Difference between revisions 7223 and 7224 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)* இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
* இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
* இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
* இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.
* இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
* இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
* இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
* இராச திசையில் கெட்டவ
ுமில்லை
* இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
* இருக்க எடம் கொடுத்த படுக்க பாய் கேப்பான்.
* இருக்குறவ அள்ளி முடியறா.
* இரும்பு அடிக்ற எடத்துல ஈக்கு என்ன வேலை?
* இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
* இரும்பூறல் காணாமல் இரும்பிச் செத்தான்.
* இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
* இருவர் நட்பு ஒருவர் பொறை.
(contracted; show full)
==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]