Difference between revisions 1189177 and 1189181 on tawiki

{{cleanup}}

'''திருவாலி, திருநகரி''' இரண்டும் சேர்ந்து ஒரு [[திவ்ய தேசம்|திவ்ய தேசமாகும்]]. ஒன்றுக்கொன்று சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தாலும் இரண்டும் சேர்ந்தே ஒரு திவ்ய தேசமாக கருதப்படுகிறது. இத்திருத்தலம் [[சீர்காழி]]யிலிருந்து தென்கிழக்கில் சுமார் 6 மைல் தொலைவில் உள்ளது.

== அமைந்துள்ள இடம் ==
இத்திருத்தலம் சீர்காழியிலிருந்து தென்கிழக்கில் சுமார் 6 மைல் தொலைவில் உள்ளது.

== மூலவர் ==
(contracted; show full)

==சிறப்பம்சம்==
*[[பத்ரிநாத் கோயில்|பத்ரிகாசிரமத்திற்கு]] அடுத்ததாகப் பெருமாள் திருமந்திரத்தைத் தானே உபதேசம் செய்த இடமாதலால் இத்தலம் பத்ரிநாத்துக்கு இணையானது.
*லட்சுமியுடன் பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு "லட்சுமி நரசிம்ம க்ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு. திருவாலியையும் தரிசிப்பதால் இங்கே பஞ்ச நரசிம்ம தலங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

*திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். பெருமாள் கூறியபடி லட்சுமி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக பிறந்தாள். பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார். திருமங்கை வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம். இதை முன்னிட்டு ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடக்கிறது.
*திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தனி சன்னதியில் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் காட்சி தருகிறார். இவருக்கு எதிரே ஒரு கொடிமரமும், பெருமாளுக்கு எதிரே ஒன்றும் என இரண்டு கொடி மரங்கள் உள்ளன.

== மங்களாசாசனம் ==
குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார்

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்

புகுந்ததன்பின் வணங்கும் என்

சிந்தனைக்கு இனியாய்-திருவே என் ஆர் உயிரே

அம் தளிர் அணி ஆர் அசோகின் இளந்

தளிர்கள் கலந்து அவை எங்கும்

செந் தழல் புரையும் திருவாலி அம்மானே

[[பகுப்பு:108 திவ்ய தேசங்கள்]]