Difference between revisions 7230 and 7232 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)
==எ==
* எங்கப்பன் குதுருக்குள்ள இல்ல.
* எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
* எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
* எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
* எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
* எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!

* எட்டாத பழத்திற்கு கொட்டாவி விட்டானாம்.. 
* எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.
* எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன?
* எட்டு வயசான எரும ஏரிக்கு வழி கேக்குதாம்.
* எண் இல்லாதவர் கண் இல்லாதவர்.
* எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது! 
* எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
* எண் சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்.
(contracted; show full)
==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]