Difference between revisions 9851 and 9852 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)* சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
* சோறு கண்ட எடம் சொர்க்கம் திண்ண கண்ட எடம் தூக்கம்.
* சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.
* சோழியன் குடுமி சும்மா ஆடாது!

==த==
* தங்கம் தரையிலே தவிடு பானையிலே.

* தங்கக்குடத்திற்கு சந்தனமென்ன? பொட்டென்ன?
:*ஏற்கனவே மிகச்சிறந்த விடயங்களுக்கு, அலங்காரம் தேவையில்லை என்னும் பொருள்...
* தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
* தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
* தட்டத் தட்ட தட்டான், படிக்க படிக்க வாத்தியாரு.
* தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
* தட்டாரத் தம்பியிலும் நல்ல தம்பி உண்டோ ? 
* தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
* தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
* தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
(contracted; show full)==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]