Revision 1154632 of "பயனர்:Info-farmer/சொற்பதிவுச் சோதனை3" on tawiktionaryhabiliment n. தளவாடம். habiliments n. pl. கஞ்சுகம், பணி உடுப்புக்கள். habilitate v. சுரங்கத் தொழிலிற்குச் செயல் மூலதனம் அளி, பல்கலைக்கழகப் பதவிக்குத் தகுதியாகு. habit n. பழக்கம், மனப்பாங்கு, உடற்பாங்கு, வளரும் வகை அல்லது முறை, மகளிர் குதிரைச் சவாரிஉடுப்பு, சமய நெறியினர் உடுப்பு, (வி.) உடையணி, உடுத்திக்கொள். habitable a. குடியிருக்கத்தக்க, வசிக்கத்தக்க. habitant n. குடியிருப்பவர், வசிப்பவர், பிரஞ்சு மரபைச் சேர்ந்த கனடா நாட்டினர். habitat n. தாவரம் அல்லது விலங்கின் இயற்கையான இருப்பு, மனை. habitation n. உறைவிடம், பிரிம்ரோஸ் லீக்' என்னும் கழகத்தின் கிளைச்சங்கம். habitual a. பழக்கத்திலுள்ள, தொடர்ச்சியான, அடிக்கடி நிகழ்கிற, குறிப்பிட்ட பழக்கத்துக்கு ஆளாகிவிட்ட. habituate v. பழக்கப்படுத்து. habitude n. மனப்பாங்கு, உடற்பாங்கு, பழக்கம், போக்கு. habitue n. (பிர.) பழக்கமாக வருபவர் அல்லது தங்குபவர். hackmatack n. அமெரிக்க சவுக்கு மரவகை, அமெரிக்க ஊசியிலை மரவகை. hackstand n. வாடகை வண்டி நிறுத்துமிடம். hackwriter n. கூலி எழுத்தர். haecceity n. (மெய்.) இது என்ற தன்மை, தனிப்பண்பு. haemanthus n. குருதி வண்ண மலர்வகை, தென்னாப்பிரிக்க வேர்ப்பூண்டு மலர்வகை. haematic n. குருதிவினை மருந்து, (பெ.) குருதிசார்ந்த, குருதியுள்ள. haematin n. உலர்ந்த குருதியிலிருந்து கிடைக்கும் பழுப்பு நிற இரும்புச் சத்துப்பொருள். haematite, hematite சிவந்த அல்லது ஒருவாறு கறுத்த இரும்பு உயிரகைக் கனிப்பொருள். haematocele, hematocele n. குருதிக்குழிவு, இரத்தக்குழி, இரத்தவண்டம். haematogenesis n. குருதி உருவாதல். haematology n. குருதியியல். haematuria n. (மரு.) சிறுநீரில் குருதி உள்ளமை. haemostat n. குருதிப்போக்கினை நிறுத்தும் கருவி. haft n. கைப்பிடி, (வி.) கைப்பிடி பொருத்து. hagiolater n. திருத்தொண்டர்களை வழிபடுபவர். hagiolatry n. திருத்தொண்டர் வழிபாடு. hagiologist n. திருத்தொண்டர் புராண எழுத்தாளர். hail-fellow, hail-fellow-well-met a. எளிதில் அல்லது விரைவில் பழகுகிற அல்லது நண்பராகுகிற. hailshot n. ஆலங்கட்டி மழை போன்று பரவி விழும் சிறு குண்டு. hailstone n. ஆலங்கட்டி. hailstorm n. புயற்காற்றோடு கூடிய ஆலங்கட்டி மழை, வசைமாரி, வினா மழை. Hair stylist முடி ஒப்பனையாளர் hair-net n. பிச்சோடா' வலை, கொண்டை வலை. hair-shirt n. பாவ மன்னிப்புத் தேட்டாளர் அணியும் சுணைச் சட்டை, அந்தரங்கமான வருத்தம், மன நோய். hair-splitter n. அறக்கூராய்வாளர். hair-splitting n. நுண்கூர் வேறுபாட்டு அமைப்பு. hair-stroke n. மயிரிழைக்கோடு போன்று அழகாக எழுதக்கூடிய திறமை, கையெழுத்துத் திறன். hairbreadth, hairs-breadth n. மயிரளவு தொலைவு, மிகக்குறுகிய தொலைவு, மிகச்சிறு தொலைவு, (பெ.) மிக நெருங்கிய, மிகக்குறுகிய. haircloth n. கம்பளம், முழுவதும் அல்லது அரைகுறையாக முடியினால் செய்யப்படும் துணி. haircut n. முடி திருத்துதல், சிகை வெட்டுதல். halation n. (நி.ப.) எதிர்மூலப்படியில் இயல்பான வரம்பிற்கு அப்பால் ஒளியைப் பரப்புதல். halberd, halbert ஈட்டிக்கோடரி. half-baptise v. தனியாகவும் விரைவாகவும் ஞானஸ்நானம் செய்வி. half-boot n. அரை முழங்காலளவுள்ள புதைமிதியடி. half-brother, half-sister n. ஒன்று விட்ட உடன்பிறந்தார். half-caste n. ஐரோப்பிய-ஆசிய கலப்பு இனப் பெற்றோர்க்குப் பிறந்தவர். half-hearted a. அரை மனதான, முனைப்பார்வமற்ற, சுறுசுறுப்புக் குறைந்த. half-hitch n. ஒரு பொருளைச் சுற்றிக் கட்டப்பட்ட சாதாரண முடிச்சு. half-kirtle n. 16-1ஹ்ஆம் நுற்றாண்டுகளில் பெண்கள் அணிந்த ஒருவகைச் சிறுசட்டை, அரைக்கச்சு. half-length n. உடலின் மேற்பகுதியைக் காட்டும் உருவப்படம், (பெ.) முழுநீளத்தில் அரைப் பகுதியான. half-light n. அரைகுறை ஒளி, மங்கலான வெளிச்சம், அந்தி ஒளி. half-mast n. இறந்தவர்களுக்கு மரியாதை காட்டுதற்குக் கொடிமரத்தில் அரைப்பகுதிக்குத் தாழ்த்திக் கொடியைப் பறக்கவிடும் நிலை. half-plate n. நிழற்பட அரைத்தகடு, 4 3க்ஷீ4 * 4 1க்ஷீ2 அங்குல அளவுள்ள நிழற்படத் தகடு. half-shift n. யாழ் அல்லது நரம்பிசைக் கருவியை வாசிக்கும்போது அரையொலி கொடுக்கும் கை அமைவு நிலை. half-text n. மூல ஏட்டின் அரை அளவுள்ள கையெழுத்து. half-timer n. அரைநேரம் வேலை செய்பவர், பாதிநேரம் பணியாற்றிப் பாதிநேரம் கல்வி பயிலுபவர். half-title n. புத்தகத் தலைப்புப் பக்கத்திற்கு அல்லது புத்தகப் பிரிவுக்கு முன்னுள்ள சிறுதலைப்பு. half-tone n. நுண்பதிவுப்படம், (இசை.) மைய இசை, (பெ.) நிழற்படத்தில் ஒளி நிழல் மாறுபாட்டளவுப் புள்ளிகளைக் காட்டுகின்ற. half-truth n. அரைகுறையான உண்மை. halfpennyworth, haporth அரை பென்னி'க்கு விற்கக் கூடிய அளவு, அரை'பென்னி'நாணய மதிப்புடைய அளவு. halfwitted a. மந்த மதியுள்ள. halibut, holibut பெரிய தட்டை உணவு மீன் வகை. halieutic, மீன் பிடித்தல், (பெ.) மீன் பிடித்தலைப் பற்றிய. halieutics n. pl. மீன் பிடிக்குங் கலை. halitosis n. (மரு.) ஊத்தை நாற்றம். Hallstatt a. புராதனக் கற்காலத்தின் நாகரிகப் பகுதியைக் குறிக்கிற. hallucinate v. மாயக்காட்சி விளை, மருட்சியுண்டாக்கு, மயங்கச் செய். hallucination n. மாயக்காட்சி, மருட்சி. halogenate v. உப்பீனியோடு சேர். halt -1 n. தங்குதல், நிற்குமிடம், அசையாநிலை, (வி.) அசைவின்றி நில், சிறிது தங்கு, நிறுத்திவை. halt -2 n. நொண்டி நடத்தல், (பெ.) நொண்டியான, முடமான, நொண்டுகிற, (வி.) தயங்கிநட, நொண்டு, தயங்கு. halter n. ஆடு மாடு குதிரைகளுக்கான கண்ணிக் கயிறு அல்லது தோற்பட்டை வார், தூக்குக் கயிறு, தூக்குச் சாவு, (வி.) கண்ணியுடைய கயிற்றினால் கட்டு, தூக்கிலிடு. halter-break v. கண்ணிக்கயிறு பூட்டிக் கொள்ளாக் குதிரையைப் பழக்கு. ham-fisted, ham-handed a. செப்பமற்ற. Hamite n. எகிப்திய அல்லது ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்தவராகிய ஹாம் என்பரின் வழிவழி மரபினர் எனக் கருதப்படுவர். hamite -2 n. கொக்கிவடிவத் தோட்டினை உடைய புதை படிவ நத்தையின் உயிர்வகை. hamlet n. சிறு கிராமம், திருக்கோயில் இல்லாத சிறு கிராமம், தொட்டி, சிற்றுர். hammer-cloth n. வண்டியில் வலவன் இருக்கையை மூடி இருக்கும் ஒப்பனைத் துணி. hammer-toe n. (மரு.) கால் விரல்களில் ஒன்று நிலையாக மேல் நோக்கி வளைந்து மடிந்திருக்கும் அங்கக்கோணல். hammerman, hammer-smith n. கருமான. Hampton Court n. தேம்ஸ் ஆற்றின் கரையில் லண்டனுக்கு அருகே அரசர்களின் அரண்மனையாய் இருந்த கட்டிடம். hamster n. கன்னப்பைகளுள்ள பெரிய எலிபோன்ற கொறி விலங்கு வகை. hamstring n. மனிதர்களின் பின் தொடைத் தசைநார், நாற்கால் விலங்குகளின் பின்னங்கால் பின் தொடையிலுள்ள