Difference between revisions 15003 and 15004 on tawikiquote

{{}}
Semippu

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகப்பட்டதை சுருட்டிக்கடா ஆத்மநாபா.
* அகம்மது நினைத்ததை, முகம்மது சொல்வான்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
(contracted; show full)* ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
* ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
* ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் பொது இலவம்பஞ்சு என் கதி என்ன என்று கேட்டதாம்!
* ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்.
* ஆடு கடிக்குமுனு அறைக்குள்ள படுத்தவ, அவுசாரியாப் போக பேயாய் அலைஞ்சாலாம்.
* ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்.
* ஆடு பகையாம் குட்டி உறவாம்.
*
  ஆடு வள்கறது அழகு பாக்றத்துக்கு இல்லெ, கோழி வளக்குறது கொஞ்சி பாக்றதுக்கு இல்லெ.
* ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.
* ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
* ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு, ஊரெல்லாம் தேடினானாம்.
* ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
* ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம்
:*இது 'ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்' என்பதன் திரிந்த வழக்கு.
* ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்
(contracted; show full)* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.
* வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.<ref>[http://www.edubilla.com/tamil/pazhamozhigal/ தமிழ் பழமொழிகள்]</ref>\

== சான்றுகள் ==
{{Reflist}}

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]