Difference between revisions 10309 and 10310 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகம்மது நினைத்ததை,முகம்மது சொல்வான்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
(contracted; show full)* அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
* அய்யர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா?
* அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
* அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
* அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
* அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
( மேற்கண்ட பழமொழி 'அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல' என்பதன் திரிந்த வழக்கு)

* அருமை சிந்தை, அற்புதம் செய்யும்.
* அரும இல்லாத வூட்ல எருமயும் குடியிருக்காது.
* அரும மருமவன் தலெ போனாலும் பரவால்ல ஆதிகாலத்து ஒரல் ஒடயக்கூடாது.
* அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல
( குழந்தை வேண்டும் பெண்கள் அரச மரத்தினைச் சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடைய பெண் கணவனோடு கூடி இல்லறம் நடத்தாவிட்டால் குழந்தை பிறக்காது என்பதே கருத்து).
* அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
* அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றை தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்.
* அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
(contracted; show full)==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]