடை கொண்டு திரிந்து விற்பவர். chicken-hearted a. உரமற்ற உள்ளமுடைய, கோழையான. chicken-heart n. கோழை நெஞ்சு, தைரியமற்ற இதயம். chicken-hazard n. அற்பப் பந்தயத்துக்குரிய சிறு சொக்காட்டான் வகை ஆட்டம். chicken-breasted a. நெஞ்செலும்பு கூடாகி முன்தள்ளப் பெற்ற. chicken-breast n. உலர்ந்து முன்தள்ளிய நெஞ்செலும்பு. chickaree n. அமெரிக்கச் செவ்வணில். chickadee n. பாடும் அமெரிக்கச் சிறுபறவை வகை. chick-pea n. சணகம், பயனற்றினத்தின் வகை. chicha n. சோளத்திலிருந்து வடித்த தென்னமெரிக்கத் தேறல் வகை. chicatricle, cicatricula, cicatricule n. முட்டை மஞ்சட் கருவின் முளை உயிர்க்கும் முனை. chicaning n. சொற்பொறி, சொல்மாறாட்டம். chicanery n. சட்டப்பொறியில் சிக்க வைத்தல், குறுஞ்சூழ்ச்சி, வாயடி, போலிவாதம், சொற்புரட்டு. chicaner n. ஏமாற்றுபவன், எத்தன். chicane n. ஏய்ப்பு, ஏமாற்று, கை மோசம், கைச்சாலம், புரட்டு, சீட்டாட்ட வகையில் துபுச்சீட்டில்லாத கைவரிசை, (வி.) ஏய், பொறியில் சிக்க வை, மோசம் செய், கைத்தந்திரத்தால் ஏமாற்று. chiastic a. தொடரில் முன்பின் முரண்நயமுடைய. chiasmus n. முரண்தொடர் அணி நயம், சொற்றொடரில் முற்பாதியின் முறை பிற்பாதியில் மாறுபட அமைத்தல். chiasm, chaisma (உள்.) கண் நரம்புக் குறுக்கீடு. chiarouscuro n. ஒவிய ஒளி நிழல் வண்ண நயம், ஒளி நிழல் வேறுபாடு, இலக்கியத்தில் முரண் நயத்திறம், படிமாற்ற மென்னயப்பண்பு, முனைப்பகழ்வு வேறுபாடு, (பெ.) ஒளிநிழல் வண்ணமுடைய, அரைகுறையாக வெளிப்படுகிற, தெளிவுக் குறைவான. Chianti n. இத்தாலி நாட்டு முந்திரித் தேறல் வகை. Chian a. கிரேக்க நாட்டை அடுத்த கீயாஸ் என்ற தீவுக்குரிய. chevrotain, chevrotin சிறு கத்தூரிமான். chevisance n. சாதனை, செய்து முடித்த காரியம், மூலவளம், ஆதாயம், பணக் கொடுக்கல் வாங்கல். chevaux de frise n. pl. (பிர.) குதிரைப்படைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான முள்வேலி அரண் வரிசை, முள் வேலி, செடிகளின் இழைவரைக் காப்பு, உயிர்களின் மயிர்க் காப்பு வரை. chevalier dindustrie n. பணவேட்டையாடுபவன், எத்தன், மோசக்காரன். chevalier n. குதிரை வீரன், வீரத்திருத்தகை, நாகரிகப் பாங்குள்ளவர், பெண்டிரிடம் மென்னயப் பாங்குடன் பழகும் திறமுடையவர். cheval-glass n. செங்குத்தாய் நிற்கும் சட்டங்களில் தங்கி ஊசலாடும் உயரமான நிலைக்கண்ணாடி. chessman n. கவறு, சதுரங்க ஆட்டக்காய். chessboard n. சதுரங்கப் பலகை, மாறி மாறி வரும் நிறங்களையுடைய கட்டமைவு. cherubic, cherubical a. தேவதூதன் போன்ற, தெய்விகவனப்புடைய. cherry-laurel n. ஐரோப்பிய இலையுதிராப் புதர் செடி வகை. cherry-coal n. மென்பதமுள்ள பளபளக்கும் நிலக்கரி வகை. cherry-bounce, cherry-brandy n. இன் கனிவகை ஊறவைத்த நறுமது வகை. cherry-bean n. தட்டைப்பயறு. cheralite n. தோரிய யுரேனியங்களின் வளம் நிரம்பிய கதிரியக்கமுடைய கனிப்பொருள் வகை. chenopodiaceous a. (தாவ.) அக்காரக் கிழங்குச் செடியினத்துக்குரிய. chemotherapeutics, chemotherapy n. (மரு.) நோய் உண்டாக்கும் நுண்மங்களை அழிக்குந் திறனுள்ள வேதியியல் சேர்மத்தைக்கொண்டு நோய் குணப்படுத்தும் முறை. chemotaxis n. (தாவ., வில.) வேதியியல் தூண்டுதலுக்கிணங்க குறிப்பிட்ட திசையில் உயிரி முழுமையாகப் பெயர்ந்து செல்லும் இயக்கம். chemopsychiatry n. மருந்துமூலம் மனநோய் குணப்படுத்தும் முறை. Chemicals வேதுப்பொருள்கள், வேதியப்பொருள்கள் chemically adv. வேதியியல் கோட்பாடுகளுக்குத் தக, வேதியியல் வல்லுநர் நோக்கின்படி, வேதியியல் செயல் முறையினால். chemical n. வேதியியல் முறையில் பெறப்பட்ட பொருள், வேதியியல் செயன்முறைகளில் பயன்படுத்தப்படும் பொருள், (பெ.) வேதியியலுக்குரிய, இயைபியலுக்குரிய, வேதியியல் சார்ந்த, வேதியியலான, வேதியியல் நன்குணர்ந்த, வேதியியல் கற்று வருகிற. chemiatric a. வேதியியல் மருத்துவஞ்சார்ந்த. Cheltonian n. செல்டன்ஹாம் கல்லுரியினர், (பெ.) செல்டன்ஹாம் கல்லுரிக்குரிய. Chelsea n. லண்டன் நகரப்பகுதி. chelonian a. ஆமை இனம், (பெ.) ஆமை இனத்துக்குரிய. Chellean a. (தொல்.) பிரான்சில் உள்ள செல்லிஸ் என்னுமிடத்தில் காணப்படும் எச்சமிச்சங்களைக் கொண்டு அறியப்படும் பழங்காலப் பகுதிக்குரிய. chelicera n. சிலந்திப் பேரினப்பூச்சி வகைகளில் முன்புறத்திலுள்ள கடிக்கும் உறுப்பு. chelate a. பிடிக்கும் நகங்கள் போன்ற, கொடுக்கினை உடைய. chela -2 n. நண்டு-தேள் போன்ற உயிரினங்களின் கொடுக்கு. chela -1 n. சீடன், பௌத்த சமயத்தில் புதிதாய்ப் புகுந்தவன். cheka n. 1ஹீ1ஹ் முதல் 1ஹீ22 வரையிலிருந்த ருசிய காவல்துறை, ருசிய வேவுத்துறை. Cheiropteran n. வௌவால் இனப்பறவை. cheiromantic, cheiromantical a. கைவரை நுலுக்குரிய, கைபார்த்துக் குறிசொல்லும் கலை பற்றிய. cheiromancy n. கைவரை ஆய்வியல், கை பார்த்துக் குறி சொல்லும் கலை. cheirography n. கையெழுத்து, எழுத்துத்திறன், கையெழுத்துப் பாங்கு, எழுத்தாண்மை. cheirographist n. கையெழுத்து வல்லுநர். cheetah n. சிறுத்தைப்புலி வகை. cheese-vat n. தயிரைச் செறிவாக்கி அழுத்துவதற்குப் பயன்படும் மரத்தொட்டி. cheese-taster n. பாலடைக்கட்டியின் உட்புறத்திலிருந்து மாதிரிக்காகக் கொஞ்சம் எடுப்பதற்கான கருவி. cheese-straw n. பால் ஏட்டினால் மணம் ஊட்டப்பெறும் நீண்ட மெல்லிய மாப்பாண்ட வகை. cheese-parings n. pl. பயனற்ற எச்சமிச்சங்கள். cheese-paring n. மிக மெலிந்தவர், கஞ்சத்தனம், (பெ.) கஞ்சத்தனமான, ஈயத்தனமான. cheese-cake n. மாப்பணியார வகை. checkmate n. சதுரங்க ஆட்டத்தில் 'மன்னர்' தப்பிச் செல்ல வழியின்றிக் கட்டுண்டுக் கிடத்தல், முடிவான தோல்வி, (வி.) சதுரங்க ஆட்டத்தில் எதிரியின் 'மன்னரை' த் தப்பிச் செல்ல வழியின்றிக் கட்டிப்பாடு, தோல்வியுறச்செய், ஒருவர் முயற்சியை வீணாக்கு. checker-board a. பல்வண்ணக் கட்டங்கள் வாய்ந்த ஆட்டப்பலகை. check-taker n. கொட்டகை அடையாளச் சின்னம் திருப்பி வாங்குபவர். check-action n. இசைப்பெட்டியில் சம்மட்டி இரண்டாம் முறை அடிக்காதவாறு பொறியமைப்புமூலம் தடுத்து நிறுத்தல். cheat n. சூது, மோசடி, வஞ்சிப்பவர், ஏமாற்றுகிறவர், மோசம் செய்பவர், கண்டுபிடிக்கப்படாமல் ஏமாற்றுவதற்கான உரிமையுள்ள சீட்டாட்ட வகை, (வி.) ஏமாற்று, மோசம்செய், வஞ்சி, இழக்கச்செய், போக்குக்காட்டு, கழி, கடத்து, இரண்டகமாக நட, நம்பவைத்து ஏமாறச்செய். cheaply adv. சிறுவிலையில், மிகுதி செலவின்றி, எளிதாக. cheapen v. விலைகுறை, மலிவாக்கு, விலைமலிவாகு, மதிப்புக் குறை, விலைகேள். cheap a. மலிவான, விலை குறைந்த, நயவிலையில் விற்பனை செய்கிற, குறைந்த விலையில் கிடைக்கிற, மதிப்பை நோக்குமிடத்து விலை குறைவான, எளிதாகக் கிடைக்கிற, பயனற்ற, சிறு மதிப்புள்ள, சிறு மதிப்பீட்டுக் கணக்கிடப்படுகிற, இழிவான, கீழ்த்தரமான, பொருட்படுத்த வேண்டாத, புதுமையற்ற, கவர்ச்சியற்ற, (வினையடை) மலிவாக, எளிதாக. chay, chaya சாயவேர், சிவப்புச் சாயம் செய்ய உதவும் வேரினை உடைய செடி வகை. chawl n. தொழிலாளர் குச்சுத் தொகுதி. chaw-bacon n. பட்டிக்காட்டுக் கோமாளி, பாங்கறியா நாட்டுப்புறத்தான். chaw n. வாயிலிட்டு மெல்லும் அளவு, புகையிலை நறுக்கு, (வி.) மெல்லு, குதப்பு. chauvinistic a. மட்டுமீறித் தன்னாட்டுப் பற்றுடைய, பிறநாட்டைப் பழிக்கிற. chauvinist n. அளவுமீறிக் குறுகிய நாட்டுப்பற்றுடையவர். chauvinism n. குறுகிய வெறிகொண்ட நாட்டுப்பற்று, பிறநாட்டுப் பழிப்பு. chaussure n. புதையடிப் பொதுப் பெயர். chausses n. pl. காலோடு இணைந்த நீள் உறை, நீள் காலுறை, பண்டைய போர்க்கவச்சத்தில் கால் மூடும் பகுதி. chaumontel n. பெரிய பேரியினக்காய் வகை. chaulmoogra, chaulmugra n. எண்ணெய்விதை தரும் மரவகை. chauffeuse n. மோட்டார் ஓட்டுபவள், உந்து வண்டி ஓட்டுபவள். chauffeur, chauffeur உந்துவண்டி ஓட்டி, மோட்டார் ஓட்டி. chaufferer n. நெருப்பு வைக்கும் உலோகக் குடுவை, கணப்புப் பெட்டி, தூக்கு கணப்புக் கலம். chaud-froid n. (பிர.) பாகில் அல்லது காரக்குழம்பிலிட்டுக் குளிர்பதப்படுத்தப்பட்ட துண்டுக் கோழிக்கறி. chatty -2 n. (த.) சட்டி, நீர்க்கலம். chatty -1 a. இன்னுரையாடல் பண்புடைய, வம்பளக்கிற, கதைபேசும் விருப்புடைய. chattiness n. அளவிளாவிப் பேசும் பண்பு, வம்பளப்பு, வெற்றுரையாட்டு. chattering n. பறவை ஒலிபோல ஒலிசெய்தல், வாயலம்பல். chatterer n. கடகடவெனப் பேசுபவர், பயனில் சொல் பேசுபவர், வாயாடி, பறவை வகை. chatterbox n. தொணதொணவெனப் பேசுபவர், அலப்பு வாயர், வாயாடிக் குழந்தை. chatter n. நெறுநெறெனும் அரவம், பற்களைக் கடித்தலால் உண்டாகும் ஒலி, சலசலப்பு, மாக்பை எனும் பறவையின் ஒலி, பயனில் பேச்சு, (வி.) தொடர்ந்து பறவை ஒலி எழுப்பு, குளிரில் பல் நறநறவென ஒலிப்பது போல் செய், பயனின்றிப்பேசு, கடகடவெனப்பேசு. chattel n. புடைபெயர்ப்பு உடைமை, இயங்குடைமைப் பொருள், தளவாடம், தட்டுமுட்டுப் பொருள்கள். chatoyant a. இருளில் பூனைக்கண் போன்று மாறுபடும் ஒளியுடைய. chaton n. மோதிர முகப்பு. chatelaine n. மாளிகை முதல்வி, அரைக்கச்சையில் கத்தி முதலியன தொங்கவிடுவதற்குரிய வளையம், கைக்கடிகாரச் சங்கிலியின் சிங்கார வளையம். chatelain n. மாளிகைத் தலைவன், கோட்டை முதல்வன். chateau n. (பிர.) அரண், மாளிகை, கோட்டை வீடு, நாட்டுப்புற மாளிகை. chat -2 n. குயிலினம் உள்ளிட்ட சிறு பறவை வகை. chat -1 n. இன்னுரையாடல், (வி.) அளவளாவி உரையாடு. chasuble n. கடையணு வழிபாட்டின் போது கிறித்தவக் குருமார் அணியும் கையற்ற புற ஆடைவகை. chastity n. தன்னடக்கம், தற்கட்டுப்பாடு, கற்புடைமை, கன்னித் தன்மை, தூய்மை, பண்புயர்வு, நடுநிலைமை, எளிமை நயம். chastisment n. தண்டனை, கண்டனம், கண்டித்துத் திருத்துதல், ஒறுப்பு, கண்டிப்பு, கண்டனக் கருவி, கண்டன விளைவு. chastise v. திருத்துவதற்காகத் தண்டி, கண்டி, கடிந்து கொள், ஒழுங்கிற்குக் கொண்டுவா, படிய வை, பணிய வை. chastisable a. தண்டித்துத் திருத்தக்கூடிய, அடித்து அடக்கத்தக்க. chastenment n. தூய்மைப்படுத்தும் செயல், தண்டனை. chasteness n. கற்புடைமை, தூய்மை, பகட்டற்ற நிலை. chastener n. தண்டித்துக் குற்றம் களைபவர், தூய்மை செய்பவர், தண்டித்து அடக்குபவர், கண்டிப்பவர். chasten v. தண்டித்துத் திருத்து, தண்டி, கண்டி, தூய்மைப் படுத்து, பண்புடையதாக்கு, படிமானம் பண்ணு, மட்டுப் படுத்து, பணியச் செய், அடக்கு. chaste a. கற்புடைய, வழுவாத, சட்டவரம்பு மீறாத, அடக்க ஒடுக்கமுடைய, பண்பு நயமுடைய, தூய்மையான, கன்னி நலமுடைய, கற்புநெறி வழாத, குற்றமற்ற, வாக்கு நாணயமான, தன்னடக்கமுடைய, இயலெளிமை வாய்ந்த, பகட்டற்ற. chassis n. பொறி வண்டிகளின் அடிச்சட்டம், பீரங்கி வண்டியின் அடித்தளம், விமானம் வந்திறங்கும் வண்டிக் கூண்டு. chasseur n. (பிர.) வேட்டைக்காரர், பிரஞ்சுப் படையின் பொறுக்கியெடுக்கப்பட்ட காலாள் வீரர், பொறுக்கியெடுக்கப்பட்ட குதிரை வீரர், பணிச் சின்னமுடைய ஏவலாள். chassepot n. (பிர.) 1க்ஷ்66-ஆம் ஆண்டில் பிரஞ்சு நாட்டு இராணுவம் பயன்படுத்திய சுழல் துப்பாக்கி வகை. chasse(2), chasse-caf