Difference between revisions 9825 and 9826 on tawikiquote==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும் * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு. * அகல் வட்டம் பகல் மழை. * அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. * அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன். (contracted; show full)* விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா? * வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக. * விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம் * விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா? * விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது. * விளையும் பயிர் முளையிலே தெரியும். * வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான் * விருந்தும் மருந்தும் மூன்று நாள். ⏎ * விற்கப்போனால் குதிரை விலை, வாங்கப்போனால் ஆனை விலை. ==வீ== * வீட்டுக்கு வீடு மண் வாசற்படி * வீடு போ போ எங்குது, காடு வா வா எங்குது. * வீட்டுத் திருடனை பிடிப்பது அந்த கடவுளுக்கும் ஏலாது. ==வெ== * வெட்டிண்டு வா என்றால் கட்டிண்டு வருவான். * வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு. * வெட்றவன தான ஆடு நம்பும். * வெண்கலக்கடையில் யானை புகுந்தாற் போல.... * வெண்டை முதிர்ந்தாலும் பிரம்மசாரி முதிர்ந்தாலும் வேலைக்கு ஆகாது!! * வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல். * வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன். * வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல.... * வெளங்தாவன் வேலைக்கு போனான்னாம் வேலெ ஆப்புட்டுச்சாம் கூலி ஆப்புடலயாம். * வெள்ளத்த தான ஈ மொய்க்கும். * வெளுத்ததெல்லாம் பாலல்ல. * வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல . ==வே== * வேலிக்கு ஓணான் சாட்சி. * வேலிலா போற ஓணான வேட்டிக்குள்ள உட்டாப்ல. * வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு. * வேலியே பயிரை மேய்ந்தாற் போல... * வேலை வரும்போதுதான் பேல வரும். * வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!''' * வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். (Faults are thick when love is thin) * வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது. ==வை== * வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. * வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது. * வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா? * வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை. [[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]] [[பகுப்பு:பழமொழிகள்]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=9826.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|