Difference between revisions 10310 and 10342 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகம்மது நினைத்ததை,முகம்மது சொல்வான்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
(contracted; show full)* பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது.
* பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்!
* பாம்பு தின்ற ஊருக்குப்போனா நடுக்கண்டம் நம்ப கண்டம்.
* பாம்பு என்று அடிக்கவும் முடியாது, பழுதை என்று தாண்டவும் முடியாது.
* பாம்பு கடிச்சுதா? பயம் கடிச்சுதா?
* பாம்பு கடித்தால் பத்து நிமிஷம், அரணை கடித்தால் அரை நிமிஷம்.
* பாம்பு என்றால் படையும் நடுங்கும்.

* பாரியாள் ரூபவதியானால் தன் சத்துரு.
* பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.
* பாலூட்டி வளர்த்தாலும் பாம்பின் குணம் மாறுமா?
* பாலைக் குடித்ததுமட்டு மல்லாமல் பூனை பானையை வேறுடைத்ததாம்!
* பானை பிடித்தவள் பாக்கியசாலி.

==பி==
* பிஞ்சில வளெயாதது கம்புல வளெயுமா?
* பிள்ளை இல்லா வீட்டுக் கிழவன் துள்ளி விளையாடினானாம்!
(contracted; show full)==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]