n. (பிர.) காப்பி அருந்தியபின் உட்கொள்ளுதற்குரிய மணம் ஊட்டப்பெற்ற இன்மது வகை. chasse -1 n. (பிர.) நடனத்தில் சறுக்குவதுப் போன்று அடியெடுத்துவைத்தல், சறுக்கடி, (வி.) நடனத்தில் சறுக்கடி எடுத்து வை. chasmy a. ஆழ்ந்தகன்ற, ஆழ்கெவி போன்ற, விடருடைய, பெரும் பிளவுகள் கொண்ட, பாழ் வெளியான. chasmogamy n. (தாவ.) அயல் பூந்தாது ஏற்பதற்கு இசைவாகத் திறந்த மலர்களைக் கொண்டிருக்கும் நிலை. chasmed a. பெரும் பிளப்புக்களையுடைய. chasm n. ஆழ் கெவி, கசம், பாழ்க்கிடங்கு, எல்லையற்ற பாழ்வெளி, பெரும் பிளவு, வெடிப்பு, எட்டிப் பிடிக்க முடியாத வேறுபாடு. chasing n. செதுக்குக் கலை, மரை-திருகாணியின் இழைகளை வெட்டும் கலை. chaser -2 n. செதுக்கு வேலைக்காரர், செதுக்குக் கருவி. chaser -1 n. பின்தொடர்பவர், வேட்டைக்காரர், தடை தாண்டிப் பந்தயக் குதிரை, எதிரி விமானத்தைத் தொடர்ந்து துரத்திச் செல்லும் வேட்ட வானுர்தி, ஆடவர்களை விடாது பற்றித் தொடரும் மாது, வெறியார் குடிக்குப்பின் அருந்தும் குளிர்ந்த குடிவகை, சிறு தேறலின்பின் உட்கொள்ளப்படும் குட chase-port n. துரத்தி அல்லது துரத்தப்பட்டு ஓடும்பொழுது துப்பாக்கி வைத்துச் சுடுவதற்கான கப்பல் பக்கத்திலுள்ள புழை வாய். chase -4 v. சுற்றிப் பதிக்கவை, புடைப்புருப் பதிய வை, செதுக்கு, செதுக்கி அழகு செய். chase -3 n. அச்செழுத்துக்களைப் பிணைத்துப் பிடிக்கும் இரும்புச் சட்டம் உருப்பள்ளம். chase -2 n. துப்பாக்கியின் குழற்புறப் பகுது, குழாய் வைப்பதற்குரிய குழிவுத் தளம். chase -1 n. பின் தொடர்கை, வேட்டை, வேட்டையாடுதல், வேட்டை விலங்கு, வேட்டையாடப்படும் விலங்கு இனம், துரத்தப்பட்ட கப்பல், ஆட்டக்களரி, பந்தய ஆட்டவெளி, வரிப்பந்தாட்டப் பந்தடி வகை, (வி.) பின்பற்றி ஓடு, பின் தொடர்ந்து செல், வேட்டையாடு, துரத்து, வெருண்டோடச் செய். Charybdis n. கிரேக்க பழங்கதையில் ஆறுதலைகள் கொண்ட பேருருவ விலங்கு, சிசிவித் தீவு அருகிலுள்ள கடற் சுழி. chary a. வீடு பெருக்கும் பணிப்பெண், முரட்டு வேலைகளைச் செய்யும் வீட்டு வேலைக்காரி. charwoman n. மடத்துப் பதிவேடு, பதிவுக்கட்டுகளைப் பத்திரமாக வைப்பவர், பதிவேடு வைக்கும் இடம். chartulary n. கார்த்தூசிய துறவி, கார்த்தூசிய துறவிகள் மடத்தினைச் சார்ந்த மனையில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம். chartreux n. கார்த்தூசிய துறவி, கார்த்தூசிய துறவிகள் பிரிவின் மடம், மணம் ஊட்டப்பெற்ற இன்தேறல் வகை, மணி மெருகிடப்பட்ட மட்பாண்ட வகை, சோற்றுத் திரள், வெளிறிய பச்சை வண்ணம். chartreuse n. பிரஞ்சு நாட்டில் உள்ள துறவி மடம், தூய புருனோ என்பவரால் ஆயிரத்து எண்பத்தாறாம் ஆண்டு நிறுவப் பெற்ற கார்த்தூசிய துறவிகள் பிரிவின் மல்ம், மவ்ம் ஊட்டப்பெற்ற இன்தேறல் வகை, மணி மெருகிடப்பட்ட மட்பாண்ட வகை, சோற்றுத்திரள், வெளிறிய பச்சை வண்ணம். chartography n. நிலப்படம் அமைத்தல். chartless a. கடல் நெறி விளக்கப்படங்கள் இல்லாத, செய்தி விளக்கக் குறியீட்டுப் படமற்ற. Chartism n. (வர.) இங்கிலாந்தில் 1க்ஷ்3க்ஷ்-இல் நடைபெற்ற பேருரிமைக் கிளர்ச்சியியக்கம், (பெ.) பேருரிமை கிளர்ச்சியியக்கம் சார்ந்த. charthouse n. கப்பலின் கடல்நெறி செய்தி விளக்க வரைப்படங்கள் வைக்கப்படும் அறை. Charterhouse n. பழைய மடத்து மனையில் நிறுவப்பட்டுள்ள லண்டன் ஏழை விடுதியின் பெயர், லண்டன் மருத்துவ மனையின் பெயர், லண்டன் பள்ளியின் பெயர். chartered a. பட்டயம் பெற்ற, ஆவணமுடைய, தனி உரிமை வாய்ந்த, சலுகை பெற்ற, வாடகைக்கு விடப்பட்ட. charter-party n. கப்பலுரிமையாளர்-வணிகர் ஆகியவரிடையே முற்றுவிக்கப் பெறும் கப்பல் வாடகை ஒப்பந்தம். charter-member n. தொடக்கத்திலிருந்து நிலைபெறும் உறுப்பினர். charter n. பட்டயம், தனியுரிமைப் பத்திரம், நகர ஆட்சி உரிமையாவணம், சிறப்புரிமைச் சான்று, சலுகை உரிமைச் சீட்டு, சலுகை, விலக்கு, விடுபாடு, (வி.) பத்திரத்தால் நிலைபெறச் செய், ஒப்பந்தமூலம் வாடகைக்கு விடு, தனி உரிமையளி. chartaceous a. தாளுக்குரிய, காகிதம் போன்ற. charta n. பட்டயம், உரிமைப்பத்திரம். Chart நிரல்படம் chart n. மாதிரிப்படம், கடல் பரப்பு விவர விளக்கப்படம், புள்ளி விவர விளக்கக் காட்சிப்படம், விளக்க அட்டவணை, (வி.) விளக்க வரைபடம் அமை. chars n. வீட்டு வேலைகள். charry a. கரி சார்ந்த, கரியைப்போன்ற. charqui n. வற்றவிட்ட மாட்டிறைச்சிக் கீற்று. charpoy n. (இ.) எளிய கட்டில், சித்திரப் பூவேலை செய்த படுக்கை. charpie n. காயங்களைக் கட்டப் பயன்படும் மென் பஞ்சுத் துணிப்பட்டை. Charon n. கிரேக்க பழங்கதையில் கீழுலக ஓடக்காரன், இறந்தவர்களின் ஆவிகள் எரியுலக ஆற்றினைக் கடக்க உதவும் படகோட்டி. charnel-house n. எலும்புக் கிடங்கு, கல்லறை எலும்புகளைக் கொட்டும் இடம். charms n. pl. தனிக் கவர்ச்சிக் கூறுகள், வனப்புகள். charmless a. கவர்ச்சியற்ற, வனப்புக் கூறுகள் இல்லாத. charmingly adv. அழகொழுக, கவரும் வகையில், மருட்சியூட்டும் முறையில். charming a. கவர்ச்சி மிக்க, வனப்புடைய, இனிமையூட்டுகிற, மகிழ்ச்சியளிக்கிற. charmful a. கவர்ச்சி மிக்க, வனப்புக் கூறுகள் செறிந்த. charmeuse n. மென்மையும் வழவழப்பும் கொண்ட பட்டு ஆடைக்கான இழைமப்பொருள். charmer n. மந்திரத்தால் மயக்குபவர், பேரழகி. charmed a. மந்திரத்தால் மயக்கப்பட்ட, மகிழ்விக்கப்பட்ட, தனி ஆற்றலால் காக்கப்பட்ட. charm -2 n. சிறுபறவை வகைகளின் தொகுதி. charm -1 n. மயக்கும் ஆற்றல், மருட்சி, கவர்ச்சிக் கூறு, அழகு, இனிமையூட்டும் பொருள், மாயச்சொல், மந்திரத் தொடர், மறை ஆற்றல் வாய்ந்த வாசகம், மந்திரம், தாயத்து, சிறுதிற அணிமணி, (வி.) மயக்கு, மகிழ்வி, மனத்தைக் கவர், கவர்ச்சி செய், இசையோடு பாடு, மந்திரத்தால் மயக்கு. charlotte n. அப்பத் துண்டுகளிட்டுப் பொதிந்த பழப் பாகடைப் பண்ணிய வகை. charlock n. காட்டுக் கடுகு, மஞ்சள் வண்ணச் சிறு பூ உடைய களைச்செடி வகை. Charleston n. முழங்காலைப் பக்கவாட்டில் எறிந்தாடும் அமெரிக்க நடனவகை. Charless Wain n. கலப்பை விண்மீன் குழு, சப்தரிஷி மண்டலம். charlatanry n. திறமை உள்ளவர்போல் நடித்தல், வைத்தியர்போல் பாசாங்கு செய்தல். charlatanism n. போலி அறிஞர் இயல்பு, பகட்டாவார நடிப்பு. charlatanic, charlatanical a. போலி அறிஞனுக்குரிய, போலியான. charlatan n. போலி மருத்துவன், போலி அறிஞன், பகடி, திறமையற்றவன். charka n. (இ.) கைராட்டை. chark n. கரி, சுட்ட நிலக்கரி, (வி.) எரித்துக் கரியாக்கு. charivari n. ஆரவாரக் கேலிக்கூத்து, பல்கூட்டொலி, இரைச்சல், கம்பலை. charity-school n. அறக்கொடை நிறுவனப்பள்ளி. charity-girl n. அறக்கொடை நிறுவனத்தின் ஆதரவில் படிக்கும் மாணவி. charity-boy n. அறக்கொடை நிறுவனத்தின் ஆதரவில் படிக்கும் மாணவன். charity n. மன்பதை அன்பு, நன் மனப்பாங்கு, அன்பிணக்கம், தாராள மனப்பான்மை, ஒப்பரவு, இன்னலம், பெருந்தன்மை, விட்டுக்கொடுத்தல், அருளிரக்கம், ஈகை, அறம், அற நிலையம். charitably adv. அன்போடு, அறச்சிந்தனையோடு, பெரிய மனத்துடன் விட்டுக்கொடுத்து. charitableness n. அன்பிணக்கமுடைமை, ஒப்புரவு, அற ஈடுபாடுடைமை, பரந்த மனப்பாங்கு. charitable a. பெருந் தன்மையுள்ள, விட்டுக்கொடுக்கிற, அறச்சிந்தனையுடைய, உதவிசெய்கிற. charioteer n. தேர்ப்பாகன், இரதமோட்டி, (வி.) தேரோட்டு, தேரேறிச்செல். chariot n. தேர், இரதம், நாலு சக்கரமுள்ள அரசாங்க வண்டி, போர்ச்சகடம், வெற்றியூர்தி, (வி.) தேரில் ஏற்றிச் செல், இரதத்தில் ஏறிச்செல். chariness n. கஞ்சத்தனம், மட்டவற்ற தயக்கம். charily adv. மட்டற்ற எச்சரிக்கையுடன், தயக்கத்துடன், சிறிது சிறிதாக, கஞ்சத்தனமாக. chargin n. கடும் ஏமாற்றம், ஆரஞர்த் தன்னொடுக்கம், மன உராய்வுத் துன்பம், உள அரிப்பு, (வி.) ஏமாற்றமடைவி, மன எரிச்சலுட்டு. charges n. pl. செலவுகள், சிறு செலவினத் தொகுதி. charger n. தாக்குபவர், செறிவூட்டி நிரப்புபவர், போர்க் குதிரை. chargeable a. குற்றஞ்சாட்டப்படத்தக்க, கட்டணம் கோருவதற்குரிய, வரி விதிப்பதற்குரிய, செலவினமாக ஒதுக்கப்படத்தக்க, செலவாகச் சேர்க்கப்படுதற்குரிய. charge-sheet n. குற்ற அறிக்கை, குற்றவாளிகளின் மீது சாட்டப்பட்ட குற்றங்களின் பட்டியல். charge-hand, charge-man n. பணியாட்டுக்குழுத் தலைவன். charge daffaires n. (பிர.) துணைநிலைத் தூதுவர், செயல் தூதுவர், தற்காலிகப் பொறுப்பாட்சியாளர். charge n. தாக்குதல், மோதல், குற்றச்சாட்டு, சுமை, பாரம், துப்பாக்கி கொள்ளத்தக்க வெடிமதின் முழு அளவு, பொறுப்பு, பாதுகாப்பு, பொறுப்பாணை, காவற் கட்டளை, காப்புப்பொருள், காப்புக்குரியவர், அறிவுறுஉ, விலை, சத்தம், கட்டணம், கடமை, (வி.) தாக்கு, திடீரென மோது, சுமத்து, பாரம் ஏற்று, திணி, உள்ளிடு, நிரப்பு, அடை, மின் விசை செறிவி, குற்றஞ்சாட்டு, பொறுப்பேற்று, ஒப்படை, காப்பாணையிடு, பொறுப்பாணையிடு, வரி விதி, கட்டணம் கூறு, ஆதாயப் பங்கு எடுத்துக்கொள், விலைகுறி, (கட்.) கேடயத்தில் மரபுச் சின்னம் பொறி, அறிவுறுத்திக் கூறு. charcoal n. கரி, கட்டைக் கரி, தீய்ந்து கரியான மரக்கட்டை. charas n. (இ.) கஞ்சா. charade n. சொல் அல்லது அதன் பகுதிபற்றிய குறிப்பு அல்லது சாடையைக்கொண்டு சொல்லை ஊகித்துக் காண முயலும் விளையாட்டு. characterless a. குணச்சிறப்பற்ற, தனிச் சிறப்புப் பண்பிலாத, சான்று பெறாத. characterize v. பண்பு விரித்துரை, தனிச்சிறப்புக்களால் விளக்கு, வருணி, தனித்தன்மையளி, தனிச்சிறப்பாய் அமை. characterization n. பண்புரு வருணனை, பண்பேற்றக் குறிப்பீடு. characteristically adv. குறிப்பிட்ட வகையில், தனித்தன்மையாக, சிறப்பியல்பாக. characteristic n. தனிச்சிறப்புப் பண்பு, வேறுபரத்திக் காட்டும் இயல்பு, பண்புருவாக்கும் அடிப்படைக்கூறு, (கண.) மடர்க்கையின் நேர்க்கூறு, (பெ.) முனைப்பான, தனிச் சிறப்பான, குறிப்பிடத்தக்க, தனிப்பண்பு மூலமான, மரபுக் கூறான, மரபியைவான. characterism n. தனிச்சிறப்புப் பண்பு, பண்பு விளக்கம், வருணனை. character-literature n. குணநல இலக்கியம், பண்போவியக் கட்டுரை இலக்கியம். character-essay n. குணநலக் கட்டுரை, பண்போவிய விரிவுரை. character n. சிறப்பியல்பு, பண்பு, மரபுக்கூறு, நற்குணம், ஒழுக்க உரம், நற்பெயர், நன்மதிப்பு, மதிப்பு, படிநிலை, பண்பு விளக்கம், நற்சான்று, தனிக்குறியீடு, எழுத்து, வரி வடிவு, உருவடிவம், குறிவடிவம், கையெழுத்து, நன்மதிப்புடையவர், பண்புடையவர், பண்புரு, தெரிந்த மனிதர், ஆள், கலைஞர் கற்பனைப் பண்போவிய உரு, பண்போவியம், நடிப்புறுப்பினர், நடிப்புப் பகுதி, குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புடையவர், (வி.) உருவாக்கு, செதுக்கு, வரை, எழுது, விரித்துக் கூறு. Chara n. நன்னீர்வாழ் கடற்பாசியினச் செடிவகை. char-a-banc, char-a-bancs n. (பிர.) நீண்ட உலாப்பயண ஊர்தி வகை. char -3 n. கரியாக்கு, தீய், தீய்க்கச் செய், தீய்ந்து போகச் செய். char -2 n. மலை ஏரிகளிலும் ஆறுகளிலும் உள்ள சிறு மீன் வகை. char -1 n. நாள் வேலை, இடைவேலை, வீட்டுப்பெருக்கல் மெழுகல் பணி. chaptrel n. வளைவினைத் தாங்கும் தூணின் தலைப்புப்பகுதி. chapter-house