பெரிய தசைநார், (வி.) பின் தொடை நரம்புகளை வெட்டி முடமாக்கு. hand-post n. வழிகாட்டிக்கம்பம். hand-to-hand a. மிக நெருங்கிய, (வினையடை) மிக நெருங்கிய நிலையில். hand-to-mouth a. கஷ்ட சீவனமுடைய, போதும் போதாத, (வினையடை) அன்றாடம் தள்ளிக்கொண்டு போகிற நிலையில், போதும் போதாமல். handbreadth n. கையகலம். handcraft n. சிறு கைத்தொழில், கைவினை, கைப்பணி. handfast n. உறுதியான பிடி, காவல், ஒப்பந்தம், திருமண உறுதி, (பெ.) கட்டுப்பட்ட, ஒப்பந்தம் செய்துகொண்ட, உறுதியான பிடியுள்ள, (வி.) திருமண உறுதிசெய், உறுதியாகப் பிடித்து இணை. handfasting n. திருமண உறுதிப்பாடு. handicraft n. கைவினை, கைவினைத்திறன். Handicrafts கைத்திறவினைகள், கைவினைப்பொருள்கள், கைத்திறவினையகம் handicraftsman n. கைவினைக் கலைஞன். handlist n. கைச்சிட்டை. handstaff n. சாட்டையின் கைப்பிடி, வேல், ஈட்டி, தடி. handsturn n. சிறு செயல். handwriting n. எழுத்து, கையெழுத்து, எழுதும்விதம். hang-nest n. தொங்கும் கூடு கட்டுகிற பொற்குருவி வகை. hard-bitten a. மூர்க்கமாகச் சண்டையிடுகிற. hard-favoured, hard-featured a. அருவருப்பான முகத்தோற்றமுடைய. hard-fisted a. உறுதியான அல்லது வலிய முட்டிகள் அல்லது கைகளை உடைய, மூடிய முட்டியுடைய, கஞ்சத்தனமான. hard-fought a. தீவிரமாகப் போட்டியிடப்பட்ட. hard-got, hard-gotten a. வருந்தி ஈட்டிய, பாடுபட்டுப்பெற்ற. hard-hearted a. உணர்ச்சியற்ற, வன்னெஞ்சுடைய, இரக்கமற்ற. hard-mouthed a. கடிவாளத்தினால் எளிதிற் கட்டுப்படுத்த முடியாத, எளிதில் மேலாண்மை செய்ய இயலாத. hard-paste a. சீனக் களிமண்ணினாலும் கருங்கற் பொடியினாலும் செய்யப்பட்ட. hard-set a. இன்னல்களால் நெருக்கப்பட்ட, உறுதியான, வளையாத, முறைப்பான. hare-foot a. விரைந்த நடையுடைய. hares-foot, hares-foot trefoil n. நீண்ட மெத்தென்ற பஞ்சுபோன்ற நுனிப்பாகங்களையுடைய மணப்புல் வகை. haricot n. ஆட்டிறைச்சியும் மொச்சை முதலிய காய்கறிகளும் சேர்த்து அவித்த உணவு வகை, பிரஞ்சு அவரை. Harley Street n. மருத்துவ வல்லுநர் வசிக்கும் லண்டன் தெரு ஒன்று. harlot n. விலைமகள், பரத்தை, (பெ.) இழிந்த, காமவெறி பிடித்த, (வி.) வேசித்தொழில் புரி. harlotry n. பரத்தமை, ஒழுக்கக்கேடு, போலி. harmattan n. மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள பாலைவனத்திலிருந்து வீசும் வறண்ட வடகிழக்குப் புழுதிக் காற்று. harmonist n. (இசை.) பல பண்திற இசை வல்லுநர், இசைஞர், பாடகர், இணக்குவிப்பவர், முரண்பட்டவைகளை இணக்குவிக்க முயல்பவர். Harmonist, Harmonite இயேசுநாதரின் இரண்டாவது வருகையில் நம்பிக்கை கொண்டு மனங்கொள்ளா நோன்பினரான சமயப்பிரிவினரில் ஒருவர். harmonometer n. ஒலிகளின் இசைவுக்பொருத்தங்களை அளப்பதற்கான கருவி. harpist n. யாழிசைஞர். Harris tweed n. ஹெப்ரைடிஸ் தீவுகளில் செய்யப்படும் கம்பளி ஆடை வகை. hart n. கலைமான், செந்நிற மான் கலை, ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஆண்மான். hartal n. (இ.) கடையடைப்பு, அரசியல் எதிர்ப்புக்கு அடையாளமான கண்டன வேலைநிறுத்தமுறை. hartbeest, hartebeest n. தென் ஆப்பிரிக்க மான்வகை. harts-tongue n. தோல்வார் வடிவமுள்ள இலைகளையுடைய சூரல்வகை. hartshorn n. கலைமான் கொம்பு, கலைமான் கொம்புக் கரைசல், நவச்சாரக் கரைசல். harvest n. கதிரறுப்பு, அறுவடை, அறுவடைப்பருவம், கூலப்பயிர், பருவ விளைவு, உழைப்பின் பயன், நல்விளைவு, பெரு வருவாய், (வி.) கதிரறுத்துக்குவி, அறுவடைசெய், சேர்த்துவை. harvest-bug n. கதிரறுப்புக் காலத்தில் தொந்தரவு கொடுக்கும் சிறு பூச்சி வகை. harvest-lady, harvest-lord n. அறுவடை செய்பவர்களில் முதன்மையானவர்கள். harvest-queen n. அறுவடை செய்யப்பட்ட கூலப்பயிரின் கடைசி இணுக்கினால் செய்யப்பட்ட பொம்மை உருவம், அறுவடைக்காரர்களில் முதன்மையானவர். harvester n. கதிரறுப்பவர், கதிரறுக்கும் இயந்திரம், கதிரறுப்புக் காலத்தில் தொந்தரவு கொடுக்கும் சிறு பூச்சி வகை. harvestman n. கதிரறுப்பு வேலையில் ஈடுபட்டிருப்பவர். haslet n. வறுத்து உணவாகக் கொள்ளத்தக்க பன்றிக்குடல். hast, v. have என்பதன் பழங்கால முன்னிலை ஒருமை வடிவம். hastate, hastated ஈட்டி வடிவமுள்ள, பின்னோக்கிய கவை முள்ளுடைய. haste n. விரைவு, பரபரப்பு, அவசரம், ஆத்தரம், பதற்றம், (வி.) அவசரப்படு, பதற்றங்கொள், விரைந்து செல், உந்திச் செலுத்து. hasten v. அவசரப்படுத்து, விரைவுப்படுத்து, தொழில் விரைவு மேற்கொள், அவசரப்படு, பதற்றங்கொள், அவசரமாகச் செல். hastiness n. விரைவு, பரபரப்பு, துடுக்குச்செயல், எளிதில் சினமூட்டப் பெறும் இயல்பு. hasty a. பரப்பரப்புடைய, விரைவுள்ள, துடுக்கான, எண்ணுமல் துணிகிற, முன்பின் பாராத, ஆய்ந்தமைவில்லாத, முன்சினமுள்ள, பதற்றமுடைய. hasty-pudding n. கொதிக்கும் பால் அல்லது நீரில் மாவைப் போட்டுக் கிளறியெடுத்த களி. hasty-witted a. துடுக்கான, முன்னாய்வற்ற, ஆய்ந்தோய்ந்து பாராத. hat n. உச்சியும் விளிம்பும் உடைய தொப்பி, போப்பாண்டவரின் திருத்துணைவர் பதவி, (வி.) தொப்பினால் மூடு, தொப்பி தருவித்துக் கொடு, ஒருவருக்கு வணக்கம் செலுத்தும் வகையில் தொப்பியை எடு. hat-block n. தொப்பியை உருவாக்குவதற்காகக் கீழே வைத்துக்கொள்ளப்படும் மரக்கட்டை. hat-guard n. தொப்பி காற்றில் அடித்துக்கொண்டு போகாமற் காக்கும் மென்கயிறு. hat-peg n. தொப்பி மாட்டி. hat-plant n. தொப்பிகள் செய்வதற்குப் பயன்படும் தக்கைச் செடிவகை. hat-trick n. மாந்திரிகன் தொப்பியை வைத்துக்கொண்டு செய்யும் மாயவித்தை, மரப்பந்தாட்டத்தில் அடுத்தடுத்து மும்முறை பந்து வீசி இலக்குக்கட்டைகளை வீழ்த்தி வெற்றி பெறுதல், விளையாட்டுகளில் ஒரே ஆட்டக்காரர் மூன்று இலக்கு எடுத்தல். hatband n. தொப்பியைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள இழைப்பட்டை. hatch -1 n. கீழ்ப்பாதிக்கதவு, இரட்டைக் கதவின் கீழ்ப்பகுதி, திட்டிக்கதவு, கதவின் புழைவாயில், சுவரின் இடைப்புழை வாய், மோட்டுப்புழைவாய், நிலத்தளப்புழைவாய், கப்பல் தளப்புழைவாயில், புழையடைப்பு, வெள்ளவாரி, மதகுவாய், (வி.) திட்டிவாயிலை அடை. hatch -2 n. குஞ்சு பொரிப்பு, ஓரிட்டு முட்டைக் குஞ்சுகள், (வி.) முட்டைக் குஞ்சு பொரிக்க வை, அடைகா, குஞ்சு பொரி, சூழ்ச்சிசெய்து உருவாக்கு. hatch -3 n. செதுக்கப்பட்ட வரி, (வி.) பரப்பின்மேல் நேர்த்தியான ஒருபோகு வரிகளை உருவாக்கு. hatch-boat n. பாதியளவு தளமிடப்பட்டுள்ள மீன்பிடி படகு வகை. hatchery n. முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வைப்பதற்குரிய இடம். Hatchery குஞ்சுபொரிப்பகம் hatchet n. கைக்கோடாரி. hatchet-faced a. இடுக்கமான முகமுடைய. hatchety a. கைக்கோடாரி போன்ற. hatching n. நேர்த்தியான கோடுகள் மூலம் நிழல் வண்ணங்காட்டுதல். hatchment