Difference between revisions 9550 and 9790 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
* அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தால் என்றால் எனக்கொரு வேட்டி, உனக்கொரு வேட்டி என்றார்களாம்.
* அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
* அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
* அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
* அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
* அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
* அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
* அடக்கமே பெண்ணுக்கு அழகு.
* அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
* அடாது செய்தவன் படாது படுவான்.
* அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்
* அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்
* அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
* அடியாத மாடு படியாது.
* அடிக்கிற கைதான் அணைக்கும்!
* அடி மேல் அடி விழுந்தால் (வைத்தால்) அம்மியும் நகரும்.
* அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
* அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
* அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
(contracted; show full)==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]