n. கட்டளைக் குருக்கள் கூடுமிடம். chapter n. ஏட்டின் தலைப்பிரிவு, அதிகாரம், இயல், அத்தியாயம், முழுக்கூறு, பொருட் கூறு, நிகழ்ச்சிக்கூறு, சட்டப் பெரும் பிரிவு, கட்டளைக் குருக்களின் தொகுதிக்கூட்டம், துறவியர் குழுக்கூட்டம், சங்கம், கழகம், கூட்டுக்குழு, மணிப்பொறியின் ரோம எண்கள், (வி.) இயல் வகு, இயல்களாகப் பிரி, கடி, கண்டித்துத் திருத்து. chappy a. வெடிப்புகள் நிறைந்த, பிளவுகள் செறிந்த. chapped a. வெடிப்புடைய, பனி வெடிப்பினால் தோல் தடித்த, வெப்ப வெடிப்பினால் மண் கெட்டியான, குறுகத் தறித்த. chapman n. (வர.) சிறு வணிகன். chapleted a. தலைமாலையணிந்த. chaplet n. தலைமாலை, சூளிகை, தலையணிமணி, பொன் முடிச்சூட்டு, தொழுகைக் குறுமணி மாலை, கழுத்தணிமணிமாலை, குழாயின் உலோக அடிதாங்கி, தேரையின் முட்டை வரிசை, கோவை. chapless -2 a. வெடிப்பற்ற, பிளவில்லாத. chapless -1 a. கீழ்த்தாடையற்ற. chaplaincy n. குடும்பப் புரோகிதர் வருமானம், சங்கச் சமய வினைஞர் பதவி. chaplain n. தனி மதகுரு, குடும்பப் புரோகிதர், சங்கச் சார்பான சமய வினைஞர். chapiter n. தூண் முகடு, தூணின் தலைப்பு. chapfallen a. முக வாட்டமான, சோர்ந்த நிலையுடைய, கிளர்ச்சியற்ற. chaperon, n. இளம் பெண்ணின் துணைக்காவல் மாது, தலை மூடாக்கு வகை, தொப்பி வகை, (வி.) காப்புத் துணையாகச் செயலாற்று. chapelry n. திருக்கோட்ட ஆட்சி வரம்பு, தனித் திருக்கோயிலின் ஆட்சி எல்லை. chapelle ardente n. (பிர.) மாண்ட பெரியோர் உடல் பார்வைக்கு வைக்கப்படும் மாடம். chapel n. திருக்கோட்டம், தனிப்பட்ட தொழுகையிடம், சிறிய துணைத்திருக்கோயில், கோயில் வீடு, மனைவழிபாட்டிடம், நிறுவனங்களின் கோயில் மனை, கல்லறைக் கூடத்திலுள்ள தொழுமிடம், திருக்கோயிலில் தனிப் பலிபீடம் கொண்ட சிறு அறை, நாட்டுத் திருச்சபையினின்றும் வேறுபட்ட நெறியினர் தொழுமிடம், தனித் திருக்கோட்ட வழிபாடு, பாடகர்குழு, பல்லியம், அச்சு அலுவலகம், நாளச்சுத் தொழிலாளர்கள் சங்கம், நாளச்சுத் தொழிலாளர்கள் கூட்டம். chapeau-bras n. (பிர.) முக்கோணத் தொப்பி. chapeau n. (பிர.) தொப்பி. chape n. வாளுறை முனையிலுள்ள உலோகத் தகடு, போர்க்கருவியின் உறையை அரைக்கசையோடு இணைக்கும் கொளுவி, அரைக்கச்சையின் சறுக்கு வளையம். chaparral n. பசுமை மாறாக் குறுமரப் புதர்க்காடு. chaparajos, chaparejos n. pl. பாதுகாப்பிற்காக மாட்டிடையர்கள் அணியும் தோல் காற்சட்டை. chap-book n. மக்கள் விரும்பும் சிற்றேடு, விற்பனையாளர் அதிகமாக விற்கும் சிறு புத்தகம். chap -3 n. (பே-வ.) ஆள், பேர்வழி, பயல், சிறுவன். chap -2 n. மோவாய், விலங்கின் தாடை, கன்னம். chap -1 n. வெடிப்பு, குளிர் பனி காரணமாக தோலில் ஏற்படும் கீறல், பனி வெடிப்பு, நிலவெடிப்பு, தட்டுதல், மோதுதல், (வி.) வெடி, பிள, வெடிப்புண்டாக்கு, தட்டு. chaotically adv. ஒழுங்கில்லாமல், தாறுமாறாக, குழப்பமாக. chaotic a. குழப்பமான, தாறுமாறான, ஒழுங்கற்ற. chaos n. பெருங்குழப்பம், ஒழுங்கற்ற நிலை. chantyman n. கடலோடிகளின் குழுப்பாடலில் இனிய தனிக்குரல் கொடுப்பவன். chanty n. கடலோடிகள் கூடிச்சேர்ந்து ஒருவன் இடைக்குரல் கொடுக்கப் பாடும் பாடல். chantry n. கிறித்தவர்கள் வழிபாட்டுப் பாடல்கள் பாடும் சிறுகோயில், அறநிலைய மூலமுதல்வர் ஆன்ம நிறைவு குறித்து வழிபாடியற்றுக்காக விடப்பட்ட மானியம், மானியம் பெறும் துணைக்கோவில், மானியக் குருக்கள், மானியத்துக்குரிய வழிபாட்டு மேடை. chantress n. கோயிற் பாடகி, பாடிணி. chanticleer n. வீட்டுச்சேவல். chanterelle -2 n. உண்ணும் மஞ்சள் காளான் வகை. chanterelle -1 n. இசைக்கருவியின் மிக்குயர்ந்த நரம்பு. chanter n. பாடகர், பாண்மகன், திருக்கோயிற் பாடல் இயக்குநர், விரல்துளைகளையுடைய தோற்பை போன்ற ஊது இசைக்கருவி, ஏமாற்றும் குதிரை வியாபாரி. chantage n. (பிர.) பகற்கொள்ளை, அச்சுறுத்திப் பணம் பறித்தல். chant n. இன்னிசை, பண்ணிசைப்பு, கோயிலில் பண்ணிசைத்துப் பாடப்படும் உரைப்பகுதி, (வி.) பாடு, பாட்டினால் வினைமுறையாற்று, பாடல் முறையால் கூறு, குரலிசை எழுப்பு, குதிரை வகையில் ஏமாற்றுத்தனமாக விற்பனைசெய். chansonette n. சிறு பாடல். channelled a. கால்வாயினை உடைய, வாய்க்காலை உட்கொண்ட, பள்ளமுள்ள, வாய்க்கால் வழி செலுத்தப்பட்ட, கால்வாய்க்குள் செலுத்தப்பட்ட, கால்வாய்க்குட்பட்ட. channel -3 n. வானொலி-தொலைக்காட்சி அலை அடையாளக் குறியீடுகளை இடையீடின்றி அனுப்பத்தகும் அலை இடை வெளிப்பகுதி. channel -2 n. பாய்க்கயிறுகளைக் கட்டும்படியாகக் கப்பலின் ஒரு புறத்தினின்று நீட்டிக்கொண்டிருக்கும் பலகைத்துண்டு. channel -1 n. நீர்க்கால், வாய்க்கால், கால்வாய், அகல் இடைகழி, கடற்கால், கப்பல் செல்லத்தக்க கடலிடைவழி, நீர் செல்வழி, பள்ளம், சாக்கடை, செலுத்தும் வழி, (வி.) கால்வாய் உண்டுபண்ணு, பள்ளம் வெட்டு, கொண்டு செலுத்து. changer n. ஒன்றின் உருவினை மாற்றுபவர், செலவாணியிலீடுபடுத்தப்படும் இடையீட்டாளர். changeling n. மாயக்குழந்தை, திருடராலோ குறும்புத் தெய்வங்களாலோ மாற்றப்பட்டக் குழந்தை, வளர்ச்சிக் குறையுற்றவர், அறிவு மழுங்கியவர். changeful a. மாறுதல் நிறைந்த, அடிக்கடி மாறுபடக்கூடிய. changeable a. மாறுபடக்கூடிய, திரிபுடைய, நிலையற்ற. changeability n. நிலையில்லாத தன்மை, மாறுபரம் ஆற்றல். change-over n. முறைமாற்றம். Change all அனைத்தும் மாற்று Change மாற்று change n. மாற்றம், மாற்றுதல், மாறுதல், ஆள்மாற்றம், இடமாற்றம், காலமாறுபாடு, பொருள்மாறுபாடு, பகரமாதல், பதிலாக அமர்த்துதல், வேறுபாடு, மாறுபாடு, திரிபு, விகற்பம், அலைவு, உலைவு, சில்லறை, மாற்றீடுபாடு, மாறுபாட்டுணர்வு, காசுமாற்றம், செலவாணியிடம், (வி.) மாற்று, வேறுபாடு செய், ஒன்றுக்கு மற்றொன்றைக் கொடு, நிலைமாற்று, பண்டமாற்று, கைமாறு, கொடுக்கல் வாங்கல் செய், மாறு, உடைமாற்று, ஊர்தி மாற்று. chandlery n. பல்பொருள் வணிகர் விற்கும் சரக்கு, மெழுகுத்திரி செய்யும் இடம், சிறுவாணிகக் கிடங்கு. chandlering n. பல்பொருள் வாணிகம், பலசரக்கு விற்பனை. chandler n. மெழுகுத்திரி செய்பவர், மெழுகுத்திரி விற்பவர், எண்ணெய் சவுக்காரம் முதலிய சில்லறைப் பொருள் விற்பனையாளர், பலசரக்கு வணிகர். chandelier n. சரவிளக்குச் சட்டம், கொத்து விளக்குச் சட்டம். chancroid(2), chancerous a. கிரந்திப்புண் உடைய, கிரந்திப்புண் சார்ந்த. chancroid -1 n. தொற்றுமூலமாக மட்டுமே வரும் கிரந்தி நோய்வகை. chancre n. கிரந்திப்புண், மேகப் பிளவை. chances n. pl. இடையூறுகள், வாய்ப்புக்கேடுகள், நலந்தீங்கு வாய்ப்புக்கள், வெற்றி தோல்வி வாய்ப்புக்கள். Chancery n. சட்ட மேல்மன்றத்துக்கு அடுத்தபடியான நீதித்துறை முதல்வர் மன்றம், பொதுநேர்மைத் தனி மன்றம், உயர் நீதிமன்றத்தின் பொது நேர்மைப் பிரிவு, பணித்துறைப் பதிவேடகம். chancellory n. நீதித்துறை முதல்வர் பதவி, பதிவு மன்றச் செயல் முதல்வர் நிலை, மன்னாய முதல்வர் பணியரங்கம், முக்கிய அமைச்சர் அலுவலகக் கட்டிடம், தூதர் அலுவலகம், தூதர் துறை அலுவலகக் கட்டிடத்தொகுதி. chancellorship n. நீதித்துறை முதல்வரின் பதவி, மன்னாயமுதல்வர் பதவிக்காலம், பல்கலைக்கழக வேந்தர் பதவி, பல்கலைக்கழக வேந்தர் பதவிக்காலம். chancellor n. முக்கிய அமைச்சர், மன்னாய முதல்வர், உயர் முறைமன்ற முதல்வர், பதிவு மன்ற நடுவர், கட்டியத் துறையில் ஏடகத்தலைவர், பல்கலைக்கழக வேந்தர். chanceless a. நல்வாய்ப்பு இல்லாத. chancel n. திருச்சபைக் குருமார்களுக்கும் பாடற்குழுவினருக்கும் இடையே தட்யிட்டுத் தனியாகப் பிரிக்கப்பட்ட திருக்கோயிலின் கிழக்குப்பகுதி. chanceful a. இடையூறு நிரம்பிய. chance-medley n. (சட்.) வேண்டுமென்றே செய்யப்படாத ஆட்கொலைக் குற்றம், கவனக் குறைவால் தீங்கு மிகுதிப்பட்ட குற்றம். chance-comer n. எதிர்பாராது வருபவர், தற்செயல் வருகையாளர். chance n. தற்செயல் நிகழ்வு, எதிர்பாரா நிகழ்ச்சி, குருட்டிணைவு, பொறியுடைமை, நற்பேறு, பாக்கியம், நல்வாய்ப்பு, நிகழக் கூடியது, நிகழ்ச்சிப்போக்கு, கூடுதிறம், இடர்நேர்வு, வரத்தகும் இடர், இடையூறு, (பெ.) தற்செயல் நேர்வான, இடைவரவான, (வி.) தற்செயலாக நிகழ், நேர், நேரப்பெறு, வரத்தகும் இடர், துணிந்து இறங்கு, (வினையடை) தற்செயலாக. champleve n. உள்வரி வண்ண மெருகுமுறை, மெரு கூட்டலுக்குரிய உலோகப் பரப்பில் உள்வரிப் பள்ளமிட்டு வண்ணப்பொடி நிரப்பி அதன்மீது மெருகுத்தகடு காய்ச்சும் முறை, (பெ.) உள்வரி வண்ண மெருகூட்டுமுறை சார்ந்த. championship n. வீர முதன்மை, பரிந்து துணையாதல். championless a. வீர ஆதரவாளரற்ற, கடமைப் போராடுவார் அறை. championess n. வீர முதல்வி, வாகையள். champion n. மல்லன், பரிந்து செயலாற்றுவோன், வாகையன், வீரமுதல்வன், (பெ.) வீர ஆதரவானரான, முதன்மை சான்ற, (வி.) பரிந்து வினையாற்று, ஆதரவு அளி. champignon n. உணவுக்குரிய காளான் வகை. champerty a. (சட்.) வழக்கு வகையில் வெளியார் உதவிக்காகப் பேசப்படும் பங்குபேரம். champertous a. (சட்.) வழக்கு வகையில் பங்கு ஊதிய உடன்பாடு சார்ந்த. champart n. பகுதிவரி, விளைவின் கூறாக வரையறுக்கப்பட்ட நிலவரி முறை, பண்ணை முதல்வர் பங்கு, பகுதிவரிக்குரிய நிலமானியமுறை. champaign n. திறந்த சமவெளி, (பெ.) சமவெளியான, திறந்த. champagne n. கிழக்குப் பிரஞ்சு நாட்டில் வடிக்கப்படும் ஒள்ளிய வெண்ணிறமுடைய திராட்சை மது வகை, அம்பர் நியவகை. champ -2 n. (கட்.) கேடயத்தின் மேற்பரப்பு. champ -1 n. நெறுநெறு எனும் ஒலி, பற்கடிப்பொலி, பல்லரைப்பு அரவம், (வி.) ஓசைப்படப் பல்லால் அரை, அதுக்கு, சப்பு, நெறுநெறு எனக்கடி. chamois n. ஆட்டின் இயல்புடைய ஐரோப்பிய வரைமான் வகை, மென்பதமுடைய தோல் வகை. chamfrain, chamfron முகப்பட்டி, போர்க்குதிரையின் முகத்துக்குப் பாதுகாப்பான தோல் அல்லது எஃகுத்தட்டு. chamfered a. சாய்வளைவான, சரிவுடைய, பள்ளமான, பள்ளம் போன்ற சுருக்கமுடைய. chamfer n. சாய்செதுக்குமூலை, செங்கோணமாக இருந்ததன் ஓரங்களைச்சீவி வளை சரிவாக்குதல், குதை, வடு, பள்ளம் செய், தூணில் பள்ளக்கீற்றிடு. chameleonic, chameleon-like a. பச்சோந்திபோன்ற, அடிக்கடி நிறம் மாறும் இயல்புடைய, மாறும் பண்புள்ள. chameleon n. பச்சோந்தி, அடிக்கடி மாறுபவர், சந்தர்ப்பவாதி. Chambertin n. புகழ்பெற்ற கொடிமுந்திரித் தோட்டப் பெயர், புகழ்பெற்ற செந்நிற இன்தேறல் வகை. chamberlainship n. அரண்மனை அகம்படியர் நிலை, கஞ்சுகிப்பதவி. chamberlain n. அரண்மனை அகவினைஞர். chambering n. கட்டற்ற காம ஒழுக்கம். chamberer n. மறை சூழ்ச்சிக்காரர். chambered a. அறைகளையுடைய, அறைக்குட்பட்ட குனிந்த மேல்வளைவான. chamber-practice n. முறைமன்றத்தில் வாதாடாமல் அறிவுரை கூறும் வழக்குரைஞர் தொழில். chamber-pot n. படுக்கையறைச் சிறுநீர்க்கலம். chamber-organ n. தனி அறைக்குரிய சிறிய இசைக்கருவி வகை. chamber-maid n. வழிமனைப் பணிப்பெண். chamber-fellow n. அறைத் தோழர். chamber-counsil, chamber-counsellor n. நீதிமன்றத்தில் வாதாடாமல் தனிப்பட்ட முறையில் சட்டக் கருத்து தெரிவிக்கும் வழக்குரைஞர். chamber-concert n. அரங்கிசை நிகழ்ச்சி, துளைக்கருவிகளற்ற