Revision 1319667 of "கவிஞர். பேராசிரியர். முனைவர். ஆதிரா முல்லை என்கிற ப. பானுமதி" on tawiktionaryவாழ்க்கைக் குறிப்பு: பேராசிரியர். முனைவர் ப. பானுமதி அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள விராலிமலையிலிருந்து நான்கு மைல் தூரத்தில் அமைந்துள்ள பூதகுடி என்னும் சிற்றூரில் பிறந்தவர். கல்வித்தகுதி இவர் தம் பள்ளிப் படிப்பை அன்றைய பெரியார் மாவட்டம் இன்றைய ஈரோடு மாவட்டத்தில் ஊஞ்சலூர் என்னும் சிற்றூரில் பயின்றார். பி. லிட்., எம்.ஏ., எம்.ஃபில். ஆகிய மூன்று பட்டங்களையும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையிலும் முனைவர் பட்டத்தை சென்னைப் பல்கலையின் பச்சையப்பன் கல்லூரியிலும் பெற்றுள்ளார். இவர் ‘குலோத்துங்கன் கவிதைகள்’ என்னும் தலைப்பில் தம் இளமுனைவர் பட்டத்தையும் திருஅருட்பிரகாச வள்ளலாரில் திருவருட்பாவின் அகப்பாடல்களில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். பணி தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகத் தமிழ்த்துறையில் பணியாற்றி வருகின்றார். எழுதி வெளியிட்டுள்ள நூல்கள் 1. ஆதிரா முல்லை என்னும் பெயரால் கவிஞராக அறியப்பட்டுள்ள இவர் ‘பட்டாம் பூச்சிகளின் இரவு’ என்னும் தலைப்பில் ஒரு கவிதை நூலை வெளியிட்டுள்ளார். 2. ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்னும் தலைப்பில் இளைய சமுதாயமான குழந்தைகளின் நல்வாழ்வுக்குத் தேவையான கருத்துக் கருவூலமாக ஒரு கடுரைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். 3. தாம் பணி புரியும் கல்லூரியின் நிறுவனரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவருமாக இருந்த பேராசிரியர் அ.மு.ப. அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை ஆக்கியுள்ளார். எழுதிக் கொண்டிருக்கும் இதழ்கள் இவர் குமுதம் குழுமத்திலும் பெண்மணி, சோழநாடு, மகளிர் முரசு முதலிய வார, மாத இதழ்களிலும் தினமலர், தினமணி முதலிய நாளிதழ்களிலும் தம் கவிதை, கட்டுரை, சிறுகதைகளை எழுதி வருகின்றார். குமுதம் இதழில் இவரது கவிதை http://www.tamizhnodigal.blogspot.in/search/label/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D அச்சு ஊடகங்களில் வெளியான இவரது கட்டுரைகளும் சிறுகதைகளும் http://tamilnimidangal.blogspot.in/2014/12/9.html இவர் ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் என்னும் சமூக வலைத்தளத்தில் தலைமை நடத்துநராக இருந்து வருகின்றார். http://www.eegarai.net/ பெற்றுள்ள விருதுகள் 1. இவரது ஆசிரியப் பணியின் சிறப்பைப் பாராட்டி சென்னை அரிமா சங்கம் இவருக்கு ‘நல்லாசிரியர் விருது’ வழங்கி சிறப்பித்துள்ளது 2. காமராஜர் கிராமிய அறக்கட்டளை இவருக்கு ‘கல்விச் சாதனையாளர்’ விருதினை வழங்கி சிறப்பு செய்துள்ளது. 3. சென்னை கலை இலக்கியப் பேரவை இவருக்கு ‘சாதனையாளர்’ விருதினை வழங்கியுள்ளது. 4. சென்னை, பாரதியார் சங்கம் இவருக்கு ‘பாரதி கண்ட கல்வியாளர்’ என்னும் விருதினை வழங்கிச் சிறப்புச் செய்துள்ளது. 5. அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் இவருக்கு ‘பாரதி பணிச்செல்வர்’ விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது 6. உலகளாவிய உன்னத மானிட நேய சேவை மையம் இவருக்கு தமிழ் இலக்கியப் பணிக்கான சிறப்பு விருதான ‘தமிழ் இலக்கிய மாமணி’ என்னும் விருதினை வழங்கிச் சிறப்பு செய்துள்ளது. இவரது வலைப்பூக்கள் (வெளி இணைப்புகள்) http://tamilnimidangal.blogspot.in/ http://www.tamizhnodigal.blogspot.in/ https://www.facebook.com/aathiraa.mullai http://www.eegarai.net/ [[பகுப்பு:புதியவர்களுக்கான விக்கிமீடியா வழிகாட்டல்கள்]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wiktionary.org/w/index.php?oldid=1319667.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|