Difference between revisions 6640 and 6641 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
(contracted; show full)* காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
* காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
* காணி ஆசை கோடி கேடு.
* காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
* காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
* காதோரம் நரைத்த முடி கதை முடிவை காட்டும்.
* காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
* க
க்காய் உட்கார பனம் பழம் விழுந்தாற் போல.
* காப்பு சொல்லும் கை மெலிவை.
* காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
* காய்த்த மரம் கல் அடிபடும்.
* காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
* காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் விழுந்த மாதிரி..
* காரண குருவே காரிய குரு!
* காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
(contracted; show full)
* காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
* காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!
* காற்றில்லாமல் தூசி பறக்குமா?
* காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
* காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.



==கி==
* கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்! 
* கிட்டாதாயின் வெட்டென மற
* கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
* கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோகாது.
==கீ==
* கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி
(contracted; show full)* வேலை வரும்போதுதான் பேல வரும்.
* வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!'''
* வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.
* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.

==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?