நரப்பிசையரங்கு நிகழ்ச்சி. chamber n. அறை, அரங்கு, கூடம், அறைவீடு, கூட்டம் கூடும் இடம், சட்டமன்றப் பிரிவு, நீதி மண்டபம், வாணிகம் முதலிய தனிநோக்குடன் கூடும் குழாம், உட்பிரிவு, கண்ணறை, உள்ளிடம், உட்பொள்ளல், துப்பாக்கியின் பின்புறப் புழை, சிறு பீரங்கி, நீதிமன்றத்திற்குக் கொண்டுவராத வழக்குகளை விசாரணை செய்யும் நடுவர் தனியறை, (வி.) அறையில் அடைத்து வை, கட்டற்ற களியாட்டமாடு. chamade n. (பிர.) சமரசப் பேச்சுக்கழைக்கும் பறையொலி, சரணடையும்படி அழைப்பு விடும் முரசறைவு. cham n. வல்லாளர். chalybite n. இரும்புச் சத்துள்ள விண்வீழ் கல். chalybeate n. இரும்புச் சத்துள்ள நீர், இரும்புக் கலப்புள்ள குடிவகை, (பெ.) இரும்புச் சத்துவளம் உடைய. chalumeau n. இசைக் குழல்வகை. chalone n. செயல் தடுக்கும் உட்கசிவு. challis n. பெருமாட்டியின் உயரிய உடைத்துணி வகை, பட்டுக் கம்பளித்துணி வகை. challenging a. அறைகூவுகின்ற, போரிட அழைக்கின்ற, மறுக்கிற, எதிர்த்துக் கேட்கின்ற. challenger n. அறைகூவுபவர், எதிர்ப்பாளர், வினா எழுப்புபரர், கோரிக்கையாளர். challengeable a. எதிர்ப்புக்குரிய, எதிர்ப்புக்கு ஆட்படத்தக்க. challenge n. அறைகூவல், எதிர்ப்புத் தெரிவித்தல், மற்போருக்குரிய அழைப்பு, காவலாளனின் அதிகாரக் குரல், விளக்கக் கோரிக்கை, பணிமுறைக்கேள்வி, குற்றச் சாட்டு, உரிமைக்கோரிக்கை, (வி.) மற்போருக்கழை, போரிட்டு முடிவு செய்ய அழை, குற்றம் சாட்டு, எதிர்த்துரை, மறுதலி, மறுப்பைத் தெரிவி, அதிகாரத்துடன் உலாவு. chalky a. சுண்ணம் நிறைந்த, சுண்ண வெண்மையான, சுண்ணக்கற்கள் போன்ற, சுண்ணக் கற்களுள்ள. chalkiness n. சீமைச் சுண்ணத்தன்மை, சுண்ண வெண்மை, சுண்ணங் கலந்துள்ள நிலை. chalk-stones n. pl. கீல்வாதம் அல்லது முடக்கு வாதத்தில் கைகால் எலும்பு இணைப்பைச் சுற்றித் தோன்றும் வெண்கசிவுப்ள். chalk-stone n. சுண்ணக்கல். chalk-pit n. சுண்ணச்சுரங்கப் பள்ளம், சுண்ணச் சுதைகுழி. chalk-bed n. சீமைச் சுண்ணப்படுக்கை, சுண்ண நில அடுக்கு. Chalk idustries சுண்ணக்கட்டித் தொழிலகம் chalk n. சீமைச் சுண்ணாம்பு, வெண்சுதைப்பாறை, சுண்ணக் காம்பு, சுண்ண எழுதுகோல், வண்ண ஓவியக்கோல், (வி.) சுண்ணக்கோல் எழுது, குறியிடு, வரைதிட்டம் இடு, சுண்ணமிட்டுத் தேய்த்துத் துலக்கு, சுண்ண உரமிடு. chaliced a. கிண்ணம் போன்ற. chalice n. கிண்ணம், கிறித்தவத் திருக்கோயில் இறை வழிபாட்டு இன்தேறல் குவளை, பூசைப் பாத்திரம், பூக்குடுவை. chalet n. சுவிட்சர்லாந்தின் மலையிலுள்ள பால் பண்ணைக் குடிசை, சுவிட்சர்லாந்துக் குடியானவரின் மரக்குடிசை, தோட்டம் சூழ்ந்த மரமனை, தெருவிலுள்ள சிறுநீர் கழிப்பிடம். chaledonyx n. வெண்மையும் பழுப்பும் மாறிக்கொண்டு வரும் சாயலுள்ள மணிக்கல் வகை. chaldron n. நிலக்கரி அளவைக் கூறு. Chaldean, Chaldee பண்டைக் கால்டியா அல்லது பாபிலோன் நாட்டின் மொழி, கால்டியா நாட்டுக் குடிமகன், குறிகாரர், குறிசொல்பவர், சோதிடம் கூறுபரர், கால்டியா திருக்கோயில் குழுவினர், (பெ.) கால்டியாவைச் சார்ந்த. chaldaism n. பண்டைக் கால்டியா நாட்டின் மொழி மரபு. chalcopyrite n. செம்புக் கலவை வகை, செம்புக் கந்தகக் கல். chalcography n. பித்தளை அல்லது செம்பில் செதுக்கும் கலை. chalcedony n. நீலச்சாயருலுடைய வெண்ணிற மணிக்கல் வகை. chalcedonic a. படிக்கல்லைச் சார்ந்த. chalaza n. (வில.) பறவையின் முட்டைக் கருவைப் பிடிப்பில் இருக்கும்படி நிறுத்தும் மெல் இழைமம், (தாவ.) தண்டு முளையின் அடிப்பகுதி. Chalan அக இதழ், செலுத்துச் சீட்டு chal n. சிறுக்கன், ஏல்ன், ஆள், மனிதர். chaiselongue n. ஒருபுறச்சாய்வு வசதியுள்ள நீளச் சாய்விருக்கை. chaiseless a. வண்டி வகையில்லாத. chaise n. ஒருவர் அல்லது இருவர் செல்லும் திறந்த இலேசான வண்டிவகை. chairwoman n. கூட்டத் தலைவி. chairmanship n. தலைமைப் பதவி, தலைமைப் பொறுப்பு. chairman, n. pl. chairmen கூட்டத்தலைவர், தூக்கு நாற்காலியைச் சுமந்து செல்பவர். chair-organ n. திருக்கோயில் பாடகர் குழுவின் இசைப் பெட்டி. chair n. நாற்காலி, சாய்விருக்கை, பணிமுதல்வர் பீடம், தலைவர் இருக்கை, தலைவர் பதவி, தலைவர், தலைமை, கூட்டத்தலைவர் பதவி, இருக்கை, பேராசிரியர் பதவி, மாநகர் முதல்வர் பதவி, தனிமனிதர் இருக்கை ஊர்தி, தூக்கு நாற்காலி, அமர் சிவிகை, தண்டவாளத்தை உரிய இடத்தில் உறுதிப்படுத்தும் எஃகுப்பிடிப்பு, சான்றுப் பெட்டி, சாவுத் தண்டனைக்கான மின்பாய்வு நாற்காலி, (வி.) அதிகார இருக்கையில் அன்ர்வி, வெற்றி ஊர்வலமாகத் தூக்கிச்செல், கூட்டத் தலைவராக இருந்து நடத்து. chainwork n. சங்கிலி இணைப்புப் போன்ற வேலை, வலைப்பின்னல். chainrule n. (கண.) தொடர் தகவுமுறை, தொடர் தகவுக் கணிப்பில் பல கணிப்புகளை ஒரே இணைத்தொடர் சமனீடாக்கி மதிப்புக்காணும் முறை. chainplates n. pl. கப்பலின் பாய்க்கயிறு கட்டுவதற்குரிய அடித்தகடுகள். chainpier n. சங்கிலிக் கடற்பாலம், சங்கிலி அமைப்பாதரவுள்ள அலைதாங்கி. chainlet n. சிறு சங்கிலி. chained a. விலங்கிடப்பட்ட, கட்டப்பட்ட, சங்கிலியால் மாட்டப்பட்ட. chain-stitch n. சங்கிலி வளையத் தையல். chain-shot n. கப்பல் பாய்மரத்தை வெட்ட உதவும் சங்கிலியின் ஓரக்குண்டு. chain-reaction n. செயல் விளைவுத் தொடர். chain-pump n. முடிவற்ற சங்கிலியில் இணைத்த நீர் இறைக்கும் குக்ஷ்ய். chain-moulding n. (க-க.) சங்கிலி வளைய உருவமைப்பு. chain-lightning n. தொடர் வெட்டு மின்னல், கடுமையான விஸ்கி வகை. chain-letter n. பெறுபவர் படியெடுத்து அனுப்புவதன் மூலம் எல்லையற்றுப் பெருகித் தொடர்ந்து செல்லும் சங்கிலித் தொடர் முறைக் கடிதம். chain-less a. விலங்கற்ற, சங்கிலி இல்லாத, தடையற்ற. chain-gear, chain-gearing n. சுழலும் பற்சக்கரங்கள் மீது சுற்றிச்சுற்றி வரும் சங்கிலி அமைவு. chain-gang n. தொடர்சங்கிலியினால் இணைக்கப்பட்ட கைதிகள் தொகுதி. chain-driven a. இணைப்புச் சங்கிலியின்மூலம் சக்தியை இயக்குவிக்கின்ற. chain-drive n. சங்கிலியின்மூலம் ஆற்றல் தொடுப்பு. chain-coupling n. புகைவண்டிப் பெட்டிகளைத் தொடுக்கும் மிகைபடியான பாதுகாப்பு இடையிணைப்பு. chain-cable n. இரும்பு வளையங்களாலான வடக்கயிறு. chain-bridge n. சங்கிலிப்பாலம், தொங்கு பாலம். chain-bolt n. சங்கிலி இணைக்கப்பட்ட கப்பலின் தாழ்க்கோல். chain-armour n. இரும்புக் கவசம். chain n. சங்கிலி, தொடர், வரிசைத் தொகுதி, நிகழ்ச்சிக் கோவை, மலைத்தொடர், தீவுத்தொடர், கழுத்தணி, அணு இணைப்புத் தொடர், 66 அடி நீள அளவை, இடை நிறுத்தம் இல்லாமல் புகைக்கும் சுருட்டு முறை, பாய் மரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தும்படி இரண்டு பந்துகள் அல்லது அரைப்பந்துகளை முனைகளில் கொண்ட சங்கிலி, பாய்மரக் கயிறுகளின் சேமக்கட்டு, (வி.) கட்டு, தளையிடு, விலங்கிடு, தடைப்படுத்து, கட்டுப்படுத்து. chai n. சிறுக்கி. chafing-gear n. கப்பல் மர உராய்வு தடுக்கப் பயன்படும் கந்தல் பொருள் வகை. chaffinch n. பிரிட்டனில் பொதுவரவாகவுள்ள சிறு பறவை வகை. chaffering, chaffery வாணிகக் கொடுக்கல் வாங்கல், பேரப் பேச்சு. chaffer n. பேரம், விலைபற்றிய சச்சரவு, (வி.) பேரம் பேசு, விலைபற்றிய வாக்குவாதம் செய். chaff-cutter, chaff-engine n. வைக்கோலை வெட்டும் இயந்திரம். chaff n. உமி, வைக்கோல் பதர், கழிபொருள், குப்பை, புல் செத்தை, போலிப் பொருள், பயனற்ற பொருள், ஏளனப் பேச்சு, கேலிப்பேச்சு, நொடிப் பேச்சு, (வி.) ஏளனமாகப் பேசு. chafer n. வண்டு வகை. chafe n. உரசித் தேய்ப்பதால் ஏற்படும் சூடு, சீற்றம், வெவ்வுணர்ச்சி, (வி.) உரசித் தேய், தேய்த்துச் சூடுபண்ணு, தேய்மானம் செய், அரி, கரம்பு, சினமூட்டு, புண்படுத்து, கரகரப்புண்டாக்கு, பரபரப்புக்கொள், சினங்கொள், எரிச்சல் கொள். chaetopod n. இழைமயிர் போன்ற கால்களின் மூலம் ஊர்ந்து செல்லும் புழுவகை. chadlerly a. பல்பொருள் வணிகரைச் சார்ந்த. Chaddar n. பாலடைக்கட்டி வகை. Chadband n. நயத்திறம் மிக்க பாசாங்குகாரன். chad n. ஆற்றில் எதிர் நோக்கிச் செல்கின்ற மீன்வகை. chacma n. பெரிய தென் ஆப்பிரிக்க மனிதக்குரங்கு வகை. chacha n. அமெரிக்க மேலைஇந்தியத் தீவுக்களுக்குரிய ஆடல் வகை. Chablis n. பிரஞ்சு நாட்டில் வடிக்கப்படும் வெண்ணிற இன்தேறல் வகை. chaber-music n. அருங்கிசை, கொட்டகைக்குரிய துளைக்கருவி துணையற்றத் சிற்றறையின் நரப்பிசை நிகழ்ச்சி. ceylanite, ceylonite கனிப்பொருள் வகை, வெளிம இரும்புக்கலவைக் கனி. ceteris paribus adv. (ல.) மற்ற பொருட்கள் சமமாக இருப்ப. Ceterach n. செதில் உடைய சூரல் இனம், செதில் பெரணி. Ceteosaur, Ceteosaurus n. மரபற்றுப்போன புதை படிவப் பேருவப் பல்லி. cetaceous a. மீன் வடிவ நீர்வாழ் பாலுணி இனத்தைச் சார்ந்த. cetacean n. மீனுருவ நீர்வாழ் பாலுணி இனம், (பெ.) மீனுருவ நீர்வாழ் பாலுணி இனத்தைச் சார்ந்த. cessionary n. சட்டப்படி உடைமையுரிமை மாற்றி அளிக்கப் பெற்றவர். cessation n. ஒழிவு, தவிர்வு, ஓய்வு, இடை நிறுத்தம், இடைஓய்வு. cesarevitch, cesarewitch n. ருசிய நாட்டுக்குரிய பேரரசரின் முதற் புதல்வர், ருசியப் பேரரசின் பட்டத்து இளவரசர், இங்கிலாந்து நியூமார்க்கெட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் குதிரைப் பந்தயம். cervical a. (உட்.) கழுத்தைச் சார்ந்த. cerulean a. வானீலமான, அடர்ந்த நீல நிறமுடைய, பசுங்கடல் வண்ணமுடைய. certiorari n. (ல.) பத்திரத்தைக் கொண்டுவந்து முன்னிலைப் படுத்தக் கீழ்மன்றங்களுக்கு இடப்படும் கட்டளை. certificatory n. நற்சான்றிதழ், (பெ.) நற்சான்று அளிக்கிற, சான்றிதழ் இயல்பான. certification n. நற்சான்றளித்தல், நற்சான்றிதழ். certificate n. நற்சான்று, சான்றிதழ், மெய்ம்மைக்கான எழுத்துமூலச் சான்றறிவிப்பு, தகுதிச்சான்று, உறுதிச்சீட்டு, (வி.) நற்சான்றுப் பத்திரம் கொடு, சான்று ஆவணம். certifiable a. சான்று வழங்கத்தக்க. certainty n. ஐயுறவிலா உண்மை, நிகழ்ச்சி உறுதிப்பாடு, தவறாத தன்மை, கட்டாயமாய் நேரிடக்கூடியது. certainly adv. கட்டாயமாக, உறுதியாக, ஐயமற. certain a. உறுதியான, நம்பகமான, தவறாத, பிழைபட முடியாத, முழுமன உறுதிப்பாடு கொண்ட, ஐயத்துக்கு இடமற்ற, வாதத்துக்கிடமில்லாத, முடிந்துபோன, முடிவான, தீர்மானமான, விலக்கமுடியாத, நடந்து தீரவேண்டிய, கட்டாயமான, நிலையான, ஒழுங்கான, ஏதோ சில, ஏதோ ஒரு. cerpgraphic, cerographical a. மெழுகின்மேல் எழுதுவதற்குரிய, மெழுகின்மேல் செதுக்கு வேலை செய்வது பற்றிய. ceroplatic a. மெழுகினால் உருவமைக்கப்பட்ட, மெழுகில் உருவமைப்பது பற்றிய. ceroplastics n. மெழுகில் உருவமைக்கும் கலை. cerography n. மெழுகில் எழுதும் எழுத்து, மெழுகைக் கொண்டு எழுதுதல், மெழுகின்மீது தீட்டும் செதுக்குக்கலை, உருக்கிய மெழுகில் வண்ணப்படம் வரைதல். cerograph n. மெழுகின் மேல் எழுதிய எழுத்து, உருக்கிய மெழுகில் வரைந்த வண்ணப்படம், மெழுகு பரப்பியுள்ள தட்டில் செய்யப்பட்ட செதுக்கு வேலை. ceremonialism n. புற ஆசாரங்களைக் கடைபிடித்தல், வினைமுறை வலியுறுத்தும் பண்பு. ceremonial n. சடங்கு முறைமை, புற ஆசாரம், மரபு தழுவு