Difference between revisions 9790 and 9806 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)* சும்மா மெல்லும் வாய்க்கு அவல் கிடைத்தாற் போல.......
* சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
* சுவர் இருந்தாதானெ சித்திரம் வரெய முடியும்.
* சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.

==சூ==
* சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.(வரம் கொடுக்க மாட்டான்)
* சூடு கண்ட பூனை அடுப்ப
ங் கரையிற் சேரடிக்கு செல்லாது.
* சூடு மண்ட பூனை பாலை குடிக்காது.
* சூதும் வாதும் வேதனை செய்யும்.

==செ==

* செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
* செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
(contracted; show full)==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]