Difference between revisions 7232 and 7233 on tawikiquote==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும் * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு. * அகல் வட்டம் பகல் மழை. * அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. * அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன். (contracted; show full)* படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில். * படிக்குற வரைக்கும் புள்ள பயிறு பயிறுன்னாச்சாம்; படிச்சபெறவு பசறு பசறுன்னுச்சாம். * படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன். * படையிருந்தால் அரணில்லை. * படை முகத்திலும் அறிமுகம் வேண்டும். * பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும். (Misery loves company) * பட்டவருக்கு பலன் உண்டு; பதவியும் உண்டு! * பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.⏎ * பட்டால் தெரியும் பட்ட வலி. * பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில். * பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய். * பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, கொட்டைப் பாக்கு என்ன வெலைங்றான். * பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும். * பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை முறைத்தாற் போல. * பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர். * பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா? (contracted; show full) ==வை== * வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. * வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது. * வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா? * வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை. [[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=7233.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|