n. (கட்.) மரபுச்சின்னங்களைத் தாங்கிய கேடயம், இறந்தவருடைய படைக்கலங்களைக் குறித்த வீட்டு முகப்புத்தகடு. hatchway n. (கப்.) தளப்புழைவாய், சரக்குகளை இறக்குவதற்காகக் கப்பல் தளத்திலுள்ள புழை, நிலத்தளத்திலுள்ள புகுவாயில், சுவரிலுள்ள திட்டிவாயில், மோட்டிலுள்ள புழைவாய். hate n. வெறுப்பு, பகைமை, (வி.) பெருவெறுப்புக்கொள், அருவரு, கறவு. hateful a. வெறுப்புணர்ச்சியைத் தூண்டுகிற, அருவருப்பான, வெறுக்கத்தக்க, வெறுப்புக்கொண்டிருக்கிற, வெறுப்பைக் காட்டிக்கொள்ளுகிற. hatful n. தொப்பி கொள்ளக்கூடிய அளவு. hath, v. have என்பதன் பழையவழக்கு நிகழ்காலப் படர்க்கை ஒருமை வடிவம். hatpin n. தொப்பியை மயிரோடு இணைப்பதற்கான நீண்ட ஊசி. hatrack n. தொப்பி மாட்டும் சட்டம். hatred n. பெருவெறுப்பு, பகைமை, வன்மம், காழ்ப்பு. hatstand n. தொப்பி மாட்டுவதற்கான முளைகளுடன் கூடிய நிலைச்சட்டம். hatted a. தொப்பியணிந்துள்ள, தொப்பியினால் மூடப்பட்ட. hatter n. தொப்பி செய்பவர், தொப்பி விற்பனையாளர். hatti, hattisherif n. (பெர்.) (வர.) துருக்கி சுல்தானால் கையெழுத்திடப்பட்ட நிலவரக் கட்டளை. haughtiness n. தருக்கு, இறுமாப்பு, மேட்டிமை. haughty a. செருக்கு வாய்ந்த, ஏளன இறுமாப்புக்கொண்ட, மேட்டிமையுடன் அவமதித்து நடக்கிற. haunt n. பயிலிடம், ஊடாட்டப்பகுதி, நடமாட்டப்பகுதி, விலங்குகள் வழக்கமாகச் சென்று தீனி கொள்ளும் இடம், குற்றவாளிகள் பதுங்கிடம், (வி.) அடிக்கடி செல், சென்று ஊடாடு, வழக்கமாக நடமாடு, பயில், பழகி ஊடாடு, விரும்பிக் கலந்து உறவாடு, வழக்கமாகத் தங்கியிரு, ஓயாது வந்து தலையிடு, சுற்றிச்சுற்றி வா, பேய்வகையில் தங்கியிரு, வட்டமிடு, எண்ணங்கள் வகையில் அடிக்கடி வந்து தோன்று, ஓயாது நினைவில் ஊடாடு. haunted a. பேய் தங்கிவாழ்கிற, பேய்கள் வட்டமிடுகிற, பேயாட்டம் நிரம்பிய. haut goat n. (பிர.) உச்ச உயர் சுவைநலம், சிறு கறை. hautboy n. நாகசுரம் போன்ற துளை இசைக்கருவி வகை, துளை இசைக்கருவி வகையின் அழுத்து கட்டை, உயரமான பழச்செடி வகை. haute ecole n. (பிர.) மிகக் கடினமான குதிரை ஏற்ற வித்தைகள். hauteur n. (பிர.) செருக்கார்ந்த நடத்தை, அகம்பாவம். have the advantage of. இயல்பான மேல்நலம் பெற்றிரு. have the ball at ones feet வெற்றிக்கு வழிகாண். hawk-moth n. ஆப்பிரிக்காவிலுள்ள பெரிய விட்டிற்பூச்சி வகை. hawthorn n. வெண்மை சிவப்பு இளரோஜா முதலிய நிறமுடைய மலர்களும் திண்சிவப்பு நிறமுடைய சிறு பழங்களுங் கொண்ட முட்செடி வகை. hay-bote n. வேலிகளையும் அடைப்புக்களையும் சீர்செய்வதற்காக மரத்தை வெட்டுவதற்கான குடிக்கூலிக்காரருக்குள்ள உரிமை. hayloft n. வைக்கோற்பரண், வைக்கோல் வைப்பதற்கான மேலிடம். hazel-nut n. குறுமர வகையின் உணவாகக் கொள்ளத்தக்க செம்பழுப்பு நிறக் கொட்டை. head-fast n. நங்கூரம் பாய்ச்சி உறுதியாகப் பிணைப்பதற்காகக் கப்பலின் முன்புறத்திலுள்ள திண் கயிறு. head-hunter n. எதிரிகளின் தலைகளை வெற்றிச் சின்னங்களாகக் கருதிச் சேர்க்கும் காட்டுமிராண்டி. head-note n. தலைப்புக்குரிய குறிப்பு, சட்ட முற்குறிப்பு, மூலப் பதிவேட்டால் தரப்படும் பொதுக்குறிப்பு. head-stock n. பொறியின் சுழலும் பகுதிகளிலுள்ள உராய்வு தாங்கி உருளைகளின் தொகுதி. head-tire n. தலையணி, தலைக்கோலம். headlight n. முன்விளக்கு, உந்துவண்டி கப்பல் விமானத்தில் ஆகியவற்றின் முகப்பில் பொருத்தப்பட்டுள்ள வெளிச்சம் மிக்க விளக்கு. Headlight முகப்பு விளக்கு headmaster n. பள்ளித்தலைவர், தலைமையாசிரியர். headmistress n. பள்ளித்தலைவி, தலைமை ஆசிரியை. headmost a. தலைசிறந்த. headquarters n. தலைமை அலுவலகம், செயற்கள மையம், தளபதி அலுவலகம். headstall n. தலைப்பகுதியில் மாட்டப்படும் சேணத்தின் பகுதி. headstone n. கல்லறைக்கல், மூலக்கல், அடிப்படைக்கல். headstrong a. தன்மூப்புள்ள, பிடிமுரண்டான. headwaiter n. அருந்தகங்களிலுள்ள தலைமைப் பணியாள். health n. உடல்நலம், உடல்நிலை, ஆரோக்கியம், நோயற்ற நிலை, வாழ்த்தொடு அருந்தும் நீர். Health centre நலமையம், நல்வாழ்வு நிலையம் health-officer n. சுகாதார அலுவலர், உடல்நலத்துறைப் பணிமேலாளர். healthful a. உடல்நலம் ஆர்ந்த, உடல்நலம் உண்டுபண்ணுகிற, உடல்நலம் பேணுகிற, உடல்நலங் குறித்த, உளநலத்துக்கு உகந்த. healthy a. உடல்நலமுடைய, உடல்நலத்திற்கு உதவுகிற, நலவாழ்விற்குத் துணைபுரிகிற, நலமார்ந்த. heapstead n. சுரங்க வழியைச் சுற்றிலுமுள்ள செயற்களக் கட்டிடங்கள். hearse-cloth, பிணச்சீலை. heart n. நெஞ்சுப்பை, இருதயம், குருதி ஓட்டத்தை ஊக்கும் உறுப்பு, நெஞ்சு, நெஞ்சுப்பையை உட்கொண்ட மார்புப்பகுதி, நெஞ்சம், இதயம், உணர்ச்சிகளின் இருப்பிடம், உள்ளுணர்ச்சி, உணர்ச்சி, ஊக்கம், வீரம், அன்பு, கனிவு, காதலின் உறைவிடம், காதல், உள்ளிடம், மையம், உள்ளார்ந்த பகுதி, முக்கிய பகுதி, முக்கிய உறுப்பு, உயிர்நிலை, மரத்தின் காழ், கடுமரம், நெஞ்சுப்பை வடிவப் பொருள், இருதய வடிவக் குறியுடைய சீட்டு, இருதயத்தின் நோயுற்ற நிலை, அருமைவிளி, அருமைவிளிக் குறிப்பு, (வி.) கிளர்ச்சியூட்டு, ஊக்கப்படுத்து, திரண்டு உள் முகையாயுவாகு. heart-beat n. இதயத் துடிப்பு, நாடித் துடிப்பு, உணர்ச்சி. heart-blood n. உயிர்க்குருதி, உயிர். heart-breaker n. காதோரக் குழற்சுருள், காதற் சின்னமான மயிர்ச்சுருள் கற்றை. heart-breaking a. கடுந்துயர் உண்டுபண்ணுகிற. heart-broken a. கடுந்துயர்க்காட்பட்டு, நெஞ்சமுறிவுற்று. heart-disease n. நெஞ்சுப்பை நோய். heart-easing a. உள்ளத்திற்கு அமைதிகொடுக்கிற. heart-felt a. மனமார்ந்த, நெஞ்சார்ந்த. heart-grief n. நெஞ்சுப்புண், ஆழ்ந்த மனவேதனை. heart-quake n. அச்சம், நடுக்கம். heart-rending a. நெஞ்சம் பிளிக்கின்ற, வெந்துயரளிக்கின்ற. heart-rot n. காழ்ச்சிதைவு, மரங்களில் காளான்களால் ஏற்படும் உள் வைரச்சிதைவு. heart-searching n. தன்னாய்வு, தன் உணர்ச்சியற்ற. heart-shaped a. இருதய வடிவம்போல் அமைந்துள்ள. heart-sick a. ஊக்கமிழந்த, தளர்வுற்ற, சோர்வுற்ற, heart-sore n. துயரம், (பெ.) மனம் புண்பட்ட. heart-spoon n. மார்பெலும்புக் குழிவு, மார்பெலும்பு. heart-stirring a. உணர்ச்சி கிளறுகிற, ஆழ்ந்த உணர்ச்சிகளை எழுப்புகிற. heart-strike v. நெஞ்சூடுருவு, கிலியூட்டு, கலங்க வை. heart-strings n. pl. ஆழ்ந்த அன்புத்தளைகள், ஆழ்ந்த உணர்ச்சிக் கூறுகள். heart-to-heart a. மனந்திறந்த, ஒளிவுமறைவற்ற, உண்மை வாய்ந்த, நெருங்கிய பழக்கமுடைய, நெருங்கிப் பழகும் பண்புடைய. heart-urchin n. (வில.) இருதயவடிவுள்ள கடல்விலங்கு வகை. heart-whole a. முழு மனமார்ந்த, பிற ஈடுபாடற்ற, உள்ளார்ந்த, கபடமற்ற, கலக்கமற்ற, முழு ஈடுபாடுடைய. heart-wood n. மரக்காழ், மர வைரம். heartache n. மனநோய், கடுந்துயர். heartbreak n. அழிதுயர். heartburn