வினை, சிறப்புக்கால நடைமுறை, ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலின் வினைமுறைக்குறிப்புகள் அடங்கிய சுவடி, (பெ.) வினைமுறைகளுடன் கூடிய, சடங்குகளுக்குரிய, புற ஆசாரம் பற்றிய. cerebro-spinal a. மூளைக்கும் முதுகந்தண்டு வடத்துக்கும் ஒருங்கே தொடர்புடைய. cerebration n. மூளை இயக்கம், மூளை செயற்படுதல், மனத்தின் தொழிற்பாடு, எண்ணம். cerebralism n. மனத்தின் செயல்களெல்லாம் மூளையில் தான் தோன்றுகின்றன என்னுங்கோட்பாடு. cereberal a. மூளைக்குரிய, பெருமூளைப்பகுதி சார்ந்த, (ஒலி.) நுனிநா அண்ணத்தைத் தொடுவதனால் எழும் மெய்யெழுத்து ஒலிகளுக்குரிய. cerebellar, cerebellous a. சிறுமூளைக்குரிய, சிறு மூளை பற்றிய. cerealist n. கூலத்துறையில் தனி ஆய்வு நடத்துபவர், முதிரைகளை உட்கொள்பவர். cereal n. முதிரை, தானியம், கூலம், காலைச் சிற்றுண்டிப் பணியாரம், (பெ.) உண்ணத்தக்க கூலவகைகளுக்குரிய. cercarian a. அட்டை வகைகளின் முட்டைப்புழு நிலைக்குரிய. cercal a. வாலுக்குரிய. cerberian a. நரகின் நுழைவாயிலைக் காக்கும் மூன்றுதலை நாய் போன்ற. ceratoid a. கொம்புள்ள, கொம்புபோன்ற, கொம்பு வடிவான. Ceratodus n. செதில் வழியாகவும் உயிர்ப்பீரல் வழியாகவும் மூச்சுவிடும் ஆஸ்திரேலிய மீன்வகை. ceratitis n. கண் மேற்சவ்வு அழற்சி. cerastium n. (தாவ.) கொம்பு போன்ற பொதியுறைகளுள்ள பூண்டு வகை. cerastes n. கண்களினருகே சிறுகொம்புகள் போன்ற உறுப்புடைய வட ஆப்பிரிக்க விரியன்பாம்பு வகை. cerasin n. மரவகைப் பிசினின் கரையாக்கூறு. ceramist n. மட்பாண்டங்கள் செய்பவர், மட்பாண்டங்கள் செய்யக் கற்றுக் கொள்பவர். ceramics n. மட்பாண்டத் தொழில், வேட்கோவர் கலை. ceramic a. மட்பாண்டத் தொழிலுக்குரிய. ceraceous a. மெழுகுபோன்ற. cephalous a. தலையையுடைய. cephalotomy n. தலையின் பிளப்பாய்வு. cephalothorax n. சிலந்தி-நண்டு போன்ற உயிரினங்களின் தலையும் மார்பும் ஒருங்கிணைந்த பகுதி. cephalopod n. கால்கள் வாயருகே இழைக்கைகளாக மாறுபட்டுள்ள நத்தையினம். Cephalochorda n. pl. முதுகெலும்புக்கு மூலங்கோலும் முதுகெலும்பில்லாத மீன் இன வகை. cephalitits n. மூளை அழற்சி. cephalic n. தலைநோய் மருந்து, (பெ.) தலைக்குரிய, தலையிலுள்ள, தலைநோய் தீர்க்கிற. cephalgic a. மண்டையிடிக்குரிய. cephalate a. தலைமையுடைய. cephalagia n. தலை நோய். centurial a. நுற்றாண்டுக்குரிய, ரோமப் படைப் பிரிவுக்குரிய. centuplicate n. நுற்றமடிப் படிகளில் ஒன்று, (பெ.) நுறு மடங்கான, (வி.) நுறு மடங்காக்கு. centumvirate n. நுற்றுவராட்சி. centroclinal a. (மண்.) பலதிசைகளிலிருந்து மையம் நோக்கிச் சாய்கின்ற. centrobaric a. எடை ஈர்ப்பு மையத் தொடர்புள்ள. centripetalism n. குவிமைய வளர்ச்சித் தன்மை, மையம் நோக்கிச் செல்லும் இயல்பு. centripetal a. குவிமையப் போக்குடைய, மையத்தை நோக்கிச் செல்கிற, அடிப்பகுதியிலிருந்து நுனிமுனைக்குப் போகிற. centrifugation n. விரிமைய வளர்ச்சிச் சக்திக்கு உட்படுத்தல். centrifugalise v. விரிமையப் போக்குடையதாக்கு. centrifugal n. வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம், பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம், (பெ.) விரி மையப் போக்குடைய, மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற, (தாவ.) உச்சியிலிருந்து அடிநோக்கி வளர்ச்சியடைந்து செல்கிற, விரிமைய வளர்ச்சி வலிமையைப் பயன்படுத்துகிற, விரிமைய வளர்ச்சி வலிமையினால் உண்டாகின்ற. centric, centrical மையம் சார்ந்த, நடுவிலுள்ள, மையத்தை உட்கொண்ட, (தாவ.) நீண்டுருண்டு வழவழப்பாயுள்ள. centre-rail n. மலையேற்று இரயிற் பாதையில் பற்றுப்பல்லுள்ள மூன்றாவது இரும்புச் சட்டம். centre-board n. கப்பல் பக்கவாட்டில் சாய்வதைத் தடுப்பதற்கான படகின் அடிமட்ட மையப் பலகை. centralize v. மையத்திற்கு மாறு, மையத்துக் கொண்டு வா, ஒரே மையம் நோக்கி ஒருமுகப்படுத்து, மாகாண ஆட்சிகளை மைய ஆட்சிக்கு உட்படுத்து. centralization n. மையப்படுத்துதல், மையம் நோக்கிய ஆட்சியமைத்தல், அதிகாரங்களை மைய ஆட்சிக்குக்கொண்டு சேர்த்தல், ஒருமுகப்படுத்துதல். centrality n. மையநிலை, மையத்தன்மை, மையத்திலேயே இருக்கும் அமைப்பு. centralist n. மைய அதிகார ஒருமிப்புக் கொள்கையாளர். centralism n. மைய அதிகார ஒருமிப்புக்கொள்கை. central a. நடுவான, மையமான, மையத்திலுள்ள, மையத்தை உட்கொண்ட, மையத்தொடர்புடைய, மையத்திலிருந்து செல்கிற, தலைமையான, முதன்மையான, முக்கியமான. centigram, centigramme n. பிரஞ்சு 'மெட்ரிக்' நிறுத்தல் அளவையில் நுற்றில் ஒரு கூறு, 0.000ஹீ தோலா. centigrade a. நுறு கூறுகளுள்ள, நுறு பாகைகளாகப் பிரிக்கப்பட்ட. centiare n. பிரஞ்சு அளவை முறையில் 1.1ஹீ6 சதுர கெசம். centesimal a. நுறில் ஒரு கூறான, நுறில் ஒரு பங்காக் கணக்கிடுகிற, நுறில் ஒன்றடிப்படையில் கணக்கிடப்பட்ட. centennial n. நுற்றாண்டு நிறைவு விழா, (பெ.) நுற்றாண்டுக்கொரு முறை நிகழ்கிற, நுறாண்டுகளுக்குரிய, நுறாண்டுகள் வாழ்ந்த, நுறாண்டு நீடித்த, நுற்றாண்டுகள் முடித்த, நுற்றாண்டு விழாக்குரிய. centenary n. நுறு, நுற்றாண்டுக்காலம், நுற்றாண்டு நிறைவு விழா, நுற்றாண்டு விழாக் கொண்டாட்டம்இ (பெ.) நுற்றாண்டுக்குரிய, நுற்றாண்டுகள் நிறைவுக் கண்ட. centenarian a. நுறு வயதானவர், (பெ.) நுறு வயதான. centaury n. செடியினங்களின் வகை. centaurian a. பாதி மனிதவுடலுடன் பாதி குதிரையுடலும் உடைய கிரேக்க புராண உருச்சார்ந்த. centaur n. குதிரை உடலுடனும் கால்களுடனும் கழுத்திலிருந்து மனித உடலும் கையுமாக அமைந்த கிரேக்க புராண உரு, கலப்பினப் பிறவி, இரட்டை இயல்புள்ள மனிதன், இரட்டைத் தன்மையுள்ள பொருள், திறம்பட குதிரை வலவன். Centaur -2 n. விண்மீன் குழுக்களில் ஒன்று. cental n. நுறு இராத்தல் கொண்ட கூலம் அமைப்பதற்கான எடை. census-paper n. குடிமதிப்பு விவரங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கப்படும் தாள் வடிவம். censurable a. கண்டிக்கத் தக்க, பழிப்புக்குரிய. censorial, censorian சீர்மையருக்குரிய, பொதுமக்கள் ஒழுகலாறுகளைச் சீர்படுத்துவதற்குரிய. cenotaph n. ஒருவர் புதைக்கப்பட்ட இடத்திலன்றி வேறிடத்தில் அவருக்கு எழுப்பப்படும் நினைவுச் சின்னம். cementation n. ஒருங்பிணைத்தல், இணைக்கப்பட்ட நிலை, பொடித் தூவிச் சூடாக்குவதன்மூலம் ஒரு பொருளின் மேற்புறத்தில் மற்றொரு பொருளைப் பற்றவைத்தல், கடும்பதப்படுத்துதல், படிகை. cement-water n. செப்புச் சுரங்கங்களிற் காணப்படும் செம்பு உப்புவகைகள் கலந்த நீர். cembalo n. தந்திகள் உள்ள இசைக்கருவி வகை. Celtomaniac n. கெல்ட்டிய இனமரபுச் சிறப்பை வற்புறுத்தும் போக்குடையவர். Celtomania n. மட்டிலாக் கெல்ட்டிய இனமரபார்வம். cellulate n. கண்ணறைகள் உள்ளதாக்கு, (பெ.) கண்ணறைகள் உள்ள. cellular a. தனி அறைகளைக்குரிய, உயிர்மங்களாலான, கண்ணவைகளாலான, சிறு குமிகளை உடைய, துளைகளையுடைய, இழைகள் செறிவாயிராத. celluarity n. கண்ணறைகளாலான நிலை. Cellophane n. மரப்பசைச் சத்தினின்றும் செய்யப்படும் பளிங்குநிறத் தாள்போன்ற பொதிபொருளின் வாணிக உரிமைப் பெயர். cellarman n. நிலவறைகாப்போன். cellaret n. புட்டிகள் வைப்பதற்கான பெட்டி. cellarer n. நிலவறையின் பொறுப்பு வகிப்பவர், துறவி மடத்தில் உணவுப்பொருள்களுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் அலுவலர். cellarage n. நிலவறைத் தொகுதி, நிலவறைகளில் சேர்த்து வைப்பதற்கான கட்டணம். cellar-flap n. நிலவறைப் புழைக்கதவு. cellar n. நிலவறை, இன்தேறல்-நிலக்கரி முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்கான அடிநிலக்கிடங்கு, இன்தேறலின் சேமஅளவு, (வி.) நிலவறையில் சேர்த்து வைத்திரு. cella n. கோயிலின் உள்ளறை, கருமனை. celibate n. மணமாகாதவர், மணங்கொள்ளா நிலை ஆதரவாளர், (பெ.) மணமாகாத, மணஞ்செய்யா உறுதிக்கொண்ட. celibatarian n. மணமாகதவர், மணங்கொள்ளா நிலை ஆதரவாளர், (பெ.) மணமாகா நிலையை ஆதரிக்கிற. celibacy n. மணமாகத நிலை, மனத்துறவு, மணங்கொள்ளா நோன்பு. celestial n. விண்ணவர், சீனக்காரர், (பெ.) வானத்துக்குரிய, விண்ணுலக வாசியான, விண்ணுலகம் சார்ந்த, தெய்விகன்ள, தெய்விக நலம் கொண்ட, தெய்விக அழகு வாய்ந்த. celeriac n. கிழங்குள்ள தோட்டக் கீரைவகை. celebrator n. கொண்டாடுபவர், விழாக்கேளாளர். celebration n. கொண்டாட்டம், விழா, புகழ்தல். celebrated n. புகழ்வாய்ந்த, பேர்பெற்ற. celebrant n. கொண்டாடுபவர், விழாவினை முதல்வர், விழாக்கோளாளர். celbrate v. கொண்டாடு, வினைமுறை முற்றுவித்து நடத்து, பலரறிய நடைபெறுவி, பலர் அறியச்செய், புகழ், பாராட்டு, போற்று. celanese n. செயற்கைப்பட்டு வகை. celandine n. மஞ்சள் நிற மலருள்ள செடிவகை. celadon n. இளம் பச்சை நிறம், சீன மட்பாண்ட வகையின் இளம்பச்சை மெருகு, (பெ.) இளம்பச்சையான. Ceiling fan முகட்டு விசிறி cedrate n. நாரத்தை. cedilla n. சி என்ற எழுத்தின்கீழ் இடப்படும் ஒளி வேறுபாட்டுக் குறியீடு. cedarn a. (செய்.) செவ்வகில் மரத்துக்குரிய. cedar-bird n. சிறகின்மேல் சிவப்பு அரக்குபோன்ற சிறு நுனிப்பாகங்களையுடைய அமெரிக்கப் பறவை வகை. cebadilla n. அல்லியரிசி, அல்லியினச் செடிவகையின் விதைகள். ceaseless a. இடைவிடாத, தொடர்ச்சியான. cease-fire n. துப்பாக்கி முதலியவற்றால் சுடுவதை நிறுத்துவதற்கான ஆணை, போர் நிறுத்த உடன்பாடு, போர் நிறுத்தம். cease n. முடிவு, இறுதி, (வி.) முடிவுறு, நிறுத்து, விட்டுவிடு, தவிர். ceanonthus n. மலர்களையுடைய புதர்ச்செடியினம். cayuse n. அமெரிக்க இந்தியரின் மட்டக்குதிரை. cayman, n. pl. caymans தென் அமெரிக்க முதலை வகை. cayenne, cayenne-pepper n. கடுங்காரமுள்ள சிவப்பு மிளகு. caycular a. (தாவ.) புல்லிவட்டப் போலியான, சிதல் வட்ட வடிவுடைய, சிதல் வட்டத்துக்குரிய. cay n. கரையணைந்த சிறு தீவு, மணல் திட்டு, பவளத் தீவு. Caxton n. இங்கிலாந்தில் முதல் அச்சுத்தொழிலாளியான வில்லியம் காக்ஸ்டன் (1422-14ஹீ1) என்பவரால் அச்சிடப்பட்ட புத்தகம், காக்கஸ்டன் பயன்படுத்தியதைப் போன்ற அச்செழுத்துப்படிவம். caxon n. முற்காலத்தில் அணியப்பட்ட பொய்மயிர்த் தொப்பி வகை. cawker n. குதிரை சறுக்காமலிருக்கும்பொருட்டு அதன் இலாடத்தில் அமைக்கப்பெறும் கூர்முனைப்பாகம். caw n. காக்கையினப் பறவைகளின் கரை குரல், (வி.) காக்கை போல் கத்து, கரை. cavy n. சீமைப்பெருச்சாளி இனம், கொறிக்கும் விலங்கினம். cavity n. உட்குடைவு, உட்குழிவு, உட்புழை, திடப்பொருளின் உட்புறத்திலுள்ள பொள்ளல், வெற்றிடம், பள்ளம், பொந்து, துளை, இடைப்பிளவு, வாயில். cavitied a. குழிவுகள் உள்ள. cavitation n. திண்பொருளில் குழிவுகள் தோன்றுதல், நீர்மத்தில் காற்றுக்குமிழிகள் உண்டாதல், வெற்றிடம் ஏற்படுதல். caving n. விட்டுக்கொடுத்தல். cavil n. போலி ஆட்சேபம், இடக்கு, (வி.) குதர்க்கம் பண்ணு, அற்பத்தடைகள் எழுப்பு. cavie n. கோழிக்கூடு. cavicorn n. (வில.) உட்குழிவான கொம்புகளையுடைய அசைபோடும் விலங்குவகை, (பெ.) அசைபோடும் விலங்கினங்களுக்கு உள்ளதைப்போல் உட்குழிவான கொம்புகளையுடைய. caviar, caviare உப்பிட்டு உலர்த்திய உயர்தர உணவு மீன்வகையின் கருச்சினை, பொதுநிலை மக்கள் அறிந்து நுகர இயலாத சீரிய பொருள். caveson, cavesson முரட்டுக் குதிரைகளை அடக்கிப் பழக்குவதற்குப் பயன்படும் மூக்குப்பட்டை வார். caverous a. குடைவான, ஆழ்கெவி போன்ற, பேழ் வாயுடைய, குழிகள் நிரம்பிய. cavernulous a. சிறு குழிவுகள் நிரம்பிய. caverned a. ஆழ்கெவிகள் நிரம்பிய, குகையில் வாழ்கிற, குகைபோன்ற. cavern n. அடிநிலக்குகை, நிலக்குடைவு, ஆழ்கிடங்கு, மலை முழைஞ்சு, (வி.) ஆழ்கிடங்கில் வை, குழிவாகத் தோண்டு. cavendish n. மென்மைப் பதமாக்கி இனிப்பூட்டிப் பாளங்களாக அமைக்கப்பட்ட புகையிலை. caveat emptor, (ல.) (சட்.) 