Difference between revisions 6842 and 6844 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)* ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
* ஆயிரங்கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
* ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
* ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
** இது 'ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்' என்பதன் திரிந்த வழக்கு.
* ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
** மூலிகைக்காக ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்பது பொருள்.

* ஆயக்காரன் ஐந்து பணங் கேட்பான்; அதாவெட்டுக்காரன் ஐம்பது பணங் கேட்பான்
* ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே.
* ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!
* ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
* ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை
* ஆயிரம் பொய் சொன்னாலும் ஒரு கல்யாணம் செய்து வை.
* ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
* ஆரால் கேடு, வாயால் கேடு.
* ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
(contracted; show full)* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.

==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]