n. நெஞ்சரிவு, செரிமானக் குறைவினால் ஏற்படும் நெஞ்சு எரிச்சல். heartburning n. மனநிறைவின்மை, ஓயா அலப்பு, பொறாமை, மனப்புழுக்கம். hearten v. ஊக்கப்படுத்து, கிளர்ச்சியூட்டு, எழுச்சிகொள். hearth n. அடுப்படி, அடுப்பங்கரை, அடுப்பின் அடித்தளம், அடுக்களை, சமையற்கட்டு, குடும்பம், குடும்ப வீடு, குடும்பச் சூழல், உலைக்களத்தில் தாழ்பகுதி, கணப்படுப்பு, கணப்பறை. hearth-brush n. அடுப்புக்கூட்டும் விளக்குமாறு. hearth-money, hearth-penny, hearth-tax n. குடும்ப வீட்டின் மீதுள்ள வரி. hearthrug n. கணப்பு விரிப்பு. hearthstone n. கணப்பு அடுப்பாகப் பயன்படும் கல். heartily adv. மனமார, நல்லெண்ணத்துடன், முழு மனத்துடன், மனமுவந்து, மனத் திட்பத்துடன், பசிச்சுவையுடன், வயிறார, பசிதீர. heartless a. உணர்ச்சியற்ற, இரக்கமற்ற, வீரமற்ற, மனச்சான்றின் உறுத்தலுக்கு இடமற்ற வகையில் காழ்ப்புடைய. heartlet n. சிறு இருதயம். hearts-ease n. மலர்ச்செடி வகை. heartsome a. எழுச்சி ஊட்டுகிற, மகிழ்ச்சி விளைவிக்கிற. hearty n. மாலுமிகளை விளிக்கும் சொல், பல்கலைக்கழக வழக்கில் உடற்பயிற்சி விளையாட்டாளர், (பெ.) உள்ளார்ந்த, உளங்கனிந்த, ஊக்கமுள்ள, தீவிரமான, ஏராளமான, வளம் நிறைந்த. heat n. சூடு, பொருள்களின் உயர் வெப்பநிலை, வெப்பம், வானிலையின் கொதிப்பு, பொறுக்கமுடியா வெப்பம், வெப்ப உணர்ச்சி, உடல் வெப்பு, வெக்கை, புழுக்கம், மிகு வெப்ப நிலை, வெயிலின் உச்சநிலை, வெப்பமிக்க வேளை, வெப்பார்ந்த வானிலை, தோலின் செந்நிறம், வியர்க்குறு, கடுங்காரச்சுவை, எரிப்பு, உணர்ச்சியின் உச்சநிலை, உணர்ச்சி வேகம், எழுச்சி, சீற்றம், வெகுளி, பரபரப்பு, விறுவிறுப்பு, தீவிர கட்டம், வேகம், விரைவு, சிற்றின்ப வேகம், விலங்குப்பெடையின் வேட்கைப் பருவம், விளையாட்டுக்களில் ஒரு தடவை ஆட்டம், (வி.) சூடாக்கு, குருதிக் கொதிப்பூட்டு, உணர்ச்சி வேகம் உண்டுபண்ணு, சினமூட்டு, சூடாகு. heat-apoplexy n. கடுவெயில் அதிர்ச்சி. heat-spot n. வேனிற் கொப்புளம், வெப்பநிலை அறியும் தோற்பகுதி. heat-stroke n. கடு வெப்பத்தினால் ஏற்படும் மயக்க நோய். heat-wave n. அனற் காற்று, வளி மண்டலத்திலுள்ள கடு வெப்பக் காற்று நிலை. heater n. சூடேற்றுபவர், சூடுட்டுங் கருவி, அறையை அல்லது கட்டிடத்தை வெப்பமாக்கும் அமைவு, சலவைத் துணி தேய்க்கும் பெட்டியைச் சூடாக்குங் கருவி. heath n. கரம்பு நிலம், புதர்க்காடு, புதரடைந்த சமவெளி, புதர்ச்செடி வகையின் பெயர். heath-bell n. புதர்ச்செடியின் மலர். heath-berry n. கரம்பு நிலங்களில் காணப்படும் புதர்ச்செடிகளில் உள்ள கொட்டைக் கனிவகை. heath-cock n. கறுப்புக் காட்டுச் சேவல். heathen n. புறச் சமயத்தினர், கிறித்தவரோ யூதரோ இஸ்லாமியரோ அல்லாத பிற சமயத்தார், மத நம்பிக்கையற்றவர், சமயம் பற்றிய அக்கறையற்றவர், மெய்விளக்கம் பெறாதவர், (பெ.) புறச் சமயத்தைச் சார்ந்த, மெய்விளக்கம் பெறாத, மத நம்பிக்கையற்ற, சமயப் பற்றற்ற. heathendom, heatheness, heathenism, heathenry, புறச் சமயத்தினர் மத அமைப்பு, சமய நம்பிக்கை இல்லாமை, புறச்சமயத்தைச் சேர்ந்த பண்பு, காட்டு மிராண்டித்தன்மை, புறச்சமயம் நிலவியுள்ள உலகப் பகுதிகள். heather n. குட்டையான புதர்ச்செடி வகை. heather-ale n. ஸ்காத்லாந்து நாட்டில் புதர்ச்செடி வகையின் மலர்களினின்று இறக்கப்பட்ட பேர்போன மதுவகை. heather-bell n. குட்டையான புதர்ச்செடியின் மலர் வகை. heather-mixture n. புதர்ச்செடியின் பல்வண்ண மலர்களைப் போன்று பல்வண்ணங்களைக் கொண்ட துணிவகை, (பெ.) புதர்ச்செடி மலரின் பல்வண்ணங்களைக்கொண்ட. heathy a. புதர்ச்செடிகள் நிறைந்துள்ள. heats n. pl. விளையாட்டுப்போட்டிப் பந்தய முடிவாட்டத்தில் பங்கு கொள்பவர்களை முடிவு செய்யும் துணைப்பந்தய ஆட்டங்கள். heavier-than-air a. வானுர்திகளில் காற்றைவிட எடை குறைந்த வளிப்பையினால் உயர்ந்தியங்காத. heavy-hearted a. மனத்துயரால் வாடுகிற. heavy-weight n. மட்டமான அளவுக்கு மேற்பட்ட கனமுடைய பொருள், மட்டளவு மீறிய கனமுடையவர், கேளிக்கைகளில் கனமிக்க வகுப்பினர், குத்துச்சண்டையில் தொழில் துறையாளரிடையே 1ஹ்5 கல் எடைக்கும் விருப்பத்துறையாளரிடையே 1ஹ்க்ஷ் கல் எடைக்கும் மேற்பட்ட கனமுடையவர். hebetate v. உணர்ச்சி மழுங்கலாக்கு, உணர்ச்சி மழுங்கலாகு. hebetude n. மடமை. Hebraist n. எபிரேய மொழிப்புலவர், எபிரேய சமயப்பற்றுடையார், யூதர் கருத்துக்களை மேற்கொள்பவர். Hebraistic, Hebraistical a. யூதரைச் சார்ந்த, யூதரைப் போன்ற, எபிரேய மொழி சார்ந்த, எபிரேய மொழி போன்ற. hecatomb n. பண்டைக் கிரேக்கரிடையே பெரும் பொதுப்பலியாட்டு, நுறு எருதுகளைப் பலியிடும் பெரும்பலி, படுகொலைத் தொகுதி. hectare n. 2.4ஹ்1 ஏக்கர் கொண்ட பதின்மானமுறை நிலப்பரப்பு அளவை. hectic n. எலும்புருக்கிக் காய்ச்சல், உளமாந்தை', எலும்புருக்கி நோயாளி முகஞ்சிவந்த நிலை, (பெ.) எலும்புருக்கிக் காய்ச்சல் உள்ள, எலும்புருக்கி நோய்க்கு ஆட்பட்ட, நோய் நிலையால் முகஞ்சிவந்த. hectogram, hectogramme n. நுறு கிராம், 3.52ஹ் அவுன்சு கொண்ட எடை அளவை. hectograph n. கைப்பிடி பெருக்கி, கையெழுத்துப்படி எடுக்கும் கருவி, (வி.) கைப்பிடி பெருக்கியினால் படிகள் எடு. hectoliter, hectolitre n. நுறு லிட்டர் கொண்ட பதின்மான முகத்தலளவை. hectometer, hectometre n. நுறு மீட்டர், 32க்ஷ்.0க்ஷ்ஹீ அடி கொண்ட பதின்மான நீட்டலளவை. hector n. தற்புகழ்ச்சியாளர், வீம்பு பேசுபவர், எளியவரைக் கொடுமை செய்பவர், கொடுமைக்காரர், (வி.) மெலியாரைக் கொடுமை செய், வீறாப்பு பேசு. hedge-priest n. தாழ்நிலையுடைய கல்லாச் சமயகுரு. hefty a. வலிமை வாய்ந்த, திண்ணிய. height n. உயரம், உயர்வு, உயர்த்தின் அளவு, தலைக்கு மேலுள்ள தொலை, மேல்நோக்கிய தொலை, மீகோணம், உயர்ந்த இடம், உயரத்திலிருக்கும் பொருள், குன்று, மேடு, ஏற்றம், மேல் நோக்கிய சரிவு, உச்சி, உச்சநிலை, உச்ச அளவு, உயர்சிறப்பு, உயர்தகுதி, மேம்பாடு. heighten v. உயர்வாகு, மிகைப்படுத்து. Helianthus n. சூரிய காந்தியை உட்படுத்திய நெஞ்சிப் பேரினம். helicopter n. செங்குத்தாக மேலெழுப்பி இறங்கவல்ல திருகு வானுர்தி. heliocentric a. கதிரவன் மண்டல மையத்திலிருந்து காணும் நிலைப்பட்ட, கதிரவனையே மையமாகக் கொண்ட. heliolithic a. பரிதிக்கல் பண்பாடு சார்ந்த, கதிரவன் வழிபாடும் வழிபாட்டுப் பெருங்கல்லும் இடம்பெறும் நாகரிகப் படிக்குரிய. heliometer n. குறுக்கைமானி, கதிர்மண்டல விட்டத்தையோ விண்மீன்களிடைத் தொலையையோ அளக்கும் கருவி. heliotherapy n. கதிர் மருத்துவமுறை, கதிரொளிப்படிவு மூலம் நோய் குணப்படுத்தும் மருத்துமுறை. heliotrope n. மணமிக்க கருஞ்சிவப்பு மலர்களையுடைய செடிவகை, கருஞ்சிவப்பு மலர்வகையின் மணம், குருதிநிற மணிக்கல் வகை. heliotropic a. (தாவ.) ஒளி நோக்கிய சாய்வுத்தொடர்பான, ஒளிநோக்கிச் சாய்கிற. heliotype