'வாங்குநர் கவனிக்க' என்ற அறிவிப்பு, சொத்து வாங்குபவர் செயலின் பொறுப்பு தனக்கின்மை அறிவிக்கும் எச்சரிக்கை. caveat n. எச்சரிக்கை, முன்னறிவிப்பு, தடைக்கட்டு, (சட்.) முன்னெச்சரிப்புப் பதிவு, தற்காலத் தரப்பு நடவடிக்கை, மனுதாரருக்கு அறிவிக்காமல் மேல்நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என்ற அறிவிப்பின் முறைமன்றப் பதிவு. cave-man n. குகை வாழ்நன், வரலாற்றுக்கு முற்பட்ட பழங்கற்கால மனிதன், நாகரிகமற்றவன், (பே-வ.) பழைய முறைகளைக் கடைப்பிடிப்பவன். cave-earth n. (மண்.) குகையின் அடித்தளங்களில் படிந்த நுண்ணயமான மண். cave-dweller n. குகை வாழ்நர், வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலங்களில் குகைகளில் வாழ்ந்த மனிதர். cave-bear n. குகைகளில் காணப்படும் மிகப் பெரிய புதை படிவக் கரடிவகை. cave n. குகை, கெவி, மலை முழைஞ்சு, அரசியல் கட்சியில் பிரிந்து செல்ல விரும்பும் உட்குழு, (வி.) குழிவாக்கு, குகை தோண்டு, பள்ளம் பறி, குகையில் தங்கியிரு, அரசியல் உட்பிளவுக் கட்சியை உண்டாக்கு. cavatina n. (இத்.) சிறு எளிய பாடல், இசைக்கருவியில் வாசிக்கப்படும் உணர்ச்சி வாய்ந்த மெல்லிசைப் மெட்டு. cavalry n. குதிரைப்படை, இவுளி மறவர். cavally n. அமெரிக்கக் கடல்மீன் வகை. cavalierly a. பெருந்தகைப்பண்புடைய, பெருமிதன்ன, வீறாப்பான, (வினையடை) பெருந்தகைப்பண்புடன், துணிகரமாக, மட்டுமதிப்பின்றி, தூக்கியெறிந்து. cavalierism n. (வர.) இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லஸ் காலத்திய மன்னர் கட்சியினர் கோட்பாடு, மன்னர் கட்சியினர் மரபு. cavalierish a. பண்புடைப் பெருந்தகையின் இயல்புள்ள. cavalier n. குதிரைவீரன், பண்புடைப் பெருந்தகை, வீரத்திருத்தகை, பெண்ணினத்துக்குப் பெருமை தந்து நடப்பவர், அணங்கின் உடன்செல் பாங்கர், நடனத் துணைவர், வீறாப்புக்காரன், கோட்டை உயர் மேடை, பதனம், (பெ.) குதிரை வீரன் போன்ற, வீரப்பண்பார்வமுள்ள, போர்விருப்புடைய, ஒய்யாரமான, வீறாப்பான, கவலையற்ற, துணிகரமான, களிகிளர்ச்சி கொண்ட, (வி.) மாதரை மதிப்புடன் அழைத்துச் செல், பெருந்தகையாயிரு, வீறாப்புடன் நடந்துகொள். Cavalier -1 n. (வர.) இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்ரஸ் காலத்திய அரசக்கட்சியினர். cavalcade n. புரவிவீரர் பந்தி, படை அணிவகுப்பு, (வி.) குதிரைகளின்மீது இவர்ந்து பவனிசெல். cautious a. கவனமுள்ள, எச்சரிக்கையாயிருக்கிற, விழிப்புடைய, முன்மதியுடைய. cautionary a. எச்சரிப்பான, முன்னுறுதியாக அளிக்கப்பட்ட. caution n. முன்மதி, எச்சரிக்கை, முற்காப்புணர்வு, எதிரதாக்காக்கும் அறிவு, பிணையம், (வி.) எச்சரிப்புச் செய், முன்னறிவிப்புச் செய், எச்சரித்துக்கண்டி. cautery n. சூடிடுதல், சூட்டுக்கோல். cauterize v. சூடுபோடு, சூட்டுக்கோலினால் சூடிடு, கடுங்காரப் பொருளினால் புண்ணைச்சுடு, உணர்ச்சி அறச்செய். cauter n. கடுங்காரத் தீய்வு, சூட்டுக்கோலினால் சூடு இடுதல், புண்ணில் சுடுவதற்கான சூட்டுக்கோல், புண் நச்சுறுப்பதற்குரிய கடுங்காரப் பொருள். causticity n. கடுகடுப்பு, அரிக்குந்தன்மை, குத்தலான பேச்சு, தெறுமொழி. caustic n. கடுங்காரம், எரிச்சல் தரும் பொருள், உயிர்ப்பொருளான இழைமங்களை அரித்துத் தின்னும் பொருள், (கண.) கோட்ட ஒளிவரி, கோட்ட ஒளித்தனம், எதிர்நிழல் ஒளிவரை, எதிர்நிழல் ஒளித்தளம், (பெ.) எரிவந்தம் தருகிற, அரித்துத்தின்கிற, வெறுப்புத் தருகிற, கடுமையான, உள்ளத்தைப் புண்படுத்துகிற, குத்தலான, (இய.) நெளிவுப் பரப்பினின்றும் மீளும் அல்லது விலகிச் செல்லும் ஒளிக்கதிர்கள் ஊடறுப்பினால் உண்டாகிற. causeway, causey கடப்பு வழி, கரைப்பாலம், பள்ளம் படுகை கடக்கும் சிறு மேட்டுப்பாதை, பால அருகான நடைபாதை, (வி.) கல்பாவு, மேட்டுப்பாதை அமைத்துக்கொடு. causeuse n. (பிர.) இருவருக்கான சாய்விருக்கை. causerie n. (பிர.) வறுமொழி, வெட்டிப்பேச்சு, இலக்கியம் அல்லது கலை குறித்து அளவளாவுதல். causeless a. காரணமற்ற, தற்செயல் நிகழ்வான, நேர்மையற்ற, நேரிய ஆதாரமற்ற. cause-list n. (சட்.) விசாரணை செய்யப்படவிருக்கிற வழக்குகளின் பட்டியல், வழக்கு அட்டவணை. cause celebre n. (பிர.) மக்கள் கவனத்தைக் கிளறிவிடும் நீதிமன்ற வழக்கு. cause n. ஏது, காரணம், வினைமுதல், நிமித்தம், ஊக்குவிக்கும் நோக்கம், காரண விளக்கம், செயல் முதல் விளக்கம், குறிக்கோள், இலக்கு, சார்புநலம், ஆக்க நலம், (சட்.) வழக்காடும் பொருள், வழக்கு முதல், வழக்கில் ஒரு திறக்கட்சி, வழக்கு, (வி.) தூண்டு, செய்வி, நிகழ்த்து, விளைவி, உண்டுபண்ணு, நிலைபெறச்செய். causative n. (இலக்.) பிறவினை, (பெ.) காரணமாகச் செயற்படுகிற, விளைவுண்டாக்குகிற, (இலக்.) செயல் தூண்டுதல் காட்டுகிற. causationist n. சற்காரியவாதிக் கோட்பாளர். causation n. காரணமாம் நிலை, விளைவுண்டாக்கும் செயல், காரண காரியத்தொடர்பு, சற்காரிய வாதம். causality n. காரணமாகச் செயற்படுத்தல், மூலமுதல் இயல்பு, காரண காரியத் தொடர்பு, காரணக் காரியக் கோட்பாடு, சற்காரிய வாதம். causal a. காரணமாயிருக்கிற, விளைவு உண்டாக்குகிற, காரணத் தொடர்புடைய, காரணகாரிய இயைபுள்ள. cauminal, a. முகட்டினைச் சார்ந்த, (ஒலி.) நாநுனியை மேற்புறமும் பின்புறமும் திருப்புவதால் தோன்றுகின்ற. caulome n. (தாவ.) செடியின் முழுத் தண்டு அமைப்பு. caulker -2 n. சறுக்காமலிருப்பதற்காகக் குதிரை இலாடத்தில் அமைக்கப் பெறும் கூர்முனைப்பகுதி. caulker -1 n. சந்துகள் அடைத்து நீர் உட்புகாமல் செய்பவர், எடை அளவுக்கூறு, பெரும்பொய். caulk v. (கப்.) பலகை மூட்டுகளை நீர்க்காப்புடையதாகச் செய், நார்க்கயிறு-உருகிய நிலக்கீல் இவற்றைக் கொண்டு பலகைகளின் சந்திப்பு இடைவெளிளை அடை. caulis n. (தாவ.) செடியின் தண்டு, (க-க.) கொரிந்திய பாணியிலுள்ள தூண் தலைப்பில் முதன்மையான தண்டுகளில் ஒன்று. caulinary, cauline (தாவ.) தண்டைச் சார்ந்த, தண்டில் மேலுள்ள, தண்டில் தோன்றுகிற. cauligenous a. (தாவ.) தண்டின் ஆதாரம் கொண்ட. cauliflower n. பூக்கோசு. caulform a. (தாவ.) தண்டின் வடிவமுடைய. caulescent a. (தாவ.) தெளிவான தண்டுறுப்பினை உடைய. cauldron n. கொப்பரை, கடாரம். caul n. தலைமயிர் முடிக்கும் வலை, தலைக்கு முடி, பேற்றில் போது குழந்தை தலையைக் கவிந்துள்ள மென்றோல். cauk n. சீமைச்சுண்ணாம்பு, தட்டப் பலகை வடிவிலுள்ள பாரிய கந்தகை. caught, v. Catch என்பதன் இறந்தகால-முடிவெச்சம். caudle n. பெண்டிர் பேறுகாலங்களில் பயன்படுத்தப்படும் கொடிமுந்திரித் தேறல் கலந்த நறுமண இனிப்புப் பான வகை, (வி.) பேறுகாலப் பானவகை கல, பானவகை அருந்து. caudillo n. ஸ்பானிய மொழி வழங்கும் நாடுகளில் மக்கள் தலைவர், அரசுத் தலைவர். caudicle n. (தாவ.) மலர்ச் செடிவகைகளில் உள்ள மகரந்தப்பையின் காம்பு. caudex, a. Pl. caydexes, caudices. (தாவ.) மரத்தண்டு. caudate, caudated வால் உள்ள. caudal a. வாலுக்குரிய, வால்போன்ற, வால்பக்கமான. caucus n. எதிரிகளின் ஏளனவழக்கில் உள்ளூர் அரசியல் குழு, கட்சி அமைப்பு, (வி.,) அரசியல் கட்சிக் கூட்டம் நடத்து, உள்ளூர் அரசியல்குழு அமை, அரசியல் கட்சியாற்றலைக் கொண்டு வற்புறுத்து. Caucasian n. மனித உலகின் பேரின வகைப் பிரிவினர், வெள்ளை இனத்தவர், இந்தோ-ஐரோப்பியர், (பெ.) ஐரோப்பாவிலுள்ள காக்கசஸ் மலைத்தொடருக்குரிய, காக்கசஸ் மலைப்பகுதியைச் சுற்றியுள்ள திணைக்குரிய, வெள்ளை இனம் சார்ந்த. catty n. சீனக் கல்லெடையளவு. cattle-plague n. கால்நடைகளின் தொற்றுநோய், கோமாரி. cattle-piece n. கால்நடைகளின் உருவம் வரையப்பட்டுள்ள படம். cattle-lifting n. ஆநிரை கவர்தல், கால்நடைக் களவு. cattle-lifter n. நிரை கவர்பவர். cattle-leader n. கால்நடைகளுக்கான மூக்கு வளையம், மூக்கணாங்கொளுவி. cattle-grid n. பாதை வேலியைக் கடக்குமிடத்தில் கால்நடை செல்லாமல் ஆள் வண்டிப் போக்குவரத்துக்கு வழி செய்யும் கம்பியழிமூடிய கிடங்கு. cattle-feeder n. கால்நடைத் தீனியின் அளவை முறைப்படுத்தும் இயந்திரம். Cattle feeds கால்நடைத் தீவனம் cattle n. ஆடுமாடுகள், புல்லார்நிரை, கால்நடை, கன்றுகாலிகள், எருது, குதிரைகள். cattish a. பூனைபோன்ற, கருவுகிற, புறங்கூறுகிற. catsup n. காளான்-தக்காளிச் சாறுகளிலிருந்து செய்யப்படும் காரச் சுவையுண்டி. cats-whisker n. கம்பியில்லா உருமணி ஒலிவாங்கிக் கருவியில் வேண்டும்போல் அமைத்துக்கொள்ளக்கூடிய இழைத்தந்தி. cats-tail n. ஒருபால் மலரிழைச் சிதற்குஞ்சம், மஞ்சரிங நாணல் வகைச் செடிகள். cats-silver n. வெள்ளிபோன்ற ஒளியுடைய அப்பிரக வகை. cats-paw n. நீரின் மேற்பரப்பில் சிற்றலைகளை எழுப்பிம் மென்காற்று, கொக்கிக்கொளுவுவதற்கு இரண்டு குழைகளையுடைய முடிச்சு வகை, மற்றொருவர் கைக்கருவி, ஏமாளி. cats-meat n. பூனைத்தீனிக்காகவென்று விற்கப்படும் குதிரை இறைச்சி முதலியவை. cats-foot n. நிலத்திற் படரும் கொடிவகை. cats-eye n. வைடூரியம், சாலை நிலத்தளத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒளி பிறக்கும் கண்ணாடிச் சில்லு. cats-ear n. மஞ்சள் மலர்களையும் பூனைக்காவது போன்ற இலைகளையும் உடைய ஐரோப்பியப் பூண்டு வகை. cats-cradle n. ஒருவர் கைவிரல்களில் உருவம் அமையும்புடி கயிறு கோத்துக்கொண்டு மற்றவருக்கு அதனை மாற்றி மாற்றி ஆடும் குழந்தை விளையாட்டு வகை. catoptrics, n. Pl. நிழலுருவியல், இயற்பியலின் ஒளியியற் கூறான எதிர் ஒளிக்கோட்ட இயல் துறை. catopric a. பளிங்குக்குரிய, உருநிழல் சார்ந்த, எதிர் ஒளிக்கோட்டத்துக்குரிய. Catonian a. ரோமாபுரியைச் சார்ந்த சீர்மையர் கேட்டோ(கி.மு. 224-14ஹீ) அல்லது கேட்டோ உடிசென்சிஸ் (கி.மு. 55-46) போன்ற, வீறார்ந்த, கண்டிப்பான, முடிவணங்காத. catmint n. நீலமலருடைய நறுமணச்செடி. catling n. சிறுபூனை, பூனைக்குட்டி, நேர்த்தியான நரம்புத் தந்தி, உறுப்பினை அறுத்தெடுப்பதற்கான கூர்ங்கத்தி. catkin n. மஞ்சரி, வளைமலர்க்கொம்பு, ஒருபால் மலரிழைச் சிதற் குஞ்சம். Catiline n. துணிகரச் சதிகாரன், கி.மு. 