Difference between revisions 9824 and 9825 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)* பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.
* பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
* பந்திக்கு முந்தி,படைக்கு பிந்தி
* பல்லு போனா சொல்லு போச்சு.
* பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
* பரட்டை பால் வார்க்கும், சுருட்டை சோறு போடும்.
* பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.

* பரிசாரகன் நம்மாள் ஆனால், எங்கு உட்கார்ந்தால் என்ன?
* பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
* பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
* பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
* பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.
* பல்லக்கு ஏற யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
* பழகப் பழகப் பாலும் புளிக்கும். (Familiarity breeds contempt)
* பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
* பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
(contracted; show full)==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]