n. பசை ஒளிப்படம், ஒளிபடியும் பசைபூசிய தகட்டினின்று கிடைக்கும் படம். hell-cat n. குதிரி, அடங்காப்பிடாரி. Hellenist n. கிரேக்க மொழி வழங்கும் கிரேக்கரல்லாதவர், கிரேக்கமொழி வல்லுநர், கிரேக்கமொழியும் வழியும் பின்பற்றிய யூதர். Hellenistic, Hellenistical a. கிரேக்கரைச் சார்ந்த, அலெக்ஸாண்டர் காலத்துக்குப்பின் ஏற்பட்ட அயற்கலப்பு மிகுந்த நிலையுடைய கிரேக்க இனமொழிப் பண்பாடுகளுக்குரிய. helmet n. தலைக்கவசம், போர்வீரர் கவசத் தலைப்பகுதி, தீயணைப்புப் படைவீரர் தலைகாப்புக் கவிகை, வேனிற் காப்பான அழுத்தத் தோல்தொப்பி, நெட்டிக்காப்பிட்ட வேனிற் பருவத் தொப்பி, வடிகல முகடு, கிளிஞ்சல் வகையின் சிப்பி, (தாவ.) மலர் வகைகளிற் புறவிதழின் வளைந்த மேன்முகடு. helminth n. குடற் புழு. helminthiasis n. குடற்புழுவினால் ஏற்படும் நோய். helminthoid a. குடற்புழு போன்ற உருவுடைய. helminthology n. ஒட்டுயிரிகளான குடற்புழு பற்றிய ஆய்வுநுல். helot n. ஸ்பார்ட்டா என்ற பண்டைக் கிரேக்க நகரிலுள்ள அடிமை வகுப்பினருள் ஒருவர், அடிமை வகுப்பினர், உரிமையற்றவர். helotry n. அடிமைகளின் தொகுதி, அடிமை வகுப்பினர் குழு. helpmate, helpmeet வாழ்க்கைத்துணை, பக்கத்துணைவர். helter-skelter n. சீர்க்குலைவு, தாறுமாறான நிலை, (பெ.) தாறுமாறான, குழப்பமுற்ற, (வினையடை) தாறுமாறாக, அவசர அவசரமாக, முற்றிலும் குழப்பமுற்று. Helvetian n. ஸ்விட்ஸர்லாந்து நாட்டவர், (பெ.) ஸ்விட்ஸர்லாந்து நாட்டுக்குரிய. hem-stitch n. விளிம்பு மடிப்புத் தையல். hemimetabola n. pl. (வில.) முழு அளவில் மெய்யுருமாற்றம் பெறாத பூச்சிகள். hemistich n. செய்யுட் பாதியடி. hen-hearted a. கோழையான, மனவுரமற்ற, அற்பத்தனம் வாய்ந்த. henceforth, henceforward adv. இச்சமயமுதல், இது முதற்கொண்டு. henotheism n. தலைக்கடவுட் கோட்பாடு, பிற தெய்வங்களை விலக்காது ஒரு முழுமுதற் கடவுளை நம்பும் கோட்பாடு. hepatic n. செடி வகை, கல்லீரலுக்கு நலஞ்செய்யும் மருந்து வகை, (பெ.) கல்லீரலுக்குரிய, கல்லீரலுக்கு நலஞ்செய்கிற, கல்லீரல் நிறமுடைய. hepatitis n. கல்லீரல் அழற்சி. hepatization n. நுரையீரல் முதலிய பகுதிகள் கல்லீரல் போன்ற பொருளாக இறுகிவிடும் நோய்வகை. hepatize v. நுரையீரல் போன்றவற்றைக் கல்லீரல் போன்ற பொருளாக்கு. hepatogenous a. கல்லீரலில் தோன்றுகிற. Hepplewhite n. தட்டுமுட்டுப்பொருள்களுக்குரிய வேலைப்பாட்டுப் பாணிவகையின் பெயர். hepta-hedron n. எழுமுகப் பிழம்புரு, ஏழு முகப்புத் தளங்களையுடைய பிழம்பு வடிவம். heptachord n. ஏழ்நரம்பு வீணை, கிரேக்கரிடை ஏழ்சுர வரிசை. heptad n. ஏழன்தொகுதி. heptaglot n. ஏழு மொழிகளில் வெளியிடப்பட்ட புத்தகம், (பெ.) ஏழு மொழிகளுக்குரிய. heptagon n. எழுகோணக் கட்டம். heptagonal a. எழுகோணமுடைய, எழுகோணக் கட்டமான. heptarchy n. எழுவர் ஆட்சி, (வர.) பண்டை ஆங்கிலோ-சாக்ஸனியரின் ஏழரசுத் தொகுதி. heptasyllabic a. ஏழசையுடைய. heptateuch n. விவிலிய ஏட்டின் முதலேழு பிரிவுகளின் தொகுதி. heralist n. பூண்டுகள் பற்றிய அறிவுத் திறமுடையவர், முற்காலத் தாவர இயல் எழுத்தாளர், மருந்துப்பூண்டு விற்பனையாளர். herorist n. செடியினை ஆய்வாளர், செடியினங்களைச் சேகரித்துத் தொகுப்பவர், செடியினங்களைத் தொகுத்து விற்பவர், செடியினங்களைத் திரட்டி மருந்தாக வழங்குபவர், தொடக்கக்காலத் தாவர இயலார். hexastyle n. அறுகால் வாயில்முகப்பு, (பெ.) ஆறு கம்பங்களை உடைய. hexateuch n. விவிலியமறையில் முதலாறு பிரிவுகளின் தொகுதி. Hi-tech industries உயர் - தொழில்நுட்பத் தொழிலகம் (தொழில் நுட்பம்) hiatus n. பிளவு, இடைவாய், முறிவு, சிறுகோளாறு, வாதத்தொடர்பில் இடைக்குறை, இருவேறிசைகளுக்குரிய இரண்டு உயிரொலிகளுக்கிடையே ஏற்படும் பிளவு. hibernater v. விலங்குகள் வகையில் குளிர்கால முழுவதும் செறிதுயல் கொள்ளு, ஆட்கள் வகையில் மிதமண்டலத்தில் ஓய்வு கொள், செயலற்றிரு. hic jacet n. (ல.) இவ்விடத்து உறைகிறார்' என்னும் கல்லறை வாசகம். hide-out n. பதுங்கிடம். hieratic a. சமயகுருமாருக்குரிய, சமயகுருமாரால் வழங்கப்பட்ட. hierolatry n. புனிதர் வழிபாடு. hierophant n. பண்டைக்கிரேக்கரிடையே திருநிலை வெளிப்படுத்தும் புரோகிதர், திருநிலைத் தீக்கை செய்பவர், திருநிலைமறை மெய்ம்மைகளை விளக்குபவர், தேசிகர். high-faluting n. பகட்டாரவாரப் பேச்சு, (பெ.) பகட்டாரவாரப் பேச்சுப் பேசுகிற. high-hat n. வீறாப்புடையவர், மட்டுமீறிய தற்பெருமையுடன் நடப்பவர், (வி.) வீறாப்புக்காட்டு, தற்பெருமை மேற்கொள், வீறாப்புடன் ஏளனமாக நடத்து. high-pitched a. ஒலிவகையில் உயர்வித் தொனியுடைய, மேடு முதலியவை வகையில் செங்குத்தான, உயாபண்பாண்மையுடைய. high-spirited a. வீரமுள்ள, பேராண்மைமிக்க. high-stepper n. காலை உயரத்தூக்கி நடக்கும் குதிரை, வீறார்ந்த தோற்றமுடையவர், நாகரிகப் பகட்டாளர். high-strung a. ஊக்கமிக்க, துடிப்புமிக்க, கூருணர்ச்சித் திறம்வாய்ந்த, எளிதில் கோபம் கொள்ளத்தக்க. high-water mark n. நீரின் உச்ச எழுச்சித்தள அளவு, உச்ச அளவு எல்லை. highlight n. முனைப்பான பகுதி, சிறப்புக்கூறு, (வி.) முனைப்பான ஒளியால் விளக்கமாகத் தெரியும்படி செய். highlights n. pl. மிகு ஒளிபடும் இடங்கள், நன்கு புலப்படும் பகுதிகள். hight a. (செய்.) எனப் பெயரிய. hilarity n. உவகை, கழிமகிழ்வு. Hilary, Hilary term n. இங்கிலாந்துநாட்டு நீதிமன்ற ஆண்டிருக்கைக் காலத்தொடக்கம், பல்கலைக்கழக ஆண்டிருக்கைத் தொடக்கம். hilt n. வாள் முதலிய கருவிகளின் கைப்பிடி, (வி.) கைப்பிடி அமை. hindmost a. பின்கோடியிலுள்ள, மிகத்தொலைவிலுள்ள. hindsight n. துப்பாக்கியில் பின்காட்சி, பின்னறிவு, வந்தபின் காப்பு. Hindustani n. இந்துஸ்தானத்தவர், இந்துஸ்தானி மொழி, (பெ.) இந்துஸ்தானத்துக்குரிய. hint n. சிறு நினைவுக்குறிப்பு, நினைவூட்டுச் செய்தி, பயில், சாடைக்குறிப்பு, (வி.) மெல்ல நினைவூட்டு, சிறு நினைவுக் குறிப்பளி, பயில்காட்டு, சாடையாகக் குறி. hinterland n. (செர்.) ஆற்றின் கரைகளுக்குப் பின்னணியிலுள்ள மண்டலம், கடற்கரைக்குப் பின்புறமுள்ள நாட்டுப்பகுதி. hip-joint n. இடுப்புச்சந்து. hipbath n. குந்து தொட்டிக்குளிப்பு. hippocentaur n. குதிரை உடலுடன் மனித உடற்பகுதியும் கையுமுடைய உருவம். hippopotamus n. நீர்யானை. hirsute a. மயிரடர்ந்த, பரட்டையான, பம்பையான, கோதாத. hist int. கவனி என்ற கவன ஈர்ப்புக் குறிப்பு, சும்மா இரு என்ற பேச்சடக்குக் குறிப்பு, நாய் தூண்டும் குறிப்பு. histogenesis n. உயிர்த்தசைமங்களின் உருவாக்கம், உயிர்த்தசைக் கூறுகளின் உருத்திரிபு. histogenetic a. உயிர்த்தசைமங்களின் உரு ஆக்கத்திரிபு சார்ந்த. histology n. உயிர்த்தசைமங்கள் பற்றிய ஆய்வுநுல். historian n. வரலாற்றாசிரியர். historiated a. எழுத்துக்கள் வகையில் ஆள் அல்லது