63-இல் ரோமாபுரிஅரசைக் கவிழ்க்க முயன்று தோல்வியுற்ற செர்கியஸ் கேட்டிலினா என்பவன். catilinarian a. துணிகரச் சதிகாரத் தன்மையுடைய. catholicon n. பலநோய் மருந்து, சஞ்சீவி. catholicize v. கத்தோலிக்கர் ஆக்கு, கத்தோலிக்க மயமாக்கு, கத்தோலிக்கர் ஆகு. catholicity n. எல்லாவற்றையும் அகப்படுத்திய நிலை, விரிந்த உளப்பாங்கு, அகவெறுப்பின்மை, காழ்ப்பின்மை, கத்தோலிக்க சமயக்கோட்பாட்டில் உடன்பாடு. Catholicism n. ரோமன் கத்தோலிக்க சமயக்கோட்பாடுகள். catholic n. ரோமன் கத்தோலிக்கர், ரோமன் கத்தோலிக்கச் சமயச் சார்புடையவர், (பெ.) எல்லாவற்றையும் அகப்படுத்திய, முழுநிறைவான, அகல்விரிவான, பொதுவான, கிறித்தவர்கள் எல்லோரும் உள்ளிட்ட, முதுமுறைச்சார்பான, மரபறாத, நீண்மரபுத் தொடர்புடைய, தாராளமாக, விரிந்த மனப்பான்மையுள்ள, சமயப் பொறுமைவாய்ந்த, பெருமனம் உடைய, கீழைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் மேலைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் உண்டான பெரும் பிளவுக்கு முன்னிருந்த மரபு சார்ந்த, ரோமன் கத்தோலிக்கர்களுக்குரிய. cathodography n. (இய.) ஊடு கதிர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட நிழற்படம். cathode n. (இய.) எதிர்மின்வாய். cathexis n. (உள.) ஒருபொருள் அல்லது கருத்துச் சார்ந்த மன அவா ஆற்றலின் அளவு. cathetus n. (வடி.) செங்கோடு, மற்றொரு நேர்வரைக்கு அல்லது தளத்திற்குச் செங்குத்தாகவுள்ள நேர்வகை. cathetometer n. மட்டமானி, குழல்களில் உள்ள வெவ்வேறு நீர்மங்களின் நுண்ணிய மட்ட வேறுபாடுகளை அளப்பதற்கான கருவி. catheter n. (மரு.) சிறுநீர் இறக்குங் குழல், நீர்மம் அல்லது வளிகளை உடற்குழாய்களில் ஏற்றவோ வடியவிடவோ உதவும் குழல். Catherine-wheel n. ஆரங்கள் உள்ள வட்டமான சாளரம், சக்கரச் சாளர அறை, சுழல் பூவாணம், பக்கவாட்டமாகப் போடப்படும் குட்டிக்கரணம், (கட்.) விளிம்பில் பற்களுடன் கூடிய சக்கர வடிவம். cathedral n. மாவட்டத் தலைமைக் கிறித்தவக்கோயில், (பெ.) மாவட்டத் தலைமை கிறித்தவக்கோயிலுக்குரிய, மாவட்டக் கிறித்தவத் திருச்சபைத் தலைவர் பதவிக்குரிய. cathead n. நங்கூரம் தாங்கும் கப்பல் தூலம். cathay n. (செய்.) சீனதேசம். cathartic n. (மரு.) பேதிமருந்து, (பெ.) பேதியாகிற, குடலிளக்கம் உண்டுபண்ணுகிற. catharsis n. துப்புரவாக்குதல், (மரு.) வயிற்றிளக்கம், பேதி, குடல்கசடு நீக்கம், நாடக முதலியவற்றால் ஏற்படும் உணர்ச்சித்தூய்மை. catharise v. முற்றும் துப்புரவிடையதாகச் செய். catgut n. விலங்கின் குல்ல் தசைநாளங்களிலிருந்து இழைக்கப்படும் நரம்பிழை, நரம்புக்கம்பி, நரப்பிசைக்கருவியின் தந்தி, முரட்டுவடத் துணிவகை. cates, n. Pl. அருஞ்சுவைப் பொருள். caterwauling n. பூனையின் அலறல் ஒலி. caterwaul n. பூனையின் அலறல், (வி.) பூனைப்போல் கிறிச்சென ஒலியெழுப்பு, பூனைகள் போல் சண்டையிடு. caterpillar n. விட்டிற் பூச்சியினத்தின் முட்டைப் புழு, கம்பளிப்புழு, கம்பளிப் பூச்சி, உழைக்காமல் உண்பவர், உருள்கலங்களின் சுழலுருளை, சக்கரங்கள் பதிந்துருளும் இடையறச் சங்கிலிக் கோவை. catering n. உணவு தருவிப்பு, களியாட்டம் ஏற்பாடுசெய்தல். cateress n. உணவு ஏற்பாடு செய்பவள். caterer n. உணவு ஏற்பாடு செய்பவர், உணவு தருவிப்பவர். cater v. உணவு ஏற்பாடு செய், உணவு வழங்கு, நேரப்போக்களித்து மகிழ்வி, வேண்டியவற்றைத் தேடிக் கொடு, விரும்புவனவற்றை நிறைவேற்று. catenation n. சங்கிலி இணைப்பு, தொடுப்பு. catenate v. சங்கிலிபோல் இணை, தொடு, சங்கிலியால் இணை, (பெ.) சங்கிலிபோல் இணைக்கப்பட்ட. catenarian, catenary சங்கிலி வளைவு, செங்குத்துக்கோட்டிலமையாத இரண்டு குற்றுக்களிலிருந்து தளர்த்தியாய்த் தொங்கும் ஒரு சீரான சங்கிலியினால் ஏற்படும் நெளிவு, (பெ.) சங்கிலி நெளிவு போன்ற, சங்கிலி நெளிவுக்குரிய. catena n. (ல.) சங்கிலித்தொடர், இணைந்த தொடர், கோவை. categotical a. உறுதியான, ஐயத்துக்கு இடமற்ற, புறனடையற்ற, மறுப்புக் கிடமற்ற, ஆணித்தரமான, வெளிப்படையான, நேர்முகமான, ஒளிமறைவில்லாத. category n. வகையினம், முழுமையின் வகைப்பிரிவுகளில் ஒன்று, கருத்தப்படியான பொருள் வகுப்பு, உறுதியுடன் அறியப்பட்ட பண்புக்குழு. categorist n. வகைப்படுத்துபவர், வகைப்பிரிவு ஆய்வாளர். categorise v. தரம் பிரித்திணை, வகைப்படுத்து. categories n. pl. (மெய்.) மெய்விளக்கியலில் உளங்கொளத்தக்க மெய்ம்மை முழுவதையும் ஒன்றுவிடாமல் உளப்படுத்தி வகுத்துரைத்த பொருள்களின் இனவகைக்கூறுகள், காண்ட் என்ற செர்மன் மெய்விளக்க அறிஞர் கோட்பாட்டின்படி மெய்ம்மை முழுவதன் மூலக்கூறுகள். categorically adv. கட்டுறுதியாக, மாறுபாட்டுக்கு இடமின்றி, ஆணித்தரமாக. catechumenical a. தீக்ககுமுன் கிறித்தவ சமய உண்மைகள் கற்பிக்கப் பெறும் இளம் மாணவருக்குரிய. catechumen n. தீக்கைக்குமுன் கிறித்தவ சமயத்தின் அடிப்படை உண்மைகள் கற்பிக்கப் பெறும் இளம் மாணவருக்குரிய. catechu n. காசிக்கட்டி. catechize a. வினாவிடையாகப் பாடங்கற்பி, வினாவிடை விளக்க மூலம் மெய்ம்மை புகட்டு, வினா எழுப்பி விடை விளக்கங்கேள், வினவி ஆராய். catechistic, catechistical a. வினாவிடையாகப் பாடம் கற்பிப்பவருக்குரிய, வினாவிடைப் பாடமுறை சார்ந்த. catechist n. வினாவிடையாகப் பாடம் கற்பிப்பவர், கிறித்தவ சமயம் புக விரும்பும் மாணவர்களுக்குப் பாடங்கற்பிப்பவர், சமயப் பரப்புத் திருச்சபையின் உள்ளுர் ஆசிரியர். catechism n. வினாவிடையாகக் கற்பிக்கப்படும் பாடம், சமயத்துறை வினாவிடை ஏடு, கேட்கப்படும் கேள்வி வரிசை. catechetics n. வினாவிடையாகப் பாடங் கற்பிக்கும் கலை, வினாவிடைப் போதனை முறை, செயல் முறையில் எளிதில் பின்பற்றத் தக்க வினாவிடை வடிவமாயுள்ள சமய சித்தாந்தம். catechetic, catechetical a. வினாவிடை வடிவான, வினாவிடை முறையொன்றை ஒட்டிய, வினாவிடைமுறை பற்றி நடக்கிற, வாய்மொழியான, வாய்மொழிப் பாடத்துக்குரிய, கிறித்தவசமய அடிப்படைக் கொள்கைகளை வாய்மொழியாய்க் கற்பிப்பதற்குரிய. catchy a. கவர்ச்சியுள்ள, எளிதில் உளங்கொள்ளத்தக்க, மருட்சி தருகிற, விட்டுவிட்டு நடைபெறுகிற. catchword n. கொளுச்சொல், நடிகரின் தூண்டு சொல், அகராதியின் அல்லது கலைக்களஞ்சியத்தின் ஒரு பக்கத்திலுள்ள தலைப்புச் சொல், ஒரு பக்கத்தின் அடியில் தந்துள்ள அடுத்த பக்கத்தின் முதற்சொல், அரசியல் முதலிய கட்சிகளின் இலக்குச் சொல். catchpole, catch-poll n. ஏவலர், நீதித்துறை அலுவலர். catchphrase n. கவர்மொழி, சுலோகம், கருத்தைக் கவரும் சொற்றொடர். catchpenny n. வெறும் பகட்டுப் பொருள், விற்பனைக்காக மட்டும் செய்யப்படும் பயனற்ற பொருள், (பெ.) வெறும்பகட்டான. catchment-area, catchment-basin n. நீர்வரும் பரப்பு, நீர்வாங்கு தளம். catchment n. ஆற்றுநீர் வடிகால் அமைப்பு. catching n. பிடித்தல், (பெ.) பிடிக்கிற, தொற்றிக் கொள்ளத்தக்க, தொற்றிப் பரவுகிற, கவர்ச்சியுடைய, மயக்குகிற. catchfly n. பசைப்பொருள் கசியும் தண்டினையுடைய செடிவகை. catch-weed n. முரட்டுத் தண்டினையுடைய செடிவகை. catch-the-ten n. துருப்புச் சீட்டின் பத்தினைக் கைப்பற்றுவதே நோக்கமாயுள்ள சீட்டாட்ட வகை. catch-drain n. மேற்பரப்பிலுள்ள தண்ணீரைப் பிடிப்பதற்கான மலைப்பக்கத்து வடிகால். catch-basin n. சாக்கடையில் கசடு பிரிந்து நிறுத்தும் குழியமைவு. catch-as-catch-can n. எவ்விதமான பிடிக்கும் இசைவளிக்கப்படும் மற்போர் வகை, லங்காஷைர் மற்போர் வகை, (பெ.) லங்காஷைர் மற்போர்ப் பணி சார்ந்த, (வினையடை) லங்காஷைர் மற்போர்ப்பாணியின்படி. catch n. பற்று, பிடிப்பு, பற்றிப்பிடித்தல், கவ்வுதல், கைப்பற்றுதல், மட்டைப்பந்து முதலிய ஆட்டங்களில் பந்தினைப் பிடித்தல், பற்றிறுக்கி, பற்றுக்கொளுவி, பிடிக்கப்பட்ட பொருள், பிடிக்கப்பட்ட மீனின் அளவு, பிடிக்கத்தக்க பொருள், திடீரென எய்தப்பெற்ற நன்மை, மறை இடர், சிக்கல், சிறு தடை, கொன்னல், திக்கல், கதவு முதலியவற்றின் அசைவை நிறுத்துவதற்கான தடுக்கு அமைப்பு, தந்திரமான கேள்வி, ஏமாற்றம், வியப்புத்தரும் செய்தி, (இசை.) சிலேடைப்பொருள் தோன்றும் வண்ணம் மூவர் பாடுவதற்கென அமைக்கப்பட்ட இசைப்பாடல், (வி.) கைப்பற்று, இயக்கம் தடைசெய்து பிடி, தடுத்துவை, நிறுத்து, மட்டைப்பந்தாட்டத்தில் மட்டைக்காரர்களால் அடிக்கப்பட்டுத் தரையினைத் தொடுவதற்குமுன் பந்தைப்பிடி, பந்தைப் பிடித்து மட்டைக்காரரை ஆட்டமிழக்கச் செய், அறி, தெரிந்து கொள், துரத்திப்பிடி, சிக்கவை, மயக்கி அகப்படுத்து, தடைப்படு, சிக்கு, வரப்பெறு, உரியகாலத்தில் எய்தப்பெறு, மேவு, நோய்த்தொற்றுக்கு ஆளாக்கு, நோய்போலப் பற்றிக்கொள், தொற்றிக்கொள், தீப்பற்று, புலன்களினால் அல்லது மனத்தினால் உணர், செயல் பின்பற்று, தவறு செய்கையில் கண்டுபிடி. catcaustic a. (வடி.) ஒளி முட்டி மீள்வதானால் உண்டாகும் கோட்ட வரைகளுக்குரிய. catboat n. முன்புறம் அமைந்துள்ள ஒரே பாய்மரத்தோடு கூடிய படகு. Catawba n. அமெரிக்கக் கொடிமுந்திரிப் பழவகை, அமெரிக்கக் கொடிமுந்திப் பழவகையினின்றும் செய்யப்படும் சிவப்புநிற இன்தேறல். catatonic a. அடிக்கடி உணர்விழப்புடன் கூடிய உன்மைத்த நோய் வகை. catatonia n. நினைவு சொல் செயல் மாறாட்டக் கோளாறு, அடிக்கடி உணர்விழப்புடன் கூடிய பித்தநோய் வகை. catastrophist n. திடீர் நிகழ்ச்சிகளால் மண்ணில் மாறுதல் நேரிடுகிறதென்னும் கோட்பாட்டாளர். catastrophism n. (மண்.) எங்கணும் திடீரென நேரிடும் நிகழ்ச்சிகளால் மண்ணியல் மாறுதல் ஏற்படுகிறதென்னும் பழங்கொள்கை. catastrophic, catastrophical a. தலைதடுமாற்றமான, அழிவுக்குரிய, பெருங்கேட்டின் இயல்பு வாய்ந்த. catastrophe n. தலைதடுமாற்றம், அழிவி, கேடான முடிவு, திடீரென நேரிடும் விபத்து, கவிழ்வு, நாடக முகடு, கதையின் உச்ச உணர்ச்சிநிலைக் கட்டம், (மண்.) பொருள்களின் அமைப்பைத் தலைகீழாக்கும் நிகழ்ச்சி. catastasis n. நாடகத்தின் நிகழ்ச்சி உச்சநிலை அடைந்துள்ள கட்டம். catasta n. அடிமைகளின் விலைக்கள மேடை, குற்றவாளிகளின் சித்திரவதைக் களரி. catarrhine n. (வில.) குரங்கினத்தையும் மனித இனத்தையும் உட்கொண்ட நிமிர் உடல் உயிரினங்களில் முற்பிரிவாகிய குரங்கினம், (பெ.) குரங்கினம்போல இருமூக்குத் தொளைகளையும் மிக நெருக்கமாகக் கொண்ட. catarrhal a. சளிச்சவ்வு அழற்சிக்குரிய, நீர்க்கோப்பினால் விளைந்த, நீர்க்கோப்பின் இயல்புடைய. catarrh n. மூக்கடைப்பு, தடுமல், நீர்க்கோப்பு. cataract n. நீர்வீழ்ச்சி, பீற்றுநீர்த் தாரை, சோணைமாரி, கொட்டும் மழை, கண்படலம், திமிரம், (பொறி.) தண்ணீர் பாய்வதனால் இயங்கும் நீராவிப் பொறியாட்சி உறுப்பு. catapultier n. கவண்கொண்டு எறிபஹ்ர். catapult n. கவண், விசை வில்பொறி, எறிபடை வீச்சுப்பொறி, சிறுவர் பறவையடிப்பதற்காகப் பயன்படுத்தும் உண்டைவில், கப்பல் தளத்திலிருந்து ஆகாய விமானத்தைப் பறக்கச் செய்வதற்கான பொறியமைப்பு, (வி.) கவண் எறி, எறிந்து தாக்கு, விசையுடன் பாய், விமானத்தைப் பறக்க விடு. cataplexy n. உணர்ச்சியால் விளைந்த அசைவற்ற நிலை, விலங்குகளுக்கு இரைப்புப் போன்ற விறைப்புண்டாக்கும் நோய் வகை. cataplectic a. உணர்வயர்வுக்குரிய, விலங்குகளின் உறக்கம் போன்ற நிலைக்குரிய. cataplasm n. வீக்கத்திற்குக் கட்டுகிற மாப்பசை. cataphyll n. இலையின் முதன் மூலப்படிவம், இலைமுதல். cataphractic a. முழுப் போர்க்கவசத்துக்குரிய. cataphonics n. எதிரொலிகளைப் பற்றிக் கூறும் ஓசையிற் பிரிவு. catane n. நிலஎண்ணெயில் கண்டெடுக்கப்படும் மெழுகயலான நீர்க்கரியப் பொருள். catamountain n. சிறுத்தை, மலைவாழ் முரடர், (பெ.) மூர்க்கமான. catamount