Difference between revisions 9855 and 9856 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)* ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
* ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
* ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
* ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
* ஒரு முறை உண்பவன் யோகி, இரு முறை உண்பவன் போகி, மும்முறை உண்பவன் ரோகி.
* ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
* ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.

* ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
* ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
* ஒற்றுமையே பலம்.
* ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
* ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
* ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
* ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு (என்று).......
* ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஓட்டியதாம்.
* ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
(contracted; show full)==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]