விலங்கு உருவத்தால் ஒப்பனை செய்யப்பட்ட. historic a. வரலாற்றுப் புகழ்பெற்ற. historical a. வரலாற்றுச் சார்பான, வரலாற்றுக்குரிய, வரலாற்றுத் தொடர்புடைய, வரலாற்றிலிருந்து பெறப்பட்ட, வரலாற்றைப் பின்பற்றிய, வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட, வரலாற்றுப் பின்னணியுடைய, வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த, வரலாற்று வாய்மையுடைய, பழங்கதை சாராத, கற்பனையல்லாத, மெய்யான, வரலாற்றுத் துறைக்குரிய, சென்ற காலத்துக்குரிய, தற்காலஞ் சாராத. historicity n. வரலாற்று வாய்மை, மெய்ம்மைப்பாடு. historigraphic, historiographical a. வரலாற்று எழுத்தாண்மை சார்ந்த. historiographer n. வரலாற்றெழுத்தாளர், அரசவைப் பணித்துறை சார்ந்த வரலாற்று எழுத்தாளர். historiography n. வரலாற்று எழுத்தாண்மை. history n. வரலாறு, சென்றகால அறிவு, இனவளர்ச்சி பற்றிய ஆய்வு, மனித உலக வாழ்வு நிகழ்ச்சிகளின் தொடர் கோவை, நிகழ்ச்சிக்கோவை, பொதுமுறை நிகழ்ச்சிகளின் முறைப்பட்ட தொடர்ப் பதிவீடு, இறந்தகாலச் சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுதி, நாட்டு நிகழ்ச்சித் தொடர்பு விளக்கம், மனித வாழ்க்கை நிகழ்ச்சித் தொடர்பு, பொருள் தோற்ற வளர்ச்சித் திரிபு விளக்கம், இயல்கலைத் தோற்ற வளர்ச்சி விளக்கம், இயற்கை நிகழ்ச்சிகளின் முறையான விளக்கம். histrion n. நாடகமேடை ஆட்டக்காரர். histrionic a. நடிப்புச் சார்ந்த, நடிகர்களுக்குரிய, நாடகப்பாங்கான. histrionics n. pl. நாடகமேடைக்கலை, நடிப்புத்திறம், மேடைக்குரிய பண்பு, நாடகப்பண்புவாய்ந்த செயற்கையான நடை, புறவேடம், பகட்டு. histrionism, histrionicism n. நடிப்பு, செயற்கை நடை. hit n. அடி, தட்டு, வெட்டு, குறிதவறாத எறி, வெற்றிகரமான இலக்குப் பிழையாத வேட்டு, வேட்டு எறிதல், அடித்தல், வேட்டு எறிவாய்ப்பு, வசைத் தாக்குதல், வாய்ப்பு, நல்வாய்ப்பு, குருட்டடி, யோகம், வாய்ப்பான திடீர்த்துணுக்கு, உணர்ச்சிக் கௌவுகை, விருப்பம் கப்புதல், கெலிப்பு, (வி.) அடி, வெட்டு, தட்டு, குத்து, இலக்குவைத்தெய், குறிநோக்கி வேட்டுச் செலுத்து, குறியில்படும்படி செய், இலக்கு நிறைவேறப் பெறு, தாக்குதலுக்கு ஆளாக்கு, சென்று மோது, மோதி வீழ்த்தி, காயப்படுத்து, புண்படுத்து, திடீர் உணர்வுகொளுத்து, சேதத்துக்குள்ளாக்கு, வசைத்தாக்குதல் செய், மீதுபடு, சென்றெட்டு, சென்றடை, நேர்வெற்றிபெறு, வாய்ப்பாகப்பெறு. வாய்ப்பாயமை, தகுதியாயிரு, பொருந்துறு, திடீரென்று நினை, சுற்றி வளையாது நேரடியாகக் கருத்தில் தோன்றப்பெறு. hitch n. வெட்டியிழுப்பு, திடீர் உந்தல், குலுக்கு, திடீர் அதிர்ச்சி, இடைத்தடங்கல், இடக்கு, சிக்கல், முட்டுப்பாடு, தடங்கல் காரணமாக இடைத்தாமதம், வண்டியுடன் வண்டி இடைக்கொளுவுதல், இடையிணைப்பு, நடப்பவர்க்கு இடையே ஊர்திகளில் அளிக்கப்படும் ஏற்றுதவி, (கப்.) முடிச்சுக் கண்ணிவகை, (வி.) வெட்டி வெட்டிச் செல், வெட்டியிழுத்துக் கொண்டு செல், தட்டுத் தடங்கலுறு, பட்டுத்தடைபடு, முடிச்சிட்டு இணை, கொளுவி இணை, இணைக்கப்பெற்றிரு, இடையே ஊர்தியிலேறிச் செல்லும் உதவிபெறு, வெட்டித்தாக்கு, மூட்டை முடிச்சுக்களுடன் நட, கதையில் இடைச்செருகு. hitch-hike n. இடையிடையே ஊர்தி ஏற்ற உதவியுடன் நடத்தும் நடைப்பயணம், (வி.) இடையிடையே ஊர்தி ஏற்ற உதவியுடன் நடந்து பயணம் செய். hither a. இப்பக்கமுள்ள, அருகிலுள்ள, இரண்டில் மிகுதி அணிமையிலுள்ள, (வினையடை) இவ்விடத்துக்கு, இவ்விடம் நோக்கி. hitherto adv. இந்நேரம் வரை. hitherward, hitherwards adv. இப்பக்கம் நோக்கி. Hitlerism n. செர்மானிய வல்லாளர் அடால்ப் ஹிட்லர் பின்பற்றிய கோட்பாடுகளின் தொகுதி. hliotropism n. தாவங்களின் ஒளி நோக்கிய சாய்வு. hoarfrost n. உறைபனி வெண்திரை. hoarstone n. மிக்க பழமை வாய்ந்த எல்லைக்கல். hobble skirt n. காலடியருகே மிகவும் குறுகலான பாவாடை. Hock-tide n. (வர.) ஆங்கிலநாட்டுப் பழங்கால விழா. hodometer n. சகடத்தொலைவுமானி. hogget n. ஒருவயதான ஆடு. hoist n. உயர்த்துதல், மேலேதள்ளுதல், பாய்மர உயரம், பாய்மரத்தை அடுத்த கொடியின் பகுதி, பாரந்தூக்கி, ஏற்றுமாடம், (வி.) உயரத்தூக்கு, கொடியை உயர்த்து, உயரப் பறக்கவிடு, கயிறு கம்பிகள் மூலம் மேலெழுப்பு, கயிறுகம்பிகள் மூலம் தூக்கு, தூக்கி எறி. hoist a. தூக்கி எறியப்பட்ட. hoity-toity a. ஆரவாரக் கூச்சலிடுகிற, வீறாப்பான, முகங்கோணிக்கொண்டிருக்கிற, கத்திக்கொண்டு பிணங்குகிற, மட்டுமீறிய தற்பெருமை கண்டு வியப்பும் கண்டனமும் தெரிவிக்கும் குறிப்பு. holcocrystalline a. கண்ணாடியின்றி முழுவதும் படிகத்தினாலான அமைப்புக் கொண்ட. hold to account. பொறுப்புடையவராக்கு. Holiday resort விடுமுறை ஓய்வகம் hollow-hearted a. வாய்மையற்ற மனமுடைய, வஞ்சகமான. holocuast n. முழு அவியூட்டுப்பலி, பெருங்களப்பலி, நுழிலாட்டு, படுகொலை, பாடழிவு. holometabola n. pl. (வில.) முழு உருமாற்றமடையும் பூச்சி வகைகள். holometabolism n. (வில.) பூச்சி வகையில் முழு உருமாற்றத்துடன் கூடிய வளர்ச்சி. holophote n. கலங்கரைவிளக்கத்தில் ஒளிக்கூறு முழுமையையும் வேண்டிய திசையில் வீசுவிப்பதற்கான அமைவு. holophytic a. பசுஞ்செடியினைப் போலவே ஊட்ட உணவைப் பெறுகிற. holothurian n. (உயி.) புழுவியல்புடைய வட்டவடிவான கடல்வாழ் உயிர்ப் பேரினம், (பெ.) கடல்வாழ் உயிர்ப் பேரினம் சார்ந்த. holster n. சேணத்தில் அரைக்கச்சில் செருகப்படும் கைத் துப்பாக்கிக்கான தோலுறை. holt -1 n. காடு, புதர்க்காடு, சோலைமலை, பழத்தோட்டம். holt -2 n. விலங்கு பதுங்கிடம், நீர்நாயின் வளை. holystone n. கப்பல் தளங்களைத் தேய்த்துத் துப்புரவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெத்தென்ற மணற்கல் வகை, (வி.) மெத்தென்ற மணற்கல் வகையினால் தேய்த்துத் துப்புரவாக்கு. Homburg, homburg-hat n. குறுகிய விளிம்பும் உச்சியில் குழிவும் உடைய மெத்தென்ற அழுத்துக் கம்பளத் துணித்தொப்பி. home-town n. பிறந்தக நகரம். homecraft n. வீட்டுக் கலைத்தொழில் துறை, வீட்டில் செய்யப்படும் தொழில்களின் தொகுதி, வீட்டுவாழ்க்கைத் தொடர்பான தொழில் தொகுதி. homefelt a. மனத்தில் உறைந்த, மனத்தின் ஆழ் உணர்வுக்குரிய. homestead n. வளாகம், வீடுசூழ்பண்ணை, பண்ணை. homestretch n. பந்தய வெளியின் கடைசிக்கட்டப் பரப்பு. hometruth n. உள்ளத்தில் தைக்கும் மறுக்கவொண்ணு உண்மை. homiletic, homiletical a. செவியறிவுநுலினைச் சார்ந்த. homiletics n. pl. செவியறிவு நுல் பற்றிய ஆய்வுநுல் துறை. homoblastic a. (தாவ.) ஒத்த உயிர்மங்களினின்றும் பிறந்த, நேர்முக வளர்ச்சியைக் காட்டுகிற. homocentric a. ஒரே மையமுடைய, ஒரே புள்ளியிலிருந்து பெறப்படுகிற. homoeopath n. இனமுறை மருத்துவம் செய்பவர். homoeopathist n. இனமுறை மருத்துவத்தில் நம்பிக் கையுடையவர், இணக்கமருந்தீட்டு