Difference between revisions 9823 and 9824 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)* காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
* காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
* கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
* காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
* காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
* காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்! 
* காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.

* காலணாக் கொடுத்து அழச் சொன்னாளாம், நாலணாக் கொடுத்து ஓயச் சொன்னாளாம்.
* காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
* காலைக் கல்; மாலைப் புல்.
**"காலை நேரத்தில் கல்லின் மேல் உட்காரலாம்; குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் கல்லின் மேல் உட்கார்ந்தால் சுடும். காலை நேரத்தில் புல்லின் மேல் உட்கார்ந்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் புல்லின் மேல் அமர்ந்தால் இதமாக இருக்கும்" என்று சிலர் பொருள் கூறுவார்கள்; மாறாக, வேறு ஒரு பொருளும் கூறுவர். காலையில் கற்க வேண்டும். அப்போது மனம் அமைதியாக இருந்து கல்வியை ஏற்கத் தயாராக இருக்கும். காலை என்பது அதிகால(contracted; show full)==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]