Difference between revisions 9838 and 9839 on tawikiquote==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும் * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு. * அகல் வட்டம் பகல் மழை. * அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. * அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன். (contracted; show full)* அதிகாரம் படைத்தவன் தம்பி சண்டபிரசண்டனாம். * அதிருஷ்ட்டம் வந்தால் கூரையை கிழித்துக்கொண்டு கொட்டுமாம்!.. * அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு. * அந்தி மழை அழுதாலும் விடாது. * அப்பன் அருமை மாண்டால் தெரியும். * அப்பியாச வித்தைக்கு அழிவில்லை. * அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன். * அய்யர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா?⏎ * அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம். * அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி. * அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர். * அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல. ( மேற்கண்ட பழமொழி 'அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல' என்பதன் திரிந்த வழக்கு) * அரும இல்லாத வூட்ல எருமயும் குடியிருக்காது. * அரும மருமவன் தலெ போனாலும் பரவால்ல ஆதிகாலத்து ஒரல் ஒடயக்கூடாது. * அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல (contracted; show full)==வை== * வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. * வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது. * வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா? * வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை. [[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]] [[பகுப்பு:பழமொழிகள்]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=9839.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|