n. ஐரோப்பியக் காட்டுப்பூனை. catamite n. இயற்கைக்கு மாறுபட்ட புணர்ச்சிக்காக வைத்திருக்கப்படும் சிறுவன். catamenia n. pl. மாதவிடாய் ஒழுக்கு. catamaran n. (த.) கட்டுமரம், இரட்டுறு படகு, தோணி, பழங்காலக் கப்பல் வகை, வம்புக்காரி. catalytic, catalytical a. (வேதி.) கடுவினை ஊக்குகிற, இயைபூக்கமான. catalyst n. (வேதி.) கடுவினை ஆக்கி, நுகைப்பான், இயைப்பியக்கம் ஊக்கி. catalysis n. (வேதி.) இயைபியக்கத்தை ஊக்கும் ஆற்றல், தான் மாறாமலேயே மற்றப்பொருள்களில் வேதியல் மாற்றமுண்டாக்கத் துணைசெய்தல். catalyse v. (வேதி.) கடுவினைக்கு உட்படுத்து, இயைபியக்கம் ஊக்கி. catalpa n. நெஞ்சுப்பை போன்ற இலைகளையும் ஊதுகொம்பு போன்ற மலர்கயையும் உடைய மரவகையின் இனம். cataloguise v. பட்டியல் அடைவுசெய். cataloguer n. பட்டியல் தொகுப்பவர். catalogue n. பெயர்ப்பட்டியல் வரிசை, (வி.) பட்டியல் வரிசை தொகு, நுல்கள் முதலியவற்றின் பெயர்களைப் பட்டியலில் சேர். catallactics n. நாட்டுப் பொருளியல். catallactic a. நாணய மாற்றுக்குரிய. catalexis n. கடைக்குறை, பாவின் அடியிறுதியில் ஓர் அசை குறைந்திருத்தல். cataleptic n. மூடுசன்னி நோயாளி, (பெ.) மூடுசன்னிக்குரிய, மூடு சன்னி கண்ட, சா விறைப்புச் சார்ந்த. catalepsy n. மூடுசன்னி, உணர்ச்சியிழந்து உடம்பு விறைத்துப் போகச் செய்யும் நோய் வகை, விலங்குகள் உயிரிழந்தன போலச் செயலிழந்து கிடக்கும் நிலை, சா விறைப்பு. catalectic a. முடிவுறாத, நிறைவற்ற, (இலக்.) கடைக்குறையான, அடியிறுதியில் ஓர் அசை குறைந்த. catafalco, catafalque n. பாடை, கல்லறை வடிவில் அமைக்கப்பட்ட பிணங்கொண்டு செல்வதற்குரிய ஊர்தி. catadromous a. (வில.) முட்டையிடுவதற்காக ஆற்றுமுகம் அல்லது கடலுக்குப் பருவந்தோறும் செல்கிற. catacumbal a. அடிநிலக்கல்லறை போன்ற. catacoustics n. (இய.) எதிரொலிகளைப் பற்றிக் கூறும் ஓசையிற் பிரிவு. catacombs n. pl. அடிநிலக் கல்லறைத் தொகுதி, கட்டுகற்களுக்காக வெட்டிக் குடையப்பட்ட நிலக்குடைவு. catacomb n. அடிநிலக் கல்லறை, சுவடிகள்-மது முதலியவற்றைத் தொகுத்து வைப்பதற்கான சேமநிலவறை. cataclysm n. பிரளயம், ஊழிப்பெருவெள்ளம், திடீர் மாறுபாடு, அரசியல் கொந்தளிப்பு, சமூகப்புரட்சி. cataclys,mal, cataclys,mic ஊழிப் பெருவெள்ளத்துக்குரிய, புரட்சியின் இயல்பு வாய்ந்த. cataclastic a. (மண்.) நொறுக்கப்பட்ட சிறு துணுக்குகளாலான. cataclasmic a. பெரும் பிளவின் இயல்பினதான, படு வீழ்ச்சிக்குரிய. cataclasm n. சீர்குலைவு, சிதைவு, முறிவு. catachresis n. பொருள் வழுப்படச் சொல்லை வழங்குதல், சொற்களைத் தகாவழிப் பொய்துரைத்தல். catachestic, catachrestical a. பொருள் வழுப்பட வழங்கப்பட்ட, மாறுகொளப் புணர்த்தற்குரிய. catabolism n. அழிவுண்டாக்கும் உயிர்ப்பொருள் வேதியியல் மாறுபாடு. Cat;alan n. காடலோனியர், ஸ்பெயின் நாட்டிலுள்ள காடலோனியா மாகாணத்தவர், காடலோனிய மாகாணத்துக்குரிய மொழி, (பெ.) காடலோனியாவைச் சேர்ந்த, காடலோனிய மொழிக்குரிய. cat-witted a. சிறுமைக்குணமுள்ள, செருக்குடைய, கறுவுகிற. cat-walk n. பாலங்களில் உள்ள ஒடுங்கு நடைபாதை. cat-stick n. கில்லி போன்ற ஆட்டவகைக் கோல். cat-rigged a. (கப்.) கடலமைதி நேரத்துக்குரிய முறையில் முக்கிய கோணப் பாய்வகையை மேலும் கீழும் விரித்துக் கட்டிய. cat-o-nine-tails n. பண்டைப் படைத்துறையில் வழங்கப்பட்ட ஒன்பது இழை முடிச்சுக்களுக்குள்ள வார்க்கசை. cat-nap n. சாய்துயில், நாற்காலித்துணியில். cat-like a. பூனைபோல் இயங்குகிற, ஓசையற்ற, திருட்டுத்தனமான. cat-lap n. கீழ்த்தர மதுவகை. cat-hole n. கப்பலின் பின்புழை வாய்கள் இரண்டில் ஒன்று. cat-fish n. பூனைப்போன்ற அமைப்புடைய மீன்வகை. cat-eyed a. பூனைக் கண்களையுடைய, இருளில் பார்க்கவல்ல. cat-call n. சீழ்க்கை ஒலி, நாடகம் பார்பவர்கள் தங்கள் வெறுப்பைத் தெரிவிப்பதற்காகப் பயன்படுத்தும் கிறீச் சென்று ஒலிக்கிற கருவி, (வி.) சீழ்க்கையடி, கிறீச்சென்னும் ஒலிமூலம் எதிர்ப்புத் தெரிவி. cat-burglar n. விரைவாக எளிதில் மதிலேறிச்சென்று திருடும் கள்ளன். cat -2 n. இங்கிலாந்தின் வடகிழக்குக் கரையில் போக்குவரத்தாயிருக்கிற நிலக்கரி-வெட்டு மரக்கப்பலின் பழைய பெயர். cat -1 n. பூனை, பூனை இன விலங்கு, வம்புக்காரி, முற்றுகைத் தாக்குதலுக்குரிய காப்பரண் சகடம், இரு முக்காலி, இரண்டு முக்காலிகளை இணைத்த கோக்காலி, கிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகையின் கிட்டிக்கட்டை, கிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகை, ஒன்பது முடிச்சுக்கள் வாய்ந்த சா casus bellI n. (ல.) போர்க்காரணம். casuistry n. வாத இயல், விதிமுறை வாதக்கோட்பாடு, அறச்சிக்கல் விடுவிப்பு, மயிரிழை நுணுக்க வாதம், வாயடி வேதாந்தம். casuistical a. தத்துவாதம் செய்கிற, மயிரிழைவாத இயல்பான, விதிமுறை வாதக்கோட்பாட்டுக்குரிய, வாயடிவாதம் செய்கிற, ஆராவார வாதத்தால் வாயடைக்கிற. casuistic a. தத்துவாதம் செய்கிற, மயிரிழைவாத இயல்பான, வாயடி வாதம் செய்கிற, நிகழ்ச்சி விளக்க ஆதாரமுடைய. casuist n. சமய சாத்திரங்களின் தத்துவ ஆதரங்கள் காட்டி மயிரிழை பிளக்கும் வாத எதிர்வாதம் செய்பவர், ஆரவாரச் சொற்பேராளர், விதிமுறைவாதி, குதிர்க்கவாதி, விதண்டாவாதி, வாதத் திறமையுடையவர், வாய்வலர். casuarina n. சவுக்குமரம், காற்றாடிமஜ்ம். casualty n. திடீர் இடையூறு, இடைநேர் இல்ர், இடை விபத்து, தீ நிகழ்வு, இடைநேர்வு, காயம்பட்டவர், இடைச்செலவினம், சிறு சில்லறைச் செலவு. casualties n. pl. படைத்துறையில் சாவு-காயப்படுதல்-ஓடிப்போதல் முதலியவற்றால் ஏற்படும் இழப்புள்ளி விவரம், சேதப்பாட்டு விவரம். casuals n. pl. தட்டையான சறுக்குப் புதைமிதி. casualness n. தற்செயல் நிகழ்வுப்பண்பு, திட்டமின்மை, இடைநிகழ்வு, தற்போக்கு. casually adv. தற்செயலாக, எதிர்பாராமல், போகும்போக்கிலே, இடையே. casualism n. எல்லாம் தற்செயற்பாங்காகவே நடக்கின்ற என்ற கோட்பாடு, காரிய காரண மறுப்புக்கோரிக்கை. casual n. தற்செயல் வருகையாளர், இடைவரைவாளர், நாட் கூலியாள், ஒரோவொரு சமயம் உதவி நாடும் பஞ்சை, (பெ.) தற்செயல் வருகையான, இடைவரைவான, திட்டமிடப்படாத, காலத்திற்பட்ட, காலப்போக்கிலேற்பட்ட, கைப்போக்கான, முயற்சியற்ற, முறைமைப்படாத. castration n. விதையடிப்பு, இனப்பெருக்க ஆற்றலழிப்பு, (உயி.) விதை நீக்க அறுவை, (தாவ.) கருவக நீக்கம், மலரின் பூவிழை நீக்கம். castrated a. விதையடிக்கப்பட்ட, தீமை அகற்றப்பட்ட, தூய்மையாக்கப்பட்ட, இடைவெட்டிக் குறைக்கப்பட்ட. castrate v. விதையடி, ஆண்மைப் போக்கு, இனப்பெருக்க ஆற்றல் அழி, மெலிவி, குறைபடுத்து, அகற்றிக்குறை உண்டுபண்ணு, வெட்டிக்குறை, கத்தரித்துக்குறை, தீமையகற்று, தூய்மைப்படுத்து. castrametation n. கூடார அமைப்புக்கலை. castral a. கூடாரத்துக்குரிய. castory n. செந்நிறம், நீலச்சாயலார்ந்த செந்நிறம். castors n. pl. உணவு மேடையில் துணைச்சுவைப் பொருள்கள் வைப்பதற்குரிய நிலைச்சட்டம். castoreum n. நீர்நாய் வகையின் பிட்ட அடிச்சுரப்பி, நீர்நாய் வகையின் பிட்ட அடிச்சுரப்பியிலிருந்து உண்டுப்பண்ணப்படும் கூர்மணப்பொருள். castor-oil n. ஆமணக்கு வகையின் எண்ணெய், குடவிளக்க மருந்தாகவும் மசகெண்ணெய்யாகவும் வழங்கும் தாவர எண்ணெய் வகை. Castor n. கிரேக்க பழங்கதையில் குதிரை பழக்குதலில் வல்லுநனான லீடாவின் இரட்டைப் பிள்ளைகளுள் ஒருவன், மிதுனமனை வான்மீன்குழுவின் ஒண்மீன். castor -3 n. குதிரைக் காலடியில் கல் போன்ற கரணை. castor -2 n. நீர்நாய் போன்ற கொறிக்கும் விலங்கினம், விலங்கின வகையின் பிட்டத்தின் சுரப்பி நீரிலிருந்து உண்டுப் பண்ணப்படும் வன்மண மருந்துப்பொருள் வகை, நீர்வாழ் விலங்கின வகையின் மென் மயிர்த்தோல், மென் மயிர்த்தோல் தொப்பி. castor -1 n. உழன்றி, உழலை, இருக்கைகளின் கால்களில் பொருந்திய திருகுசுழல் சக்கரம், தெளிபுட்டில், திவலைகள் கொட்டும் முகடு உடைய கலம், உணவு மேடையில் துணைச்சுவைப் பொருள்களுக்குரிய கலம். castled a. காப்பரண் மாளிகைகளையுடைய, காவற்கோட்டைகளைக் கொண்ட. castle-nut n. பொட்டுமரை, இயந்திரத்தில் மற்றோர் உறுப்பின் முனைப்பூசி வந்து பொருந்துவதால் சுழற்சி நிறுத்தப்படும்படியாகச் சுற்றுபுறத்தில் துளையுடைய முகிழ். castle-guard n. காப்பரண் மாளிகைக் காவலர், மனக்கோட்டைக் காவலர். castle-building n. மனக்கோட்டைக் கட்டுதல், பகற்கனவு காண்டல். castle-builder n. மனக்கோட்டைக் கட்டுபவர், பகற்கனவாளர், கற்பனைத் திட்டங்களிடுபவர். castle n. காப்பரண் மாளிகை, காப்பரண், காவற்கோட்டை, அரண் மாளிகையாக முன்பு இருந்த கட்டிடம், பெருமக்கள் மாளிகை, தற்கால மேலைச் சதுரங்க ஆட்டத்தில் நால்வகைக் காயுருக்களில் ஒன்று(அம்பாரி), யானைமீதுள்ள காப்புக்கூண்டு, அம்பாரி, பெருங்கப்பல், படைநாவாய், (வி.) சதுரங்க ஆட்டத்தில் அம்பாரிக்காயுருவை நோக்கி அரசுக்காயுரு இருகட்டம் சென்று அது தாண்டிய கடைசிக் கட்டத்துக்கு அம்பாரிக்காயுருவைக் கொண்டுவருமாறு ஆடு. casting-weight n. சாய் எடை, சர்சமநிலையை ஏதேனும் உருபுறமாக்கவல்ல மிகை எடை. casting-net n. எறிவலை, வாய்ப்பக்கம் கீழ்நோக்க எறிந்து மையமூடாக நாற்புறக்கோடியும் இழுக்கப்படத்தக்க வகையில் அமைவுற்ற பெரிய வட்ட வடிவான வலை. casting n. எறிதல், இடுதல், போடுதல், வார்ப்படம், வார்ப்பு, வார்ப்புக்குரிய பொருள், வார்ப்புரு. castilian n. ஸ்பெயின் நாட்டுப் பகுதியான காஸ்டீலுக்கு உரியவர், காஸ்டீல் வாழ்நர், காஸ்டீல் பகுதிக்குரிய செப்பமிக்க ஸ்பானிய மொழி, (பெ.) காஸ்டீல் பகுதிக்குரிய. Castile n. ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதி. castigator n. கண்டிப்பவர், கண்டனம் எழுப்புபவர். castigation n. கண்டித்துத் திருத்ததல், கடுந்தண்டனை, கடிந்துரை, காரசாரமான திறனாய்வு. castigate v. தண்டி, கண்டித்துரை, அடித்து ஒறு, திருத்தம் செய், பாட திருத்தம் செய். castellated a. அரண்மாடம் போன்ற கட்டடமைப்புடைய, அரண்மாளிகைபோல் கோட்டை கொத்தளக் கூடகோபுரங்களையுடைய. castellan n. அரண்மாடத் தலைவர், அரண்மாளிகை ஆட்சியாளர். casteless a. சாதியற்ற, சாதியிழந்த. caste n. சாதி, பிறப்படிப்படையான செயற்கைச் சமுதாயப் பிரிவு, ஒட்டறுத்து வாழவிரும்பும் சமுதாய வகுப்பு, தனிவாழ்வுடைய வகுப்பு, சாதி முறை, சாதிப்படி, சாதிமதிப்பு, சமுதாயத் திரிபியல் வடிவப்படிவம். castaway n. புயலால் கரையில் தள்ளப்பட்டவர், உடைகலப்பட்டோர், சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோர், துணையிலி, பழிகேடன், (பெ.) ஒதுக்கப்பட்ட, தள்ளப்பட்ட, பயனற்ற. castanents n. pl. காழ்மரம் அல்லது தந்தத்தால் செய்யப்பட்டுக் கிலுக்கிசையுடன் நடனங்களில் கைவிரல்களுக்கிடையே வைத்துப் பயன்படுத்தப்படும் ஒரு கைத்தாளக் கட்டை வகை. Castalian a. கிரேக்க பழங்கதையில் பானாஷஸ் மலையில் செங்கதிர்த்தெய்வமான அப்போலோவுக்கும் கலைத்தெய்வ நங்கையர்க்கும் புனிதமான ஊற்றுக்குரிய, கவிதையூற்றுக்குரிய. All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wiktionary.org/w/index.php?oldid=1142489.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|