Difference between revisions 7224 and 7225 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)* அரியும் சிவனும் ஒன்னு,அறியாதவன் வாயிலே மண்ணு.
* அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
* அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
* அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. (அரைக்காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது)
* அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
* அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
* அரைப்பணம் குடுத்து அழச்சொன்னங்களாம், ஒருப்பணம் கொடுத்து ஓயச்சொன்னாங்கலாம்.

* அரைக் குடம் தளும்பும், நிறைக் குடம் தளும்பாது.
* அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.
* அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?
* அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
* அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.
* அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
* அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே. 
* அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
* அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
(contracted; show full)
==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]