முறையில் மருத்துவம் செய்பவர். homoeopathy n. (மரு.) இனமுறை மருத்துவம், நோய்க் கூற்றுப் பெருக்கத்தால் நோய் நீக்கும் முறை. homoestasis n. சமநிலை பேணல். homogenetic, homogenetical a. பொதுவான மரபு முதல் உடைய. homogenity n. ஓரினத்தன்மை, ஒரே இனமாக அமைதல், ஓரின அமைதி, ஒரே இயல்பினதாக இருத்தல், (கண.) ஒரே சீரான அமைப்பு, உறுப்புகள் முழுதும் ஒத்திருக்கும் நிலை. homologate v. ஏற்றுக்கொள், உறுதிப்படுத்து, சேர்த்துக் கொள். homoplastic a. ஒத்த கட்டமைவுடைய. Homoptera n. pl. (வில.) சிறகுகள் ஒரே மாதிரியாக உயை பூச்சிகளின் இனம். homosexualist n. தன்னொத்த பாலினத்தவர் மாட்டே பாலின மனச்சார்புடையவர். homotaxis n. (மண்.) இடத்துக்கிடம் மண்ணியலூழிப் புதைபடிவங்களும் படியடுக்குகளும் காலநீட்டிப்பில் ஒவ்வாவிடினும் முறைவமைப்பில் ஒத்திருத்தல். homothallic a. (தாவ.) காளான் வகையில் ஒத்தவகை இழைவட்டுக் குடையுடைய. homothermic, homothermous a. (உட., வில.) ஒரே குருதி வெப்புப் பதமுடைய, வெம்பதக் குருதியுடைய. homotonic, homotonous a. ஒத்த குரல் தொனியுடைய. homotypal a. பொதுநிலை அமைப்புடன் ஒத்தியல்கிற. homotype n. (உயி.) உடனொத்த அமைப்புடைய உறுப்பு, உடனொத்த இயல்புடைய பகுதி. homozygote n. (உயி.) ஒத்த பாலணுக்களின் இணைவு. honest a. நேர்மையான, சொல்லிலும் செயலிலும் உண்மையான, பொய்யற்ற, ஏமாற்றாத, கரவற்ற, கபடமற்ற, ஆதாயம் முதலியவை வகையில் அறநெறியில் ஈட்டப்பெற்ற, பொருள்கள் வகையில் கலப்படமற்ற, அப்பட்டமான. honestly adv. நேர்மையாக, உண்மையாக. honesty n. நேர்மை, உண்மை, வாய்மை, கண்ணியம், கபடமின்மை, பளிங்கனைய விதை உறைகளையும் ஊதா மலர்களையும் உடைய செடிவகை. honey-eater n. பெரிய ஆஸ்திரேலிய இனப் பறவை வகை. honey-mouthed a. இனிக்கும் பேச்சுடைய, இன்சொல் உடைய. honey-stone n. பழுப்பு நிலக்கரியுடன் காணப்படும் மிக மென்மையான மஞ்சள்நிறக் கனிப்பொருள் வகை. honey-sweet a. தேன்போல் இனிப்பான. honey-tongued a. இன்சொல்லுடைய, கவர்ச்சியாகப் பேசுகிற. honeycomb-moth n. இளந்தேனீக்களைக் கொல்லும் முட்டைப்புழுக்களை ஈனும் அந்துப்பூச்சி வகை. hoofprint n. குளம்புச்சுவடு. hoot n. கூ கூவொலி, கொட்டகையில் இகழ்ச்சிக் கூச்சல், வெறுப்பொலி, ஆந்தை அலறல், கொம்பூதல் ஒலி, உந்து கலக் குழலோசை, சிறிதளவு, (வி.) கூ கூஒலி செய், இகழ்ச்சிக் கூச்சலிட்டுத் தாக்கு, வெறுப்பொலி எழுப்பித் துரத்து, ஆந்தை வகையில் அலறு, உந்துகலக் குழல் ஊது, எச்சரிக்கைச் சங்கு ஊது, ஊர்தியின் நீராவி விசைக்குழல் ஊது, விசைக்குழல் ஊதிக்கொண்டு செல். hooter n. வெறுப்பொலி செய்பவர், தொழிற்சாலைச் சங்கு, நீராவி ஊதுகுழல். hop-bitters n. முசுக்கட்டையினச் செடிவகையின் கசப்புக் காய்களால் சுவையூட்டப்பெற்ற தேறல்வகை. hop-o-my-thumb n. குள்ளன். hop-pocket n. முசுக்கட்டையினச் செடிவகையின் பழங்களைப் போட்டு வைப்பதற்கான முரட்டுப் பை, முசுக்கட்டை இனச் செடிக்குரிய பழங்களில் ஏறத்தாழ 16க்ஷ் கல் எடை அளவு. hop-scotch n. சில்லு விளையாட்டு, நொண்டி விளையாட்டு. hop-tree n. முசுக்கட்டையினச் செடியின் பழங்களுக்குப் பதிலாகத் தேறற் சுவையூட்டப் பயன்படுத்தப்படும் கசப்புப் பழங்களைத் தரும் சிறு அமெரிக்க மரவகை. hoplite n. நிரம்பப் படைக்கலங்கள் தாங்கிய பண்டைக் கிரேக்கக் காலாட் படைவீரன். hoptrefoil n. மஞ்சள் நிற மணப்புல் வகை. Horatian a. ஹோரஸ் (கி.மு.65-க்ஷ்) என்ற லத்தீன் மொழிக் கவிஞரைச் சார்ந்த, ஹோரஸ் போன்ற, ஹோரஸின் கவிதை சார்ந்த, ஹோரஸின் கவிதை போன்ற. horizontal n. கிடைக்கோடு, கிடைநிலை, கிடைநிலையிலுள்ள பொருள், (பெ.) அடிவானம் சார்ந்த, அடிவானத்திலுள்ள, அடிவானத்துக்கு ஒருபோகு ஆன, செங்குத்துக் கோட்டிற்குச் செங்கோணத்திலுள்ள, மட்டமான, படுமட்டமான, கிடையான, இயந்திரங்கள் முதலியன வகையில் கிடைப்போக்கில் இயங்கும் உறுப்புகளையுடைய. horn-footed a. குளம்புகளையுடைய. horn-plate n. இருப்பூர்தி வண்டி இருசின் பாதுகாப்புச் சாதனம். horned-toad n. முள்ளுடைய அமெரிக்கப் பல்லி வகை, முதுகில் எலும்பினாலாய தோடு உடைய தென் அமெரிக்கத் தேரைவகை. hornet n. கடுமையாகக் கொட்டும் பெரிய குளவி வகை, மலைக்குளவி. hornist a. இசைக்கொம்பு ஊதுபவர். hornlet n. சிறு கொம்பு. hornstone n. மணல் சத்து நிறைந்துள்ள எளிதில் நொறுங்கத்தக்க பாறைவகை. horntail n. பளிங்கனைய நான்கு சிறகுகளையுடைய பூச்சி வகை. horologer, horlogist மணிப்பொறி செய்பவர். horopter n. கண்களின் குறிப்பிட்ட நிலையில் ஒன்றே ஒன்று ஆகக் காணப்படும் புள்ளிகளின் கூட்டுத்தொகுதி. horoscopist n. சோதிடன். horrent a. (செய்.) சிலிர்த்துக் கொண்டிருக்கிற, அடர்த்தியாக நிறைந்துள்ள. horripilation n. மயிர்ப்புடைப்பு, தசைச்சுரிப்புடன் கூடிய மயிர்க் கூச்செறிவு. horror-struck, horror-stricken a. அச்சத்தால் தாக்கப்பட்ட, அதிர்ச்சியூட்டப்பட்ட. hors de combat adv. (பிர.) போரிலிருந்து விடுபட்ட நிலையில், போரிடும் தகுதியற்று, ஏலாத நிலையில். horse-bot n. குதிரைகளின் உடலில் ஒட்டி அவற்றின்மீது முட்டையிடும் ஈ வகை. horse-breaker, horse-tamer n. குதிரைகளைப் பழக்குபவர், பளு இழுப்பதற்குக் குதிரைகளைப் பழக்குபவர், குதிரை மீது தோற்றமளிக்கும் ஆடலணங்கு. horse-chestnut n. வெண்மை அல்லது செங்கழுநீர் நிறமான பூங்கொத்துக்களும் கசந்த பழமும் தரும் பெரு மர வகை. horse-cloth n. குதிரையை மூடுவதற்கான துணி, குதிரைமீது போடப்படும் துணி. horse-foot n. அகன்ற மென்மையான, இலையுடைய செடிவகை, பெரிய வினோதமான கடல்வாழ் விலங்கு. horse-latitudes n. வடகிழக்குக் காற்று மண்டலத்தின் வடகோடியில் நீடமைதியுடைய இரு திட்டுக்களில் ஒன்று. horse-litter n. இரண்டு குதிரைகளுக்கு இடையே போடப்பட்டுள்ள வைக்கோற் படுக்கை, குதிரைகளுக்கான படுக்கை. horse-mastership n. குதிரை ஏற்ற வல்லாண்மை. horse-meat n. குதிரைத் தீவனம். horse-tail n. குதிரைவால், படைத்தலைவரின் வரிசைத் தரத்தைக் குறிக்கும் துருக்கியக் கொடிகளின் தொகுதி, குதிரை வால் போன்ற குறிமறையினச் செடிவகை. horsemint n. காட்டு நறுமணச் செடிவகை. hortative, hortatory அறிவு கொளுத்தும் தன்மையுடைய, அறிவுறுத்துகிற. horticulture n. தோட்டக்கலை, காய்-கனி-மலர் முதலியவற்றைப் பயிராக்கும் தோட்ட வேளாண்மை. horticulturist n. தோட்டக்கலை நிபுணர். hortus siccus n. (ல.) ஒழுங்குபடுத்தப்பட்ட உலர்ந்த பூண்டுகளின் தொகுதி. hose-net n. முழுநீளக் காலுறை போன்ற வடிவுள்ள வலை. hose-tops n. நெடு நீள் அடியற்ற காலுறைகள். hospitable a. வேளாண்மைப் பண்புடைய, விருந்தோம்புகிற, கொடுக்கிற, ஈகைப்பண்புயை. hospitage a. விருந்தினரிடமிருந்து எதிர்பார்க்கப்படவேண்டிய பண்பு. hospital n. மருத்துவமனை, காயமுற்றோர்களையும் நோயாளிகளையும் பேணும் மனை, அறநிலையம், அறமுறைக் கல்வி நிலையம், முற்கால