Difference between revisions 9806 and 9808 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)* முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
* முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
* முன் ஏர் போன வழிப் பின் ஏர்
* முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
* முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
* முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
* முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்.
* முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு.

* முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தாற் போல.

==மூ==
* மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.
* மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
* மூத்தோர் சொல்லும் முது நெல்லிக் கனியும் முதலில் கசக்கும்.
* மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்ன இனிக்கும்.
* மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்.
(contracted; show full)==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]