Difference between revisions 29584 and 29585 on tawikiquote

ஆடை என்பது பொய் பொய் பொய் அது கொண்ட பொருள் மட்டும் மெய் மெய் மெய் ஆகும்

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகப்பட்டதை சுருட்டிக்கடா ஆத்மநாபா.
* அகம்மது நினைத்ததை, முகம்மது சொல்வான்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
(contracted; show full)* ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
* ஏன் நாயேன்னா எட்டி மூக்க நக்குமாம்.
* ஏற்றவன் குண்டிய எட்டனமுட்டும் தாங்கலாம்
* ஏஊரையா என்றால் கேழ்வரகு எட்டுப் படி என்றானாம்.
* ஏகமும் செத்தவனே ஏறடா பாடையிலே.
* ஏகாத்தே என்றால் பூகாத்தே என்றாள்.
* ஏகாதசி என்றைக்கு என்றால் அகமுடையாள் புடைவையைப் பார்த்துச் சொல்கிறேன் என்றாளாம்.
*
  ஏகாதசித் திருடியை ஏற்றடா ரதத்தின்மேல்.
* ஏகாதசிக்கு மா இடித்தாற் போல.
* ஏகாதசி தோசை; இளையாள்மேல் ஆசை.
* ஏற்கனவே துர்ப்பலம்; அதிலும் கர்ப்பிணி.
* ஏற்கனவே கோணல் வாய்; அதிலும் கொட்டாவி விட்டால் எப்படி?
* ஏளிதம் பேசி இவ்வேடம் ஆனேன்.
* ஏழை பேச்சு அம்பலம் பாயுமா?
* ஏழைப் பிள்ளைக்குத் தெய்வமே துணை.
(contracted; show full)* வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.<ref>[http://www.edubilla.com/tamil/pazhamozhigal/ தமிழ் பழமொழிகள்]</ref>\

== சான்றுகள் ==
{{Reflist}}

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]
நேர்மையே உயரிய ளொள்கை