வழிப்போக்கர் தங்குமனை, படைவீரத் துறவிகள் குழுவினர் தங்கு நிறுவனம். hospitaler n. உதவி செய்யும் பண்புள்ள சமயப் பிரிவின் உறுப்பாளர், லண்டன் நகர மருத்துவ மனைகளில் சமயக் குருக்கள் குழுவினர், 104க்ஷ்-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட படைவீரத் துறவிகள் குழு. hospitalism n. மருத்துவ மனைகளின் அமைப்புமுறை, மருத்துவமனை அமைப்பு முறையின் நலவழிக் குறைபாடுகள். hospitality n. விருந்தோம்பும் பண்பு, வேளாண்மைக் குணம். hospitalize v. மருத்துவமனையில் சேர், மருத்துவமனையில் கட்டுப்படுத்தி வை, மருத்துவமனைக்கு அனுப்பு. host -1 n. தொகுதி, பெருந்திரள், படை, கணம், பெருங்கூட்டம், மிகுந்த எண்ணிக்கையுடைய குழு. host -2 n. விருந்தளிப்பவர், ஓம்புநர், பிறரை ஆதரிப்பவர், குடியிருக்கும் இடத்துக்கு உடையவர், சத்திரம் வைத்திருப்பவர், (உயி.) ஒட்டுணி உயிர்களுக்கு இடமான விலங்கு, ஒட்டுணிக்கு ஆதாரமான செடி இனம். host -3 n. தெய்வத் திருவிருந்தில் இறைவனுக்காக நேர்ந்து விடப்பட்ட அப்பம். hostage n. பிணையாக நிறுத்தப்பட்டவர், பிணையாக நிறுத்தப்படும் நிலை. hostel n. மாணவர் இல்லம், மாணவர் போன்ற தனி வகுப்பினர் தங்கு விடுதி. hostelry n. வழிமனை, சாவடி, தங்கல்மனை. hostess n. விருந்தினரை உபசரிக்கும் பெண், விருந்தோம்பும் பண்புள்ளவன், தங்கல் மனைத் தலைவி, விடுதித் தலைவி. hostile a. எதிரியைச் சார்ந்த, எதிர்ப்புணர்ச்சியுள்ள, எதிர்க்கின்ற, போர் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ள, போர் நிகழ்ச்சிகள் சார்ந்த. hostilities n. pl. போர் நடவடிக்கைகள், போர் நிகழ்ச்சிகள், கருத்து முதலியவற்றில் எதிர்ப்பு. hostility n. பகைமை, எதிர்ப்பு, போர் நிலவரம். hot a. சூடான, மிக வெப்பமான, வெப்பம் உண்டுபண்ணுகிற, நெருப்பைப் போன்ற, புழுக்கமிக்க, உயர்வெப்பநிலை உயை, வெப்ப உணர்ச்சி தருகிற, சூடு ஊடு செல்லவிடுகிற, சுவை வகையில் சூடாகப் பரிமாறப்படுகிற, செய்தி வகையில் புத்தம் புதிரான, நிகழ்வணித்தான, கலை வகையில் அணிச் செறிவுடன் விரைசந்தமிக்க, விரைவான, அடுத்தடுத்துத் தொடர்கிற, போட்டி வகையில் வெல்லும் பெரு வாய்ப்புடைய, வெற்றி வாய்ப்பு மிகுதி உடையராகக் கருதப்படுகிற, வெகுளியுடைய, மனத்தைப் புண்படுத்துகிற, எழுச்சியூட்டுகிற, ஆர்வமிக்க, உணர்ச்சி வேகமிக்க, கொந்தளிப்பான, மூர்க்கமான, வல்லந்தனமான, சிற்றின்ப எழுச்சிமிக்க, கேடு விளைக்குமளவு மின்னாற்றல் ஊட்டப்பட்ட, இடர் நிறைந்த, தேடப்பட்ட பொருளுக்கு அண்மையிலுள்ள, உணர்ச்சிளைத் தூண்டத்தக்க, உணர்ச்சிளைத் தோற்றுவிக்கும் பகுதிகளையுடைய, அண்மையிலேயே திருட்டுத் தனமாகப் பெற்ற, விளையாட்டு நடவடிக்கைகளில் எதிர்ப்பக்கத்தினரால் தடுக்க முடியாத இயல்புடைய, (வி.) சூடாக்கு, வெதுவெதுப்பு ஊட்டு, (வினையடை) சூடாக, நெருக்கி, ஆர்வமாக, சீற்றத்துடன், எழுச்சியுடன். hot-air a. வெப்பக்காற்றைப் பயன்படுத்துகிற, தற்புகழ்ச்சியுள்ள, பயனில பேசுகின்ற, வீண்சொல்லாடுகின்ற. hot-and-hot a. சமைத்தவுடனே சூட்டோடு பரிமாற்றப்பட்ட. hot-blooded a. சூடான குருதியுடைய, சமநிலைக் குருதி வெப்பமுள்ள, மன எழுச்சிமிக்க, துணிந்து செயலாற்றுகிற, உணர்ச்சி மிகுந்த, எரிச்சலுட்டுகிற. hot-brained a. எளிதில் உணர்ச்சியூட்டப்படத்தக்க. hot-cockles n. கண்ணாம்பூச்சி ஆட்ட வகை, கண்பொத்திய நிலையில் குட்டியவர் யாரென ஊகித்துரைக்கும்படி விடப்படும் ஆட்டம். hot-dog n. சூடான காரச் சோமாரி வகை. hot-gospeller n. வலுவூட்டும் உணர்ச்சிமிக்க கிறித்தவ சமயச் சொற்பொழிவாளர். hot-mouthed a. குதிரை வகையில் அடங்காத, கடிவாள ஈர்ப்புப் பெறாத. hot-short a. இரும்பு வகையில் சூடானபோது எளிதில் நொறுங்கத்தக்க. hotbed n. விரைவளர்ச்சிச் சேமக்கலம், செடிகள் விரைவாக வளர்ச்சியுறும் படி, மக்கிப் புளித்த எருப்படுகையால் வெதுவெதுப்பாக்கப்பட்டுக் கண்ணாடியால் மூடப்பட்ட பாத்தி, விரை வளர்ச்சிக்குகந்த இடம். hotblast n. கடுவெப்பக்காற்று. hotbrain n. முரட்டுத்தனமானவர், முரட்டுப்பிடியுள்ளவர். hotchkiss n. இயந்திரத் துப்பாக்கி வகை. hotchpot, hotchpotch n. ஆட்டிறைச்சியும் காய்கறிகளும் கலந்த குழம்பு வகை, கூட்டுக்குறி, (சட்.) விருப்ப ஆவணம் எழுதாமல் இறக்கிற பெற்றோரின் சொத்துக்களை எல்லாம் சமபங்குகளாக்குவதற்காக எல்லாச் சொத்துக்களையும் ஒன்றாகச் சேர்த்தல், குழப்பம், தாறுமாறான குவியல். hotel n. வழித்தங்கல்மனை, வழிப்போக்கர் தங்குவதற்கான விடுதி, அருந்தகம், பணம்பெற்று உணவும் உறையுளும் அளிக்கும் நிறுவனம். Hotel உணவகம் hotelier n. உணவகம் வைத்து நடத்துபவர். hotfoot adv. மிகு விரைவாக, வேகமாக. hothead n. இறுமாப்பு பிடிமுரண்டுடையவர், மூர்க்கர், முரடர். hothouse n. சேமச்செடிப் பண்ணை வீடு, பருவந்தப்பியும் குளிர்மண்டலத்திலும் வளரும்படியாக வெப்பநிலையூட்டப்பட்ட நிறைகண்ணாடிக்க கட்டிடம், சூளையில் வைப்பதற்கு முன் பச்சை மட்கலங்கள் வைக்கப்படும் சூடான அறை. hotpot n. கொத்தி உருளைக்கிழங்கோடு சூட்டடுப்பிலிட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட இறைச்சியுள்ள மூடியிறுக்கமுடைய உண்கலம். hotpress n. துணி தாள் ஆகியவற்றின் மேற்பரப்பை வழவழப்பாக்கும்படி சூடான தகடுகளிடையே வைத்து அழுத்துவதற்குரிய கருவி, (வி.) வழவழப்பான மேற்பரப்பை உண்டுபண்ணுவதற்குச் சூடான தகடுகளிடையே அழுத்து. hotspur n. துடுக்கானவர், முன்பின் பாராதவர், ஆத்திரமுள்ளவர். hottempered a. முன்கோபமுள்ள. Hottentot n. மேய்ச்சல்தொழில் கொண்ட தென் ஆப்பிரிக்க நாடோடி இனத்தவர், நாகரிகப்படியில் தாழ்ந்தவர், அறிவு பண்பாட்டில் முதிர்நிலை பெறாதவர். hounds-tongue n. மயிரிழை போன்ற புற வளர்ச்சியுள்ள இலைகளும் நீல மலர்களும் கொண்ட செடிவகை. hourplate n. கடிகாரத்தின் முகப்புத் தகடு. house-agent n. வீட்டுத் தரகர், வீடு கொள்வினை விற்பனை வகையில் இடையீட்டாளர். house-boat n. தங்கி வாழ்வதற்கான வாய்ப்புக்கள் இணைக்கப்பட்ட படகு. house-bote n. வீடு சீர்திருத்த மரங்களைப் பயன்படுத்த வாடகைக்காரர் உரிமை. house-master n. பொதுப் பள்ளிக்கூடத்தோடு இணைந்த மாணவர் விடுதித் தலைவர். house-party n. நாட்டுபுற வீட்டில் தங்கியிருக்கும் விருந்தினர் குழு. house-steward n. பெரிய வீட்டுப் பொறுப்பைக் கவனிக்கும் மேற்பார்வையாளர். house-to-house a. வீட்டுக்கு வீடான, வீடுவீடாகச் சென்று ஆற்றப்படுகிற. house-top n. வீட்டுக்கூரை. housecraft n. வீட்டுவேலைத் திறமை, வீட்டு வேலைகளைச் சார்ந்த கைத்திறமை. housemate n. கூடக் குடியிருப்பவர். hovel-post n. தானியக் குவியலைத் தாங்கும் கம்பம். howbeit conj. எனினும், என்றாலும். All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wiktionary.org/w/index.php?oldid=1154632.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|